E15 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ் அழகாக இருந்தது கண்ணன் சுந்தரி இருவரும் பேசிக்கொள்வது:)
ஊருக்குள் கலவரம்....அப்பா கைது...என்று நம் மண்ணில் நடந்தது கதையில் கொண்டு வந்தது அருமையாக... இருந்தது...ஏறுதழுவுதல் நம் விவசாயிகளின் உரிமை...அதற்கு யாரோ தடை வாங்குவதும்...கதையில் கொண்டு வந்துட்டீங்க சூப்பர்:)
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...நிறைவுப்பகுதி.
அழகான கதை.அர்த்தமுள்ள கதை.:)
நம் மண்ணில் நடப்பதே கதையாக படிப்பது இன்னும் மனதுக்கு நெருக்கமாக உணரமுடியுது.
நன்றி
 

Lalithaganesan

Well-Known Member
அற்புதமான பதிவு மல்லி
bhrxp_279293.jpg

ஏறு தழுவல்

ஜல்லிக்கட்டின் பழைய வடிவம் ஏறு தழுவல்.

தமிழர்கள் காட்டில் ஆடு, மாடுகளைப் பழக்கி வாழ்ந்த முல்லை நில நாகரிகக் காலத்தில் ஏற்பட்ட வழக்கம் இது.

தொடக்கத்தில் காட்டு மாடுகளைப் போரிட்டு அடக்கி வழிக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. இந்த வினை பிறகு விளையாட்டாகிவிட்டது.

இது தமிழர்களின் நாகரிக பண்பாட்டு அடையாளங்களின் ஒன்று.

சிலர் பசுவை மட்டுமே மதிப்பார்கள். தமிழர்களோ காளையையும் சேர்த்தே மதிப்பார்கள். அதன் வெளிப்பாடே மாட்டுப் பொங்கல்.

வேளாண்மையில் தனக்கு உதவியாக இருந்த தோழனுக்கு நன்றி சொல்லிப் போற்றப் பண்டிகையில் ஒரு நாள் தந்து போற்றும் பண்பாடு தமிழனுக்கு மட்டுமே உரியது.

"ஜல்லிக்கட்டு விளையாட்டுதான். ஸ்பெயினிலும் காளைச் சண்டை உண்டு. ஆனால் அங்கே காளைகளைக் குத்திக் கொன்றுவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் காளைகளைக் குத்த அனுமதிப்பார்களே தவிரக் காளைகளைக் குத்த மாட்டார்கள்."

சங்க காலத்தில் இதற்குப் பெயர் ஏறு தழுவல், ஏற்றுச் சண்டை அல்ல. அதாவது காதலியைத் தழுவுவது போல் காளைகளின் கொம்புகளைத் தழுவுவது.

சங்க காலத்தில் ஏறு தழுவலில் வெறும் வீரம் மட்டும் அல்ல; காதலும் சேர்ந்திருக்கிறது.

அக்காலத்தில் காதலும் வீரமும்தான் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள்.

காதலுக்காக வீரம், வீரத்துக்காகக் காதல்.

- படித்தது
 

Gomathi1986

Well-Known Member
Here comes the 15 th episode of Nee Enbathu Yaathenil

Still one more to go

Innaikku sjm precap nnu solavae maattaen


Sonnaa seiyyavae mudiyarathu illai

Will try my level best to come

EPISODE 15

Happy Reading Freinds.

:)
Well said madam..namma ஊரே அப்படித்தான் இருக்கு.....நல்லது செய்யுரவங்களொட....அது சரியில்லை இது சரியில்லை குறை சொல்லிகளும்......தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று விமர்சனம் பண்ணுகிறவங்களும் தான் அதிகம் ......உண்மையா களத்துள இறங்கி போராடரவங்க ஏதோ ஒரு வகையில் செயல்பட முடியாம போயிடுது...தனி மனித ஒழுக்கமும் நம்ம கலாச்சாரத்தை உயர்வா நினைத்து விட்டு கொடுக்காம பாதுக்காத்தா யாரும் ஒன்னும் பண்ண முடியாது......நாம் அனைவரும் ஏதோ ஒரு தளையோட இயலாமையின் பிம்பங்களா தான இருக்கோம் என்று தோன்றுகிறது .... romba serious message... kannan has become very caring...sundari avana puringikitta so nice
 

