உன் நினைவே என் சுவாசமானது.

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


உன் நினைவே என் சுவாசமானது.

சிறிய தொகுப்பு.





மாலை நேரம்.


அரசமரத்தடியில் மக்கள் திரண்டு நின்று ஆளுக்கொன்றாக இட்டு கட்டி பேசியே ஒருவனை தூண்டிவிட அந்த எரிமலையோ எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலையில் நின்றான்.



" அடியேய் கூறுகெட்டவளே ஒரு நாள் உடம்பு சரி இல்லனு உன்னை சின்னையா வீட்டுக்கு வேலைக்கு அனுப்பினனே என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கடி நீ என் நெஞ்சில நெருப்ப அள்ளிக்கொட்டிட்டியே பாவி மகளே. அந்த மவராசன் நமக்கு சோறுபோடுற சாமிடி அவருமேல இப்புடி ஒரு பழியை சொல்லுறியே யாராவது நம்புவாங்களா?? இந்த ஊர் சின்னராசா டி அவர் ஒருகாலமும் இப்புடி ஒரு செயலை சின்னையா பண்ணமாட்டாரு. நீ தான் பொய் சொல்லுற டி" என்று அவரது ஆசை மகளை போட்டு அடி மொத்தினார் ராசாத்தியம்மாள்.



அவர் அடித்த அடியை மொத்தமும் வாங்கிய படியே இருந்தவள் " ஏம்மா நீ என்ன நம்பமாட்டியா??.. என்ன விட உனக்கு உன்னோட சின்னையாதான் பெருசா போய்ட்டாருல்ல இனிமே என்கிட்ட பேசிப்பாரு அப்புறம் இருக்கு உனக்கு சங்கதி." என்று இளம் சிட்டு ஒன்று தனது பிழையை சரி பண்ணுவதற்கு தானே போராடியது.


"ஏம்மா ராசாத்தி ஒனக்கு நம்ம புள்ளையை பத்தி தெரியாதா??.. என்ன சும்மா இந்த விஷயத்துல இப்புடி ஊரைக்கூட்டி பொய்சொல்லுவாளா??. " என்று நெடுமாறன் கேட்டார்.



"ஏன்யா பொண்டாட்டி இல்லாமா அவனும் எத்தினை நாளைக்கு தான் சொகம் அனுபவிச்சவன் சும்மா இருப்பான் அதுதான் புள்ளையும் சும்மா மினு மினு-ன்னு தங்க சிலையாட்டம் மின்னுது அதுதான் சோக்குதேடி பொசுக்குன்னு கையை வச்சிப்புட்டான். இதெல்லாம் பெரிய குடும்பத்தில நடக்குறதுதானே புதுசா என்ன??.. "என்று அவனை பிடிக்காத ஒருவன் கேட்கவும்.


அவனை சொல்லும் வரை அமைதியாய் நின்றவன் அவனது குடும்பத்தை பற்றி பேசவும் எட்டி அவனது சட்டையை கொத்தாக பற்றி தூக்கி வீசிவிட்டான்.



"மாமனே உன்னை காங்காமல் வட்டியில சோறும் உங்காமல் பாவி நான் பருத்தி நாராப்போனெனே"

என்று பாடலை பாடியபடியே ஒரக்கண்ணால் அவனது முறைப்பை கவனியாதது போல அவனை பார்த்து கண்ணடித்து கள்ளச்சிரிப்பை சிரித்தபடி அவ்விடம் விட்டு சென்றாள் பேதை..

நாமலும் டீசர் போடலாமேன்னு ஒரு சின்ன முயற்சி ப்ரெண்ட்ஸ். படித்துவிட்டு உங்களது கருத்தை சொல்லி இந்த கதையையும் வெற்றிகரமாக ஆரம்பித்து முடிப்பதற்க்கு உங்களது முழு ஆதரவை தந்து ஊக்கப்படுத்துங்கள்.

அன்புடன் ப்ரியா ரதீஸ்.

7f2a5802a94544eee5362a0b1754116c.jpg
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன் நினைவே என்
சுவாசமானது"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ப்ரியா ரதீஸ் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான தொகுப்பு,
ப்ரியா ரதீஸ் டியர்

பெற்ற ஆசை மகளை விட ராசாத்தியம்மாள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் அந்த சின்னய்யா யாரோ?
அவருக்கு என்ன பேரோ?
சின்னய்யாவின் மீது சின்னப் பெண் எதுக்கு வீண் பழி போட்டாள்?
சின்னய்யாவை ஓவரா லவ்வுஸ் செஞ்சதாலா?
 
Last edited:

Ratheespriya

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன் நினைவே என்
சுவாசமானது"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ப்ரியா ரதீஸ் டியர்

நன்றி பானுமா:love:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top