உனக்காகவே நான் – 2

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் – 2

Heroin.jpg

வர்மா இன்ஃபோ டெக் ,ஜீவானந்ததின் மகன் ரிஷியும் அவனது அத்தை மகன் குருவும் இணைந்து ஆரம்பித்த சிறிய IT Company.




குருவை வளர்த்ததும் ரிஷியின் பெற்றோரே.சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த ரிஷியும் ,குருவும் ஊட்டி convent–ல் தங்களது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ,கோவைPSG –ல் கல்லூரிப் படிப்பை முடித்தனர்.




BEஇறுதி ஆண்டின் போதே சொந்தமாக IT Company ஆரம்பிக்க எண்ணிய தங்களின் எண்ணத்தை இருவரும் மெதுவாக ஜீவானந்ததிடம் வெளியிட்டனர்.அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ‘தேர்வுக்கு பாஸ் மார்க் வருமா இல்லை அவ்வளவுதானா’ என்று இருவரும் ஆர்வதில் ஜீவானந்ததை நோக்கினர்.




சிறிது யோசித்துவிட்டு “ ம்ம்ம்...நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறீர்கள்..ரிஷி,குரு...இங்க பாருங்க..எனக்கு இந்த IT Company பற்றியெல்லாம் தெரியாது.ஏதோ ரியல் எஸ்டேட் தொழில்ல நல்ல வந்துட்டேன் என்பதற்காக உங்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு எதுவும் தெரியவில்லை.ஆனால் உங்களது இந்த இளங்கலைப் பட்டம்..அது என்னது?. BE தானே.அந்தப் படிப்பு மாட்டும் போதாது என்பது என்னுடைய கருத்து..நீங்க என்ன நினைக்கிறீர்கள்.. ? “ என்று கேள்வியும் அறிவுரையுமாய் முடித்தார் ஜீவானந்தம்.




“ம்ம்..ஆமா ரிஷி மாமா சொல்வதும் சரிதான்..நாம ஏன் MBAமுடிச்சிட்டு இதைச் செயல் படுத்தக் கூடாது?”என்று கேட்டான்.




Companyஆரம்பிப்பது ரிஷியும் குருவும்தான் என்ற போதும்,ரிஷியே முழு பிடிவாதத்துடன் சொந்தCompanyஆரம்பிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தான்.அதனோடு ரிஷியும் குருவும் பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி புரிந்து படிப்பதிலும் ,அடுத்தவர்களுக்குப் புரிய எடுத்துரைப்பதிலும் சிறந்து விளங்கினர்.ஆனால் இவை மட்டும் ஒரு தொழில் தொடங்க பேதுமானவையில்லை என்பதை ரிஷியும் உணர்ந்துதான் இருந்தான்.




அதனால் ரிஷி யோசித்தவாறே “ஆமா குரு,அப்பா...நீங்க சொல்வதும் சரிதான்.நாங்கMBAமுடித்த பிறகு இதைப் பற்றி பேசலாம்.”தெளிவாகச் சொன்னான் ரிஷி.




தன் கருத்தை இருவரும் புரிந்து கொண்டதை எண்ணி ஜீவானந்தம் பெருமிதத்துடன் இருவரையும் நோக்கினார்.




அவர் சொல்லிய வார்த்தைகளின் உண்மையை உணர்ந்து ரிஷியும் குருவும்MBAபடிப்பது என்று முடிவெடுத்து , CAT நுழைவுத் தேர்வுக்கு தீவிரமாக ஆயுதமானர்.எதிர் பார்த்தது போல இருவருக்கும்IIM – ல் இடம் கிடைத்தது.ஆனால் இருவருக்கும் இருவேறு இடங்களில்.ரிஷிIIM,கான்பூரிலும்,குருவிற்குIIM,கோழிகோட்டிலும் இடம் கிடைத்தது.ரிஷியின்MBAப்ரோஜெக்ட்டில் இந்தியாவில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப் பட்டு Best MBA Project of the year award வாங்கினான்.குருவும் நல்லவிதமாக அவனது MBA-வை முடித்தான்.




அதன் பிறகு ஜீவானந்தம் தன் அருமை புதல்வர்களுக்கு இன்வெஸ்ட் செய்து அவரின் வாழ்த்துகளுடனும்,பாட்டி பார்வதியின் ஆசியுடனும் வர்மா இன்ஃபொ டெக் 5வருடங்களுக்கு முன்பு கோவையில் ஆரம்பிக்கப் பட்டது.




