நேசம் மறவா நெஞ்சம்-20Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்.

அத்தியாயம்-20



மாடியேறி வந்த கண்ணன் கயல் உள்ளே மற்ற பெண் பிள்ளைகளோடு ஆடிக்கொண்டிருக்க....... கதவு லேசாக சாத்தியிருந்ததால் கண்ணனும் கதவை திறக்காமல் அந்த கதவின் நிலையின் மேல் சாய்ந்து நின்று கயலை ரசித்துக் கொண்டிருந்தான்........



அந்த பாட்டு முடியவும்......” ஏய்.....போதும்பா....மூச்சு வாங்குது.........நீங்கள்லாம் வீட்டுக்கு கிளம்புங்க.....”



“என்னக்கா...... இதுதானே நாலாவது பாட்டு......இன்னும் ஒரே ஒரு பாட்டுக்கா.......அதோட போதும்......ப்ளிஸ்கா..... ப்ளிஸ்கா.......”



கயலுக்கோ.....மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.......”. இன்னும் ...... ஒரு பாட்டா........ சரி இதுதான் லாஸ்ட்...... மறுபடியும் கேக்கக்கூடாது சரியா.........”



“சரிக்கா.......சரிக்கா........”



அடுத்து என்ன பாட்டு போடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க.......ஒரு பெண்குழந்தை வந்து.......”அக்கா ஒரு குச்சி ஒரு குல்பி பாட்டு போடுக்கா..........”



“அந்த பாட்டா இருடி வரேன்.......”அந்த பாட்டை போட....

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு selfie
ஒரு குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு குல்பி


உன்கூட தான் photo புடிச்சேன் touch’eh phone’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le


உன்கூட தான் photo புடிச்சேன் touch’eh phone’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le

தள்ளி தள்ளி போவதமா
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…

தள்ளி தள்ளி போவதமா
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…

வந்தா மஹாலக்ஷ்மி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh
வந்தா மஹாலக்ஷ்மி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh





இவள் ஆடிக்கொண்டிருக்கும் போது ஒரு சிறு குழந்தை வந்து இவள் கையை பிடிக்க .........கயல் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்தாள்........அந்த குழந்தை பக்கத்து வீட்டில் இருப்பவள்......3 வயது ஆகிறது......



கயல் திருமணமாகி....வந்ததிலிருந்து தினமும் ஒருமுறையாவது கயலை பார்க்க வந்துவிடுவாள்..... கயலும் தன் அக்கா குழந்தைகளோடு ஆட்டம் போட்டு பழகியிருந்ததால் இந்த குழந்தையோடும் நன்றாக விளையாடுவாள்..... இப்போது பிள்ளைகள் டியூசனுக்கு வரவும் இந்த குழந்தையும் ஆளுக்கு முன்னாடி..... ஒரு நோட்டோடு ஆஜர் ஆகிவிடுவாள்.....

கயல் அந்த குழந்தையை தன் தோளில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்க......அந்த குழந்தையோ...



“அக்கா......அக்கா......”



“என்னடா........செல்லக்குட்டி.......”



“அக்கா..... அங்க பாருங்க.......”

“இருடா.....இதுதான் லாஸ்ட் பாட்டு.......ஆடிமுடிச்சுருவோம்.....”.என்றபடி அந்த குழந்தையை முத்தமிட.........

அந்த குழந்தையோ..... அவள் தாடையைபிடித்து அவள்புறம் திருப்பி....” அங்க மாமா வந்திருக்காங்க....”என்றபடி விரலை கதவு பக்கம் காட்ட…….

ஒருவேளை முத்து வந்துட்டானோ.......என்று நினைத்து அசால்டாக திரும்பிபார்க்க........ கண்ணன் கதவை நன்றாக திறந்து....... கதவின் மேல் ஒரு காலைமடித்து வைத்து. .....கதவில் சாய்ந்து.....கையை கட்டி நின்றுகொண்டிருந்தான்.......

ஆத்தி.....நான்.......... என்ன.........பண்ணுவேன்....... இவரா.......என்று பதட்டமானவள் .அந்த குழந்தையை கீழே இறக்கிவிட்டு.......... நைட்டியை கீழே இறக்கிவிட்டவள்..... தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்துப்போட்டு செல்போனை எடுத்து பாட்டை நிப்பாட்ட முயல..... பதட்டத்தில்... போன் கைதவறி விழ பாட்டரி தனியாக கழன்டதால்.......பாட்டும் நின்றது.....



ஆடிக்கொண்டிருந்த.....மற்ற பிள்ளைகள்.....பாட்டு நிற்கவும்.கயலை திரும்பிபார்க்க..... அவள்பார்வையோ....வாசல்புறம் இருக்கவும் அவர்களும் திரும்பிபார்க்க....கண்ணன் நிற்கவும்.... இந்த அண்ணனா......என்று நினைத்தவர்கள்.....



“அக்கா...நாங்க வீட்டுக்கு....போறோம்கா....”.என்றவர்கள்..கயலின் பதிலைக்கூட எதிர் பார்க்காமல் படியிலிருந்து தடதடவென்று இறங்கி .... ஒட....

