IraturaMozhithal - 06

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மக்களே....

சொன்னது மாதிரி பதிவோட வந்துட்டேன்....

லைக்ஸ் & கமெண்ட்ஸ் உங்க ஆப்ஷன்...

தொடர்ந்த உங்க ஆதரவுக்கு நன்றி...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அத்தியாயம் - 06

சரண்யுவும் SNP-யும், குல தெய்வ வழிபாட்டுக்கென திருத்தணி சென்றிருந்தனர். திருக்கல்யாண கோலத்தில் இருந்த முருகனின் அருளினை பெற்று, மன நிறைவுடன், சென்னைக்கு புறப்படும்போது, இவர்களின் குடும்ப ஜோதிடரான ஸ்ரீனிவாச சாஸ்திரிகளை பார்த்துவிட்டு செல்லலாம் என, சரண் கூற, மனைவி சொல்லே மந்திரமாய் நரேன் திருத்தணியில் இருக்கும் ஜோதிடர் வீட்டிற்கு சென்றான்..

இவர்களை வரவேற்று , அமர வைத்து, ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், "என்ன தெரியணும் ?, என்ன கேக்கணும் ?, சொல்லுங்கோ ", என்று வினவ, "ஒண்ணுமில்ல மாமா... பெரியவளுக்கு எப்போ கல்யாணம் கூடி வரும்-னு தெரிஞ்சிக்கலாம்-னு...." சரண் இழுக்க.. அவர் ஜாதக புத்தகத்தை புரட்டினார்... ஐந்து நிமிட கூட்டல் கழித்தலுக்கு பிறகு, மெதுவாய் புன்னகைத்து.."இன்னும் ஒரே மாசத்துல கல்யாணமே முடியும், கவலையே படாதீங்கோ..., பொண்ணு மனசு போல் மாங்கல்யம் .. அடுத்த வாரமே சுபத்துக்கு நாள் குறிக்க, என்னை கூப்பிடுவேள், சந்தோஷமா?"

பெண்ணை பெற்றவர்களுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்..?

"ஆனா இன்னும் ஒரு வரணும் மேட்ச் ஆகலையே மாமா?"

"எல்லாம் அதது வேகமா நடக்கும் பாருங்கோ...அப்பறம், இந்த நேரத்தை விட்டுடாதீங்கோ.. கட்டிக்க போறவன் ஜாதக பலன்தான், உங்க பொண்ணுக்கு பெரிய சப்போர்ட்-ஆ நிக்க போறது.., எதுக்கும் அட்டி சொல்லாம, நல்லதே நடக்கும்-னு நம்பி செய்ங்கோ", நம்பிக்கை வார்த்தை கூறியவரிடமிருந்து விட பெற்று சென்னை கிளம்பினர் இருவரும்..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பாஸ்கர் ஆதித்யா, பெயருக்கு ஏற்றவாறு உஷ்ணமாய் இருந்தான்... காரணம் அலுவலகத்தில் இருந்து வந்த செய்தி மற்றும் மெயில் அட்டாச்மெண்ட்-ல் வந்திருந்த கோர்ட் நோட்டீஸ்... காலையில் அலுவலகத்தில் இருந்து வந்தவன், அன்று ஓய்வு எடுக்க நினைத்து வீட்டில் இருக்க..., மாலை நான்கு மணிக்கு ஜெனரல் மானேஜர் அலைபேசியில் அழைத்து, விபரம் கூறியவர்.. வந்திருந்த நீதிமன்ற அறிக்கையின் விவரத்தை கூற... இதோ வீட்டின் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தான்..

இப்போதும் அவனுக்கு தெரியாது,இது சரண்யு-வின் அலுவலகத்தில் இருந்து வந்ததென.. அதே போல் இவ்விஷயம் SNP -க்கு தெரிய வேண்டாமென பாஸ்கர் கூறி இருந்தான்.. அம்மா அப்பா விற்கு என தனியான நேரங்கள் கிடைப்பதே அரிது. அதில் இது போன்ற சின்ன விஷயங்கள் குறுக்கிட வேண்டாம் என இவன்தான் SNP -க்கு தகவல் தருவதை தடுத்திருந்தான்.. தவிர நாளை அலுவலகத்திற்கு வந்தால் சொல்லி கொள்ளலாம் என்று இவன் சிந்தனை...

இவர்களின் வக்கீலை அழைத்து, என்ன செய்வது என்று ஆலோசனை செய்தான்.. அவரோ, "சார் இது மாதிரி பொது நல வழக்கெல்லாம் வர்றது சகஜம்.. நோட்டிஸ் கொடுத்த வக்கீலை பாத்து கொடுக்க வேண்டியதை கொடுத்து கரெக்ட் பண்ணினா போதும் சார்", என்றார். அவசர கதியில் எடுக்கப்படும் முடிவுகள், அரைவேக்காட்டுத் தனத்தில் முடியும் என்பதை இந்த ப்ரகஸ்பதிக்கு யார் கூறுவார் ?

