நேசம் மறவா நெஞ்சம்-20Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
கயல் கிளம்பி வரவும் இருவரும் கடைக்கு கிளம்பினர்....... போகும்வழியில்.... அவளுக்கு பூ வாங்கி கொடுத்தவன்....... அவளை கடைக்கு அழைத்துச் சென்று அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம்.......கயலுக்கு தேவையானதை எடுத்து கொடுக்கச் சொன்னவன்..... “நீ போய் பாரு........ எனக்கு கொஞ்சம் கணக்கு பாக்கனும்........”



“இருங்க...... இருங்க...... உங்க வீட்ல இருந்து எங்க அக்காவ பொண்ணு கேட்டாங்கள்ள.... அப்ப உங்களுக்கு பெரிய கடை இருக்குன்னு சொல்லவேயில்லை....வெறும் விவசாயம் மட்டும்தான் பாக்குறதா..... சொன்னாங்க......”



“நான்தான் அப்புடி சொல்லச்சொன்னேன்...... எங்க வசதிய பாத்து பொண்ணு என்னைய கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன்........”ஆனா உங்க அக்கா....என்னைய வசதியில்லாதவன்னு நினைச்சுத்தான்........ அவன கலயாணம் பண்ணுனா....... என்று யோசித்தவன்..... சுள்ளென” இப்பஏன் தேவையில்லாம இந்த கேள்வி.........”.

“ஐய்யய்யோ……… எனக்கு புத்தியே இல்ல....( அதுதான் ஊருக்கே....தெரியுமே.)..... பாவம் நீங்களே.... இப்பதான் கொஞ்சமா..... எங்க அக்காவ மறந்தீங்க...... நான் வேற கல்யாணத்தை பத்தி பேசி அத ஞாபகப் படுத்திட்டேன்.........சாரி.....சாரி......”

இவள என்னதான்....பண்ணுறது.........” முதல்ல உனக்கு தேவையான பொருள போய் எடு...... தேவையில்லாதவங்கள பத்தி என்ன பேச்சு.......போ.......” என்றவன்.கடையின் பணம் செலுத்தும் இடத்திற்கு செல்லவும்.......

கயல்..... ஏண்டி.... இது உனக்கு தேவையா........ பாவம் அவரே இப்பதான் கொஞ்சம் சிரிச்சாரு...... அதுக்குள்ள.... அவர் மனச...கஷ்டப்பட வச்சுட்ட...... நீ அவருகிட்ட பேசாம இருக்குறதே நல்லது........ என்று நினைத்தபடி உள்ளே செல்ல.......

ஒரு அரைமணி நேரம் கழித்து கண்ணன் கயலை தேடிவர.... அவள் அந்த கடையில் வேலை பார்க்கும் அந்த ஐந்து பெண்களுடனும் தரையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்......... இவள..... கடையை சுற்றி பார்த்தவன்.... நேரம் ஆகியதால் கஸ்டமர் யாரும் இல்லை.....

..கயலை நெருங்கியவன்” எல்லாம் எடுத்திட்டியா...... வீட்டுக்கு போவமா.... “

மற்ற பெண்களை பார்த்து” நீங்கள்ளாம் கிளம்புங்க.....நேரமாச்சு....”



கண்ணன் அந்த பெண்களிடம் தேவையில்லாமல் எப்போதும் பேச மாட்டான்...... அதனால் கண்ணன் மேல் அவர்களுக்கு எப்போதும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும்...... இன்று அவர்களாகவே......

“ அண்ணே.... அண்ணி...சூப்பர்ணே...... அப்புடியே அழகா ஒரு பொம்மை மாதிரி இருக்காங்கண்ணே..... இன்னைக்கு பூரா.... அவுக பேசுரத கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்குண்ணே...... அவுக பேசும் போது அவுக கண்ணும் பேசுதுண்ணே....... சூப்பர்கா....... நாளைக்கு பாப்போம்.....நாங்க வாரோம்....”..என்றபடி அவர்கள் கிளம்ப......

“எங்க.....நீ எடுத்த பொருளெல்லாம்.......”

“இல்ல இன்னைக்கு ஒன்னும் எடுக்கல..... வேணும்னா.......நாளைக்கு வந்து எடுத்துக்கவா....”



