Advertisement

பாரதிப்பிரியன்

Profile posts Latest activity Postings About

  • வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு-2 பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து ஆதரவு தாருங்கள்.
    " உணர்வலைகள்
    உயிர்பெறும்
    உன்னதமான காலை....
    பாதி பனியும்
    பாதி மழையும்
    பாதி வெயிலும் கலந்த
    பருவ சூழ்நிலை....
    ரம்மியமாக தொடங்குங்கள் பொழுதை
    ரசித்து இன்புறுங்கள் இன்றைய நாளை
    வாழ்த்துக்களுடன் காலை வணக்கம்
    பிரியமுடன் "பாரதிப்பிரியன்"
    "பொதிகை மலை
    தாவி வரும்
    பூந்தென்றல்...
    வங்கக்கடல்
    உயர்த்தி பிடித்த
    ஆதவனை...
    வாசக, எழுத்தாளர்
    வீடுகளிலும்,
    இதயங்களிலும்
    பரவிட செய்ய
    வாழ்த்துகின்றேன்"...
    அன்புடன் காலை வணக்கம் கூறும்,
    பாரதிப்பிரியன்
    அன்புள்ள வாசக எழுத்தாளர்கள் உறவுகளுக்கு வணக்கம். என்னுடைய புதிய தொடர்கதை வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு1 பதிப்பித்து உள்ளேன். வாசித்துப் பாருங்கள். பிடிக்கும். விமர்சியுங்கள்.. தலை தாழ்த்தி ஏற்க காத்திருக்கும் உங்களில் ஒருவன்
    பிரியமுடன் " பாரதிப்பிரியன்"
    கீழைவானம்
    கடல்பரப்பில்
    கலாபனை செய்ய...
    நீலமணி குயில்களின்
    ஆலாபனை துவங்க
    கதிரவன் புறப்பாடு.....
    புலர்ந்திருக்கும்
    பொன்னாளில்
    பேருவகை எய்திட
    வாழ்த்துக்கள்...
    அனைவருக்கும் காலை வணக்கம்
    அனைவருக்கும் வணக்கம். என்னுடைய முதல் பதிவாக அந்த 24 மணி நேரம் என்னும் சிறுகதையை பதிவிட்டு உள்ளேன்.வாசித்துப் பாருங்கள்... விமர்சியுங்கள்...
    பிரியமுடன்"பாரதிப்பிரியன்"
    மழை நீர்- பெண்ணின் கண்ணீர்- ஒப்புமை (கவிதை)
    மேமாரி சொரிந்தனையில்
    குருங்கோ வனைந்தமைத்த
    குளமேவும் வெள்ளம்....

    எந்திழையின் விழிப் பொய்கை
    நிறைந்த மையின் பின்புலத்தில்
    ஏக்கத்தின் பிரயாசைகள்
    விஞ்சி வெடிக்கும்.....

    வானொடு பிணங்கி யதில்
    மேமாரி பூகோளம் நிரப்பும்
    வாளித்த ஆரணங்கின் பூவிழி
    ஆற்றாமையில் பொங்கி வழியும்.....

    ஒப்புமையில் இவ்விரண்டும்
    ஓரினத்து ரெட்டைப் பிரவாகங்களோ.....

    பிரியமுடன்" பாரதிப்பிரியன்"
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top