உறவால் உயிரானவள் P11

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் எங்க ஊருல இடி மின்னலோடு செம்ம மழை. power cut வேற கதையை எழுத உட்காந்தா ஏகப்பட்ட பிரச்சினைகள். முடிஞ்ச அளவு சீக்கிரம் கம்ப்ளீட் பண்ணி எபியோட வரேன்.:):)

images (26).jpg

"மாப்புள போலீஸ் இல்ல இதெல்லாம் அவருக்கு சாதாரண காயம். உங்களுக்கு இப்படியாகிருச்சே னு சாப்பிடாம வேற வந்துட்டோம் பசி உயிர் போகுது" சக்கரவர்த்தி வயிறை தடவியவாறு சொல்ல



"ஆமாம் மாப்புள ஆனா.. சாப்பாடை கையோட கட்டிக்க கொண்டு வந்துட்டோம்" மேனகை தான் எதோ பெரிய சாதனை செய்தது போல் சொல்ல கார்த்திக் ஆருத்ராவைத் தான் முறைத்தான்.



"நான் கூட சாப்பிடல, என்ன கொண்டு வந்த?" இது சீனு.



"அரு குட்டி நீ சாப்பிட்டியா?" சக்கரவர்த்தி ஆருத்ராவின் கன்னங்களை தடவியவாறே செல்லம் கொஞ்ச



"எங்க பா.. இவரோடு கோவில் போய்.. பீச் போய் அப்படியே எங்கயாச்சும் நல்ல ஹோட்டல் போய் சாப்பிடலாம் னு நினச்சேன். அதுக்குள்ளே இப்படி ஆகிருச்சு"



"நா என்ன கொண்டுவந்த னு கேட்டேன்" சீனு அன்னையை அதட்ட



"இருடா...." என்றவள் ஒவ்வொரு பாத்திரமாக திறக்க



"ஐ... நாட்டுக்கு கோழி குழம்பு" சீனு



"கத்திரிக்கா கூட்டு" ஆரு



"பீன்ஸ் வறுவல்" சீனு



"மூள அவியலா?" ஆரு



"அப்பளம், தயிர், சாம்பார், மிளகு ரசம்.. எதையுமே விடலையா? பைல விருந்தே வச்சிருக்கியே! சீக்கிரம் போடு பாக்கும் போதே பசி பத்திக் கிட்டு வருது"



"இருடா மகனே இன்னும் ஒரு பை இருக்கு" சொல்லியவாறே மேனகை பையில் இருந்த அனைத்தையும் வெளியே கடைப் பரப்ப கார்த்திக்கின் அறையில் இருந்த சோபாவில் அனைவரும் அமர்ந்துக் கொண்டனர்.



"சரியான லூசுக் குடும்பம்" என்று திட்டிக் கொண்டிருந்த கார்த்திக்கும் சாப்பாட்டின் வாசனை பசியை தூண்ட அவர்களை ஏக்கமாக பார்த்தான்



ஒரு பெரிய தட்டில் அனைத்தையும் அடுக்கி ஆருத்ராவின் கையில் கொடுத்த மேனகை "மாப்புளைக்கு ஊட்டியவாறே நீயும் சாப்பிடு" என்று சொல்ல



"தட்டை வாங்கிக் கொண்டவள் அவசர அவசரமாக பிசைந்து ஒரு வாயை உள்ளே தள்ளி "அவர் பாஸ்டிங் ல இருக்குறாரு இன்னும் நாலு மணித்தியாலத்துக்கு சாப்பிட கூடாது" என்றவாறே முழுங்க



"கிராதாகி" கார்த்திக் வாய்க்குள் கடித்துத் துப்ப



"ஐயோ பாவமே! அவர் பாத்துக் கொண்டு இருக்கும் போது நாம சாப்ட்டா வயிறு வலிக்காது?" சக்கரவர்த்தி சத்தமாக சிரிக்க,



"டேய் லூசு அப்பா... அவரே வலில கஷ்டப்பப்படுறாரு. அவரை போய் கலாய்ச்சிக் கிட்டு, பேசாம சாப்பிடு"



"ஏன் மாப்புள உங்கள பார்க்க வச்சி நாம சாப்பிடறது நல்லாவா இருக்கு" மேனகை கார்த்திக் இடமே ஆலோசனைக்கு கேக்க



"நீங்க சாப்பிடுங்க அத்த எனக்கு தூக்கம் வருது" என்றவன் திரும்பி கண் மூடி படுத்துக் கொண்டான். அதன் பின் அங்கே சிரிப்பலைகளோடு பாத்திரங்களின் ஓசைதான் கேட்டது. அக்காட்ச்சியை பார்த்து விட்டே ஆதியும், கவியும் கான்டீன் நோக்கி நடந்தனர்.

:p:D:p:D:p:D
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவிங்களா
ஒருத்தனை வுட்டுப்போட்டு குடும்பமே இப்பிடி சோத்துல கும்மியடிக்கிறீங்களே
நல்லா வருவீங்கப்பா நீங்கெல்லாம்
இதெல்லாம் அநியாயம் அக்கிரமம்,
மிலா டியர்
அடியேய் ஆருத்ரா
நீயெல்லாம் ஒரு பொண்டாட்டியா?
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிங்களா
ஒருத்தனை வுட்டுப்போட்டு குடும்பமே இப்பிடி சோத்துல கும்மியடிக்கிறீங்களே
நல்லா வருவீங்கப்பா நீங்கெல்லாம்
இதெல்லாம் அநியாயம் அக்கிரமம்,
மிலா டியர்
அடியேய் ஆருத்ரா
நீயெல்லாம் ஒரு பொண்டாட்டியா?
ஹஹஹ அவ கவி, வானதி, சித்தார்த் பத்தி என்ன நினச்சா? என்ன முடிவு பண்ணா னு தெரிஞ்சா ஆரு வ இன்னும் திட்ட தோணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top