உனக்காகவே நான் – 3

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் – 3

Heroin.jpg

“அன்று வேறு சூழ்நிலை இன்று வேறு சூழ்நிலை மித்ராமா.நீ வரும்போது காரில் அழுததை பார்த்த பிறகும் உன்னைத் தனியே விட்டுவிட்டு என்னால் நிம்மதியாகச் சென்னையில் இருக்க முடியாது.குருவிற்கு முழுமையாகக் குணமாகும் வரை என்னால் சென்னையைவிட்டு வரவும் முடியாது.”என்று வருந்திப் பேசிய ஜீவானந்ததின் மூச்சு இரத்த அழுத்தத்தால் பலமாக எடுத்தது.




“அங்கிள் ஏன் இவ்வளவு உணர்ச்சிவச பட்றீங்க. BP இருக்குல்ல.பொறுமையா பேசுங்க அங்கிள்.”என்று வேதனையுற்று தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவரிடம் நீட்டி “ முதலில் தண்ணீர் குடிங்க” என்றாள் மித்ரா.




அவள் அச்சத்தைப் பார்த்துவிட்டு,புன்னகை செய்தவாறே ஒரு கையால் காரின்steerringபிடித்தவண்ணம் ஒரு கையால் தண்ணீரை வாங்கிக் குடித்தார் ஜீவானந்தம். “பயப்படாதே மித்ராமா” என்று தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினார்.




“நான் என்னதான் செய்வது அங்கிள் இப்போ” என்று அவரின் வேதனைதாங்க முடியாமல் உடைந்து கேட்டாள் மித்ரா.




கார் கோவையை அடைந்து ,மேட்டுப்பாளையம் பாதையில் மெதுவாக நகர்ந்தது.




“கவலை வேண்டாம் மித்ரா மா.உன்னை எப்படியேனும் சம்மதிக்க வைத்து நம்ம company–யிலே வேலைக்குச் சேர்த்துவிட எண்ணித்தான் இருந்தேன்.அங்கே ரிஷியின் பார்வையில் இருப்பாய் என்கிற ஆருதலாவது இருந்திருக்கும்.ஆனால்,அறிந்தவர் யாருமில்லா இடமாகத்தான் கோவைbranchஇருக்கும் என்று எண்ணியது என் சிந்தையின் பிசுக்கு.”என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியானார் ஜீவானந்தம்.




‘ரிஷியின் பார்வையிலா?!அங்கிள் நிறையவே யோசித்துத்தான் இருக்கிறார்.அவர் முன்னிலையில் அழுதது எவ்வளவு தவறு.’என்று தன்னையே திட்டிக் கொண்டு “ இல்லை அங்கிள் அது வந்து நடந்ததை நினைக்கக் கூடாது.அதை நினைவு படுத்தும்விதமாக இனி யார் பேசி கேட்கவும் எனக்குச் சக்தி இல்லை.இந்த2மாதத்தில் வீட்டுக்கு வந்தவர்களுக்கு எனக்குப் பதில் சொல்லி என் மனக் காயம் இன்னும் மோசமானதுதான் பலன்.அதனால்தான் நான் இந்த முடிவெடுத்ததும்.அதையே உங்களிடம் சொன்னதும்.போதாக் குறையாக எங்கிருந்தோ திடீர் என்று வந்து,தான் சுந்தரம் அண்ணாவின் ஒன்றுவிட்ட தங்கை என்று ஒட்டிக் கொண்ட ஆனந்தி அத்தையும் அவளது மகன் ரங்கனும் தந்த தொந்தரவு வேறு?”என்று தன் உதட்டைப் பற்களால் கடித்தவிதமாக இதோ அதோ என்று எட்டிப் பார்த்த கண்ணீரை வரவிடாமல் அடக்கிய வண்ணம் சொல்லி கொண்டே போனாள் மித்ரா.




