என்னில் நிறைந்தவளே - 9

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 9

V.D கன்ஸ்ட்ரக்ஷன் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது இன்று நிறைய ஆட்களை அலுவலகம் தொடர்பாக தேர்ந்தெடுக்க உள்ளனர்

அதனால் அதிகமானோர் வந்திருத்தனர் அடுத்தடுத்து சுற்றுகள் நடைபெற்று கொண்டிருந்தன

தேவி தான் இறுதி நேர்காணல் போது வந்து சேர்ந்து கொள்வதாக சொல்லி நேராக சைட்டிற்கு சென்றுவிட்டாள்

அனிதா இன்டர்வியூக்கு வந்திருந்தவர்களை அலுவலக ஊழியர்களை கொண்டு தேர்வுகளை நடத்தி கொண்டிருந்தாள் அடிப்படை தேர்வு முடியவே மதியம் ஆகிவிட்டது. அதனால் அனைவரையும் உணவு உண்ட பின் வர சொன்னனர்

கேண்டீனில் தருண்விஜய் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான்(அட ஆமாங்க நம்ம நாயகன்தான்) அவன் எதிரே ஒருவன் வந்து அமர்ந்து தருணிடம் hello பாஸ் நான் ரமேஷ் நீங்க

தருண் நிமிர்ந்து அவனை பார்த்து சிறு புன்னகை உதிர்த்து நான் தருண்விஜய் என்றான்

ரமேஷ் “சூப்பர் பாஸ் என்ன போஸ்டிங்கு இன்டர்வியூ வந்திருகீங்க”

தருண் “PA வேலைக்கு”

ரமேஷ் “என்ன பாஸ் அளந்து பேசுறிங்க நீங்க எப்படி PA வேலைக்கு வந்தீங்க”

தருண் “சிறு புன்னகை புரிந்தான்”

ரமேஷ் “அதுக்கும் புன்னகை தானா சரி விடுங்க தேவையில்லாமல் பேச மாட்டிங்க போல ஆனால் நான் அப்படி இல்லை இங்க சீப் அக்கோடேன்ட் வேலைக்கு இன்டர்வியூ வந்திருக்கிறேன் இது என்னுடைய இரண்டாவது கம்பனி,இதுக்கு முன்னாடி ஒரு சின்ன கம்பனியில் சீப் அக்கோடேன்ட் இருந்தேன்.”

அவன் இயல்பாக பேசுவது தருணிற்கு பிடித்து போக அவனிடம் நட்புகரம் நிட்டினான்

ரமேஷ் “பாஸ் எனக்கு ஒரு டவுட்டு”

தருண் “என்ன பாஸ்னு கூப்பிடறத முதலில் நிறுத்துங்க ஏதோ கொள்ளை ௯ட்ட தலைவனை ௯ப்பிடுகின்ற மாதிரி இருக்கு பெயர் சொல்லியே ௯ப்பிடுங்க ரமேஷ். என்ன டவுட்டு உங்களுக்கு”

ரமேஷ் “இங்க ஏற்கனவே சீப் அச்கோடேன்ட் இருக்கின்றதாக கேள்விபட்டேன் அப்புறம் எதுக்கு திரும்ப இன்னும் ஒருத்தர அதே வேலைக்கு எடுக்கறாங்க அதுதான் டவுட் தருண்”

தருண் “எனக்கு எப்படி தெரியும் நானும் இங்க இன்டர்வியூக்கு தான வந்திருக்கேன்”

ரமேஷ் “அதுவும் சரிதான் வாங்க போலாம் டைம் ஆகிடுச்சி”

இருவரும் பேசிக்கொண்டே நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்தனர்

இவர்கள் மதிய உணவிற்கு செல்லும் போதே தேவி வந்து விட்டாள் தனது அறையில் உள்ள கம்பியூட்டரில் வெளியில் நடக்கும்வற்றை cctv கேமரா வழியாக பார்த்து கொண்டிருந்தாள்

ரமேஷ் உள்ளே வந்து அமைதியாக அமராமல் அருகில் உள்ளவர்கள் மற்றும் ரிசப்ஷனிஸ்ட் ஆகியோரிடம் தொடர்ந்து பேசுவதை கவனித்து கொண்டாள்