ரிஷி வர்மா மற்றும் குரு வர்மா என்ற தங்களின் புதல்வர்களின் பெயர் இறுதி வார்த்தையையே அந்த companyக்கும் பெயராக வைத்தார் ஜீவானந்தம்.




இடையில் குரு அந்த முட்டாள்தனமான முடிவை எடுத்திராவிடில் ,இன்று சென்னை brachஇருந்திருக்க வாய்ப்பே இல்லை.குருவிற்காக ஜீவானந்தமும் சென்னையிலே குருவுடன் தங்கி ,ரிஷியை இப்படி தனியே கோவையில் விட்டிருக்க வேண்டியும் இருந்திராது.ஒருவேளை மித்ராவின் குடும்பத்தை ஜீவனந்தம் பார்த்திருக்க வாய்ப்பும் இருக்காமல் போயிருக்கலாம்.குருவிற்காகச் சக்கரவர்த்தியாக கோவையில் வளம் வந்த ரியல் எஸ்டேட் தொழிலைவிடுத்து சென்னைக்கு வந்திருக்கவும் மாட்டார் ஜீவானந்தம்.




இதோ அதோ என்று இங்கு வந்து இந்த வருடத்துடன் 2முழு வருடம் ஆகிறது.




அப்படி ஆரம்பித்த அந்த வர்மா இன்ஃபொ டெக்கின் சென்னை Branch-ல் தான் மித்ரா 6மாதங்களாக வேலை செய்தது.அதற்கு குருதான் தலைமை எடுத்து நடத்திக் கொண்டிருந்தான்.இன்று அதே வர்மா இன்ஃபொ டெக்கின் கோவை Branch –ல் மித்ராவை வேலைக்கு அமர்த்ததன் ஜீவானந்தம் இப்போது பேசிக்கொண்டிருப்பதும்..




வர்மா இன்ஃபோ டெக் ,இப்பொழுது நல்ல project clients இருக்கிற ஒரு நல்ல company.இவை அனைத்திற்கும் ரிஷியின் விடாமுயற்சியும் ,குருவின் தொடர்ந்த உறுதுணையான ஆதரவும்தான் காரணம்.




Campus–ல் தேர்ந்து இருந்தும் மித்ரா தந்தையின் விருப்பத்திற்காகவும் அப்பா அம்மாவைப் பிரிந்து பெங்களூரில் தனியே வேலை செய்ய விருப்பம் இல்லாமலும் அவள் அந்த வர்மா இன்ஃபோ டெக் – ல் சேர்ந்தாள்.ஜீவா அங்கிள்தான் அவருடைய மகனிடமும் குருவிடமும் பரிந்துரைச் செய்து அங்கே வேலைக்கு அமர்த்தினார்.




“பரிந்துரைச் செய்து வந்ததால் எந்த ஒரு சலுகையும் எதிர் பார்க்க கூடாது.வேலையில் திருப்தி இல்லையெனில் வேலையிலிருந்து நீக்க வேண்டியிருக்கும் Miss.தேவி” என்ற அந்த டெலிஃபோன் குரல் அவளுக்கு இன்னமும் மறக்கவில்லை.அது அந்த ரிஷியின் குரல் தான்.அவனை மித்ரா நேரில் பார்க்கவில்லை என்ற போதும் அவனிடம் வேலை மார்க்கமாக பல முறை பேசியிருக்கிறாள்.வேலையைப் பற்றி அல்லாமல் மாறுதலாக வேறு எந்த வார்த்தையும் பேசாத ரிஷி மீது மித்ராவிற்கு எப்போதும் ஒரு மரியாதையுண்டு.சென்னைBranch -க்கு அவன் 3மாதம் ஒருமுறைதான் வருவான் என்ற போதும் இவள் வேலைக்குச் சேர்ந்த இந்த 6மாதத்தில் ஒருமுறையும் அவள் அவனைக் கண்டதில்லை.இவையனைத்தும் கோவை Branchபற்றி ஜீவா அங்கிள் பேசியதும் சட்டென அவள் நினைவில் தோன்றி மறைந்தது.




“என்ன மித்ராமா பதிலே இல்லை” என்று ஜீவானந்தம் மித்ராவைப் பார்த்துக் கேட்டார்.