அந்த குழந்தைமட்டும் ஒடாமல்.....கயலின் நைட்டியை பிடித்து இழுத்து.....”.நானும் வீட்டிக்கு.....போகவா......”

கயலோ....திருதிருவென்று விழித்தபடி...தலையை ஒருகுத்துமதிப்பாக எல்லாப் பக்கமும் ஆட்ட......

“அப்ப எனக்கு.....முத்தம்.....”அந்த குழந்தை எப்போது வீட்டுக்கு திரும்ப போகும்போதெல்லாம்....கயலுக்கு முத்தமிட்டு தன் கன்னத்திலும்....முத்தம்வாங்கிச் செல்வாள்.......

இன்றும் அதேபோல் முத்தம் கேட்கவும்.......கயல் கண்ணனை தயக்கத்துடன் பார்த்தவள்... அந்த குழந்தையை தூக்கி அதன் இரு கன்னத்திலும் முத்தமிட..... அந்த குழந்தையும்..... பதிலுக்கு அவள் இருகன்னத்திலும் முத்தமிட்டு இறங்கி ஒடியது........



வாசல்வரை வந்த அந்த குழந்தை கண்ணனை பார்த்தவுடன் அவன் கையை தன்புறமாக பிடித்து இழுத்து அவனின் இருகன்னத்திலும் முத்தமிட்டு....தன் கண்ணைச்சுருக்கி.... சிரித்தபடி.......இறங்கி ஒடியது.........



கயல் ஆடியதில் தன்னை மறந்து ஒருமோன நிலையில் நின்று கெண்டிருந்தவன்...... அந்த குழந்தை முத்தமிடவும் தன் சுயநினைவுக்கு வந்தான்....... அப்பா................ இவ என்ன...... ஆட்டம் போடுறா...... என்று நினைத்தபடி...... உள்ளே வந்தவன்......தன் அறையை சுற்றிப் பார்த்தான்...... இது என்னோட ரூம்தானா......அவன் அறை எப்போதும் சுத்தமாக நேர்த்தியாக வைத்திருப்பான்........ இன்று அப்படியே தலைகீழ்....... பிள்ளைகள் கட்டிலில் ஏறி ஆடியதால்....தலகாணி மூலைக்கு ஒன்றாக கிடந்தது அந்த மெத்தை உறை கீழேகிடந்தது..... தன் காலுக்கு கீழே கிடந்த தலகாணியை எடுத்து அந்த அறை கதவை சாத்த......... கயல் ஓடிச்சென்று அந்த தலகாணியை வாங்கியவள்......வேகவேகமாக எல்லா பொருளையும் அந்தந்த இடத்தில் வைக்க ஆரம்பித்தாள்.......



கண்ணன் ஒன்றும் பேசாமல் வந்து கட்டிலில் வந்து உட்காரவும்....கயல் போச்சு ........ போச்சு......இவரு ஏன் இன்னைக்கு இம்புட்டு சீக்கிரமா வந்தாரு.... எப்பவும் ஒம்பது பத்து மணிக்குதான வருவாரு......என்று நினைத்தவள் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க தலையில் துண்டை கட்டியிருந்ததால் தலை கலைந்து போய் இருந்தது...நெற்றியில் பொட்டை காணவில்லை....... அங்கிருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து வைத்தவள்.... தலையை தன் கையாலே ஒதுக்கிவிட்டாள்.கண்ணன் என்ன திட்டுவானோ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்........

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கயல் ஆடியதை பார்த்த கண்ணன் உண்மையிலே மயங்கிப் போயிருந்தான்....அவளின் நடனத்தை அனுஅனுவாக ரசித்துக் கொண்டிருந்தான்...... நைட்டியை கைலி போல் மடித்துக்கட்டியிருந்ததால் பளிச்சென்று வெளியே தெரிந்த அவள் வாழைத்தண்டு கால்களை பார்த்தவன் இதயம் ஒரு கனம் தடுமாறி துடித்தது.... அவள் கால்களில் போட்டிருந்த அந்த மெலிதான கொலுசு அவள் ஆடும்போதெல்லாம் அது தனியாக ஆடியது போல இருந்தது. அந்த முத்துவைத்த மிஞ்சியை பார்த்தவனுக்கு அவளின் கால்விரல் ஒவ்வொன்றிற்கும் முத்தமிட தோன்றியது....... மெதுவாக பார்வையை உயர்த்தியவனின் கண்ணில் இவ இடுப்பு பட இப்புடி வளைச்சு வளைச்சு ஆடுறாளே....... இவ இடுப்பு புடுச்சுக்கிறாது..... என்று யோசித்தவன் பார்வையை உயர்த்தியவன்..... சற்று பெருமூச்சு...... ம்ம்ம்ம்ம்........விட்டவன்......தன் பார்வையை அவள் முகத்திற்கு கொண்டுச் சென்றான்......... அவள் ஆண்போல் ஆடியதால் நெற்றியில் பொட்டைக்காணவில்லை .....தலையில் துண்டை முண்டாசு போல கட்டி கண்ணைச் சுருக்கி உதட்டை சுழித்து ஆடிக் கொண்டிருந்தாள்......