‘அச்சோ நாமும் இப்படி பழையதை நினைக்க வற்று இவளை சங்கடப் படுத்தி’ என்று வருந்தி அவள் பேச்சை இடைமறித்து “என்னால் உன்னை புரிந்து கொள்ளமுடிகிறது மித்ராமா.என்னிடம் இதெல்லாம் நீ சொல்ல வேண்டுமா?சொல்.என்னைப் பொறுத்தவரை எதை வற்புறுத்தி நடக்க வைத்தாலும் புகையூட்டி பழுக்க வைத்த பழங்கள் போல ஆரோக்கியமற்றவையாகத்தான் இருக்கும்.அதனால் உன்னைக் கோவை branch -ல் சேரச் சொல்லி நான் வற்புரத்த போவதில்லை.நீ அதனால் அதைப் எண்ணி வேதனைக் கொள்ளக் கூடாது.சரியா?”என்று பரிவுடன் பேசி அவள்புரம் திரும்பிப் புன்னகைத்து கண்களைச் சிமிட்டினார் ஜீவானந்தம்.




இவ்வாறு ஜீவானந்தம் ஆருதலாகப் பேசினாலும் அடுத்து என்ன சொல்ல போகிறார் என்ற திகிலுடன் “பிறகு என்ன சொல்ல போறிங்க அங்கிள்.வேலைக்குப் போக வேண்டாம் என்றா?.”என்று வியப்பும் கேள்வியுமாக கேட்டாள் மித்ரா.




“ஆமாம் மித்ராமா நீ வேலைக்கு அவசியம் போக வேண்டுமா? “ என்று பழைய கேள்வியையே திரும்ப கேட்டார் ஜீவானந்தம்.




ஜீவா அங்கிள் ஏன் அப்படிக் கேட்டார் என்பதை அறியமுடியாமல் திணறி தன் மனதில் உறுத்தியதைக் கேட்டாள் மித்ரா “ வேலைக்குப் போகாமல் நான் எங்கே இருக்க?என்ன செய்ய அங்கிள் ?”




“வழி இருக்கு மித்ராமா.ரிஷி உன்னைப் பார்த்தது இல்லை தானே?”




‘ஓரிருமுறைப் ஃபோனில் பேசியதைத் தவிர,அவனை அவளுக்கோ அவனுக்கு அவளையோத் தெரியாது.’என்று எண்ணி “இல்லை” என்று மறுப்பாகத் தலை அசைத்தவிதமாக மித்ரா சொன்னாள்.




“இல்லை” என்று மறுப்பாகத் தலை அசைத்தவிதமாக மித்ரா சொன்னாள்.




“நல்லது.நீ தங்குவதற்கும்,மற்றதற்கும் வேறு வழி இருக்கு மித்ராமா.அதையெல்லாம் யோசிக்காமலா இந்த அங்கிள் உன்னிடம் பேசுவேன்” என்று மித்ராவின் தலையைத் தனது இடது கைகளால் பிடித்து செல்லமாக ஆட்டினார்.ஜீவானந்தம் தலையைப் பிடித்த ஆட்டியதில் சிரித்த மித்ரா “அங்கிள்..”என்று சிணுங்கினாள்.




“ சரி சரி..எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்.நீ முதலில் சொல்.உனக்கு அவசியம் வேலைக்கு இப்போ போகனுமா?”என்று ஆரம்பித்ததிலே வந்து நின்றார் ஜீவானந்தம்.




சட்டெனச் சோர்ந்து , “அத்தில்லை அங்கிள்.என்னைப் பொறுத்த வரை நடந்ததை நினைக்காமல் இருக்க இடம் மாற்றம் மட்டும் போதாது.முடிந்த அளவு எதிலேனும் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.அமைதியாக இருந்து தனிமையில் இருந்து சிந்தனைக்கு வேலைக் கொடுக்க துளி கூட விருப்பம் இல்லை அங்கிள்.இது நடக்காம இருக்க வேலைக்குப் போவதை விட நல்ல ஒரு தீர்வு இருக்கக் கூடுமென்று எனக்குத் தோன்றவில்லை.அதனோடு எனக்கும் வேலை செய்யவே விருப்பம்” என்று மனதைத் திறந்தாள் மித்ரா.