‘எப்படி கோவை Branch – ல் இருப்பவர்களுக்கு உன்னைத் தெரியும்’ என்ற ஜீவானந்தம் அங்கிள் தன்னுடைய பதிலுக்காகக் காத்திருப்பது உணர்ந்து மித்ரா பேசலானாள்.




“இங்க பாருங்க அங்கிள்.இப்போது தொழில் நுட்பம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது.கோவைBranch -ல் இருக்கும் திவ்யா என்னுடன்Facebook-ல் தோழி.அதனுடன் திவ்யாவுடன் நான் விடியோ சாட் செய்திருக்கிறேன்.அதனால் அவளுக்கு என் முகம் நன்றாகத் தெரியும்.தெரியாதவர்களே உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது என்று பல முறை சொல்ல கேட்டிருக்கிறேன்.இப்படி இருக்க,நான் அங்கே வேலைக்குச் சேர்ந்து சங்கடப் பட வேண்டுமா அங்கிள்?”என்று ஜீவானந்ததின் முகத்தைப் பார்த்து முறுவலித்தவாறே கெஞ்சும் விதமா கேட்டாள் மித்ரா.




அவள் மனம் புரிந்த ஜீவானந்தம் செய்வதறியாது திகைத்தார்.சட்டென ஏதோ நல்ல விடை கிடைத்துவிட்டதாக தோன்றி அதை எப்படி ஆரமிப்பது என்று மித்ராவைப் பார்த்தார்.




அவள் ஓடை நீரில் சிறு சிறு மீன்கள் அவள் கால் விரல்களைத் தீண்டி விளையாட்டு போல திரும்பத் திரும்ப அவளது காலை வந்து வருடிச் சென்று கொண்டிருந்தன.புரியாத,இதுவரை அனுபவித்து அறியாத ,அந்த புதுவித அனுபவத்தை ரசித்தவாறே ஜீவானந்ததிடம் “ அங்கிள் !!அங்கிள்!!இங்க பாருங்களேன் குட்டிக் குட்டி மீன்கள்……!என் காலைத் தொட்டு தொட்டுச் செல்கின்றன.அச்சோ காலெல்லாம் கூசுகிறது அங்கிள்” என்று மீன்களை ரசித்தவிதமாக,பார்த்தவாறே மித்ரா உணர்ச்சி வசப்பட்டு கால்களை எடுக்க மனமும் இல்லாமல்,உள்ள வைத்திருப்பதால் வரும் கூச்சத்தையும் பொறுக்கவும் முடியாமல் சத்தமிட்டாள்.




அவளது இந்த சின்னப் பிள்ளைத்தனமான பேச்சைக் கேட்டு எவ்வளவு நாட்கள் ஆனது.என்றுஆனந்த பெருமூச்சு விட்டவாறே மித்ராவை நோக்கிப் பேசலானார் ஜீவானந்தம். “இதுதான் மித்ராமா கிராமப்புறத்து*ஃபிஷ்pedicure . நீ பார்லர் போய் pedicureசெய்தாலும் இது போல வருமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது.இது மட்டும் இல்லாமல் ஆற்றிலோ,நீர்வீழ்ச்சியிலோ அல்லது இதுப் போன்ற ஓடையிலோ குளித்தால் எவ்வளவு நல்லதுத் தெரியுமா?இதுதான் ஆரோக்கியமான குளியல்..அதனோடு இவற்றுள் சில ,மூலிகைத் தன்மை வாய்ந்தவை.அதுவும் கொல்லி மலையிலிருந்து உருவாகும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி இருக்கே.!!சொல்ல வார்த்தையே இல்லை..”என்று தான் அறிந்த ஒருசில செய்திகளை எடுத்து இயம்பினார் ஜீவானந்தம்.




அவர் பேசிதை இமைகள் மூட மறுத்து வியந்து கேட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா. “இவ்வளவு இருக்கா அங்கிள்.இந்தச் சின்ன மீன்களின் விளையாட்டிலும் சின்ன நீர்வீழ்ச்சியிலும்?”என்று ஆச்சர்யத்துடன் மீன்களைப் பார்த்தவாறே வியம்பினாள் மித்ரா.




