உறவால் உயிரானவள் P19

mila

Writers Team
Tamil Novel Writer
#1
CJUWMw_VAAAQwik.jpg


கவிக்காக மல்லிகை பூவை ஆசையாசையாக வாங்கி வந்தவன் அவள் அறையில் இல்லாது போகவே "இந்த லயா எங்க போனா?" வீடு முழுவதும் கவியை தேடிய ஆதித்யா அவளது அலைபேசிக்கு அழைக்க அது கட்டிலில் கிடந்தது. இந்த நள்ளிரவில் அவள் எங்கே சென்றாள் மனது அடிக்க ஆரம்பிக்க அவனது அலைபேசியும் அடித்தது. ஆரு தான் அழைத்திருந்தாள்.லயாவையும் காணவில்லை. இவள் வேறு அழைக்கிறாளே! என்ன பிரச்சினை என்று மனம் பதற "சொல்லு பொம்மு. என்ன இந்த நேரத்துல""உன் பொண்டாட்டி என் புருஷன் மடில கொஞ்சி கிட்டு இருக்கா" அத்தான் என்று செல்லம் கொஞ்சுபவள் எடுத்த எடுப்பிளையே! கோபமாக பேசி அலைபேசியை அனைத்திருந்தாள்.“இந்த நேரத்துல அங்க எதுக்கு போனா?" யோசித்தவாறே பின்னாடி தோட்டம் வழியாக நடந்தவன் கார்த்திக்கின் வீட்டை அடைய ஆருத்ரா கதவை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.ஆதி உள்ளே வரவும் வழி விட்டவள், கண்கள் சிவக்க, கோபமூச்சுக்களை வாங்கியவாறு அங்கேயே நிற்கஅத்தை மகளின் கோபம் அணைக்க பாசம் தலை தூக்கினாலும் அவனின் காதல் கொண்ட மனம் மனைவியின் நிலையை அறிய ஆவல் கொண்டு "லயா எங்க?" ஆதியின் கேள்விக்கு மாடிப்படியை காட்டியவள் கதவை சாத்தலானாள்.மாடிப்படிகளில் தாவி ஏறிய ஆதி கார்த்திக்கின் அறையை அடைய அவனோ முதுகுக்கு ஒரு தலையணையை வைத்து கால் நீட்டி கட்டிலில் அமர்ந்திருக்க அவன் மடியில் தலை வைத்து தூங்கி இருந்தாள் கவி."என்ன இவ சொல்லாம கொள்ளாம இங்க வந்திருக்கிரா?" என்ற எண்ணம் தோன்ற உள்ளே வந்தவன் கார்த்திக்கிடம் "என்ன" என்று செய்கை மூலம் கேக்க"அவளுக்கு பீரியட்ஸ் டைம் ரொம்ப வயிறு வலிச்சதுன்னா என் மடில தான் தூங்குவா. நீ வேற ஊர்ல இல்லையா அதான் என்ன தேடி வந்துட்டா. " வழக்கமாக என்றும் நடப்பது தான் இருந்தாலும் ஆதி என்ன நினைப்பானோ என்று சங்கடமாகவே கார்த்தி சொல்லகைகளை மார்ப்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு மனைவியையே பாத்திருந்தவன் தன்னை அவள் தேடிய காரணம் புரிய கணவனாக கர்வம் கொண்டாலும், அவளின் சங்கடமான நேரத்தில் கூட அவளருகில் தன்னால் இருக்க முடியவில்லையே! என்ற குற்ற உணர்ச்சியும் தலைத்தூக்க புருவம் நீவியவன் "அவ இங்கயே தூங்கட்டும் கார்த்தி" என்று விட"அப்போ நீயும் இங்கயே இரு, நானும் ஆருவும் பக்கத்து அறையில் தூங்குறோம்" ஆதியின் பதிலை எதிர்பார்க்காது கவியின் தலைக்கு தலைகாணியை வைத்தவன் சிறு புன்னகையை சிந்தியவாறே கதவை சாத்திக் கொண்டு வெளியேறினான்.


images (31).jpg


இங்கே கார்த்திக் வெளியே வரவும் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் ஆரு. அவளை பொருட்படுத்தாது மற்ற அறையினுள் நுழைய அவன் பின்னாலையே வந்தவள் "சி... வெக்கமா இல்ல உங்களுக்கு? கட்டின பொண்டாட்டி முன்னாடியே அவ வயித்த தடவி விடுறீங்க? அவளுக்கு ஒன்னுனா இப்படி துடிக்கிறீங்க?என்ன எதுக்கு கல்யாணம் பண்ணீங்க? அவளையே பண்ண வேண்டியதுதானே! ஒரு வேல சொத்துக்காக தான் என்ன கல்யாணம் பண்ணினீங்களோ! சொத்துக்கு சொத்தும் ஆச்சு. கூடவே உங்க ஆசை நாயகியும்" ஆருவை அடிக்க கை ஓங்கி இருந்தான் கார்த்திக்.
:love::love::love::love::love:
 
Arulselvi

Well-Known Member
#8
ஆரு கவியை கார்த்திக்கின் தங்கையாக நினைத்தால் தான் புரிஞ்சிக்க முடியும் அவங்க relationshippa!
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement