உனக்காகவே நான் - 5

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 5

Heroin.jpg

அப்போது ‘யாராக இருக்கும் அந்த சுமித்தா?.என்று யோசித்தாள் மித்ரா. ‘யாராக இருந்தால் நமக்கென்ன?’யோசித்தவிதமாக தனது நீள கூந்தலை வழக்கமாகப் பயன்படுத்தும் கிளிப் கொண்டு கொண்டைப் போட்டாள்.




கட்டிலில் இருந்த துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள் மித்ரா.குளித்துவிட்டு எடுத்துச் சென்ற பருத்தி சுடிதாரை இலகுவாக அணிந்து கொண்டாள்.




அருகில் இருந்த ஆள் உயரக் கண்ணாடியின் முன் நின்று தனது உடை சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தனது முடியைத் தளர்த்திவிட்டாள் மித்ரா.பிறகு ஒரு சிறு பொட்டினை நெற்றியில் வைத்துக் கொண்டு நிமிர்ந்து கண்ணாடியில் பார்த்தவள்'Perfect'என்றவளுக்குக் காரணமின்றி ரிஷியின் நினைவு வந்தது. 'அவன் தன்னை கண்டுபிடிச்சிட்டு இருப்பானோ!தன்னைத் தப்பாக நினைத்திருப்பானோ!ப்ச் அதான் அங்கிள் இருக்காருல?அவர் பார்த்து கொள்வார்'என்று ஓடிய எண்ணம் சட்டென தடைப்பட்டு அங்கிள் தனக்காக காத்திருக்கக்கூடும் என்று வரண்டாவை நோக்கி அவசரமாக நடந்தாள் மித்ரா.




யாரும் அங்கு இல்லாததும் என்ன செய்வது என்று புரியாமல் மீண்டும் ‘தன் அறைக்கே போகலாமா?!............இல்லை மாடியில் எங்கோதானே அங்கிள் தங்கப் போவதாக சொன்னார்’ என்று யோசித்தவிதமாக ஷோஃபாவின் அருகில் நின்று மாடி படிகளைப் நோக்கிப் பார்த்தாள் மித்ரா.




அப்போது “பரவாயில்லையே..!சீக்கிரமே வந்துவிட்டாயே..”என்று தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிதமாக கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து வந்து கொண்டிருந்தான் ரிஷி.




'என்ன இவன் மட்டுமாய் வருகிறான்.அங்கிள் எங்கே?'அவனைக் கடந்து அவளது பார்வை அவன் பின்னே 'அங்கிள் வருகிறாரா'எனத் தேடியது.




மெதுவாக அவள் அருகில் வந்து நின்று “என்ன பதிலே இல்லை."என்றான் ரிஷி.




அப்போதுதான் காது கேட்டவள் போல “அது... . அங்கிள்..எங்கே” என்று ‘அவன் பின்னே வருகிறாரா’ என்று மீண்டும் அவன் பின்னே எட்டிப் பார்த்தாள் மித்ரா.




“அப்பா முன்னே சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டார்.நீண்ட நேரம் கார் ஓட்டியதால் கொஞ்சம் சோர்ந்துவிட்டார்.அதனால் நான்தான் அவரைச் சீக்கிரம் சாப்பிட்டுத் தூங்க அனுப்பினேன்.நாளை வேறு ஊட்டிச் செல்லவேண்டும் என்று சொன்னார்.அதனால்தான்.நாளை உன்னுடன் பேசுவார்.நீ வா...நாம் சாப்பிடலாம்” என்று ஸ்டைலாக பேண்ட் பாக்கட்டில் கையைவிட்டவிதமாக சொல்லிக் கொண்டு முன்னே நடக்கலானான்.




அவள் எந்தக் கேள்வியும் கேட்க முடியாதபடி அவன் பேசியதை இமைக்கவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.




‘சே..என்ன இது..இப்படிப் பார்க்கிறோம்.அவன் தன்னை பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பான்’ என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அவன் செல்வதையுணர்ந்து அவன் பின்னே நடந்தாள் மித்ரா.




டைனிங்க் டேபிலில் எல்லாம் எடுத்துவைத்துவிட்டு தயாராக நின்றாள் வள்ளி.




“வள்ளி நீ வீட்டுக்குப் போ..நாங்களே பரிமாறிக்குவோம்.இப்போதே மிகவும் அதிக நேரம் ஆகிவிட்டது.முத்தய்யாவை உடன் அழைத்துச்செல்.வீட்டை அடைந்ததும் அவரை அனுப்பிவிடு..சரியா?”என்று வள்ளியை நோக்கி கேள்வியும் பதிலுமாகக் கேட்டான் ரிஷி.




“இல்ல..சின்னய்யா..”என்றவளின் வார்த்தை ரிஷியின் பார்வையிலும் கை அமர்த்தலிலும் நின்றது.




அவர்களது உரையாடலையே கவனித்திருந்த மித்ராவும் யோசித்து நேரம்10க்கும் அதிகமாகிவிட்டது என்பதை உணர்ந்து “ ஆமாம் வள்ளி..நீ கிளம்பு..நாங்க பார்த்துக்கிறோம்.அங்க குழந்தைகளெல்லாம் தனியாக இருப்பாங்க” என்று குழந்தைகள் இருப்பார்கள் என்று ஜீவானந்தம் முத்துவை விசாரித்தவிததில் ஊகத்துடன் வள்ளியிடம் கிளம்புமாறு சொன்னாள் மித்ரா.




ஆச்சரியமாக வள்ளியும் ரிஷியும் ஒரு நொடி மித்ராவைப் பார்த்தனர்.அவர்கள் பார்வையின் அர்த்தம் புரியாத மித்ராவிற்கு தலையைத் தாழ்த்தி'என்ன நான் இப்போது தவறாக சொல்லிவிட்டேன்.இருவரும் அப்படி பார்க்கிறார்கள்'என்று இருந்தது.




பிறகு “முத்தய்யா..”என்று வெளியில் சென்று அவரிடம் வள்ளிக் கொண்டுவிட்டுவர சொன்னான் ரிஷி.




“சரிங்க சின்னய்யா.வரோம் சின்னம்மா” என்று முத்தய்யா வள்ளியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.




"வரேனுங்க சின்னம்மா.சின்னய்யா சாப்பிட்ட பிறகு டேபிளிலேயே எல்லாம் இருக்கட்டும்.நாளைக்கு நான் வந்து சுத்தம் செய்துக்கிறேன்"என்று சொல்லிவிட்டு முத்துவுடன் நடக்கலானாள் வள்ளி.




"சரி வள்ளி.நீங்க பத்திரமா போங்க"என்றான் ரிஷி.




"ம்ம்"என்றதுடன் அவர்கள் போவதையே பார்த்திருந்த மித்ராவை “ சரி...நீ வா மித்ரா..நாம் சாப்பிடலாம்” என்றான் ரிஷி.




அவனுக்குப் பதில் அளிக்கும்விதமாக"போகலாம்"எனச் சொல்லிவிட்டு அவன்புரம் திரும்பியவள் அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்து சட்டென அனிச்சை செயல் போல அவள் முகம் தரையை பார்த்தது.அவளையும் மீறித் திரும்பவும் அவள் கன்னம் சூடேறியது.அதன் காரணம் புரியாமல் சூடேறிய தன் கன்னத்தை தடவினாள் மித்ரா.




அவளது இந்த நொடிப் பொழுது அனிச்சை செயலை ரசித்தவனாக 'இது போன்ற பெண்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்களா என்ன?!!'வியப்பான பார்வையுடன் அவளை சங்கடப் படுத்தாமல் நடக்கலானான் ரிஷி.




'என்ன அவனது பார்வையை சந்திக்க இவ்வளவு பயம் ஏன் வர வேண்டும்?இல்லை தயக்கமா ?என்ன தயக்கம் ..?'எனப் பலவாறு தனகுள்ளே கேட்டவிதமாக மித்ரா அவனுடன் சற்று இடைவெளிவிட்டு நடந்தாள் மித்ரா.




'எத்தனையோ ஆண்களிடம் பேசி பழகியிருக்கிறோம்.புதுசாக பேசும்போது கூட இவனிடம் ஏற்பட்ட தடுமாற்றம் இதுவரையில் யாருடனும் வந்ததில்லையே!!....ஏதோ முன்பு கேட்ட போது புதுசாக பேசுபவர்களிடம் எனக்கு இப்படித் திக்கும் என வாய்க்கு வந்ததைச் சொல்லிவிட்டோம்.ஏன் அவன் அப்படிப் பார்த்தான்'என யோசனையைவிட்டு வர முடியாமல் தவித்தாள் மித்ரா.




அந்தப் பார்வையின் பொருள் விளங்காமல் அவனுடன் நடந்த மித்ரா ,விழி இமைகள் விரிய விழித்துவிட்டு,அப்போழுதுதான் நினைவு வந்தவளாக ‘இவனுடன் தனியே இப்போது சாப்பிட வேண்டுமா?இவனுக்கு அன்று நடந்தது நினைவிருக்கும் போல் இருக்கிறதே.இதனால்தான் அந்தப் பார்வையோ?!இதை நான் யோசிக்கவே இல்லையே.!என்ன செய்வது? ’ என்று கலங்கிய விதமாக வந்தவளுக்கு மின்னலென ஒரு யோசனைத் தோன்றியது.




டைனிங்க் டேபிலிலை சுற்றி இருந்த நாற்காலிகள் ஒன்றில் உட்கார வசதியாக ஒன்றை இழுத்துவிட்டு"உட்கார்"என்று அவளுக்கு வழிவிட்டு அருகிருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்தான் ரிஷி.




தன் முன் மூடி வைக்கப் பட்ட தட்டை நிமிர்த்தி வைத்தவிதமாக “இப்பொழுது பழகிவிட்டாயா?”என்று மித்ராவை பார்த்துக் கேட்டான் ரிஷி.




அவன் என்ன பேச போகிறான் என்பதை ஓரளவு யூகித்திருந்த மித்ரா “என்ன சொன்னீங்க?”என்று மறுபடியும் கேட்டாள்.




“இல்லை முன் பின் தெரியாதவர்களுடன் தனியே பேசும் சூழலோ அல்லது இருக்கும் சூழலோ ஏற்பட்டால் அதைச் சமாளிக்க பழகிவிட்டாயா” என்று கேட்டான் ரிஷி.




'அச்சோ..கேட்டேவிட்டானே..நான் சொன்ன அதே வார்த்தைகளுடன் வாக்கியம்.இவன் இன்னும் மறக்கவில்லை..சென்னையில் லிஃப்ட் –ல் ஏற மறுத்ததை எடுத்துச் சொல்கிறான்’ என்று உணர்ந்து 'அன்றே எவ்வளவு கோபமாக பார்த்தான்.பிறகு இயல்பு போல புன்னகைத்தாலும்,இப்போது எது பேசினாலும் அது போல கோபம் கொள்ள நேரிடுமே.இப்போது சுமுகமாக சமாளிக்க வேண்டும்'என்று முன்பு தோன்றிய தன் யோசனையைச் செயலாற்ற முனைந்தாள் மித்ரா.அப்போது அவனது கோபத்தை சந்திக்கும் சக்தியற்றவளாக உணர்ந்தாள் மித்ரா.




அவள் இன்னும் யோசனையில் இருந்து மீளாததும்,மீள்கிற எண்ணமற்றவள் போல அவளது கண்களின் உள் இருக்கும் கருவண்டுகள் நடனமாடும் விதமாக இருப்பதையும் உணர்ந்த ரிஷி ,தொடர்ந்து கேட்டான் "என்ன பதிலே இல்லை.நான் எதாவதுபுதுவித புரியாத மொழியில் பேசிவிட்டானே என்ன?"என்று கேலிபோல பேசி அவளைப் பார்த்து சிரித்தான்.




அவன் கேலிக்குரலுக்கு பதில் சொல்லும் துணிவுடன் "அதெல்லாம் ஒன்றுமில்லை சார்.அது...வந்து...."என்று பேச்சை இழுத்தவிதமாக அவனை நிமிர்ந்து பார்த்தவளின் வாய் வார்த்தைகள் வரச் சண்டித்தனம் செய்ய விக்கித்துப் போனாள் மித்ரா.அவனது நேர் கொண்ட பார்வையைச் சந்திக்க முடியாமல் மீண்டும் ஒருமுறை தலை தானாக தரையைப் பார்த்து.