“இது மட்டுமா இன்னும் எவ்வளவோ நீ அறியாத விவரங்கள் இருக்கு.என் அம்மாதான் இவ்வளவும் சொன்னது.இன்னும் இது போன்ற கிராமத்து வாசமிகுந்த சில பல விஷயங்கள் என் அம்மாவிடம் இருக்கிறது” என்று தன் அடுத்த முடிவிற்கு மித்ராவை சம்மதிக்க வைக்க ஜீவானந்தம் அடிக் கோடிட்டார்.




“ அப்படியா..!!பாட்டிக்கு இது போல அதிகம் தெரியுமா?எனக்கு இப்போவே எல்லாம் தெரிந்துக்கொள்ள் வேண்டும் போல் இருக்கு அங்கிள்.நீங்க உங்களுக்குத் தெரிந்தது சொல்லுங்களேன்.இது போல சிறப்பு மிக்க செய்திகளைப் பற்றி...”என்று ஆர்வமிகுதியால் துள்ளி குதித்துக் கொண்டு ஜீவானந்ததின் கையைப் பற்றிக் கொண்டு கேட்டாள் மித்ரா.




புன்னகைத்தவாறே “ மித்ராமா..சொல்கிறேன்..ஆனால் இப்போது இருட்ட ஆரம்பித்துவிட்டது.வா காரில் போய்க் கொண்டேப் பேசலாம் .”என்றார் ஜீவானந்தம்.




கார் என்ற வார்த்தையைக் கேட்டதும் நெருப்பில் பட்டப் அன்றில் மலர் போல முகம் வாடிச் சோர்ந்து நின்றாள் மித்ரா.




காரை நோக்கி நடந்தவாறே “போகலாம் அங்கிள்” என்றாள் மித்ரா.




அவள் முகமாற்றத்தை பார்த்துவிட்டு ‘இந்த நிலை விரைவில் மாறிவிடும்.மாற்றிவிடத்தானே நான் இருக்கிறேன்.கண்டிப்பாக அவள் இதற்குச் சம்மதிப்பாள்.சம்மதித்துத்தான் ஆக வேண்டும்’ என்று “பெருமாளே நீதான் எனக்கு உதவ வேண்டும்” என்று அந்த ஏழுமலையானை வேண்டியபடி அவள் பின்னோடு நடந்தார் ஜீவனந்தம்.இருவரும் காரில் ஏறிய பிறகு மெதுவாகக் காரை செலுத்தினார் ஜீவானந்தம்.சிறிது நேரம் காரில் அமைதி நிலவியது.




அந்த நேர அமைதியைக் குலைக்கும் விதமாக ஜீவானந்ததின் ஃபோன் ரிங்காரமிட்டு அழைத்தது.அந்த சத்தத்தில் திரும்பி ‘குருவாக இருக்குமோ’என்று எண்ணி ஜீவானந்ததிடம் திரும்பிப் பார்த்தாள் மித்ரா.




“ரிஷிதான் மித்ரமா” என்றவாறே காரை ஓரமாக நிறுத்திவிட்டு ,ஃபோனை அவர் காதில் பொருத்தினார்.ஜீவானந்தம். “ஓ..”என்றவாறு கார் ஜன்னலின்புரம் திரும்ப முகம் புதைத்தாள் மித்ரா.




“ ஹலோ..ரிஷி சொல்லுடா..” - ஜீவானந்தம்




“அப்பா..எங்கேப் பா இருங்கிங்க.?நீங்க கிளம்பிய நேரத்திற்கு வீட்டை அடைந்திருப்பீர்கள் என்று நினைத்து வேலையை விரைந்து முடித்துவிட்டு ஓடோடி வந்தேன்” என்று ஏமாற்றத்துடன் கேட்டான் அந்த ரிஷி.




“இதோ..வந்துட்டேனடா..கோவையை நெருங்கிவிட்டேன்..வரும் வழியில் அந்தப் பவானி ஆற்றில் கலக்கும் ஓடை ஒன்று இருக்கும் இல்லையா?” - ஜீவானந்தம்




“ஆமாம்.இருக்கிறது.அங்கே போயிருந்தீர்களா?” - ரிஷி




“ஆமாமடா.அதில் காலை நனைத்து விட்டு ,கொஞ்சம் நேரம் காற்று வாங்கிட்டு இருந்தோமா!!அதான் தாமாதமாகிவிட்டது” -ஜீவானந்தம்.