இவனை பார்த்தவுடன் எல்லாக் குழந்தைகளும் ஒட .......... அந்த குழந்தை மட்டும் ஒடாமல் அவனை முத்தமிடவும்....... அவனுக்கு அந்த உணர்வே புதிதாக இருந்தது...... .இந்த குழந்தை பக்கத்துவீட்டுக் குழந்தை என்று தெரியும்..... அது விளையாடிக் கொண்டிருக்கும் போது அதை அடிக்கடி பார்த்திருக்கிறான்...... ஆனால் ஒரு நாளும் தூக்கி கொஞ்சியதில்லை.......இன்று அதுவே வந்து தன்னை முத்தமிடவும்.... மனதிற்குள் குப்பென சந்தோசம் தோன்றியது......

இவன் இதுவரை யாரிடமும் மனம் விட்டு பழகியதில்லை..... தன் தம்பிகளிடமும் மனம் திறந்து பேசமாட்டான்.... கல்லூரியிலும் அதிக நண்பர்கள் கிடையாது..... அதனால் தேவையில்லாத விசயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தினான்....... படிப்பை முடிக்கவும் ......தன் தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட....... அவரிடம் மட்டும் சற்று மனம்விட்டு பழகியிருந்தான்...... ஆனால் அவரும் திடிரென இறக்கவும் மீண்டும் தன் மனதை சுருக்கிக் கொண்டான்... வீட்டுக்கு தேவையானதை அவன் அம்மா சொல்லாமலே வாங்கிக் கொடுப்பவன்...... தம்பிகளுக்கு அனாவசியமாக காசு கொடுக்க மாட்டான்..... நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே செலவழிப்பான்... மேலும் பேராசைபிடித்த தன் அத்தைகளை கிட்டவே சேர்க்கமாட்டான்..... கல்யாணத்திற்கு கூப்பிடச்சொல்லி சாவித்திரி எவ்வளவு சொல்லியும் கூப்பிட மறுத்து விட்டான்........



ஆனால் கயல் வீட்டிற்கு வந்ததிலிருந்து ஒவ்வொருநாளும் மிக சந்தோசமாக இருந்தது .யாரிடமும் தேவையில்லாமல் பேசாதவன்..... ஒவ்வொரு முறையும் கயலிடம் பேச்சை வளர்க்க ஆசைப்பட்டான்...... ஆனால் கயல் அவனிடம் பேசாதது அவனுக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை..... தன் தாயிடமும் தம்பிகளிடமும் நன்றாக பேசி பழகுவதே போதும் என்றிருந்தான்..... எப்போதும் அமைதியாக இருக்கும் அவன்வீடு இவள் வந்த சில நாட்களில் அப்படியே மாறி இருந்தது....... முன்பெல்லாம் இவன் இரவு வீட்டிற்கு முன்பே முத்துவும் ராமனும் தூங்கியிருப்பார்கள்..... ஆனால் இப்போது அவன் கதவை திறக்கும்போதே டிவியில் ஏதாவது பாட்டுச் சத்தம் கேட்கும்.... இவன் வரவும் வேகமாக டிவியை அணைத்துவிடுவாள்..... எல்லாரும் சாப்பிடவும் அவர்கள் அந்த முற்றத்தின் நடுவில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்......இவன் டிவியில் செய்திகளை பார்க்கும் சாக்கில் அங்கேயே அமர்ந்து...... அவளை சைட் அடித்துக் கொண்டிருப்பான்............



இப்போது கயலை நிமிர்ந்து பார்க்க..... அவள் கண்ணன் என்ன சொல்வானோ... ஏது சொல்வானோ என்று பயந்து இரு கைவிரல்களையும் ஒன்றோடு ஒன்று நேர்த்து முறுக்கியவள்...... அவனை நிமிர்ந்து பார்ப்பதும்....... பின் தலை குனிந்து தரையை பார்ப்பதுமாக இருந்தாள்…………



“இதுதான் நீ........டியூசன் எடுக்குற லெச்சனமா........ தினம் இந்த கூத்துதான் இங்க நடக்குதா..........” என்று கோபமாக முகத்தை வைத்தபடி கேட்க........



இவள் பயந்து போய்......”. இல்ல.... இன்னைக்குத்தான்......” என்று தரையை பார்த்தபடி முனங்க.....



“இப்ப இங்க நீ என்ன...... ஆட்டம் போட்ட...... இப்ப என்னமோ ஒன்னுமே தெரியாதமாதிரி நிக்குற...... முதல்ல என்னைய நிமிந்து பாரு........ ஆமா........ முத்து ....எங்க.........”



கயல் கண்ணனை நிமிர்ந்து பார்த்தவள்........” அது வந்து முத்துவுக்கு.... ரெண்டுநாளா கோச்சிங் கிளாஸ் நடக்குது...... அதுனால அவன் லேட்டாத்தான் வாரேன்னு சொல்லிட்டான்........”

