uyirai tholaithaen UD9

Advertisement

preethi sri

Well-Known Member
HI MAKKA likes and comments potta anaivarukkum nandri frnds :):):):) indha padhivukkum comments sollunga(y)(y)


அடுத்த நாள் காலை என்றும் போல் பரபரப்பாக விடிந்தது மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் பாலகிருஷ்ணன் இருவரும் காலை 8 மணிக்கு கிளம்பிவிட்டார்கள் அபிமா உனக்கு லஞ்ச் breakfast எல்லாமே prepare பண்ணி வெச்சுட்டேண்டா மறக்காம எடுத்துட்டு போடா அபி சரிம்மா நா பாத்துக்கரம்மா நீங்க பத்திரமா போயிட்டு வாங்க மா என்று கூறி வலி அனுப்பி வைத்தால் பின்பு இவளும் ரெடியாகி கல்லூரிக்கு சென்றால் வழக்கம் போல் அனைத்தும் நன்றாகஇருந்தது ஈவினிங் வீடு திரும்புகையில் மெக்கானிக் ஷேடில் இருந்து அவளுடைய பார்த்தாள் இன்னும் ரெண்டு நாள் ஆகும்மா என்றார் சரி அண்ணா சீக்கிரமா தாங்க என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தால் மாலை 6 மணி காட்டியது கடிகாரம் அப்பா அம்மாக்கு போன் செய்தால் இருவரின் மொபைலிலும் எடுக்கப்படவில்லை இவங்க ரெண்டு பேரும் எப்ப வீடு திரும்புவாங்கன்னு தெரியலையே சரியான ரொமான்ஸ் பேர் வலிங்க அதான் வேற ஒரு இடத்துக்கு போகணும்னு சொன்னாங்களே அது தான் லேட் ஆகும் போல


ஓகே மிச்செஸ் அஜய் போய் பிரெஷ் ஆயிட்டு காபி குடிங்க என்று தனக்குத்தானே கூறிவிட்டு அவள் அனைத்து கடமைகளையும் செவ்வனே ஆற்றி விட்டு சோபாவில் சாய்ந்தாள் கண்முன் அஜய் தான் தோன்றினான் . அஜய் இந்தத் திருமண நாள் விழா அப்போ என் அப்பா அம்மா நண்பர்கள் என் அத்தை மாமா எல்லார் முன்னாடியும் உங்க கிட்ட என்னோட காதல சொல்லணும்னு ஆசைப்பட்டன் அஜய் .ஏன் அஜய் நீங்க ஏதும் என்ன சங்கட படுத்தற மாதிரி பேசிடமாட்டீங்க தானே . ஒரு surprise கொடுக்கணும்னு தான் அப்படி பண்ணினேன் என்று தன்னுடைய அஜய் இடம் மனதில் உரையாடிக் கொண்டு இருந்தாள் இரவு 12.30 மணிக்கு அவளுடைய மொபைல் சிணுங்கியது அவளுடைய வாழ்க்கையே இருண்டு விட்டது

ஒரு வாரம் கடந்திருந்தது .......

ஆம் உங்கள் யூகம் செரியே மலைச் சரிவில் இருந்து இறங்கும் போது விபத்துக்குள்ளாகி வண்டி ரோட்டிலிருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது இருவருமே இறந்து விட்டார்கள் 30 ஆண்டுகள் கடந்தும் இறப்பிலும் அவர்கள் இருவரும் இணைபிரியாமல் சொர்க்க லோகம் சென்று விட்டார்கள். அனைத்தையும் கற்றுத் தந்த அவளது பெற்றோர் வலியை மறைக்க கற்றுத்தரவில்லை அதை பகிர்ந்து கொள்ளவும் கற்றுத்தரவில்லை. இவள் விரும்பிய பொருள் கேட்கும் முன்னேஅவள் கையில் இருக்கும் .அவர்களின் செல்ல இளவரசியாக இருந்தவள் இன்று யாரும் இல்லாமல் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்


இவர்களுடையது காதல் திருமணம் என்பதால் தந்தை வழியில் எந்த உறவினர்களும் இல்லை அம்மாவின் தங்கையும் அவரின் தமையனும் தான் அனைத்தும் அனைத்தும் முன்னிருந்து செய்தார்கள் . அனைத்து சொந்த பந்தங்களையும் தொடர்பு கொண்டு பேசி செய்தியை தெரியப்படுத்தி இருவரின் அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவித்து அனைத்தையும் செய்தது அவளுடைய சித்தி சித்தப்பா தான்.