'அச்சோ...என்ன இது அவனைப் பார்க்கும்போது மூச்சே நின்றுவிடும் போலிருக்கிறதே.இனி நிமிர்ந்து பார்த்து பேசக் கூடாது. ' என்று முடிவெடுத்தவளாக 'இந்தக் கன்னத்தில் வேறு.!ஏற்படுகிற இந்த புதுவித உணர்வு.இதமாக இருந்த போதும் ,இவன் தன்னை என்ன நினைப்பான்!இதையும் முடிந்தவரை அடக்கியே ஆக வேண்டும்'என்று மீண்டும் சூடேறிய தன் இடக்கன்னத்தைத் தடவினாள் மித்ரா.




அவளது இந்த கூச்சத்தையுணர்ந்தவனாக அவனே அவளைப் பேச ஊக்கினான் ரிஷி. "அது...வந்து....அப்பறம்"என்றான்.




“ இல்லை சார்..எங்கள்...எங்கள் வீட்டில் சாப்பிடும்போது பேசும் பழக்கமில்லை.நாம் அப்பறம் எது வேண்டுமானாலும் பேசுவோம்’ என்று இரண்டு சப்பாத்தியை எடுத்துத் தன் தட்டிலிட்டுக் கொண்டு “ உங்களுக்கு எத்தனைச் சார் இரண்டா மூன்றா?”என்று கேட்டவிதமாக ரிஷியின் பதிலுக்கு பொறுத்தாள் மித்ரா.




‘இப்போது இருக்கும் மனநிலையில் எதுவும் பேச விருப்பமற்று,அதிலிருந்து தற்போது தப்பித்தால் சரி என நினைத்தாள் மித்ரா.




“ஓ..சரி...இரண்டுப் போதும்..”என்றுவிட்டு அதற்காகச் செய்திருந்த உருளைக்கிழங்கை எடுத்து அவளுக்கும் பரிமாறிவிட்டு தனக்கும் எடுத்துக் கொண்டான் ரிஷி.




அவன் எந்தக் கேள்வியும் கேட்டுவிடக் கூடாது என்று வேண்டுமென்றே மெதுவாகச் சாப்பிட்ட மித்ரா,அவன் உண்டப் பின்பும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.அதுவரை பொறுமையாக உடன் அமர்ந்திருந்தான் ரிஷி.




‘டேபிள் மேனர்ஸ் எல்லாம் தெரியும் போல.தான் சாப்பிட்ட பிறகும் உடன் இருப்பவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரையும் உடன் அமர்ந்திருக்கிறான்’ என்று எண்ணியவிதமாக சாப்பிட்டு முடித்தாள் மித்ரா.







இருவரும் சாப்பிட்டவுடன் தட்டை எங்குச் சுத்தம் செய்வது என்று ஆராய்ந்தவிதமாக அருகில் இருந்த சமையல் அறையை நோக்கிப் பார்த்தாள் மித்ரா.




“அங்கு இருக்கும் பேஷனில் தட்டை வைத்துவிடு நாளை வள்ளி வந்து சுத்தம் செய்து கொள்வாள்” என்று எழுந்து பேஷன் இருக்கும் இடம் நோக்கி நடந்தான்.




தட்டை வைத்துவிட்டு கையை கழுவிய ரிஷி திரும்பி பார்த்தவன் இன்னும் மித்ரா டைனிங்க் டேபிலின் அருகிலே நின்று கேள்வியாக நோக்கிய விதமாக நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு. “ என்ன?”என்று கேட்டுக் கொண்டே வந்து நாற்காலியின் மீதிருந்த துண்டால் கை மற்றும் வாயைத் துடைத்த வண்ணம் கேட்டான்.




“இல்லை..எங்க வீட்டில் எல்லோரும் அவர் அவர் உண்ட தட்டை அவர்களே சுத்தம் செய்வதுதான் வழக்கம்.என் அப்பா சொல்லிக் கொடுத்தப் பழக்கம் அது.அதனால் நானே சுத்தம் செய்துவிட்டுப் போகிறேன் சார்.நீங்க தூங்க போங்க.நான் கழுவி வைத்துவிட்டு வருகிறேன்” என்று இழுத்துப் பிடித்து வந்த வார்த்தைகளால் தன் வழக்கத்தைச் சொன்னாள்.