“சரி அன்னைக்கு எத்தன புள்ளங்க டியூசனுக்கு வரும்னு சொன்ன........”

“அதுவா.... அது 25....”.



என்னது 25 ஆ..... அன்னைக்கு அஞ்சு விரலதான நம்மகிட்ட காமிச்சா.......

“அன்னைக்கு அப்புடியா சொன்ன....”

ஆமா அஞ்சு விரலையும்மூடி பின் விரித்துக்காட்டி ...”.. இந்தா அஞ்சு அஞ்சம்.......25....ல.....” (அப்பா புள்ளைக்கு எம்புட்டு அறிவு........)



“முத்து பிரண்ட்ஸ் 7....பேரு இன்னைக்கு வரல......இதுகள்ளாம் ஒன்னாவதுல இருந்து எட்டாவது வரைக்கும் படிக்குற புள்ளைங்க.....”



கண்ணனோ.....விட்டா நம்மவீடு........பால்வாடி....மாதிரி மாறிரும் போலவே......என்று நினைத்தவன்.....கயலை நிமிர்ந்து பார்க்க....... அவள் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரியவும்......

“ இங்க வா.....”.என்று அழைத்தவன்..... அவளை தன் அருகில் கட்டிலில் அமர்த்தியவன்......... அவள் முகத்தில் இருந்த வியர்வையை பார்த்தவன்...... அங்கிருந்த துண்டை எடுத்து அந்த வியர்வையை ஒற்றி எடுத்தவன்.......



“யேன் இப்புடி பயந்து போய் உட்காந்திருக்க........ என்னைய பாக்க அவ்ளோ பயமாவா இருக்கு.......ம்ம்.......சொல்லு....”



“இல்ல...இல்ல....”.

..(அப்ப உனக்கு பயம் விட்டுப்போச்சா...)



பேச்சுவாக்கில் அவள் கையை எடுத்து தன் மடியில் வைத்து ஒருஒருவிரலாக வருடியவன்....” ஆமா...... இப்புடி டான்ஸ் ஆடுறியே....எப்புடி......” அவன் கேள்வி கேட்கவும்



கயல் அவனை நோக்கி சம்மனம் கூட்டி உட்கார்ந்தவள்....

.”.வீட்லவ லீவு விடும்போது எல்லாம் நானும் மல்லிகாவும் அருணாவும் டிவிய போட்டுட்டு அத பாத்து நல்லா ஆடுவமே.........”



“உங்க வீட்ல ஒன்னுமே சொல்லமாட்டாங்களா.......”

“எங்க அம்மா....திட்டி திட்டி பாத்துட்டு அப்புறம் சும்மா விட்டுட்டாங்க..... இந்த அப்பத்தாதான் நாடகம் போச்சேன்னு விரட்டி விரட்டி அடிக்கும்......நாங்கல்லாம் ஓடி எஸ் ஆயிருவம்ல.......”.



“அப்புறம் நீ உங்க வீட்டுல எப்புடி இருந்தியோ..... அப்புடியே இங்கயும் இருக்கலாம்..... இதுவும் ஒன்னோட வீடுதான்...... சொல்லப்போனா... இதுதான் உன்னோட வீடு.சரியா....... சரி நீ போய் டிரஸ் மாத்திட்டு கிளம்பு நாம நம்ம கடைக்கு போயிட்டு வரலாம்..... சரியா......”



கயலோ ....கண்ணனை...... நாயகன் பட கமலஹாசன் ரேஞ்சுக்கு வைத்துப் பார்த்தாள்........ ..... இவரு நல்லவரா........கெட்டவரா........ நம்மள இப்ப நல்லாதிட்டுவாருன்னு நினைச்சோம்.....ஆனா திட்டாம இருக்காரு....... எப்புடி......... என்று கண்ணனையே பார்த்துக் கொண்டிருக்க........



“ஆமா....... நீ இன்னும் கொஞ்சம் கிட்டவா.......”

“என்ன.....”

“நான் முத்தம் குடுத்தாமட்டும் பேட்டச்னு சொல்ற.....ஆனா அந்த குழந்தைக்கு மட்டும் குடுக்குற........வாங்கிக்குற......”



“அது குழந்தை........ நீங்க பெரியவுக.....”

கண்ணனுக்கு கோபம் வர.....”ஆமா...நான் பெரிய கிழவன்..... கம்பு ஊண்டிக்கிட்டு திரியுறேன்..... நான் உன்னோட புருசன்டி.......”



“எப்ப பாத்தாலும்..... ஏன் அதையே.....சொல்றீங்க...... எனக்குத்தான் தெரியுமே.....”

“ம்ம்ம்....தெரிஞ்சு...... என்ன பண்ண..... “என்றபடி.... அவன் கையை எடுத்து அவள் கழுத்தில் மாலையாகப் போட...........



