உன் கண்ணில் என் விம்பம் teaser 9

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser:cry::cry::cry:


images (38).jpg

எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடையும் பெண்ணின் மனதில் மேலும் பாரம் ஏறிக்கொண்டாள் அவளின் நிலை?


வாழ்க்கையில் எதிர்பாராதது நடக்கும் போதுதான் சுவாரஸ்யம் கூடும் என்பார்கள். சிலவிஷயங்கள் மனக்கஷ்டத்தையும், மனக்கசப்பையும் மாத்திரமே கொடுக்கும்.

ஏனோ மனம் சமாதானம் அடைந்த உடன் சீதாவை காண வேண்டும் போல் இருக்க, யாழிசை அங்கு சென்றாள். அவள் செல்லாமல் இருந்திருக்கலாமோ!கொல்லைப்புற கதவு திறந்திருக்கவே "அத்த" என்று அழைக்க போனவள் உள்ளே இளவேந்தனின் குரல் கேக்க மௌனமானாள்.

"ஐயோ உள்ள சிடுமூஞ்சி இருக்கான் போலயே! உள்ள போனா முறைச்சிக்கிட்டே திரிவான்! யாழ் இப்படியே வீட்டுக்கு நடையை கட்டு" மனம் கூவ அடுத்த அடி எடுத்து வைக்க போனவள் அவள் பேர் அடிபடுவதை கேட்டு அங்கேயே நின்று விட்டாள்.

"சில ஜென்மங்களுக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாருனு பிரித்தறிய தெரியிறதில்ல" சீதா இளக்காரமாக பேச

"அம்மா அமைதியா இருமா. அதான் யாழுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகிரிச்சில்ல" தனவேந்தன் அன்னையை சமாதானப்படுத்த.

"மனசு ஆரலைடா. என் பொண்ணா அவள பாத்துக்கணும்னு ஆச பட்டேன். நடக்காம போச்சே. மஹாலக்ஷ்மி டா அவ. தொட்டதெல்லாம் துலங்கும். அவளை போய் வேணான்னு சொல்லிட்டு, நாம இருக்கோமா? செத்தோமான்னு திரும்பியும் பாக்காத இடத்துல பொண்ணெடுக்கணுமாமே! யார் போய் பொண்ணு கேக்க போறா? நான் போக மாட்டேன் என்னால அசிங்கப்பட முடியாது" சீதா இறுகிய குரலில் கூற

"அத்த வீட்டுக்கு போய் சாந்தியை பொண்ணு கேளுங்க" என்று இளவேந்தன் சொல்லும் போது தான் யாழிசை வந்திருந்தாள்.சீதா மனதிலுள்ள ஆதங்கத்தை வார்த்தைகளாக்கி தனவேந்தனிடம் கொட்டிக் கொண்டிருக்க,தனவேந்தன் மற்றும் அன்னையின் சம்பாஷணையை உள்ளறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த இளவேந்தன் கோபம் கணக்க அன்னையின் முன் வந்து"அதான் அந்த அநாத கழுதைய ஒரு அநாத பயலே! கல்யாணம் பண்ணிக்கிட்டானே! அப்பொறம் என்ன பேச வேண்டி இருக்கு. சாந்தியை எப்படி கல்யாணம் பண்ணனும்னு எனக்குத் தெரியும். அத பத்தி நீங்க கவலை படாதீங்க" பல்லை கடித்தவாறு சொல்ல சீதா அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.வெளியே இளவேந்தன் சொன்னதை கேட்டு யாழிசை ஸ்தம்பித்து நிற்க,images (28).jpg"யாரை பாத்துடா அநாதனு சொன்ன. அவ என் வீட்டு குளவிலக்குடா.. அவள பத்தி பேசின நாக்கை அறுத்து புடுவேன். உன்ன பெத்ததுக்கு கருவருத்திருக்கணும்" சீதா காளியாவதாரம் எடுத்திருந்தாள்.

வேறெதுவும் பேசாது இளவேந்தன் கோபமாக சமயலறைக்குள் வர அங்கே நின்றிருந்த யாழிசையை கண்டு அதிர்ச்சியடைந்தான். சாந்தியை கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போகுமோ! என்ற அச்சமும், அன்னை யாழிசையை புகழ்வதும் எரிச்சலை தர கோபத்தில் பேசியிருக்க அந்த நேரத்தில் யாழிசையை அவன் சத்தியமாக அங்கே எதிர்பாத்திருக்கவில்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று பெரியவர்கள் சொன்னது சரிதான்.
 
#10
நான் நினைத்த மாதிரியே யாழிசைவார்குழலி மங்கம்மாவின்
பொண்ணு இல்லையா?
அதான் இவளை ஒரு மாதிரியும்
இயலிசையை ஒரு மாதிரியும்
மங்குனி மங்கம்மா நடத்தினாளா?

பாவம் யாழிசை
இப்போ இவள் அனாதையா?
இல்லையான்னு யாராவது
உன்னிடம் கேட்டார்களா,
இளவேந்தன்?
ஆனால் இதோடு இவன் நிறுத்தலை
போலவே, மிலா டியர்?
இன்னும் என்ன சொல்லி
கயல்விழியின் மனதை உடைச்சானோ?
சீக்கிரமா வந்து சொல்லுங்க,
பஸ்மிலா டியர்
 
Last edited:

Advertisement

Sponsored