E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஒரு சிறு குட்டிக்கதை.
அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன்
, அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.
அதில்
, மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன்
, தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.
நிச்சயமாக அரசரும்
, அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத்
தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.
இருந்தாலும்
, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம்
, ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.
உள்ளே வந்த பிச்சைக்காரனிடம்
, ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.
''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.
ஆனால்
, என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம்
, மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் மன்னர்
, அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம்
, ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய்.
அதைவிட
, முக்கியமான ஒன்று...
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.
உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது
'' என்றார்.
கண்ணீர்மல்க
, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.
அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.
வீடு வாசல்
இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.
அடிக்கடி கீழே விழுந்து
விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.
அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ
, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.
மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல்
, அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.
அவனைக்
'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.
இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க
, அரசர் வந்தார்.
அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து
, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.
பழைய துணி மூட்டை
, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.
அந்த யாசகனிடம் மட்டுமல்ல
, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.
அதனுள் விரோதம்
, கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.
அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால்
, நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.
நம்முடைய தீராத கோபம்
, எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.
அரண்மனைகளில்
கூட
, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.
அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.
வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.
நமக்கோ
, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.
மகிழ்ச்சியாக இருப்போம்...

அனைவருக்கும் தேவையான கதை ப்ரோ :)
 

Manimegalai

Well-Known Member
தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு
, காய்மா
கேக் - கட்டிகை
, கடினி
சமோசா - கறிப்பொதி
, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு
, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி
, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம்
, பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம்
, துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி
, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் -
பழக்கூட்டு

ஐஸ்கிரீம்...
என் பசங்க புத்தகத்தில் குளிர்களி என்றும் போட்டு இருக்குங்க அண்ணா..
 

MythiliManivannan

Well-Known Member
உழைப்பே உயர்வு தரும்{திருப்பதி பெருமாளுக்கு எவ்வளவு கஷ்டம்}

ஒரு சேல்ஸ் செமினாரில் பயிற்சியாளர் கூட்டத்தினை பார்த்து,
"நாட்டில் மிகவும் பணக்கார கோவில் எது...?" ன்னு கேட்டார்....
எல்லாரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதி னு சொன்னாங்க....

"ஏன்.... பதில் தெரியுமா"...ன்னு கேட்டார் பயிற்சியாளர்.....
ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னாங்க.....
அவுங்க பதில்ல திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார்.....

"எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது.... ஆனால், திருப்பதில மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்..... மீண்டும் காலைல 3 மணிக்கு எழுந்து தரிசனம் குடுக்கறார்.... பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை...மற்ற, கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள்... பகலில் ஓய்வு உண்டு.... ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா..... என்று கேட்டார்....
உழைப்பே உயர்வு.
 

MythiliManivannan

Well-Known Member
ஆடி மாத பொன்னி நதி அவள்...
அருமையான வரிகள்:)
ஆடிப்பெருக்கு அனைத்தையும் ( தூசு , தும்பு ) அடித்துக்கொண்டு ஓடிவிடும்.

வர்ஷுவும் இந்த ஒரு பதிவிலேயே அனைவரையும் வாரி சுருட்டிவிட்டாள்:)
 

murugesanlaxmi

Well-Known Member
ரொமன்ஸ்...
அது இயல்பாக நடந்துவிட்ட ஒரு நிகழ்வு இவன் தானா போயி அவளை கடுப் படித்ததினால் இவன் என்ன தங்கைக்கு வக்காலத்து வாங்குவது என்று அவள் கடுப்படித்து இருக்கலாம் அவள் தான் முன்னர் யாரவது வந்து விட போகிறார்கள் என்றும் சொன்னவள் மற்ற்வர்கள் இருக்கிறார்கள் என்ற நியாயம் அவளுக்கு புரியாமல் இருக்குமா அவள் கோபிக்கவே இல்லை வெளியே வந்து குழந்தையிடம் அவள் இயல்பில் தான் இருக்கிறாள் இங்கு எல்லா குழப்படியும் பண்ணுவது ஈஸ் மட்டும் தான் எல்லா இடத்த்திலும் தாத்தாவையும் ஒழியிது போ என்று கண்டுக்காமல் விட்டு இருக்கலாம் இவன் பெரிய இவன் மாதிரி அவளுக்கு பார்க்கிறேன் என்று நடுவில் போயி என்ன நடந்தது
அட்லீஸ்ட்
நீ என்னிடம் திரும்பி வந்துவிட்டால் எல்லாவற்றுக்கும் சேர்த்து திருப்பதி வருகிறேன் என்று வேண்டி கொண்டேன் என்ராவது சொல்லி இருக்க வேண்டும் அதை விட்டு பிஸினஸு புடலங்காய் என்று மயக்கத்தெரியாத முட்டாள் இதில் அவளையே நான் உன்னைவிட்டு போக மாட்டேன் என்று சொல்லவைப்பானான் இவன் கிழிஞ்சுது


கோபத்தை இழுத்து வைப்பதை பற்றி இந்த துரை பேசறாரு அவள் போட்டோ வை வைத்து விளம்பர படுத்தியவனையே அஸ்வின் அவனும் ஒரு காரணம் அவள் திருமணம் நடக்க அதையே மன்னித்துவிடடாள் வல்லென்று விழுந்து கேள்வி கேட்ட ரஞ்சனியை மன்னித்துவிட்டால் குளறுபடி செய்த பத்துவை மன்னித்துவிடால் எல்லத்துக்கும் மேல் அவள் வாழ்வில் நடந்த அனைத்து பாதக செயலுக்கும் காரணமானவனா உன்னையே மன்னித்து வாழலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறாள் உன்னிடம் வந்துவிட்டால்.... இவரு பேசறாரு கோபத்தை பற்றி அவள் எதை கேட்க்கிறாள் என்று இவனுக்கு புரிகிறதா.........
இவையெல்லாம் தான் நீங்க நினைத்து எழுதி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ஒரு பெண்ணின் சார்பாக அவனுக்கான நியாயத்தை அவனுக்கும் வாய்ப்பு கொடுப்பீர்கள்

சகோதரி இப்படி ஒரு அலசல் சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top