கயலுக்கு ஒரு மாதிரி கூசியது.......” விடுங்க....நான் போய் கிளம்பனும்.......”

“இரு .......” என்றவன்........ அவளின் நெற்றியோடு அவன் நெற்றியை முட்டியவன்........ “என்னைய நிமிந்து பாரு.........”

“ம்கூம்......... எனக்கு வெக்கமா இருக்கு........”

கயலின் வெட்கத்தை பார்த்தவனுக்கு....... அவளை என்னன்னமோ செய்ய தோன்றியது......ஆனால் அவன் மனமோ......

கண்ணனா..... அவசரபடாத........அவ சின்னப் பொண்ணு..... அவ மனசால இன்னும் குழந்தையாத்தான்....... இருக்கா...... என்ன அவசரம்....... இப்ப நினச்சாக்கூட நீ அவள உடம்பால இணைஞ்சுரலாம்.......ஆனா அவ மனசு........ கொஞ்ச கொஞ்சமா உன்னோட மனச அவளுக்கு புரிய வை...... நீதான் அவ புருசன்னு மனசுல நல்லா...... பதிய..... வை...... என்று நினைத்தவன்...... அவள் நெற்றியில் முத்தமிட்டு..... அவள் கன்னத்தில் முத்தமிட......



“அவளோ......போங்க....போங்க....உங்க மீசை.....குத்துது......”

“அப்புடிங்குற........சரி ஒரு ஐடியா.......”

“என்ன இனிமே....நீங்க முத்தம் குடுக்கமாட்டீங்க தானே......”

“ஆமா....நீ அதுலயே....... இரு...... இது வேற.....நான் உனக்கு குடுத்தா தானே மீசை குத்துது...... இனிமே,,,,நீ எனக்கு குடுத்துருர........ சரியா....”

“அம்மாடி........ நான் குடுக்க மாட்டேன்......’”

“நீ குடுக்காட்டா....நான் விடமாட்டேன்...... ஒழுங்கா குடுத்துட்டு நேரமாச்சு கிளம்புற வழிய பாரு.........”

அவள் கெஞ்சினாலும் இவன் விட மறுக்க....... “அப்ப நான் கண்ண மூடிக்கிட்டு உங்கள அந்த பாப்பான்னு நினைச்சு குடுக்குறேன்....... சரியா.......”



......” சரி குடு என்னைய குழந்தையா நெனச்சே......குடு.........” என்றவன்..... அடிப்பாவி...குழந்தைய கொஞ்சுர வயசு எனக்கு.... என்னையவே நீ குழந்தையாக்கிட்டீயா ........ எல்லாம் என் நேரம்..........



கயல் தயங்கி தயங்கி அவனுக்கு முத்தமிட..... அவனுக்கு அப்புடியே ஐஸ்கட்டியை கன்னத்தில் வைத்தது போல் இருந்தது......... கயல் முத்தமிட்டு பாத்ரூமுக்குள் ஒடிச் சென்று கதவடைக்கவும்......பரவால்ல கண்ணா....இந்த மக்குகிட்டயே நீ ரெண்டு முத்தம் வாங்கிட்டியே........பரவாயில்லடா.......இனிமே நீ சீக்கிரமே தேறிருவ.... என்று தன்னையே தட்டி கொடுத்த கண்ணன்....சிரித்தபடி தன் தாயை பார்க்க கீழேச் சென்றான்.....

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கயல் கிளம்பி வரவும் இருவரும் கடைக்கு கிளம்பினர்....... போகும்வழியில்.... அவளுக்கு பூ வாங்கி கொடுத்தவன்....... அவளை கடைக்கு அழைத்துச் சென்று அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம்.......கயலுக்கு தேவையானதை எடுத்து கொடுக்கச் சொன்னவன்..... “நீ போய் பாரு........ எனக்கு கொஞ்சம் கணக்கு பாக்கனும்........”



“இருங்க...... இருங்க...... உங்க வீட்ல இருந்து எங்க அக்காவ பொண்ணு கேட்டாங்கள்ள.... அப்ப உங்களுக்கு பெரிய கடை இருக்குன்னு சொல்லவேயில்லை....வெறும் விவசாயம் மட்டும்தான் பாக்குறதா..... சொன்னாங்க......”



“நான்தான் அப்புடி சொல்லச்சொன்னேன்...... எங்க வசதிய பாத்து பொண்ணு என்னைய கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன்........”ஆனா உங்க அக்கா....என்னைய வசதியில்லாதவன்னு நினைச்சுத்தான்........ அவன கலயாணம் பண்ணுனா....... என்று யோசித்தவன்..... சுள்ளென” இப்பஏன் தேவையில்லாம இந்த கேள்வி.........”.

“ஐய்யய்யோ……… எனக்கு புத்தியே இல்ல....( அதுதான் ஊருக்கே....தெரியுமே.)..... பாவம் நீங்களே.... இப்பதான் கொஞ்சமா..... எங்க அக்காவ மறந்தீங்க...... நான் வேற கல்யாணத்தை பத்தி பேசி அத ஞாபகப் படுத்திட்டேன்.........சாரி.....சாரி......”

