Advertisement

பாரதிப்பிரியன்

Profile posts Latest activity Postings About

  • இந்த தளத்தில் யாரும் சிறுகதை படிக்க மாட்டீர்களா? உங்கள் யாருக்கும் வரலாற்று கதைகள் பிடிக்காதா???? மிகவும் சிறப்பு.
    • Like
    Reactions: Chitrasaraswathi
    C
    Chitrasaraswathi
    பிரியர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் நேரமின்மை காரணம். கொஞ்சம் பொறுத்திருங்கள்
    C
    Chitrasaraswathi
    போட்டிக் கதை படிப்பதில் நேரம் கொஞ்சம் அதிகமாக செலவாகிறது.
    பாரதிப்பிரியன்
    பாரதிப்பிரியன்
    காத்திருப்பதில் எந்த தவறுமே கிடையாது. நிச்சயமாக காத்திருக்கலாம். சகோதரியின் பதிலுக்கு மிகுந்த நன்றியும், மகிழ்ச்சியும்....
    அனைவருக்கும் காலை வணக்கம்.
    கலங்கரை கோபுரம் என்னும் புதிய வரலாற்று சிறுகதை ஒன்றை, தேன் தமிழ் நடையில் வரலாற்று ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதி பதிப்பித்து, இருக்கின்றேன். வாசித்து பாருங்கள். உங்களுக்கும் நிச்சயமாக பிடிக்கும். வாழ்த்துக்களுடன்...
    பாரதிப்பிரியன்
    அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். ராஜேந்திர சோழன் காலத்து ஆய்வுகளை கொண்டு, வரலாற்றின் அடிப்படையில் எழுதிகப்பட்ட புனைவு சிறுகதை
    " கலங்கரை கோபுரம்"
    உங்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கின்றேன். மூன்று பாகங்களாக இந்த சிறுகதை பதிப்பிக்கபட்டுள்ளது. சிறுகதைகள் பகுதியில் சென்று வாசிக்கலாம்.வாசியுங்கள், வாசித்துவிட்டு உங்களின் பேராதரவை தாருங்கள். உங்களின் ஆதரவை அதிகம் கோருகின்றேன்.
    அன்புடன்
    பாரதிப்பிரியன்
    ரோஜாக்கள்
    பூத்த
    நந்தவனத்தை
    ராஜாக்கள் ரசித்து ஆண்ட
    தேசம்....

    வறுமைக் கோட்டில்
    வருடம் தோறும்
    வளர்கிறது
    வயிற்றுக்கு உணவின்றி
    வளரவேண்டிய இளமொட்டுகள்
    வாடிய கதை தெரியுமா?

    புலம்பெயர்ந்த தொழிலாளியின்
    புலன்கள் குறித்து
    புதிதாக ஏதேனும்
    புத்தகம் வெளியிடுமா?.... தேசம்!!!???
    சமூக வலைதளத்தில்
    பகிரவும்,
    சண்டையிட்டுக் கொள்ளவும்
    தெரிந்தவர்களே???..!
    அடுத்த பகிர்வு வந்ததும்
    அதற்கென்று வரிந்து கட்டுவதா
    தேசியம்....
    சிந்திப்பீர்.....!
    "ஆத்தா… வந்துட்டேன்… ஏன் என்னை கூப்பிட்டீங்கோ… என்றான். அவனை கண்ட ராக்கம்மா மகிழ்வு மட்டும் அல்ல சிரிப்பும் வந்தது… அரைஞான் கயிற்றில் 6 இன்ச் அகலத்தில் ஒன்னரை அடி நீளத்தில் அவன் அணிந்திருந்த கோவணமும், அவன் தூக்கி சுமந்து கொண்டிருந்த முயலும் அவளுக்கு அவளை அறியாமல் சிரிப்பை தந்தது.."

    தொடர்ந்து வாசிக்க வேடந்தாங்கல் தொடரை வாசியுங்கள்

    இனிய காலை வணக்கம்
    அனைவருக்கும் வணக்கம், என்னுடைய வேடந்தாங்கல் தொடரின் 5ம் சிறகு இன்று விரிந்து உள்ளது. வாசித்துப் பாருங்கள். எளிய மனிதர்களின் வாழ்வியல் தத்துவங்களையும், உழைப்பையும் பேசும் இந்த தொடருக்கு உங்கள் ஆதரவை கோருகின்றேன். மிக்க நன்றி.
    "கனவுகள்
    கலையும்
    காலை...
    உணவை தேடி
    பறக்கும்
    பறவை...
    நீந்துதலை
    தொடங்கும்
    மீனை
    வலைவிரித்து
    பிடிக்க காத்திருக்கும்
    மனிதனை
    வித்தியாசப்படுத்தி பாருங்கள்
    வாழ்வு வசப்படும்..."
    இனிய காலை வணக்கம்...
    "பூ மொட்டுகள்
    புன்னகை பூக்க
    புவியெங்கும்
    பகலவன் தன் கதிர்
    பரப்ப
    புலர்ந்திருக்கும்
    புதுநாளில்
    புத்துணர்வோடு
    பணிசெய்ய
    பூரித்து வாழ்த்துகின்றேன்"
    இனிய காலை வணக்கம்
    பாரதிப்பிரியன்
    விடியலை தேடும் இதயங்களே
    விதையாய் வந்து முளையாய்
    வளர்ந்து ஆல விருட்சமாய்
    விழுதூன்றியுள்ளீர்கள்...
    பலரின் கூடுகளாக
    நிழலாக, பாதுகாப்பாக மாற
    சிந்தனை கொள்ளுங்கள்...

    இனிய காலை வணக்கம்

    அன்புடன்,
    பாரதிப்பிரியன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top