uyirai tholaithaen UD 10

Advertisement

preethi sri

Well-Known Member
Hi makka likes and comments potta anaivarukkum nandri friends . indha padhivukkum ungal karuthugalai padhivu seiyungal . unga comments dhaan makka energy tonic ....

ஏன் அஜய் நைட் முழுக்க நீங்க இங்க தன் இருந்திங்களா ஏன் டி உன்ன தனியா விட்டுட்டு என்ன எங்க போக சொல்ற அதுவும் இந்த நிலைமையில ஏன் அஜி ஒரு போன் பண்ணி இருந்தா போதுமே எங்கிட்ட சொல்லணும்னு கூட தோணல இல்ல என்று கண்கள் கலங்க கேட்க ஏன் டி நீயும் கஷ்ட பட்டு என்னையும் இப்டி சாகடிக்கற என்று அவள் பட்ட துன்பத்தை அவன் கண்களில் காட்ட தன்னையும் மீறி ஓடிபோய் அவனை அணைத்து கொண்டால் அதில் ஒரு துளி கூட காமம் இல்லை தாய் பறவையிடம் தஞ்சம் புகும் குஞ்சு போல் அவள் அவனிடம் அடைக்கலம் வேண்டினாள்

காதலில் புரிந்து கொள்ளுதல் மட்டும் அல்ல நீயே சகலமும் என்று தன்னை முழுதாய் ஒப்புவித்தல் அதை தான் அஜி அஜய்யிடம் செய்தால் மனதில் ஒரு இனம் புரியாத நிம்மதி பரவியது இருவருக்கும் இந்த நிமிஷத்துல இருந்து நீ என்னோட அஜி டா இனி எப்பவும் என்னோட கண்ணம்மா அழகூடாது என்று அவள் கண்களில் வழிந்த நீரின் சூட்டை உணர்ந்து அவள் முகத்தை அவன் கைகளில் ஏந்தி அவள் கண்ணீரை துடைத்தான்

அத்தை மாமாவோட இடத்தை நிரப்ப என்னால முடியுமான்னு எனக்கு தெரியல ஆனா என்னோட அஜிய அவங்கள விட நா நல்லா பாத்துக்குவேன் அஜி உன்ன first தடவை ஆபீஸ் பார்க்கிங் ஏரியா இருக்குல்ல அங்க தான் பாத்தேன் பாத்த அந்த நிமிஷம் எனக்கு தோணுச்சு நீ எனக்கு மட்டும் தாணு என்னோட உயிர் தான் நீன்னு நா நெறையா பொண்ணுகளை என்னோட வாழ்க்கையில கடந்து வந்து இருக்கன் ஆனா எந்த பொன்னையும் என்ன நெருங்க அனுமதிச்சது இல்ல ஆனா உன்ன பாத்த அந்த நிமிஷம் நா என்ன மறந்து நின்னுட்டு இருந்தன் அந்த நிமிஷம் எனக்கு தெரிஞ்சுது இந்த வாழ்கை முழுக்க எனக்கு நீ தான்னு

அப்போ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையானு கூட எனக்கு தெரில ஆனா என் உள்மனசு சொல்லுச்சு நீ எனக்கு மட்டும் தான்னு அதுக்கு அப்பறோம் நீ என்ன மீட் பண்ண வந்தபோது முதல்ல உனக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு தெரிஞ்சுக்க தான் நா மிஸ் ஓர் மிஸ்ஸஸ்ன்னு அழுத்தமா கேட்டன் அப்போ நீ மிஸ் னு சொல்லும்போது ஒரு நிம்மதி வந்துச்சு அந்த சந்தோஷம் எத்தன தொழில் வெற்றிகளை அடைஞ்ச போதும் எனக்கு கிடைக்கல அவ்ளோ சந்தோஷம் என்னோட உயிரை தொலைத்தேன் அடி உன்னிடம் என்று தன் காதலை வெளிப்படுத்தினான்

எப்படி எப்டியோ காதலை சொல்லணும்னு நினைச்சன் ஆனா இப்போ ஒரு இக்கட்டான சூழ்நிலையில காதலை சொல்ல வேண்டியதா போய்டுச்சு என்று வருந்தினான் அபியும் மனதளவில் அவனுடன் கலந்து விட்டால் ஜெய் நா உங்கள காதலிக்கறன் எந்த நிமிஷம்னு எனக்கு தெரில i love u jai i need u i want u i want to mingle with u i want to melt with u

என்றால் நீங்க என்ன தப்பா நெனைக்கலைனா என்ன கட்டி புடுச்சு கோங்க அஜய் ப்ளீஸ் என்றால் வேறு ஒருவனாக இருந்தால் நிச்சயம் தவறாக நினைதிருப்பான் ஆனால் அஜயோ அவள் பாவம் தனக்காக ஏங்கும் உயிரை தான் தேடுகிறாள் ஆதன் வெளிப்பாடு தான் இந்த தொடுகை தேடல் என்று உணர்ந்தான் அவன் தந்த இறுகியஅணைப்பில் தாயின் அன்பு கலந்திருந்தது

பெற்றோரின் இடத்தை அவர்களை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று நினைத்தாலும் நிதர்சனத்தில் கொண்டவனின் மடியும் மார்பும் தாயின் அன்பை மீட்டு தருகிறது விந்தையிலும் விந்தை தான்