மித்ராவின் முடிவைக் கேட்டுவிட்டு புன்னகைத்தவிதமாக “ஆக வேலைக்குப் போவதுதான் உன் விருப்பம் என்கிறாய்.சரிதானே? ! “ என்றார் ஜீவானந்தம்.




“ம்ம்...”என்று தலையை ஆட்டியவிதமாக கைகளைப் பார்த்து ,இருக்கும் பத்து விரல்களை ஓராயிரமுறை மடித்து 'அங்கிள் என்ன சொல்லப் போகிறாரோ'என்று பதட்டத்தை அவளையும் அறியாமல் வெளிப்படுத்தினாள் மித்ரா.




என்ன செய்வது என்று சிறிது அமைதியுடன் யோசித்தார். 5 நிமிட காலம் கார் சாலையை வழுக்கிக் கொண்டு அமைதியாகச் சென்றது.ஜீவானந்தம் சிந்தனையில் இருப்பது அவரின் முகத்தில் தெரிந்த சுருக்கங்கள் சொல்லியது.அதனால் மித்ரா எதுவும் பேசாமல் அவர் பதிலுக்காக காத்திருந்தாள்.




ஜீவானந்தம் ஒரு முடிவெடுத்தவராக தொடர்ந்து பேசினார் “ம்ம்...சரி..மித்ராமா..நான் சொல்வதைப் பொறுமையாக கேள்.நீ நாளை அந்த காந்திபுரம் company–க்கு போவதில்லை”




“அங்கிள்..அது..”என்று பேச்சை ஆரம்பித்த மித்ராவின் வாக்கியம் ஜீவானந்ததின் வார்த்தையில் தடைப்பட்டு நின்றது. “ பொறு மித்ராமா..முழுதும் கேட்டுவிட்டு பேசு.”என்றார் ஜீவானந்தம்.




“ம்ம்..சாரி அங்கிள்..”என்று தலையசைத்தாள் மித்ரா.




“நாளைக் காலை நான் உன்னை ஊட்டிக்கு அழைத்துச் செல்ல போகிறேன் மித்ராமா.அங்கே என் அம்மா இருக்காங்க.நீ,சென்னையில் இருக்கும் பிரட்ச்சனைகள் முடியும் வரையும் ,உனக்காகவே எந்த நாள் சென்னைப் போக வேண்டும் என்று தோன்றுகிறதோ ,அது வரையும் நீ அங்கே இருக்கலாம்.என்ன புரிகிறதா...?”என்று கேள்வியும் பதிலுமாக முடித்தார்.




“என்ன பார்வதி பாட்டியுடனா? ! “ என்று ஏற்பட்ட ஆனந்தத் துள்ளலுடன் கேட்டாள் மித்ரா.




அவளது துள்ளலை கண்டு சிரித்துவிட்டு. 'ஹப்பா ஒருவழியா அவள் சந்தோஷத்துடன் போகச் சம்மதித்துவிடுவாள்'என்று எண்ணினார்.




“ஆமாம்....அம்மாவும் அங்கே தனியாகத்தான் இருக்கிறார்கள்.வீடு முழுக்க வேலை ஆட்கள் இருந்தும் எனக்கு அவர்களை அங்கே விட்டுவிட்டு இப்படி நானும் ,குருவும் சென்னையிலும் ,ரிஷி இங்க.,மேட்டுப்பாளையத்திலும் இருப்பது வருத்தமே.ஆனால் என்ன செய்ய..?என் அம்மாவின் விருப்பம் இது..குருவிற்கு முழுமையாகக் குணமாகும் வரை என்னால் சென்னையைவிட்டு வரவும் முடியாது.ரிஷியும் ஆசையுடன் ஆரம்பித்த company -ஐ விட்டு ஊட்டியிலே தங்கிவிட முடியாது .”என்று தன் மன வேதனையைச் சொன்னார் ஜீவானந்தம்.