ஒரு வினாடி ரிஷியின் இடது புருவம் ஏறி இறங்கியது.பின் “ சரி..சுத்தம் செய்துவிட்டு வா..நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.




“இல்லை நீங்க போங்க..நான்” என்று அவசரமாக ஆரம்பித்த மித்ராவைப் பார்த்து “பரவாயில்லை நீ பேசி தாமதம் ஆக்காமல் சீக்கிரம் வந்தால் அது போதும்.”என்று எதிர்த்துப் பேச வாய்ப்பளிக்காமல் முடித்தான் ரிஷி.




“சரிங்க சார்” என்று சிட்டென பறந்து சமையல் அறையில் புகுந்து தட்டைச் சுத்தம் செய்தவிதமாக ‘திரும்பவும் சென்னையில் நடந்ததைக் கேட்பானா?’என்ற ஐயம் எழத் தட்டை வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு பயந்தவிதமாக மெதுவாக நடந்து வந்தாள் மித்ரா.




அவள் பயந்ததிற்கு நேர் மாறாக அவன் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. “இந்தா துடைத்துக் கொள்” என்று மற்றொரு துண்டை அவளிடம் நீட்டினான்.




“ம்ம்..”என்று துண்டை வாங்கியவளின் கை விரல் ரிஷியின் கையைத் தொட்டது.பயத்தின் அறிகுறியாக அவளது கைகள் சில்லிட்டிருந்தது.




இதமான சூட்டில் இருந்த அவனது கைகள் அவளைச் சிறிது சிலிர்க்க வைத்தது.சட்டேன தன் கைகளை தன்புறம் இழுத்துக் கொண்டாள் மித்ரா.




“என்ன இது...உன்னுடைய கை இவ்வளவு சில்லிட்டு இருக்கிறது.என்ன ஆச்சு?”என்று நயமாகக் கேட்டான் ரிஷி. ‘அச்சோ..என் கையே என் பயத்தைக் காட்டி கொடுத்துவிட்டது போல் இருக்கிறதே!!!’என்று தன்னையே நொந்துக் கொண்டு எப்படிச் சமாளிப்பது என்று யோசித்துப் பேசலானாள் மித்ரா.




“இ..ல்லை..அதுவந்து..வெளியில் பனி இல்லையா...அதோடு இப்பொழுது தண்ணீரில் கையை வேறு வைத்திருந்தேன் இல்லையா.?அதுதான் என் கை” என்று பெரியவிளக்கம் சொன்னவளாகப் பெருமூச்சுவிட்டவளாக நிறுத்தினாள் மித்ரா.




“ஓ அதுதான் உன் கைகள் சில்லிட்டனவோ.!நான் வேறு நினைத்தேன்.என்னைப் பார்த்து பயந்துவிட்டாயோ?”என்று சிரித்தான்.




“அதெல்லாம் ஒன்றுமில்லை சார்” என்று இந்தக் கன்னத்தில் வேறு.!ஏற்படுகிற இந்த புதுவித உணர்வு அவசரமாக மறுத்தாள் மித்ரா.




“சரி சரி..அப்பறம் மித்ரா.என்னை ரிஷி என்றே அழைக்கலாம்.அப்பாவை அங்கிள் என்றுவிட்டு ,என்னை மட்டும் சார் மோர் என்றால் நன்றாக இல்லை” என்று நடக்கலானான் ரிஷி.




“சரிங்க சார்..”என்றவளை ரிஷி நின்று திரும்பி முறைத்தான்.அவன் முறைப்பைத் தாங்க முடியாமல் “சாரி..ரி...ஷி...”என்று இழுத்தாள் மித்ரா.




சட்டெனச் சிரித்து “என் பெயர் ரி...ஷி...இல்லை.ரிஷி.”என்றான்.அவளும் சிரித்துவிட்டாள்.அவள் சிரிப்பை சில வினாடிகள் பார்த்தவன் சட்டென நிலை உணர்ந்து நடந்தான் ரிஷி.




