பாரதிப்பிரியன்

Profile posts Latest activity Postings About

 • "1925 ம் ஆண்டு…. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் கிராமத்தில் ஜெகந்நாதனின் கதையை ரூபா சொல்லத் துவங்கினாள்.... காட்சிகள் சிறகுகளாக விரிந்து பறந்தன" மேலும் அறிந்து கொள்ள "வேடந்தாங்கல்" தொடரை வாசியுங்கள்
  வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு 4 இப்போது உங்கள் வாசிப்பிற்கு காத்து உள்ளது. வாசியுங்கள் வாசித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள். நன்றி
  " காரிருள் விலகிய
  பொன்னெளில் காலை...
  மாரி தூறும்
  மகிழ்வான வேளை...
  சிலிர்க்கும் தேகத்தில்
  மனமெல்லாம் பூரிக்கும்....
  அழகான நாளின் ஆரம்பம்
  நலமாய் அமைய வாழ்த்தும்"...

  பாரதிப்பிரியன்
  வானம்
  கொட்டும்
  மேக மேளம்
  இடியானது....

  தேசம்
  கொட்டும்
  கோஷம் இன்று
  மனிதாபிமானம் ஆனது...

  மனிதராய் யோசித்து
  மனிதநேயம் காப்போம்....

  இனிய காலை வணக்கம்...

  பிரியமுடன்
  பாரதிப்பிரியன்
  ThangaMalar
  ThangaMalar
  ஹாஹாஹா
  பாரதிப்பிரியன்
  பாரதிப்பிரியன்
  நகைச்சுவையாய் பதிவிட்டு சிரித்து மகிழ்ந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மனித நேயம் குறித்து யோசிக்க வேண்டிய கட்டாயம் இன்று இருப்பதால் தான் இப்படி பதிவு செய்தேன். கவிதையாகவும் காலை வணக்கம் சொல்லலாம். பிடிக்கவில்லை என்றால் இன்றோடு அதை நிறுதிக் கொள்கின்றேன்
  fathima.ar
  fathima.ar
  That's a friendly chat between us..
  It's upto you whether u want to continue or not..
  "5.7 அங்குல உயரத்தில், நீண்ட சுருள் கூந்தலுடன், முட்டை வடிவ முகத்தில், நீண்ட நாசியும், சிவந்த இதழும், இளம்பெண்களுக்கு சவால்விடும் அளவிற்கு சிறிதும் குறையாத உடல் அமைப்பும் உடையவள். அவளின் வயது தான் அதிகமாக உள்ளதே ஒழிய அவளின் தோற்றத்திற்கும் சுறுசுறுப்பிற்கும் இன்னும் வயது இருபதில்தான் உள்ளது...."

  யார் இந்த தோற்றத்திற்கு சொந்தமானவர்? தெரிந்து கொள்ள "வேடந்தாங்கல்" ஒருக்கூட்டுப் பறவைகள் தொடரின் 3ம் சிறகை பாருங்கள்
  புலர்ந்திருக்கும்
  புது நாளில் சிந்திக்க....
  புத்துணர்வு
  பூரித்து பொங்கியெழ....
  "புது சமுதாயம் படைப்போம்
  புழுத்துபோன அரசியல்
  புதைப்போம்....
  புதுமை சித்தார்த்தம் பூண்டு
  புத்துலகு படைப்போம்...

  அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
  பிரியமுடன்"பாரதிப்பிரியன்"
  மேற்குமலை
  மேவி நின்ற தென்றல்...
  மேகமாகி தூறிட

  பாக்கு மர தோப்புக்குள்ளே..
  பாய்ந்து செல்லும்
  நீர்த் துளிகள்....

  மாங்கனியும், வாழையும்
  பலாவும் கலந்து
  மலைத்தேனில் தோய்த்துண்ண..

  ஆலாபனை பாடி
  ஆர்ப்பரிக்கும்
  ஆயிரம் பறவைகள்...

  விடிந்திருக்கும்
  விடிவெள்ளியில்
  விழி திறந்து ....

  ஆரோக்கியமும், ஆர்ப்பரிப்புமாக
  கொண்டாடி மகிழ
  அன்புடன் வாழ்த்துகின்றேன்

  இனிய காலை வணக்கம்...

  பிரியமுடன்
  பாரதிப்பிரியன்
  யாருக்கு எல்லாம் வரலாற்று நாவல்கள் பிடிக்கும்
  கதிரோனின்
  அக்கினி கோபத்தை
  காதலுடன் தாங்கி
  நேசமுடன் குறைக்கும்
  மதி மகள்....
  இருவரின் அணைப்பின்
  அடையாளமாய்
  பூணும் "கங்கணம்"
  இன்றைய சிறப்பு....
  ஆற்றலுடன்
  மாற்றம் நோக்கி
  பீனிக்ஸ் பறவையாவோம்...
  இனிய காலை வணக்கம்...
  பிரியமுடன்
  பாரதிப்பிரியன்
  சுடரொளி வீசும்
  சூரியனை பிடிக்க
  மேகச் சிறகுகள்
  மேவி - வானில் பறப்போம்
  மேலான காரியங்கள்
  மேன்மையோடு செய்குவோம்...
  இனிய காலை வணக்கம்...
  வேடந்தாங்கல் வாசியுங்கள்...
  வேதனைகள் மறந்திடுங்கள்
  பிரியமுடன்" பாரதிப்பிரியன்"
 • Loading…
 • Loading…
 • Loading…

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.