“ஒண்ணும் வேணாம்.... இன்னைக்கே எடுத்தரலாம்.....” என்றவனுக்கு பொறாமை...... பொங்கியது....... இவள.... எல்லாரும் இப்புடி ரசிக்குதுக....... நாம ஏதாவது பேச ஆரம்பிச்சா மட்டும் ஜனகராஜ் மாதிரி.... என் தங்கச்சிய நாய் கடிச்சுருச்சுப்பா.......ன்னு சொல்லுறமாதிரி...... எங்க சுத்துனாலும் இவ அக்காட்ட வந்து நிக்குது லூசு....... என்று நினைத்தபடி ஒவ்வொரு பொருளாக எடுத்துக்காட்ட..... இவளும் வேணாம்.... வேணாம் என்று மறுத்துக் கொண்டே வர.....கண்ணன் கோபத்தில் அங்கிருந்த சேரில் அமர்ந்தவன்......” உனக்கு என்ன தேவையோ.... எடு.......”. என்றான்.......



கயலும் எண்ணி நாலே பொருட்களை எடுத்தவளை பார்த்தவனுக்கு..... கோபமும் சுருசுருவென்று ஏறத்தொடங்கியது..... இவன் கடைக்கு வரும் பெண்கள் வாங்கும் பொருட்களை பார்த்திருக்கிறான்..... அதில் நாலில் ஒரு பங்கை கூட கயல் எடுக்கவில்லை.......

கயல் .......”எடுத்துட்டேன்.... போவமா......”

கண்ணனும் ஒன்றும் சொல்லாமல்..... அங்கிருந்த....ஸ்நாக்ஸ் ஐயிடங்கள்.....பலவும்.... எடுத்துப் போட்டவன்.... கடையை பூட்டி கிளம்பியவன்.... பக்கத்து கடையில் தேவையான பழங்களை வாங்கிக் கொடுத்தான்.....

“ஹோட்டல்ல போய் சாப்புட்டு போவமா......”.

இவரே.... மூஞ்சிய இப்புடி கடுகடுன்னு வச்சுருக்காரு..... இவர்கூட போய் சாப்புட்டா..... நமக்கு சாப்பாடே எறங்காது......

“வேணா.....வேணாம்......வேணும்னா.....வாங்கிட்டு போய் வீட்டுல சாப்புடுவோம்.....” எதுக்கு நம்ம இப்ப வாங்கி குடுக்குறத வேணாமுன்னு சொல்ல..... நமக்கு வகைவகையான சாப்பாடுதான்....... முக்கியம்........

“சரி..... வேற ஒன்னும் வேணாமா.......”.

“இல்ல...... எனக்கு ஐஸ்கிரிம் மட்டும் வாங்கி குடுக்குறீங்களா...... நாங்க எப்ப வெளியில வந்தாலும்.....ஐஸ்கிரிம் சாப்புடாம போகமாட்டோம்......” கயல் தயங்கி தயங்கி கேட்க.....

அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றம் சொல்லாமல்” ம்ம்ம்ம்” என்றபடி வண்டியை கிளப்பினான்.......



நாட்கள் அதன் போக்கில் நகர....... அன்று வாசுவின் அப்பா வீட்டிற்கு வந்தவர்...... அவர் மனைவியிடம் ....... கோபமாக “எங்க உன்னோட மவன்........”.

அவர் ரூமை.... கைகாட்ட.......” ச்சே... இதென்ன நேரம்காலம் தெரியாம..... எப்ப பாத்தாலும் ச்சே…….” என்றவர்..... வாசுவின் போனுக்கு மிஸ்டுகால் கொடுக்க......



பத்துநிமிடம் கழித்து வெளியே வந்தவனை...... தனியாக அவரின் அறைக்கு கூட்டிச் சென்றவர்…”…நீ... ஒம்மனசுல என்ன நினைச்சுருக்க..... உரம் வாங்க எடுக்கச் சொல்லி ஏடிஎம்....ம உன்கிட்ட குடுத்தா...... நீ.....உன் நோக்கத்துக்கு நாலு லெச்சரூபாய எடுத்துருக்க..... எல்லாம் யார்வுட்டு காசு...... நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்சது....பாவம் உனக்கு ஒரு தொழிலை வச்சுக் குடுக்கலாம்னு நினைச்சா..... இப்புடி பண்ணி வச்சிருக்க.....”