அங்கிருந்த இறுக்கம் மறைந்தது. “சரிப் படுத்து தூங்கு நாளைப் பார்க்கலாம்.குட் நைட்” என்று அவள் அறைக் கதவைத் திறந்துவிட்டான் ரிஷி.




“ம்ம்..குட் நைட்” என்றவளைப் பார்த்துவிட்டு இரவு விளக்குகளை வரண்டாவில் ஒளிரவிட்டு தன் அறை நோக்கி இரண்டிரண்டு படிகளாக தாண்டி விரைந்தான்.




‘ஹப்பா..கிளம்பிட்டான்.என்னமோ இப்போது எதையும் கேட்கவில்லை?எதுவானாலும் இப்போதிக்கு நிம்மதி’ என்று பெருமூச்சுவிட்டாள் மித்ரா.




‘பிறகுக் கேட்பதற்குள் ,ஒரு முறை என்ன எப்படிப் பேசுவது என்று நமக்குள் ஒத்திகை பார்த்துக் கொள்வோம்’ என ஒரு தீர்வு கண்டவளாக மித்ரா உட்புறம் கதவை தாளிட்டுக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.




சாப்பிட்ட பிறகு அறை மணி நேரமாவது காற்றோட்டமாக மாடியில் அமர்ந்து அம்மா,அப்பா,அவள் என மூவருமாகப் பேசுவது மித்ராவின் வீட்டில் வழக்கம்.இரவில் அளவாக உண்டாலும் சாப்பிடும்போது விரிவடைந்த உணவு குழல் பாதை சுருங்க சில நிமிடங்களாவது இடைவேளிவிட்டு படுக்க வேண்டும் என்று சுந்தரம் அடிக்கடி சொல்வார்.




அந்த வீட்டுப் பழக்கம் மித்ராவிற்கு நினைவு வந்த கண நேரத்தில் அவள் கண்கள் கலங்கத் தொடங்கியது.உடனே எழுந்து தன் பெட்டியிலிருந்த தன் குடும்ப புகைப்படத்தை எடுத்து தெம்பற்றவள் போல மீண்டும் கட்டிலில் பொத்தென அமர்ந்தாள் மித்ரா.அவள் கண்களிலிருந்து வந்த கண்ணீர் துளிகள் நீண்ட நெடிய கோட்டினை தன் இரு கன்னங்களிலும் விரவி ஒரு சோக காவியம் எழுத ஆரம்பித்திருந்தது.




அந்தப் புகைப்படத்தை தன் வலதுகையால் வருடிய மித்ரா “I Miss you அப்பா.! I Miss you அம்மா.!”என்று கேவலுடன் ஏக்கமாக அந்தப் புகைப்படத்தை தன் மார்போடு அணைத்தவண்ணம் அமர்ந்தாள்.




அந்த அனைப்பில் தன் அப்பா அம்மா இருவருமே வந்து அனைத்ததாக உணர்ந்த மித்ரா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.சில நீண்ட நெடிய மூச்சினை எடுத்துவிட்டாள்.




மீண்டும் புகைப்படத்தை முகத்தின்முன் நிறுத்தினாள்.அதற்குள் முகத்தின் மோவாயை கடந்திருந்த அவளின் கண்ணீர் துளிகள் புகைப்படத்திலிருந்த அவள் அம்மாவின் முகத்தின் மீது விழுந்தது.அதனை தன் கையால் துடைத்த மித்ராவிற்கு தன் அம்மா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.




சட்டென தன் கண்ணீர் துளிகளைத் துடைத்தாள்.நிமிர்ந்து அமர்ந்தாள்.அம்மாவின் தோழிகள் அவர்கள் வீட்டில் எதுவும் பிரட்சனை என்றால் தன் வீட்டுக்கு வருவதும் ‘சாந்தியிடம் பேசினால் ஆருதலாக இருக்கும்’ எனச் சொல்வதையும் மித்ரா கேட்டிருக்கிறாள் .