Sundaramuma

Well-Known Member
:)
மல்லி சகோதரி, நீ என்பது யாதெனில், மிக அருமையான உங்களின் ஸ்டைலில் உள்ள கதை. அனைத்து பாத்திரங்களும்,மிக யாதர்தமாகவும்,நம் வாழ்வில் தினசரி சந்திக்கும் நபர்கள் போன்றோரே. யாருடைய வாதங்களும்,பாரட்டும் உங்களை பாதிக்காமல்,நீங்கள் நினைந்தபடி கதையை கொண்டு சென்றுள்ளீர். திமீர் தலைகணத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் மிக மெல்லிய நூல் வித்தியாசம். அதனை தண்டதவாரு சுந்தரி பாத்திரம்.சுயஒழுக்கம்,சுயகாட்டுபாடு,கடினஉழைப்பு இவை சேர்த்ததே சுந்தரி.அருமை. தவறு செய்வது மனிதஇயல்பு, தவறை உணர்ந்து
திருந்துவது மாமனிதன் இயல்பு என்பதுற்கு ஏற்ப துரைகண்ணன் பாத்திரம்,அருமை. தன் தவறை உணர்ந்து அதற்கு ஏற்ப பிரயசித்தம் தேடும் கண்ணன் அருமை. சந்திரன், தன் மகனை புரிந்துகொள்ளமால் புரிந்துகொண்டதாக நினைக்கும் ஆசையுள்ள ஒரு தகப்பன். விமலா, தன்கணவனையும் தன்மகனையும் சரியாக புரிந்துகொள்ளமால் அவதிப்படும் நம் வீட்டில் உள்ள இன்றைய தாய். மற்றவர்கள் வழக்கம் போல் கதை நகர்ந்தும் கருவிகள். அருமையானகதை.மற்றும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மூலகூறும் ஒரு கிராமந்தான்,ஒரு விவசாயின் ரத்தம். “பூமியில் எங்கே தோண்டிப்பார்த்தாலும் ஒரு புதையல் கிடைக்கும். அதற்கு வேண்டியதெல்லாம் ஒரு விவசாயின் நம்பிக்கைதான்” என்பார் கலீல்ஜிப்ரான்.அப்படிபட்ட விவசாயி,அவனுடைய நண்பன் காளை,எருது இதனை பற்றி தெரியாத சும்மா இருக்கும் சோம்பேரிகளையும் சாடிய விதமும் அருமை. சகோதரி, உங்களின் கதையில் உணர்வு,உரிமை,உணர்ச்சி இருக்கும். ஆனால் நகைசுவை உணர்வு மின்மினி போல் ரசிப்பதுக்குள் மறைந்துவிடுகிறது. இனி வரும் நாவல்களில் நகைசுவை உணர்வை ரசிப்பது போல் தருவீர் என எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகசகோதரன். நன்றிகள்
V.முருகேசன்

Arumai...Bro
 

Sundaramuma

Well-Known Member
முறையாக செய்த பழக்கம் தான்..
விளக்கம் தெரியாமல்...
விளங்கி கொள்ளாமல்..
மூடபழக்கம் ஆனது..

விவசாய பூமி..
விவசாயம் காக்கும்
இயற்கையும் ..
அதற்கு உதவும் கால்நடைகளை
தெய்வமாக வணங்கிய
தமிழர்களை.
காட்டுமிராண்டியாய் சித்தரிக்கும்
நவீன உலகம்...

மரபை மறந்து...
மரபு அனுக்கள்
செலுத்த பட்ட உணவை
உண்பவர் தாம்..

கற்றவர் அரசு பதவியில்..
உயர்கல்வி கற்றவர் உயர் பதவியில்..
இவர்களை வழிநடத்துபவரின்
கல்வியோ. லஞ்சம் ஊழல்
அடிதடி பதவி மட்டுமே..


இவர்கள் நம்மை ஆண்டால்
நம் இனம் அழிவதை கூட
உணராது..
அயராது உழைப்பர்
சொத்து குவிப்பில்..

Awesome...Fathima :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top