“ஏன் அங்கிள் பாட்டியை நீங்க உங்களுடன் சென்னைக்கு அழைத்து வந்திருக்கலாமே.இல்லை உங்கள் மகனுடனாவது இருக்கச் சொல்லியிருக்கலாமே” என்று ஓர் பெரிய ஆலோசனை சொல்லும் விதமாகச் சொன்னாள் மித்ரா.




சொல்லிக் கொண்டிருக்கும் போதே 'ஏன் ஊட்டியிலிருந்து கோவை டைடில் பார்க் எவ்வளவு நேரம் பிடிக்கும்.?அதிக நேரம் பிடிக்குமோ என்னமோ.அதனால்தான் ரிஷி மேட்டுப்பாளையத்தில் வசதியாக வீடு கட்டி இருக்கிறான்.தோன்றும்போது பாட்டியைப் போய் பார்த்துக் கொள்ளலாம் இல்லையா!!அதோடுcompanyபோவதும் எளிது.தினமும் மேட்டுப் பாளையத்திலிருந்து1மணி நேரம் அந்தப் பக்கம் போனால்office,இந்தப் பக்கம் போனால் பாட்டிவீடு..ம்ம்ம்.... ' என்று ரிஷியின் சமயோஜித்த புத்தியை மித்ராவின் மனது பாராட்டியது.




“என்ன மித்ராமா இதையெல்லாம் நான் யோசிக்காமலா?இருப்பேன்.எல்லாம் அம்மாவிடம் கேட்டுப் பார்த்துவிட்டாகிவிட்டது.”என்றார் ஜீவானந்தம்.




“பாட்டி என்ன சொன்னாங்க..அங்கிள்!“ஆர்வமாகக் கேட்டாள் மித்ரா.




“என் அப்பா இறந்த பிறகு எங்களின் பூர்வீகமான அந்த ஊட்டிவிட்டை விட்டு வர விரும்பாமல் அம்மா அங்கே இருக்காங்க.அது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து பார்த்துப் பார்த்து கட்டிய வீடு.”என்று புன்னகைத்துவிட்டு தொடர்ந்து பேசலானார் ஜீவானந்தம்.

“அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பாவின் நினைவான அந்த வீட்டைவிட்டு அம்மா எங்கும் வருவது இல்லை.இதைத் தெரிந்திருந்தும் நான் ஒருமுறை கேட்டுப் பார்த்தேன்.எதிர்பார்த்தது போல வர மறுத்துவிட்டாங்க..ரிஷி வாரம் ஒருமுறை ஊட்டிச் செல்வது வழக்கம்.அதுவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்”




“ஓ...பாட்டிக்குத் தாத்தாவின் மீது அவ்வளவு காதலோ .என் அம்மா அப்பாவின் மீது வைத்திருந்த அன்பைப் போல..அதனால்தான் அந்த வீட்டைவிட்டு வரமாட்டேன் என்கிறார்களா?”என்று குறும்பு சிரிப்புடன் கேட்டாள் மித்ரா.




எதிர் பாராத இந்தப் பதிலில் ஜீவானந்தம் புரியாத முழித்துவிட்டு,பின் புரிந்து சத்தமிட்டுச் சிரித்த வண்ணம் “ஆமாம்..ஆமாம்..குறும்புக்காரப் பெண்..”என்று செல்லமாக கன்னத்தில் தட்டிவிட்டார்.




உடனே “அங்கிள்..அங்கிள்...பாட்டியிடம் நான் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிவிடாதீங்க.”என்று பயந்தவள் போல நடித்து,மன்னிப்பு கேட்பது போல காதுகளைப் பிடித்து சிணுங்கினாள் மித்ரா.




அவள் பயம் போல நடித்தவிதத்தில் இன்னும் பலமாக சிரித்து “அது சரி....”என்றார் ஜீவானந்தம்.