அவர்களிடம் சாந்தி ஆருதலாகப் பேசிவிட்டு, ‘அழுவதால் எந்த பிரட்ச்சனையையும் சரியாகப் போவதில்லை.மாறாக அது மனதை மேலும் இலகுவாகி பிரட்சனையை சமாளிக்க இருக்கும் கொஞ்ச நஞ்சம் சக்தியெல்லாமும் இல்லாமலாக்கிவிடும்.முதலில் அழுவதை நிறுத்துங்கள்’ என்று அறிவுரை கூறுவார்கள்.அம்மாவின் படத்தின் மீதிருந்த மித்ராவின் கண்ணீர் இதை அவளுக்கு நினைவு படுத்தியது.




“அம்மா நீங்கச் சொல்லி என் மனதில் பதிந்த வார்த்தைகளை எப்படி மறந்தேன்.!மறந்து இப்படி அழுது கொண்டே இருக்கிறேனே.!அதுவும் தொடர்ந்து இரண்டு மாதங்களாய்?!”கேள்வியாக வேதனையுற்ற மித்ராவின் கண்,நீரை வடிக்கத் தயாராக இருந்தது.ஒருவாறு சமாளித்து மேஜையின் மீதிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.




“ஒருவேளை அழுது கொண்டே இருந்ததால்தான் எதையும் சமாளிக்கும் சக்தியற்று அடிக்கடி இந்தக் கண்ணீர் வந்து மேலும் என்னைச் சக்தியற்றவளாக மாற்றிவிட்டதா!?...”




“இல்லை இனி இது போல நினைத்து நினைத்து அழுக மாட்டேன் அம்மா.கண்டீபாக….உறுதியுடன் இருப்பேன்.”என்று அம்மாவிடம் சொல்வது போல புகைப்படத்தைப் பார்த்து சொல்லிக் கொண்டு தனக்குத் தானே உறுத்திக்கொண்டவளாக பெருமூச்சுவிட்டாள்.




மித்ராவின் மனது சிறிது தெளிவுற்றது.புகைப்படத்தைக் கட்டிலில் வைத்துவிட்டு ,தன்Tooth paste – ஐ எடுத்துச் சென்று இரவு தூங்குவதற்கு முன் பல் துளக்கும் பழக்கத்தில் பல் துளக்கிவிட்டு வந்தாள்.




அதன் பிறகும் அரை மணி நேரம் கூட ஆகவில்லை போலும்,வீட்டின் பழக்கத்தினால் அவள் உடலும் அவளை உடனே படுக்க அனுமதிக்கவில்லை.மீண்டும் கட்டிலிலே வந்து அமர்ந்தாள் மித்ரா.




அப்போது அறையை நோட்டம்விட்டவளின் கண்கள் மேஜையின் மீதிருந்த புத்தகங்களின் மீது விழுந்து நிலைத்தது.அதன் அருகே எழுந்து சென்று என்ன புத்தகங்கள் என்று ஆராய்ந்தாள் மித்ரா.




அனைத்தும் பக்திமலர் புத்தகங்கள்.அவற்றில் ஒன்று இன்னும் பிரிக்கப் படாத நிலையிலிருந்தது.அதனை எடுத்து விரித்த வண்ணம் அருகிருந்த நாற்காலியை இழுத்து அதில் அமர்ந்தாள் மித்ரா. ‘ஜீவா அங்கிளுக்காக இந்த மாத பக்திமலரை ரிஷி வாங்கி வைத்திருப்பான் போலிருக்கிறது.ஆனால் நான் தங்குவேன் என்று எண்ணியிருக்க மாட்டான்’ என்று எண்ணியதும் அவளையும் அறியாமல் அவள் முகத்தில் மென்னகை அரும்பியது. ‘ எப்போது பார்த்தாலும் புன்னகையுடனே இருக்கிறான்’ என்று ரிஷியின் புன்னகையை எண்ணினாள் மித்ரா.




‘இவன் சிரிப்பு இவ்வளவு அழகாக இருக்க வேண்டுமா?!’என குறைபட்டாள் மித்ரா. ‘இருந்தும் சாதாரணம் போல அவனது முகத்தைப் பார்க்க முடியவில்லையே!?அவனுடன் இயல்பாகப் பழக முடியவில்லையே!’என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டாள்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top