இவள என்னதான்....பண்ணுறது.........” முதல்ல உனக்கு தேவையான பொருள போய் எடு...... தேவையில்லாதவங்கள பத்தி என்ன பேச்சு.......போ.......” என்றவன்.கடையின் பணம் செலுத்தும் இடத்திற்கு செல்லவும்.......

கயல்..... ஏண்டி.... இது உனக்கு தேவையா........ பாவம் அவரே இப்பதான் கொஞ்சம் சிரிச்சாரு...... அதுக்குள்ள.... அவர் மனச...கஷ்டப்பட வச்சுட்ட...... நீ அவருகிட்ட பேசாம இருக்குறதே நல்லது........ என்று நினைத்தபடி உள்ளே செல்ல.......

ஒரு அரைமணி நேரம் கழித்து கண்ணன் கயலை தேடிவர.... அவள் அந்த கடையில் வேலை பார்க்கும் அந்த ஐந்து பெண்களுடனும் தரையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்......... இவள..... கடையை சுற்றி பார்த்தவன்.... நேரம் ஆகியதால் கஸ்டமர் யாரும் இல்லை.....

..கயலை நெருங்கியவன்” எல்லாம் எடுத்திட்டியா...... வீட்டுக்கு போவமா.... “

மற்ற பெண்களை பார்த்து” நீங்கள்ளாம் கிளம்புங்க.....நேரமாச்சு....”



கண்ணன் அந்த பெண்களிடம் தேவையில்லாமல் எப்போதும் பேச மாட்டான்...... அதனால் கண்ணன் மேல் அவர்களுக்கு எப்போதும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும்...... இன்று அவர்களாகவே......

“ அண்ணே.... அண்ணி...சூப்பர்ணே...... அப்புடியே அழகா ஒரு பொம்மை மாதிரி இருக்காங்கண்ணே..... இன்னைக்கு பூரா.... அவுக பேசுரத கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்குண்ணே...... அவுக பேசும் போது அவுக கண்ணும் பேசுதுண்ணே....... சூப்பர்கா....... நாளைக்கு பாப்போம்.....நாங்க வாரோம்....”..என்றபடி அவர்கள் கிளம்ப......


“எங்க.....நீ எடுத்த பொருளெல்லாம்.......”

“இல்ல இன்னைக்கு ஒன்னும் எடுக்கல..... வேணும்னா.......நாளைக்கு வந்து எடுத்துக்கவா....”



“ஒண்ணும் வேணாம்.... இன்னைக்கே எடுத்தரலாம்.....” என்றவனுக்கு பொறாமை...... பொங்கியது....... இவள.... எல்லாரும் இப்புடி ரசிக்குதுக....... நாம ஏதாவது பேச ஆரம்பிச்சா மட்டும் ஜனகராஜ் மாதிரி.... என் தங்கச்சிய நாய் கடிச்சுருச்சுப்பா.......ன்னு சொல்லுறமாதிரி...... எங்க சுத்துனாலும் இவ அக்காட்ட வந்து நிக்குது லூசு....... என்று நினைத்தபடி ஒவ்வொரு பொருளாக எடுத்துக்காட்ட..... இவளும் வேணாம்.... வேணாம் என்று மறுத்துக் கொண்டே வர.....கண்ணன் கோபத்தில் அங்கிருந்த சேரில் அமர்ந்தவன்......” உனக்கு என்ன தேவையோ.... எடு.......”. என்றான்.......



கயலும் எண்ணி நாலே பொருட்களை எடுத்தவளை பார்த்தவனுக்கு..... கோபமும் சுருசுருவென்று ஏறத்தொடங்கியது..... இவன் கடைக்கு வரும் பெண்கள் வாங்கும் பொருட்களை பார்த்திருக்கிறான்..... அதில் நாலில் ஒரு பங்கை கூட கயல் எடுக்கவில்லை.......

கயல் .......”எடுத்துட்டேன்.... போவமா......”

கண்ணனும் ஒன்றும் சொல்லாமல்..... அங்கிருந்த....ஸ்நாக்ஸ் ஐயிடங்கள்.....பலவும்.... எடுத்துப் போட்டவன்.... கடையை பூட்டி கிளம்பியவன்.... பக்கத்து கடையில் தேவையான பழங்களை வாங்கிக் கொடுத்தான்.....

“ஹோட்டல்ல போய் சாப்புட்டு போவமா......”.

இவரே.... மூஞ்சிய இப்புடி கடுகடுன்னு வச்சுருக்காரு..... இவர்கூட போய் சாப்புட்டா..... நமக்கு சாப்பாடே எறங்காது......

“வேணா.....வேணாம்......வேணும்னா.....வாங்கிட்டு போய் வீட்டுல சாப்புடுவோம்.....” எதுக்கு நம்ம இப்ப வாங்கி குடுக்குறத வேணாமுன்னு சொல்ல..... நமக்கு வகைவகையான சாப்பாடுதான்....... முக்கியம்........