“அப்பறம் என் அம்மாவைப் போல என் காதைத் திருகி ‘உனக்கு வாய் அதிகம் ஆகிடுச்சு மித்திமா..உன்னோட கணவன் வந்த பிறகு நீ என்ன செய்யப் போறனு.பார்க்கத்தானே போகிறேன்'என்று தலையில் கொட்டு வைக்கப் போகிறார்கள்” பொய்யான பயத்தை வலுப்படுத்திக் காட்ட முயன்றாள் மித்ரா.ஆனால் அம்மாவின் நினைவில் மனம் சோர்ந்தாள்.இருந்தும் சமாளித்து சாதாரணம் போலவே தலை குனிந்து அமர்ந்தாள் மித்ரா.




அவளது குழந்தைத்தனமான இந்தப் பேச்சில் மனம் சிலாகித்து'எத்தனை நாட்கள் ஆகிவிட்டது இப்படி உன்னை பழையபடி பார்க்க'என்று எண்ணி உணர்ச்சிப் பொங்க மித்ராவைப் அவள் அறியாமல் ஒருமுறைப் பார்த்துவிட்டு திரும்பி சாலையைப் பார்த்தவிதமாக சிரிப்பு குறையாமல், “அதையும்தான் பார்ப்போமே !!அப்போ உனக்கு ஊட்டிப் போக எந்தவித தயக்கமும் இல்லை தானே” என்றார் ஜீவானந்தம்.




“இல்லை அங்கிள்.சொல்லப் போனால் இரட்டிப்பு மகிழ்ச்சி.பாட்டியுடன் பேச வேண்டும் என்றுதான் இருந்தேன்.ஆனால் இப்போது அவர்களுடனே தங்கப் போகிறேனே!!!!!”என்று சந்தோஷ மிகுதியால் விழிகளை விரித்து சிர்த்தவாறே சொன்னாள் மித்ரா.




"அப்போ வேலைக்கு போகனுமுனு சொன்னது"என்று கண்களை சிமிட்டினார் ஜீவானந்தம்.




"போங்க...அங்கிள்...பாட்டியுடன் இருப்பதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா என்ன?"என்று சிணுங்கினாள் மித்ரா.தொடர்ந்து மனதைத்திறந்தவளாக "வேலைக்குப் போக வேண்டும் என்றும் இருக்கிறது.ஆனால் அதைவிடப் பாட்டியுடன் இருக்கவே மனம் விரும்புது"என்றாள் மித்ரா.




அவளின் இந்தப் பேச்சில் திருப்தியுற்று புன்னகைத்தவிதமாக "ம்ம்..சரிதான்.. " என்றார் ஜீவானந்தம்.




"ஆனால் அங்கிள்...பாட்டியிடம் என்னைப் பற்றி சொல்ல வேண்டாம் அங்கிள்.என் மனவலிக் குறைந்த பின் நானாக எனக்கு நடந்ததை சொல்லிக் கொள்வேன்"என்று முகம் வாடச் சொன்னாள் மித்ரா.




அவள் முகவாட்டம் ஜீவானந்ததை வருத்த, " சரி மித்ராமா..கண்டிப்பாக சொல்லவில்லைப் போதுமா?!"என்றார்.




"உங்கள் மகனிடமும்."என்றாள் அவசரமாக.




"சரி..மா"என்றார் ஜீவானந்தம்.




"அந்த ரங்கன் பத்தியும் கூட அங்கிள்..அந்த அத்தைப் படுத்திய கொடுமையையும் கூட சொல்லிவிடாதீர்கள் .ப்ளீஸ் அங்கிள்...அப்பறம் அவர்களின் பரிதாப பார்வையில் நான் நொந்தேப் போய்விடுவேன்"என்று குழந்தையைப் போல் கண்கள் கலங்க கெஞ்சிய மித்ராவின் மீது ஜீவானந்ததிற்கு உண்மையில் பரிதாபமே வந்தது.




