இலங்கை என்னும் சொர்க்கம்

Seethavelu

Well-Known Member
#52
இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் கண்களுக்கு குளிர்ச்சியா இருந்தது சகோ எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் தான் நியாபகத்திற்கு வருது திரும்பவும் படிக்க ஆரம்பிக்கணும் நன்றி சகோ :)
 

mila

Writers Team
Tamil Novel Writer
#53
பிறந்த ஊரும் டீனேஜ் என சொல்லப்படும் பதின்ம வயதுகளிலும் பள்ளிப்ப்பருவ வாழ்விலும் கழித்த நாட்கள் மனதை விட்டு அகலாது!நான் பிறந்து வளர்ந்த நாடு,எங்கு பார்த்தாலும் பசுமையான தேயிலை தோட்டங்களும்,நீர் வீழ்ச்சிகளும் மலை முகடுகளும் இருக்கும் மலைநாடு ,இந்திய வம்சாவளியினர் வசிக்கும் மலைபிரதேசம்.இலங்கையின் மையப்பகுதி.வெள்ளையர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்த இடம்.சீதை இருந்த அசோகவனம் பிரசித்தம்!உலக முடிவு என சொல்லப்படும் பள்ளத்தாக்கு,புத்தரின் பல் இருக்கும் தலதா மாளிகை,ராவண எல்லை என அழைக்கப்படும் எல்ல,சிகிரியா குன்று,சிங்க மலை சுரங்கம் என சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு!என் இருபத்து இரண்டு வருடங்கள் அங்குதான் கழிந்தது!அடுத்து தாய் நாட்டில் திருச்சி!
இந்து சமுத்திரத்தின் முத்து இலங்கை. என் தாய் நாடு:):)
 

Advertisement

New Episodes