“சரி..... வேற ஒன்னும் வேணாமா.......”.

“இல்ல...... எனக்கு ஐஸ்கிரிம் மட்டும் வாங்கி குடுக்குறீங்களா...... நாங்க எப்ப வெளியில வந்தாலும்.....ஐஸ்கிரிம் சாப்புடாம போகமாட்டோம்......” கயல் தயங்கி தயங்கி கேட்க.....

அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றம் சொல்லாமல்” ம்ம்ம்ம்” என்றபடி வண்டியை கிளப்பினான்.......



நாட்கள் அதன் போக்கில் நகர....... அன்று வாசுவின் அப்பா வீட்டிற்கு வந்தவர்...... அவர் மனைவியிடம் ....... கோபமாக “எங்க உன்னோட மவன்........”.

அவர் ரூமை.... கைகாட்ட.......” ச்சே... இதென்ன நேரம்காலம் தெரியாம..... எப்ப பாத்தாலும் ச்சே…….” என்றவர்..... வாசுவின் போனுக்கு மிஸ்டுகால் கொடுக்க......



பத்துநிமிடம் கழித்து வெளியே வந்தவனை...... தனியாக அவரின் அறைக்கு கூட்டிச் சென்றவர்…”…நீ... ஒம்மனசுல என்ன நினைச்சுருக்க..... உரம் வாங்க எடுக்கச் சொல்லி ஏடிஎம்....ம உன்கிட்ட குடுத்தா...... நீ.....உன் நோக்கத்துக்கு நாலு லெச்சரூபாய எடுத்துருக்க..... எல்லாம் யார்வுட்டு காசு...... நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்சது....பாவம் உனக்கு ஒரு தொழிலை வச்சுக் குடுக்கலாம்னு நினைச்சா..... இப்புடி பண்ணி வச்சிருக்க.....”



“எனக்குன்னு தானே வச்சிருந்தீங்க.... அப்ப நான் எடுத்தா மட்டும் எதுக்கு இப்புடி கத்துறீங்க....”



“டேய் அறிவுகெட்டவனே..... அந்த பணத்தை எடுத்து நீ எதாவது தொழில் செஞ்சியா.....”

“இல்ல.....”



“பின்ன நீயும் ..... ஒம் பொண்டாட்டியும் ஆடம்பரமா செலவு செய்ய என்னோட பணம்தான் உனக்கு கிடச்சுச்சா...... உன்னோட தம்பி இன்னும் ஒன்றரை மாசத்துல ஊருக்கு வாரானாம்....அவன் இனிமே திரும்பி ஊருக்கு போகல..... இங்கயே....ஏதாச்சும் தொழில் தொடங்கப்போறேன்னு சொல்லுறான்...... ஏற்கனவே அவனோட கூட்டாளிக என்ன சொன்னாங்கன்னு தெரியல....... ஒன்னைய பத்தி பேச்செடுத்தாலே எரிஞ்சு விழுகுறான்..... இங்க வந்து நீ இப்புடி ஊதாரியா திரிஞ்சா வீட்ட விட்டு வெளிய அனுப்பக்கூட .....யோசிக்கமாட்டான்....... தெரிஞ்சுக்க...ஏற்கனவே அவன் வீடுகட்ட குடுத்த பணத்துக்கே நீ ஒழுங்கா கணக்கு குடுக்கலன்னு சொல்லிக்கிட்டு இருக்கான்.... ஒரு பைசாக்கூட நீ இந்த வீட்டுக்காக குடுத்தது இல்லை…….... நானும் அவன் ஊருல இருக்கும் போதே உன்னைய ஒரு நிலைக்கு கொண்டு வந்துரலாமுன்னு நினைச்சேன்.... அவன் வந்தா நாங்க அவன் பக்கம் பேசுறமாதிரிதான் இருக்கும்.....

கய்யாணத்துக்கு முந்தியாவது ஏதோ வேலை பாத்துக்கிட்டு இருந்த.. ஆனா இப்ப என்னனா அடைகாக்குற கோழி மாதிரி ஒம்பொண்டாட்டி பின்னாடியே திரியுற.... வயல்ல உரம் போடாம...... பயிர்லாம் வீணா போக போகுது..... தோப்புல தேங்காய் எல்லாமே..... முத்தி போர நிலைமையில இருக்கு.......



நீதான் இப்புடி இருக்கன்னா...... உம்பொண்டாட்டி பெரிய எட்டுவர்டு சக்கரவர்த்தி மாதிரி நடந்துக்குது...... உங்க அம்மாவ ஒரு மனுசியாக் கூட மதிக்கிறது இல்லை..... எம்பொண்டாட்டி என்ன உங்களுக்கு பண்ணைகாரியா....... உங்களுக்கு சேவுகம் பாக்க...... நானும் எதையும் சொல்லக்கூடாதுன்னு பாத்தா........ நீங்க நடந்துக்குறது கொஞ்சம்கூட சரியில்லை...... முதல்ல அந்த ஏடிஎம்.......ம கொண்டுவந்து குடு.......... ஒம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லு நான் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்கமாட்டேன்....... சரியா.....புரிஞ்சு நடந்துக்க....” என்றபடி வெளியேற......