அதை மறைத்து "அதுதான் சொன்னேனே மித்ராமா உன்னைப் பற்றி,என் நண்பனின் மகள் என்பதைப் தவிர வேறு எதுவும்,யாரிடமும் சொல்ல மாட்டேன் ..சரி யா? .." என்று அவள்புரம் திரும்பிபார்த்த ஜீவானந்தம் திடுக்கிட்டு"என்ன இது சின்னப் பிள்ளை போல..சொல்..என் மித்ராமா இப்படி இதற்கில்லாமா வருந்துவது.கண்களைத்துடை"என்று அவளை சமாதானப் படுத்த முயன்றார் ஜீவானந்தம்.




"ம்ம்..சாரி..அங்கிள்..கொஞ்ச நாளாகவே ,இந்தக் கண்ணீர் என்னையும் அறியாமல் வந்து துளைக்கிறது"என்று தன்மீதும் தன் கண்களின் மீதும் கோபப்பட்டு கண்களைத்துடைத்து விட்டு , " இன்னும் எவ்வளவு நேரம் அங்கீள் ஆகும்?"என்று கேட்டாள் மித்ரா.




"இன்னுமா..."என்று பேச்சை இழுத்த ஜீவானந்தம் காரின் வேகத்தைக் குறைத்து பிரதான சாலையிலிருந்து இடப்புறமாக வளைந்து ஒரு சுற்றுப்புற சுவருடன் கூடிய வீட்டின் இரும்பு கதவின் முன் காரை நிறுத்தினார்.




காரின் வேகத்தைக் குறைத்து பிரதான சாலையிலிருந்து இடப்புறமாக வளைத்து ஒரு சுற்றுப்புற சுவருடன் கூடிய வீட்டின் இரும்பு கதவின் முன் நிறுத்தினார்.




கார் அரவம் கேட்டு வீட்டுக் காவலாளி முத்து, “சின்னய்யா...பெரியய்யா வந்துட்டாரு.”என்று சத்தமிட்டவிதமாக ஓடோடி வந்து கதவை திறந்துவிட்டான்.,




கதவு திறந்ததும் காரை மெதுவாகச் செலுத்தி அரைவட்டமிட்டு வீட்டுமுன் இருந்த போர்டிக்கோவில் நிறுத்தினார் ஜீவானந்தம்.




“மித்ராமா இறங்கிக்கோ..இங்கேயே நில் நான் இதோ காரை ஷெட்டில் விட்டுவிட்டு வருகிறேன்” என்றார் ஜீவானந்தம்.




“சரிங்க அங்கிள்.. ” என்று காரைவிட்டு இறங்க எத்தனித்தாள் மித்ரா.




“முத்து..முத்து,,இங்க வா..”என்று திரும்பி பார்த்த வண்ணம் வீட்டுக் காவலாளியை அழைத்தார் ஜீவானந்தம்.




“இதோ வந்துவிட்டேனுங்க ஐயா” என்றவிதமாக சுற்றுப்புர கதவை மூடிவிட்டு ஓடி வந்தார் முத்து.




சந்தோஷமிகுதியால் “ஐயா...எபுடி இருக்கீக..எம்புட்டு நாள் ஆச்சு.போன மாசமே வருவீக..வருவீகனு பார்த்தேன்.வரலயா...அதான் என்னமோ ஏதோனு நெனச்சுட்டேனுங்க..”என்று சோகத்துடன் சொல்லிச் சட்டென முகம் மலர்ந்து “சின்னய்யாதான் ஏதோ ப்ரண்டு வீட்டுக்கு போயிருக்கிறதுல உங்களால் வரமுடிலனு சொன்னாரு.”என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து.




“நல்லா இருக்கிறேன் முத்து.தவிர்க்க முடியாத சூழ்நிலை.அதான் வரமுடியவில்லை.சரி அதை விடு..நீ எப்படி இருக்க?உன் மனைவி குழந்தைங்க எல்லாம் எப்படி இருக்காங்க?”என்று கேட்டார் ஜீவானந்தம்.




இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே மித்ரா கார் கதவைத் திறந்து வெளியே கால்வைத்தாள். ‘தன்னைப் பார்க்கத்தானே ஜீவா அங்கிள் போன மாதம் தன் மகனைப் கூடப் பார்க்க போகாமல் தன் வீட்டுக்கு வந்திருந்தார்.’என்று நினைத்து கண்களை மூடித் திறந்தாள்.




“எல்லாம் நல்லா இருக்கோமுங்க ஐயா..”என்று முத்துவின் சத்தமிட்ட குரலில் தன்னிலைக்கு வந்தவளாக மெதுவாக மித்ரா கீழே இறங்கினாள்.




மென்னகை மலர “சந்தோஷம் முத்து..சரி… காரின் பின் இருக்கும் லக்கெஜை எடுத்துச்சென்று என் அறையில் வைத்துவிடு ” என்றார் ஜீவானந்தம்.




“சரிங்கய்யா..”என்று முகம் மலர காரின் பின் கதவைத்திறந்து லக்கெஜை எடுத்து வெளியில் வைத்துவிட்டு கார் கதவை மூடினார் முத்து.அப்போது காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த மித்ரா முத்துவின் அருகில் வந்து நின்றாள்.




ஒரு பெண்ணை சற்றும் எதிர் பாராத முத்து மித்ராவை பேந்தப் பேந்தப் பார்த்து விழித்தார்.பிறகு அவளின் சாந்தமான முகம் பாசமுடன் தன்வீட்டு மகளைப் போல உணரவைத்தது.




மனதை மறைக்காமல் காட்டும்விதமாக அமைந்திருந்த அவளின் நிலவு போன்ற களங்கமில்லாத முகமும் முத்துவை மேலும் பேசவைத்தது.




தன் மனதில் தோன்றியதை ஜீவானந்ததிடம் திரும்பி “அம்மா யாருங்கய்யா..மகாலட்சுமி கணக்கா அழகா இருக்குது.”என்று ஆச்சரியமாக ‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்த அந்த கேரளப் பொண்ணு என்ன ஆர்ப்பாட்டம் செஞ்சது.இந்த பொண்ணு எவ்வளவு அமைதியாவும் அடக்கமாவும் இருக்குது’ என்று மனதினுள் எண்ணி ஆனந்தபட்டார் முத்து.




முத்து,தன்னை மகாலட்சுமிப் என்று சொல்லியதில் வந்த வெட்கத்தை கடினப்பட்டு மறைத்து முத்துவைப் பார்த்து புன்னகைச் செய்தாள் மித்ரா.




அப்போது,“யாரு முத்தய்யா..அது… இங்க புதுசா..மகாலட்சுமி.. “ என்று கம்பீரமான குரலில் கேட்டவிதமாக உள்ளிருந்து போர்டிக்கோவை நோக்கி வந்தான் ரிஷி.சற்றும் எதிர்பாராத அந்தக் குரலில் திடுக்கிட்டுத் திரும்பி அந்தக் குரலுக்கு சொந்தக்காரனைப் பார்த்தாள் மித்ரா.




“அட… வாடா ரிஷி… முத்து,மித்ராவைதான் சொன்னான்.நான்தான் சொன்னேன் இல்லயா?என் நண்பரின் மகள் என்று.இதோ..இவள்தான்” என்று மூன்று மாதமாக தன் மகனைப் பார்க்க வாய்ப்பில்லாமல் தவித்த ஜீவானந்தம் அவனைப் பார்த்தவிதத்தில் மகிழ்ந்து அனைத்துப் பற்களும் தெரியச் சிரித்தார் ஜீவானந்தம்.




‘இவரை எங்கோப் பார்த்தது போல் இருக்கிறதே. !’ என்று யோசித்த மித்ரா ,சட்டென நினைவு வந்தவளாக ‘அச்சோ.இவரா?!!’என்று அவசரமாக முன்புரம் திரும்பிவிட்டாள்.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top