ஒரு வாரம் கழித்து அவர்களின் ஊர்களுக்கு அவரவர்சென்று விட அவளுக்கு உலகமே இருண்டுவிட்டது இதில் அஜய்க்கு எப்படி தகவல் கூறுவாள் பாவம் அவனுக்கு தெரியப்படுத்தவும் இல்லை. மூன்று வாரங்கள் கடந்து இருந்த நிலையில் பதினைந்தாம் தேதி ஞாயிறு மாலை விஜய் paradise வந்த அஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது..


விசாரித்த பின்புதான் அவனும் அறிந்தான்... அன்று சாயந்தரம் அவளை பார்க்க சென்றான் வீட்டில் யாரும் இல்லை ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.. அந்த டேபிளின் மேல் அவள் பெற்றோரின் படம் இருந்து பார்க்கும்போது தெளிவாக தெரிந்தது ideal couple என்று . இந்த கோலத்தில் இவளை பார்க்கவா என்று மனம் கலங்கியது. அருகில் வந்து அவளை சோபா மீது அமர வைத்து குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்தான் அங்கே மௌனம் மட்டும் குடிகொண்டது. அஜி சாரிடா என்று அவன் ஆரம்பிக்கும் பொழுது உடைந்து அழ தொடங்கினாள்..

அவன்கண்களும்சேர்ந்து கலங்கியது .. ஒரு நிமிடம் அவள் மழையில் நனைந்து நடுக்க முற்றாலேஅவனுக்கு அத்தனை கோபம் வரும் ஆனால் இன்றோ இவள் இப்படி கதறி அழ பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் இருக்கிறாளே என்று மனம் கலங்கினான் .ஒரு குழந்தை போல ஒரு மணி நேரம் அவன் மடி சாய்ந்து அவள் பெற்றோர் காதலித்து திருமணம் செய்து கொண்டது முதல் அவள் பிறந்து வளர்ந்தது வரை அனைத்தையும் அழுது கொண்டே கூறினாள். எதற்கும் கலங்காத அஜய்யும் கண் கலங்கினான். அதில் தன்னை அறியாமல் உறங்கியும் போனாள் அவளை படுக்கையில் படுக்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்து அவன் தன் அம்மாவிடம் தான் இரவு வர லேட்டாகும் என்று அலுவலகத்திலேயே வேலையாக இருப்பதாகவும் கூறி விட்டு வைத்தான் .

டைனிங் டேபிள் மீது இருந்த டிபன் கேரியர் பிரிக்காமல் இருந்தது அப்போதுதான் அவன் உணர்ந்தான் இவள் இரவு சாப்பிடவே இல்லை அந்த பாக்ஸ் எடுக்கப்படவே இல்லை தூங்கிக் கொண்டிருந்த அவளை பார்த்தான் வாடிய முகம் அழுது அழுது கண்கள் வீங்கி இருந்தது உடல் மெலிந்திருந்தாள் முகத்திலிருந்த பொலிவோ காணாமல் போய் போயிருந்தது

அவள் அழும் பொழுது தன்னையும் அறியாமல் கூறிய வார்த்தை அஜய் நான் உங்களைப் பற்றி இந்த திருமண நாள் விழாவில் அம்மா கிட்ட சொல்லனும்னு surpriseஆ வெச்சிருந்தேன் என்று கூறியது அவனுக்கு ஞாபகம் வந்தது இவளும் என்னை விரும்பி இருக்கிறாள் ஆனால் அதை மறைத்து..... விளையாட்டு தனம் மிக்க குழந்தையாகத்தான் அவள் தெரிந்தால் பாவம் அன்று அவன் அறிந்திருக்கவில்லை இனிஅவள் படப்போகும் பாட்டை . அதை அறியாமல் கடவுளிடம் என்னுடைய அஜி எந்தத் துன்பத்தையும் பெறக்கூடாது இதிலிருந்து மீண்டு வர அவளுக்கு மண உறுதி தாருங்கள் என்று மனதார வேண்டினான் அவள் மூன்று வாரங்களாக யாரிடமும் எதுவும் பேசவில்லை என்பது அவள் உடைந்து அழுத்ததிலேயே தெரிந்தது அவள் தூங்கவும் இல்லை . ஒரு வழியாக அன்று இரவும் கடந்தது..