வாசுவோ........சுதா 11 பவுனுல தாலிச்செயின் கேட்டாளே...... இப்ப என்ன பண்ணுறது.... அவ கேட்ட ஒரு சின்ன பொருளை வாங்கிகுடுக்காட்டா...... நம்மள ரெண்டுநாளைக்கு கிட்டக்க சேக்கமாட்டா......இப்ப என்ன பண்ணுறது........ வாசு........ ஒரு மாதிரி சுதாவின்...... வெளி அழகிற்கு மயங்கி இருந்தான்...... இவன் வேறு நினைவுக்கு போகாமல் அவனை எந்த வகையிலாவது மயக்கிக் கொண்டே...... இருந்தாள்....... இருவருக்குமே..... தெரியவில்லை....... தங்கள் பந்தம் காலம் முழுவதும் தொடர்வது..... இதில புற அழகைவிட...... ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் அன்பு .... விட்டுக்கொடுத்தல்...புரிதல்...... இதுவே முக்கியம் என்று...........



இங்கு கண்ணன் வீட்டில் ......... கண்ணனுக்கு....... இரண்டு நாட்களாக....கயல் ஒருமாதிரியாக யாரோடும் பேசாமல் அமைதியாக இருப்பது போலவே ....... இருந்தது......உடம்பு ஏதும் சரியில்லயோ...... என்று நினைத்தவன்......



அன்று இரவு அவள் படித்துக்கொண்டிருக்கும் போது......” என்ன ஒருமாதிரியா இருக்க.........”



“ம்ம்ம்...... ஒன்னுமில்ல.......”



“உடம்புக்கு என்னமும் பண்ணுதா.......”



“இல்ல இல்ல.....நான் நல்லாதான் இருக்கேன்.............”

இவ மனசுல உள்ளத நம்மகிட்ட..... எப்பதான் வெளிப்படையா....பேசி பழகுவான்னு தெரியலயே.......என்று யோசித்தபடி..... உறங்கியிருந்தான்....

காலையில் கயல் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க..... கண்ணனும் வயலுக்கு போகாமல் யாரிடமோ........ போனில் பேசிக் கொண்டிருந்தான்.......

கயல் அவனிடம் தயங்கியபடி வந்து.......” இன்னைக்கு நீங்க வயலுக்கு போகலயா.......”

“இல்ல...... இன்னைக்கு கதிர் அறுக்குறோம்..... அதுனால ஒரு எட்டு மணிக்கு மிசினை வரச் சொல்லியிருக்கேன்....... சாப்புட்டு இந்தா கிளம்ப போறேன்...... ஏன் கேக்குற......”



“இல்ல நீங்க வீட்ல இருந்தா என்னைய காலேஜ்க்கு கூட்டிட்டு போக சொல்லலாம்னு பாத்தேன்.......”

கண்ணா..... உன்னோட பொண்டாட்டி...... இன்னைக்கு....வலிய வந்து ஒரு உதவி கேக்குறா......... ஆனா இந்த மிசின்காரன் இப்பதானே போன் பண்ணுனான்.... நம்ம வயல் எதுன்னு தெரியாம நிக்குறேன்னு..... இப்ப என்ன பண்ணுறது.........

“நாளைக்கு வேணா.....கூட்டிகிட்டு போகவா.........”

“சரி....சரி.....நீங்க போங்க....... நான் பஸ்லயே போய்கிறேன்......” என்றபடி அவள் காலேஜ்க்கு செல்ல........

கண்ணனும் அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்க......... முத்து தன் அண்ணனிடம் வந்து “அண்ணே...... உங்ககிட்ட ஒரு பத்து நிமிசம் பேசனும்ணே........”

“இல்ல...... முத்து...... இப்ப நேரமில்ல....... சாயங்காலம் பேசிக்கலாம்...... இப்ப நான் போகனும்.....”.

“இல்லண்ணே....... அண்ணியபத்தி........”

வேகமாக வெளியே வந்த கண்ணன் முத்து அண்ணி என்று சொன்னவுடன்...... அப்படியே நின்றான்....”. சரி மாடிக்கு வா...... “என்றபடி வீட்டுக்குள் திரும்பினான்........

ஒரு பத்து நிமிடம் கழித்து...... இருவரும் பேசி முடிக்கவும் கண்ணனின் முகம் கோபத்தில் தக்காளி போல் சிவந்திருந்தது .........

“அண்ணே....... அண்ணி.....பாவம்ணே........நீங்க அவுகள திட்டாதிக.......’”



“நீ....ஸ்கூலுக்கு....... போ நான் பாத்துக்குறேன்.......”

“அண்ணே.......”

“நீ போன்னு சொல்றேன்ல.......” என்றபடி...கண்ணன்....... வண்டியை வேகமாக கிளப்பிச் சென்றான்........

இனி....................................?

தொடரும்.......................

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top