“எனக்குன்னு தானே வச்சிருந்தீங்க.... அப்ப நான் எடுத்தா மட்டும் எதுக்கு இப்புடி கத்துறீங்க....”



“டேய் அறிவுகெட்டவனே..... அந்த பணத்தை எடுத்து நீ எதாவது தொழில் செஞ்சியா.....”

“இல்ல.....”



“பின்ன நீயும் ..... ஒம் பொண்டாட்டியும் ஆடம்பரமா செலவு செய்ய என்னோட பணம்தான் உனக்கு கிடச்சுச்சா...... உன்னோட தம்பி இன்னும் ஒன்றரை மாசத்துல ஊருக்கு வாரானாம்....அவன் இனிமே திரும்பி ஊருக்கு போகல..... இங்கயே....ஏதாச்சும் தொழில் தொடங்கப்போறேன்னு சொல்லுறான்...... ஏற்கனவே அவனோட கூட்டாளிக என்ன சொன்னாங்கன்னு தெரியல....... ஒன்னைய பத்தி பேச்செடுத்தாலே எரிஞ்சு விழுகுறான்..... இங்க வந்து நீ இப்புடி ஊதாரியா திரிஞ்சா வீட்ட விட்டு வெளிய அனுப்பக்கூட .....யோசிக்கமாட்டான்....... தெரிஞ்சுக்க...ஏற்கனவே அவன் வீடுகட்ட குடுத்த பணத்துக்கே நீ ஒழுங்கா கணக்கு குடுக்கலன்னு சொல்லிக்கிட்டு இருக்கான்.... ஒரு பைசாக்கூட நீ இந்த வீட்டுக்காக குடுத்தது இல்லை…….... நானும் அவன் ஊருல இருக்கும் போதே உன்னைய ஒரு நிலைக்கு கொண்டு வந்துரலாமுன்னு நினைச்சேன்.... அவன் வந்தா நாங்க அவன் பக்கம் பேசுறமாதிரிதான் இருக்கும்.....

கய்யாணத்துக்கு முந்தியாவது ஏதோ வேலை பாத்துக்கிட்டு இருந்த.. ஆனா இப்ப என்னனா அடைகாக்குற கோழி மாதிரி ஒம்பொண்டாட்டி பின்னாடியே திரியுற.... வயல்ல உரம் போடாம...... பயிர்லாம் வீணா போக போகுது..... தோப்புல தேங்காய் எல்லாமே..... முத்தி போர நிலைமையில இருக்கு.......



நீதான் இப்புடி இருக்கன்னா...... உம்பொண்டாட்டி பெரிய எட்டுவர்டு சக்கரவர்த்தி மாதிரி நடந்துக்குது...... உங்க அம்மாவ ஒரு மனுசியாக் கூட மதிக்கிறது இல்லை..... எம்பொண்டாட்டி என்ன உங்களுக்கு பண்ணைகாரியா....... உங்களுக்கு சேவுகம் பாக்க...... நானும் எதையும் சொல்லக்கூடாதுன்னு பாத்தா........ நீங்க நடந்துக்குறது கொஞ்சம்கூட சரியில்லை...... முதல்ல அந்த ஏடிஎம்.......ம கொண்டுவந்து குடு.......... ஒம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லு நான் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்கமாட்டேன்....... சரியா.....புரிஞ்சு நடந்துக்க....” என்றபடி வெளியேற......



வாசுவோ........சுதா 11 பவுனுல தாலிச்செயின் கேட்டாளே...... இப்ப என்ன பண்ணுறது.... அவ கேட்ட ஒரு சின்ன பொருளை வாங்கிகுடுக்காட்டா...... நம்மள ரெண்டுநாளைக்கு கிட்டக்க சேக்கமாட்டா......இப்ப என்ன பண்ணுறது........ வாசு........ ஒரு மாதிரி சுதாவின்...... வெளி அழகிற்கு மயங்கி இருந்தான்...... இவன் வேறு நினைவுக்கு போகாமல் அவனை எந்த வகையிலாவது மயக்கிக் கொண்டே...... இருந்தாள்....... இருவருக்குமே..... தெரியவில்லை....... தங்கள் பந்தம் காலம் முழுவதும் தொடர்வது..... இதில புற அழகைவிட...... ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் அன்பு .... விட்டுக்கொடுத்தல்...புரிதல்...... இதுவே முக்கியம் என்று...........



