பாரதிப்பிரியன்
Well-Known Member

இளமை சிங்கம்
கவிதை
இளமை சிங்கம்
கவிதை
வீறுகொண்டு சீரியெழு
இளைய கூட்டமே......
மடைமை கொண்டு
மதிகெடுக்க
மலிந்து திரியும் கூட்டத்தை
மிதித்தழித்து
மின்னி ஜொலித்திடு.....
ஜாதிபேத
ஜாலம் காட்டி
மதம் பேரில்
போதையூட்டி
தேசபக்தி
போர் மூட்டுவார்
உன்னை
விலைகொடுத்து
வாக்காக வாங்குவார்.......
வேலையின்மை
வறுமை
வாட்டிடும் வேளையில்
வசீகர பேச்சுதிர்த்து - உன்
வாயடைப்பார்....
ஊழலில்
உய்வெய்வார்
உணவின்றி தவிப்போரை
உதவாது புறக்கணிப்பார்....
காட்டாற்று வெள்ளமே
கட்டுக்கடங்கா காளையே
நீசர்க்கூட்டத்தில்
ஆழிப்பேரலையாய்
ஆர்ப்பரித்து மோது.....
மெழுகுதிரியாய்
கரைந்தாய் போதும்
தீச்சுவா லையாய்
திரண்டு மோது
வாராய் இளைய சிங்கமே....
வலிமைமிக்க புதிய ரத்தமே....
வறுமை நீக்க
நதிகள் இணைக்க
தேசமெங்கும்
நேசக்குரல்
ஓங்கி ஒலித்திட.....
வீறுகொண்டு சீரியெழு
இளைய கூட்டமே......