ஒவ்வொரு விடியலும் அந்நாளில் புதிதாய் ஏதோ ஒரு உறவையும் திருப்பத்தையும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கொண்டுவந்து சேர்க்கிறது

அன்று காலையில் எழுந்த அபிக்கும் ஒரு புதுத் தெம்பும் தைரியமும் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது அவள் எழுந்து குளித்து விட்டு நைட்டி போட்டுகொண்டு தலைமுடியை விரிய விட்டிருந்தாள் வெளியில் வந்தவள் ஹாலில் இருந்த தன் பெற்றோரின் படத்திற்கு பூவை பறித்து வைத்து தீபம் ஏற்றி மனதார வணங்கினால் . அவள் தான் நன்குஅறிவாலே அவள் அழுவதை ஒருபோதும் இவருடைய பெற்றோர்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவர்களுக்காக ஆவது இனி தான் அழுக கூடாது என்று முடிவு எடுத்தால் கண்விழித்து பார்த்த பொழுது அவள் கண்முன் அஜய் நின்று கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்ததுஇரவு முழுவதும் அவன் மடி சாய்ந்துஅழுததும்அவனை பற்றி பெற்றோரிடம் கூறப்போவதாக சொல்லியது அழுதுகொண்டே உறங்கியதும் நினைவுக்கு வந்தது .

அவளுக்கு காபி கொடுத்து குடிக்கச் சொன்னான் பாவம் அவளுக்கு தான் தர்மசங்கடமாக இருந்தது முதன்முதலில் இவன் வீட்டிட்கு வந்துள்ளான் நான் செய்ய வேண்டியவை இவன் செய்து கொண்டிருக்கிறான்.

ஆனால் இதில் ஒரு நிம்மதி என்னவென்றால் தன் பெற்றோர்க்கு பிறகு தனக்காக வாடும் வருந்தும் இன்னும் ஒரு உயிர் உள்ளது என்று நினைத்தால் அது மனதுக்கு ஒரு ஆறுதல் அளித்தது இந்த உலகில் எத்தனை பேர் இருந்தாலும் தனக்காக தன் நன்மையைக் கருதி வாடும் உயிர் ஒன்று உள்ளது என்பது ஒரு புதிய தைரியத்தையும் தெம்பையும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் இழந்த சக்தியையும் மீட்டுத் தரக் கூடியதாக உருமாறும் என்பது அந்த நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அஜய் அபிக்கு அளித்தான்
 

banumathi jayaraman

Well-Known Member
அபிஜித்ராவின் பெற்றோர்
இறந்தது ரொம்பவே வருத்தமாக
இருக்கு ப்ரீத்தி டியர்

நானே காரை ஓட்டிட்டுப்
போறேன்னு பாலகிருஷ்ணன்
சொல்லும் பொழுதே எனக்கு
டவுட்டுதான்
இவங்க இரண்டு பேரும்
திரும்பி வருவார்களான்னு
நான் நெனச்சேன், ப்ரீத்தி டியர்

அபி ரொம்பவே பாவம்ப்பா
இனிதான் அவளுக்கு கஷ்டங்கள்
ஆரம்பமோ?

அனாதை-ன்னு அபிஜித்ராவை
அஜய்யின் அம்மா ஏற்றுக்
கொள்ள மாட்டாளோ?
 
Last edited:

preethi sri

Well-Known Member
அபிஜித்ராவின் பெற்றோர்
இறந்தது ரொம்பவே வருத்தமாக
இருக்கு ப்ரீத்தி டியர்

நானே காரை ஓட்டிட்டுப்
போறேன்னு பாலகிருஷ்ணன்
சொல்லும் பொழுதே எனக்கு
டவுட்டுதான்
இவங்க இரண்டு பேரும்
திரும்பி வருவார்களான்னு
நான் நெனச்சேன், ப்ரீத்தி டியர்
அபி ரொம்பவே பாவம்ப்பா

இனிதான் அவளுக்கு கஷ்டங்கள்
ஆரம்பமோ?
அனாதைன்னு அபிஜித்ராவை
அஜய்யின் அம்மா ஏற்றுக்
கொள்ள மாட்டாளோ?
wait and watch banu ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top