“இருந்தோமா வா??என்னப்பா குருவும் உங்களோடு வந்திருக்கிறானா?”என்று ஆர்வமாகக் கேட்டான் ரிஷி.




“இல்லைடா ரிஷி.வருவதென்றால் உன்னிடம் சொல்லாமல் இருப்பானா?என்னோடு என் நண்பரின் மகள் மித்ராவும் வருகிறாள்.நானும் அவளுமாகத்தான் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறோம்” என்று புன்னகைத்தவாறே மித்ராவைப் பார்த்தார்.




“இல்லை அங்கிள்.நான் உங்களுடன் வரவில்லை.என்னை காந்திபுரத்தில் இருக்கும் அந்த ரஞ்சனி மகளிர் விடுதியில் விட்டுவிடுங்கள்.எனக்கு நாளைக்கே offcie -ல் சேர்ந்தாக வேண்டும் என்றுjoining letter - ல் இருக்கிறது.”என்று குழந்தை போல கெஞ்சும் தோனியில் மெதுவாக ஜீவான்ந்ததிற்கு மட்டும் கேட்கும் விதமாகக் கேட்டாள் மித்ரா.




“பொறு மித்ராமா” என்ற ஜீவானந்ததின் அமர்த்தலான கையசைவை தொடர்ந்து ஃபோனை அவர் வைக்கும் வரைக் காத்திருந்தாள் மித்ரா.




ஜீவானந்ததின் பதிலைக் கேட்டதும்,சுந்தரம் அங்கிளின் மகள் தேவியின் நினைவு ரிஷிக்கு வந்து மறைந்தது. 'இன்னொரு நண்பரின் மகளோ'என்று எண்ணியவாறே “ஓ.....சரிப் பா..என்ன இன்னொரு நண்பரின் மகளா??”என்றான் ரிஷி.




“ஆமாம்டா” என்றார் ‘தேவியும் மித்ராவும் ஒருவரே’ என்ற உண்மையை மறைத்து.




“சரி சரிப் பா..ஆமாம் அந்தப் பெண் தேவி,சுந்தரம் அங்கிளின் மகள் இப்போ எப்படி இருக்கிறாள்?நல்ல ஆர்வமிக்கப் பெண்.பாவம் தீடிரென்று என்ன என்னமோ நடந்துடுச்சு..திரும்ப வேலைக்கு வருவாளா?”என்று வருத்தமும் சந்தேகமுமாக கேட்டான் ரிஷி.ஓரிருமுறையே ஃபோனில் பேசியிருந்த போதும் தேவி என்ற அந்தப் பெண்ணின் மீது ரிஷிக்கு அனுதாபம் ஏற்பட்டது.




“தேவியா?..”என்றவாறே மித்ராவை நோக்கினார் ஜீவானந்தம்.




“தேவியா?..”என்றவாறே மித்ராவை நோக்கிவிட்டுத் தொடர்ந்து பேசலானார் ஜீவானந்தம். “ம்ம்...நன்றாக இருக்கிறாள் ரிஷி..வேலைக்கு இப்போது வருவாள் என்று எனக்குத் தோன்றவில்லை.மனம் ஆறி வரும்போது வரட்டும் விடுடா..”என்று சலிப்பாக பதில் அளிப்பது போல் பதில் அளித்தார்.




தன்னைச் சுற்றியே பேச்சு போவதையும்,அந்த ரிஷி தன் மீது அனுதாபப்படுவதையும் கண்டு மித்ரா எரிச்சலுற்றாள். ‘ஆமாம் இவன் அனுதாபம் யாருக்கு வேண்டும்.நல்ல வேளை வர்மா இன்ஃபொ டெக்கில் வேலை செய்யப் போவதில்லை.பரிதாபப் பட்டே மறக்க வேண்டியதை நினைவு படுத்தியிருப்பார்கள்’ என்று காரணமில்லாமல் ரிஷியின் மீது கோபம் கொண்டாள் மித்ரா.




ஜீவானந்ததின் சலிப்பான பேச்சை உணர்ந்து,தேவியின் பேச்சை நிறுத்திவிட்டு “ஓ..சரிப்பா..வாங்க..வீட்டில் பேசிக் கொள்ளலாம்.இன்னும் எவ்வளவு நேரமாகும்பா?”என்று அப்பாவின் வருகை நேரம் பற்றி கேட்களானான் ரிஷி.