"சரி, அந்த வக்கீல என்னை வந்து பாக்க சொல்லுங்க",

"ஸார், அது அஃபென்ஸ் .. அவங்க வந்து பாத்து, உங்களை மிரட்டினதா நீங்க கம்பளைண்ட் கொடுக்க வாய்ப்பு இருக்கு-ன்னு அந்த லாயர் நினச்சா?"

"என்ன தான் பண்ணனும் ?சொல்லுங்க...?"

"நாம நேர போய், ஏதாவது பப்ளிக் பிளேஸ்-ல பேசி பேரம் முடிக்கலாம்"...

"அரேந்ஞ் பண்ணிட்டு கால் செய்ங்க ", என்று தொடர்பை துண்டித்தான்.

செவி வழியே வந்த மேலாளரின் தகவல், கோபத்தை தூண்டியிருக்க, மெயிலில் வந்த நீதிமன்ற அறிக்கையை மேலோட்டமாய் படித்தவன், கேஸ்
சரண்யுசாயா-வின் அலுவகத்தில் இருந்து வந்தது என்பதையும், கல்பலதிகா சரண்-னின் ஜூனியர் என்பதையும் கவனிக்க தவறி இருந்தான்...

பூட்டி இருந்த அலுவலகத்தின் வாயிலில் பாஸ்கர் ஆதித்யா நின்று கொண்டிருந்தான்.. நேரம் மாலை ஆறு முப்பது... இதுனாள் வரை அவன் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருந்ததில்லை. எந்த ஒரு வியாபார சந்திப்பு [அட.. மீட்டிங் பா] என்றாலும், அனைவரும் வந்த பின்னரே, அவனுக்கான அறையில் இருந்து புறப்படுவான்.. இப்போது...ஒரு கற்றை காகித்திற்காக...உஷ்....அவனுக்கிருந்த கோபத்திற்கு அவன் நகங்கள் மொத்தமும் இரையாகி இருந்தது... சற்று நேரம் போனால், விரல்களையும் கடித்து துப்பி இருப்பான்.. அதற்குள், கல்பலதிகா வந்து அவன் கைவிரலை ரக்ஷித்தாள். இடம் : கல்பலதிகா-வின் தோழியின் அலுவலகம். ஆறு மணிக்கு வருவதாய் கூறிய கல்பலதிகா வருவதற்கு சற்று தாமதமாகி இருந்தது.

"ஹலோ. சார்”, என்று முகமன் உரைத்தவாறே, அலுவலகத்தை திறந்தவள், “ப்ரெண்ட் ஆறு மணிக்குள்ள யாரையாவது அனுப்பி கதவை திறந்து வைக்கிறேன்-ன்னு சொன்னாங்க.. ஆனா பாருங்க, அவ கொஞ்சம் பிஸி ஆயிட்டா.. அதான் ஆறேகால் வரைக்கும் வெய்ட் பண்ணி பாத்துட்டு இப்போதான் பத்து நிமிஷம் முன்னாடி எனக்கு போன் பண்ணினா. நல்ல வேளையா,என் வேலை சீக்கிரம் முடிஞ்சதால நேரா வந்துட்டேன் ", இடைவிடாது பேசுபவளை பார்த்து ”ஒரு சாரி கூட கேக்கனும்-ன்னு தோணலை”, சுத்த மேனர்ஸ் தெரியாத பொண்ணு” – என நினைத்து பாஸ்கர் ஆதித்யா கொதித்துக் கொண்டு இருக்க,

அவளோ, "ப்ளீஸ் உள்ள வாங்க ", என்றாள், கூலாக...

பாஸ்கர் ஆதித்யாவிற்கோ முகம் ஜிவுஜிவுத்தது... "எங்கம்பெனி மேல கேஸ் போட்டுட்டு எனக்கே வெல்கம்மா?",

மனம், இத்தனை நேரம் காத்திருக்க வைத்ததற்கு [ஒரு 20 - 25 நிமிஷம்.. அதுக்கே....?],

பழிவாங்க, சே சே.. அதெல்லாம் வேனாம், கொஞ்சம் பதற வைச்சா போதும்..என்று நினைத்து....

"நீங்க எத்தனை வருஷமா ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருக்கீங்க?", அதிகாரத்துடன் கேட்க.. அதுவரையில் அமைதியாய் பேசிய கல்பா, நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்..

"ஏன் கேக்கறீங்க?", இலகுவாய் கேட்டாலும் பார்வை அவனை அளவெடுத்தது... "ம்ம். நல்லாத்தான் இருக்கான்... எதோ கேஸ் பத்தி பேசணும்-னு சொன்னாங்க.. இன்னும் கொஞ்சம் டீடைல்ஸ் கேட்டுட்டு, வர சொல்லி இருக்கலாமோ?" மனம் நினைத்தது...