ஒரு பொண்ணு பெரிய மனுஷி ஆனதுக்கு அப்புறம் அவளை அணைக்கும் உரிமை தகப்பனுக்கு கூட கிடையாது அப்பாவா இருந்தாலும் தள்ளி நின்னு தான் பேசணும் இன்னும் நம்ம சமூகம் அப்டி தான் பெண் பிள்ளைகளை வளர்க்குது கொஞ்சம் ஒட்டி நின்னாலும் அம்மா கிட்ட இருந்து வர்ற முதல் வார்த்தை தள்ளி நின்னு பேசு என்பது தான் அது மரியாதை நிமிர்தமானது என்பது தெரிந்தாலும் மனசு சில சமயங்கள்ல முரண்டு பிடிக்கும் நம்ம அப்பா தான என்று பாவமா திரும்பி அப்பாவ பார்த்தா என் பொண்ணு என்னைக்கும் எனக்கு குழந்தை தான்னு சொல்வாரு அந்த வார்த்தை தரும் இதம் அந்த பாதுகாப்பு உணர்வு நம்மள நம்ம அப்பா பாத்துக்குவாரு நம்ம அம்மா நம்மள கவனிச்சுக்கு வாங்க என்ற எண்ணம் எனக்கே எனக்குன்னு என் குடும்பம் இது மட்டுமே எந்த ஒரு மனிதனையும் உயிர் புடன் வாழ வைக்கும்

இருக்கறதுலியே கொடுமையான விஷயம் நம்ம யாருக்காக வாழ்கிறோம் எதுக்காக வாழ்கிறோம் என்று தெரியாத வாழ்கை தான் எந்த ஒரு மனிதனும் தனக்காக மாத்திரம் வாழ்வது இல்லை அப்படி வாழ்ந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது வாழ்க்கையில் ஒரு சலிப்பும் பிடித்த மின்மையும் தோன்றி விடும் இந்த நிலைமையில் தான் அஜியும் இருந்தால் யாருக்காக இனி தான் வாழ வேண்டும் என்று பெரிய கேள்வி அவள் முன்னாள் வைக்கப்பட அதற்கான விடை தான் அஜய் அவனின் காதல்

ஒரே இரவில் தனக்கான உறவுகள் அனைத்தையும் இளந்து அதை வெளியில் சொல்லி அழுக கூட ஆல் இல்லாமல் கண்ணீர் வடித்து

பிறர் தன்மேல் இரக்க பட்டாள் எதிர்த்து நிக்கும் துணிச்சலும் என் மேல் இரக்க பட என்ன இருக்கு என்று எழும் கேள்வி இப்போது அவள் மனதில் இல்லை மாறாக கழிவிரக்கம் அவளை மிகவும் வாட்டியது அதில் இருந்து மீண்டு வரும் வழி தான் அவளுக்கு தெரியவில்லை ஆனால் இப்போது மீண்டும் ஒரு பயணம். அவளுக்கான வாழ்வு முடிந்து விட வில்லை அதை செம்மையாக்க தான் அஜய் இருக்கிறானே தனக்கானவன் என் துக்கத்தில் துணை நிற்பவன் தோள் கொடுப்பவன் அந்த எண்ணமே அவளை மீள செய்தது .

வறுமை கொடியது ஆனால் அதனினும் கொடியது தனிமை அதை தான் அவள் இந்த இருவது நாட்கள் அனுபவித்தாள் அதில் இருந்து அஜய் அவளை மீது எடுத்தான் நேற்று இரவு அவனை கண்டா பொது எழுந்த உணர்வு துன்பத்தையும் மீறி அவள் இழப்பையும் மீறி அவள் அடைந்த சந்தோஷம் தனக்கான ஒருத்தன் என்ற எண்ணமே அவன் மடி சாய்ந்து மனதில் இருந்தவைகளை கூற சொல்லியது .

இருவரும் எத்தனை நேரம் அப்படி நின்றார்களோ தெரியாது முதலில் சுய நினைவுக்கு வந்தது அஜி தான் தேங்க்ஸ் அஜய் எனக்கு இந்த பாதுகாப்பான உணர்வு தந்தத்துக்கு
என்று கூற என் பொண்டாட்டிய கட்டிபுடிக்க நீ எதுக்கு தேங்க்ஸ் சொல்ற என்று விஷமத்தனமாக புன்னகைத்தான் அவன் கூறிய விதத்தில் அவள் முகம் குங்குமமாய் சிவக்க இதழலின் ஓரம் அரும்பும் புன்னகை மூன்று வாரங்களாக வாடி இருந்த முகத்தில் சிரிப்பை பார்க்கும் பொழுது அவனுக்கும் மனம் நிறைந்தது

சரி அஜி நீ ரெடியாகு நம்ம வெளிய போலாம் நா வீட்டுக்கு போயிட்டு வந்துட்றன் என்று கூறி விட்டு சென்றான் நேற்று இரவு இருந்த மனநிலை மாறி அவள் முகத்தில் ஒரு தெளிவு வந்திருந்தது அதனால் தான் இப்போது அவன் அவளை தனியே விட்டு சென்றான் அதை அவளும் உணர்ந்தே இருந்தால்






1560790491359.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top