“ஆமாம்.அதுவும் சரிதான்.வீட்டில் பேசிக்கொள்ளலாம்.இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரமாவது ஆகும்டா.கிட்டதட்ட கோவையை அடைந்து விட்டோம்.ஒன்பது மணிக்குள்ள மேட்டுப்பாளையம் வந்துவிடுவோம்.”என்று நேரத்தை கணக்கிட்டவாரே மொழிந்தார் ஜீவானந்தம்.




“ம்ம்..சரிப்பா ஃபோனை வைத்துவிடவா?” – ரிஷி.




“சரிடா.. “ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு காரை எடுத்தார் ஜீவானந்தம்.




ஃபோனை எப்போது வைப்பார் என்று காத்திருந்த மித்ரா “என்ன அங்கிள்..”என்று சினுங்கியவிதமாக தொடர்ந்து பேசினாள். “ நான்தான் நாளையே officeபோக வேண்டும் என்றேனே.!காலை8மணிக்கே நான் office – ல் பதிவு செய்ய வேண்டும்.நேரம் தவறினால் வேலைக்கு நாங்கள் பொறுப்பில்லை என்று என்னைத் தேர்வு செய்தவர் சொன்னார்.நான் எப்படி காலையில் 8மணிக்கெல்லாம் மேட்டுப்பாளையத்திலிருந்து காந்திபுரம் வருவது.?வழிவேறு தெரியாது.!!”வருத்தமும் கலக்கமுமாக ஜீவானந்ததை ஏறிட்டாள் மித்ரா.




படபடவென்று பேசிய மித்ராவின் கலக்கம் உணர்ந்தவராக ,அவள் பேசிமுடிக்கும் வரை காத்திருந்துவிட்டு ஜீவானந்தம், “பொறு மித்ரா மா.ஏன் இவ்வளவு கலக்கம்.நான் இருக்கிறேன் இல்ல ?!”என்று ஆதரவாக வார்த்தை சொல்லிவிட்டு “முதலில் நான் கொஞ்சம் பேச வேண்டும் மித்ராமா..நான் என்ன சொன்னாலும் கேட்பாய்தானே? ” என்று ஆதாரமாகப் பேச்சை ஆரம்பித்தார்.




“ம்ம்..கேட்பேன்.அங்கிள்.ஆனால் கோவை branch-ல் வேலை செய்ய சொல்லிவிடாதீர்கள்..அதுவும் இப்போது..”என்று பாதுகாப்பாக பதிலுரைத்தாள் மித்ரா.




‘பரவாயில்லை எந்த நேரமும் தன்னிலை உணர்ந்தவளாக இருக்கிறாள்’ என்று மித்ராவை எண்ணி பெருமிதம் கொண்டார் ஜீவானந்தம்.அதே பெருமிதத்துடன் மித்ராவைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தொடர்ந்து பேசலானார் .




“அதில்லை மித்ராமா.உன்னிடம் ஒன்று கேட்கனும்..நன்கு யோசித்து பதில் சொல்ல வேண்டும்” என்றார் ஜீவானந்தம்.




“என்ன அங்கிள்.?பீடிகையா இருக்கு.என்னனு சொல்லுங்க?”என்றாள் துடுக்காக




“ஒன்றுமில்லை..நீ அவசியம் வேலைக்கு போகனுமா?மித்ராமா“ ‘வேலைக்கு போகத்தான் வேண்டும்’ என்றுதான் அவள் பதில் சொல்லப் போகிறாள் என்று தெரிந்தும் இப்படி பேச்சை ஆரம்பித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று கேட்டார்.




“ஏன் அங்கிள் திடீர் என்று இப்படி கேட்கிறிங்க. ? வேலைக்கு அனுப்பத் தயங்கிய அப்பாவிடம் நீங்கள் தானே பெண்பிள்ளை வேலைக்குச் செல்வது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றெல்லாம் சொன்னீங்க.இப்போது இப்படி கேட்கிறிங்க. ? “ என்று சந்தேகமும் ஆச்சரியமும் தொனிக்க கேட்டாள் மித்ரா.
 
Last edited:

Ivna

Active Member
Nice ud...
Mitra va madakurathu romba kastam thaa pa!!
Rishi ya meet pana poranu ninaiken...reaction ennanu parpom!!he..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top