உனக்கென காத்திருக்கும் வெண்ணிலவு-அறிமுகம்

Surangi

Writers Team
Tamil Novel Writer
#1
பத்ராவிடம் அவள் தாய்-தந்தை, நண்பர்கள் மான்சி, ரகுராமன்,விசுவம்,சித்ரா, உறவினர்கள்,உடன் பணிபுரிபவர்கள் என அனைவரும் கூறுவது ஒன்றே ஒன்றுதான் ஆனந்தை மறந்துவிடு.அவன் இந்த பூவுலகில் இல்லை.அவன் என்றும் திரும்பி வர போவதில்லை.அவள் அவனை மறந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும்.

ஆனால் பத்ரா?

ஆனந்த் இருந்த போது அவள் அவனை புரிந்து கொள்ளவே இல்லை.அவன் கண்களில் அவளுக்கென வழியும் அளப்பரிய காதலை உணரவேயில்லை.
அவள் சிறிது உணரத் தொடங்கிய போதோ விதி அவனை அவளிடமிருந்து பிரித்து விட்டது.

ஆனால் அவள் உள்மனம் சொல்கிறது அவள் ஆனந்த் இறக்கவில்லை.ஒரு நாள் கண்டிப்பாக திரும்பி வருவான்.அவனுக்காக அவள் கடைசி மூச்சு இருக்கும் வரை காத்திருப்பாள்.

அவள் நம்பிக்கை பலிக்குமா?அவள் ஆனந்த் திரும்பி வருவானா?அவள் காதலை சொல்ல இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா?

இந்த கதைக்கு உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்

உங்கள் சுரங்கி
 
Advertisement

Sponsored

New Episodes