E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

MythiliManivannan

Well-Known Member
அடுத்த எபில தெரிஞ்சிடும்..
சஞ்சய் ஐஸ்வர்யா வ லவ் பண்றான்னும் தெரிஞ்சிடும்..

வர்ஷினி மனசு லேசாயிடும்...
தானே திருப்பதிக்கு வரேன் னு சொல்ல போறா..
சான்ஸ் இருக்கு மலர்:)
 

MythiliManivannan

Well-Known Member
ஒருவன் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டான்,
டாக்டர் வீட்டுக்கு வந்து நோயாளியை பார்க்க என்ன பீஸ் வாங்குவிங்க என்று...?
அதற்கு டாக்டர் சொன்னார் 300 ரூபாய் வாங்குவேன் என்று...
உடனே அவன் டாக்டரிடம் அப்படியா சரி கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர் எங்க வீட்டிற்கு என்றான்.
டாக்டரும் அவனை தன்னுடைய காரில்
அவன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய் சேர்ந்தார்.
டாக்டர் வீட்டில் நுழைந்ததும் கேட்டார்
, நோயாளி எங்கே...? என்று
அதற்கு நம்மாள் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார். அப்படி என்ன தான் சொல்லிருப்பான் நம்மாள்.

.
"நோயாளி எல்லாம் இங்க இல்லைங்க டாக்டர் இந்த மழைல ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேட்டாங்க. நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்...!!" என்றான்
*டாக்டர்:?????????????????
ஹா... ஹா...ஹா....

அந்த ஒருத்தர்
நீங்களாண்ணே;) :D
 

MythiliManivannan

Well-Known Member
பாம்பு புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! ஏன் ?
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாரவாது யோசித்துள்ளீர்களா??
உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.
பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..
?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .
ஒரு
உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம்
மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக்
கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.
அதனாலேயே புற்றுக்குள் பால் ஊற்றி முட்டை வைக்கப்படுகிறது. பாருங்களேன்
நம்ம முன்னோர்கள் எவ்வளவு கிரிமினலா யோசிச்சிருக்காங்கனு
அருமையான தகவல் அண்ணா :)
 

malar02

Well-Known Member
திறமையை வெளிப்படுத்த
நினைக்கும் சில பேர்..!!
அதை தடுக்க நினைக்கும் சில பேர்..!!
அதை மறைக்க நினைக்கும் சில பேர்..!!
கற்றுக்கொண்டதை திசை திருப்பும் சில பேர்..!!
வளர விடாமல் தடுக்கும் சில பேர்..!!
போட்டியும் பொறாமையும்
வளர்த்துக்கொள்ளும் சில பேர்..!!
எதற்கு உதவ வேண்டும் என நினைக்கும் சில பேர்..!!
நீ பெரியவனா நான் பெரியவனா என நினைக்கும் சில பேர்..!!
திறமையிருந்தும் வாழ்கையின் வழி தெரியாமல் முன்னேற முடியாமல் தவிக்கும் சில பேர்..!!
அதை கண்டும் காணாமல் போகும் சில பேர்..!!

#இந்த_சில_பேருக்கு_நடுவில்_பல_பேர்..!!
super
 

MythiliManivannan

Well-Known Member
தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.
இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
அண்ணே.....
மயக்கம் வருதுண்ணே.....:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top