இங்கு கண்ணன் வீட்டில் ......... கண்ணனுக்கு....... இரண்டு நாட்களாக....கயல் ஒருமாதிரியாக யாரோடும் பேசாமல் அமைதியாக இருப்பது போலவே ....... இருந்தது......உடம்பு ஏதும் சரியில்லயோ...... என்று நினைத்தவன்......



அன்று இரவு அவள் படித்துக்கொண்டிருக்கும் போது......” என்ன ஒருமாதிரியா இருக்க.........”



“ம்ம்ம்...... ஒன்னுமில்ல.......”



“உடம்புக்கு என்னமும் பண்ணுதா.......”



“இல்ல இல்ல.....நான் நல்லாதான் இருக்கேன்.............”

இவ மனசுல உள்ளத நம்மகிட்ட..... எப்பதான் வெளிப்படையா....பேசி பழகுவான்னு தெரியலயே.......என்று யோசித்தபடி..... உறங்கியிருந்தான்....

காலையில் கயல் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க..... கண்ணனும் வயலுக்கு போகாமல் யாரிடமோ........ போனில் பேசிக் கொண்டிருந்தான்.......

கயல் அவனிடம் தயங்கியபடி வந்து.......” இன்னைக்கு நீங்க வயலுக்கு போகலயா.......”

“இல்ல...... இன்னைக்கு கதிர் அறுக்குறோம்..... அதுனால ஒரு எட்டு மணிக்கு மிசினை வரச் சொல்லியிருக்கேன்....... சாப்புட்டு இந்தா கிளம்ப போறேன்...... ஏன் கேக்குற......”



“இல்ல நீங்க வீட்ல இருந்தா என்னைய காலேஜ்க்கு கூட்டிட்டு போக சொல்லலாம்னு பாத்தேன்.......”

கண்ணா..... உன்னோட பொண்டாட்டி...... இன்னைக்கு....வலிய வந்து ஒரு உதவி கேக்குறா......... ஆனா இந்த மிசின்காரன் இப்பதானே போன் பண்ணுனான்.... நம்ம வயல் எதுன்னு தெரியாம நிக்குறேன்னு..... இப்ப என்ன பண்ணுறது.........

“நாளைக்கு வேணா.....கூட்டிகிட்டு போகவா.........”

“சரி....சரி.....நீங்க போங்க....... நான் பஸ்லயே போய்கிறேன்......” என்றபடி அவள் காலேஜ்க்கு செல்ல........

கண்ணனும் அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்க......... முத்து தன் அண்ணனிடம் வந்து “அண்ணே...... உங்ககிட்ட ஒரு பத்து நிமிசம் பேசனும்ணே........”

“இல்ல...... முத்து...... இப்ப நேரமில்ல....... சாயங்காலம் பேசிக்கலாம்...... இப்ப நான் போகனும்.....”.

“இல்லண்ணே....... அண்ணியபத்தி........”

வேகமாக வெளியே வந்த கண்ணன் முத்து அண்ணி என்று சொன்னவுடன்...... அப்படியே நின்றான்....”. சரி மாடிக்கு வா...... “என்றபடி வீட்டுக்குள் திரும்பினான்........

ஒரு பத்து நிமிடம் கழித்து...... இருவரும் பேசி முடிக்கவும் கண்ணனின் முகம் கோபத்தில் தக்காளி போல் சிவந்திருந்தது .........

“அண்ணே....... அண்ணி.....பாவம்ணே........நீங்க அவுகள திட்டாதிக.......’”



“நீ....ஸ்கூலுக்கு....... போ நான் பாத்துக்குறேன்.......”

“அண்ணே.......”

“நீ போன்னு சொல்றேன்ல.......” என்றபடி...கண்ணன்....... வண்டியை வேகமாக கிளப்பிச் சென்றான்........

இனி....................................?

தொடரும்.......................
nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top