அவள் பொதுவாக இண்டர்வியூக்கு வருபவர்களை இவ்வாறு கவனித்து தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்படி பார்க்கும் பொது அவர்களின் தன்மை தெரியும் என்று ௯றுவாள்

தேவி சிசிடிவியை பார்த்து கொண்டிருக்கும்போது அனிதா வந்து தேவி ஆரம்பிக்கலாமா கேட்டாள்

ஒவ்வொருவராக உள்ளே வரவர அனைவரையும் கேள்விகளால் துழைத்து எடுத்துவிட்டனர்

வெளியே வந்தவர்களுக்கு அப்பாடா என்றிருந்தது ரமேஷ் அவர்களில் ஒருவரிடம் உள்ளே என்ன கேட்டனர் என்று கேட்டான்

அதற்கு அவர் உள்ள இரண்டு பேர் இருக்காங்க கேள்வி மேல கேள்வியா கேட்டு ஒருத்தர் கொல்றாங்க இன்னொரு மேடம் சும்மா இருந்து விட்டு கடைசியில் ஒன்று அல்லது இரண்டு கேள்வி கேக்கிராங்க அதுக்கு பதில் சொல்லவே திண்டாட்டமா இருக்கு சிங்கம் குகையிலிருந்து வெளியே வந்த மாதிரி இருக்கு. சாமி ஆளை விடுங்க என்று அங்கிருந்து சென்றான்

இப்பொழுது தருணை கூப்பிட உள்ளே செல்லுமாறு கூறினர் ரமேஷ் “ஆல் தா பெஸ்ட் தருண் என்றான்”

அவன் உள்ளே நுழைந்ததும் கண்டது தேவியைத்தான் அவள் காட்டன் புடவை அணிந்து எளிமையாக மற்றும் நடு முதுகு வரை உள்ள முடியை விரித்துவிட்டு ஒருபுறமும் முன்பக்கம் சிறிது முடியை எடுத்து விட்டிருந்தாள் அதோடு அவளிடம் ஒரு நிமிர்வும் நேர் கொண்ட பார்வையும் இருந்தது இது அனைத்தும் தருண் மனதில் ஆழ பதிந்தது. அவளது கண்கள் அவனை ஈர்த்தது. அந்த கண்கள் அவனிடம் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்று ௯ருவதுபோல் அவனுக்கு தோன்றியது

அவளது கண்களையே பார்த்து கொண்டிருந்தான் அதற்குள் அனிதா அவனிடம் கேள்விகளை கேட்க ஆரம்பிக்க அதற்கான பதிலை கொடுத்தான் இறுதியில் தேவி அவனிடம் நீங்க MBA முடித்து விட்டு இரண்டு வருடம் மட்டுமே வேலை செய்துள்ளிர்கள் அதன் பிறகு ஐந்து வருடம் எந்த வேலையும் பார்க்கவில்லை ஏன்

தருண் “சில பர்சனல் பிரச்சனைகளால் வேலைக்கு செல்லவில்லை”

தேவி “அது என்ன என்று சொல்ல முடியுமா,சொல்லுவதில் ஒரு problemமும் இல்லை என்றால் சொல்லுங்கள்”

தருண் “ஒரு problem இல்லை மேம், என்னுடைய அப்பா இறந்துவிட்டார் அதை அடுத்து அப்பாவின் தொழில்களை சிறிது காலம் பார்க்கவேண்டியது இருந்தது. இப்பொழுது அதை என் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு எனக்கு பிடித்த வேலையை செய்யலாம் என இன்டர்வியூக்கு வந்தேன் என பாதி உண்மையும் பாதி பொய்யுமாக ௯றிவைத்தான்”


ஓகே மிஸ்டர் விஜய் நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க என்றாள். பின் அவனை தொடர்ந்து ரமேஷ் உள்ளே சென்றான் அவனிடமும் கேள்விகள் கேட்கபட்டு வெளியே காத்திருக்குமாறு கூறினர்.

நிறைவாள்...........

hai friends i have a three days leave so i will give 2 update on a day tomorrow and day after tomorrow given total 4 update paa. ok friends இந்த எபியை படித்துவிட்டு உங்க கருத்துகளை சொல்லிவிட்டு போங்க paa. i am eagerly waiting for your comments friends
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top