"உங்கள டீ-பார் பண்ணலாம் - ன்னுதான் ", என்ற குத்தல் பேச்சில் , இவள் அமைதியும், பொறுமையும் காற்றில் போக...."எனக்கு தெரிஞ்சு அப்படி ஒரு வாய்ப்பு இல்ல... மோரோவர், என்னை எப்படியாவது மாட்டிவிட நினச்சா.. .. இந்த பூச்சி காமிக்கிற வேலை-லாம் வேண்டாம். கோர்ட் கூண்டு-ல நிக்க வச்சிடுவேன்..ஒகே?", இடக்காய் கேட்டாள். சரியாக அந்த நேரத்தில்.அஸ்வினி தேவதைகள் “ததாஸ்து”, என்றன..

"யூ ப்ளடி ... நான் யார் தெரியுமா?",

"அட, சி.எம்–மா? , பி.எம்-மா? ", “இப்பதான் கண்டவங்கெல்லாம் வர்றாங்களே....”, சர்வ அலட்சியமாய் சொன்னவள்., மேல்பார்வையில் கேலியாய் நோக்கி அவனுக்கும் கேட்குமாறு முணுமுணுத்தாள், “ஆனா, செக்யூரிட்டிய கானோமே....?”,

“என்ன கிண்டலா? “, என்ற பாஸ்கர் ஆதித்யா-க்கு .... மனதிற்குள் கல்பலதிகா “இல்ல சுண்டல்”, என கவுன்ட்டர் கொடுத்தாள். ஆனால், முகமோ பால் வடிந்தது..அப்படி சட்டென முகபாவம் மாற்றியிருந்தாள். காரணம் அவளுக்கே இது அதிகப்படியாய் தெரிந்தது. யாரிவன் என்று தெரியாமல் இவ்வளவு பேச்சு ஏன் என்பதாய்.. ஒரு எண்ணம்.

“என்ன பதில கானோம்?”...சொன்னவன் குரலில் கோபம் குறைந்திருந்தது., ஆர்வம் எட்டிப்பார்த்தது....

“நான் முன்ன பின்ன தெரியாதவங்க கிட்டல்லாம் ரொம்ப பேச மாட்டேன்.. கேஸ் பத்தி தான பேச வந்தீங்க?, விஷயம் சொன்னா நல்லா இருக்கும் ”, பதிலும் அதே அய்யோபாவம் குரலில்..

“ஹா, “, அதிர்ந்த பாஸ்கர் ஆதித்யா.. ரொம்ப பேச மாட்டாளாமா?, இதுதான் உங்க ஊர்ல கம்மியான பேச்சா? – மைண்ட் வாய்ஸ் தானாகவே பேசியது. அவளின் நாடகத்தில், குரலை தேட வேண்டியதாயிற்று அவனுக்கு... “க்க்க்க்கும்... ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட?”, பேச்சு ஒருமையில்...உரிமையாய், அவனையும் அறியாமல்.

“அதுவா?, இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஏதோ தாதா கூட்டத்துல நிக்கற ஃபீல் வந்ததா?, சரி சத்தம் அடங்கட்டும், ஏன் எனர்ஜி வேஸ்ட் பண்றதுன்னு... ஒரு முன் யோசனை...”

இப்பொழுது முழு சுவாரஸ்யமாய், “ஆஹான்..?”, உதிர்த்தவன் இதழோரம் புன்னகையின் சாயல்..

இவளுக்குமே, அவனின் ஆஹான்-னில் சிரிப்பு வந்தது. “இன்னும் நீங்க வந்த விஷயத்தை சொல்லல”, நீட்டி முழக்கினாள், அவளுக்கே தெரிந்தது, இவன் அருகாமை அவளை வசமிழக்க வைக்கிறது என..

“இப்போ இது ஒரு இன்ட்ரோ -வா இருக்கட்டும்... நாளைக்கு மறுபடியும் பாக்கலாமா ? ", மந்தகாசமாய் புன்னகைத்து கேட்பவனிடம் மறுக்க மனமின்றி தலை தன்னிச்சையாய் ஆடியது...

"தேங்க்ஸ்”, சொல்லி கிளம்பியவன் மனது, "டேய்.. நீ வந்த வேலை என்ன? செய்யற வேலை என்ன ?", என்று நொட் டென்று மண்டையில் கொட்ட.... அதை அந்நியனாய் ஒதுக்கி.... ரெமோவானான்... நம் பாஸ்கர் ஆதித்யா ... அவன் நினைப்பில் கன்னாபின்னா வென கவிதை கொட்டியது ...

“ஒல்லி பெல்லி,
புருவ வில்லி,
கண்ணு கில்லி,
லிப்ஸ் ஜெல்லி”, என்று ஜொள்ள, “அட... கவிதை...” என்று அவனை அவனே ஷொட்டி கொள்ள...

“டேய்.. அடங்குடா.. இவ்ளோ கேவலமான கவிதைக்கு ஷொட்டு வேறயா?”, மனசாட்சி.. காறி துப்பியது. [ யப்பா.. இந்த மனசாட்சிங்களை ஆஃப் பண்ட்ற ஆப்.. ஒண்ணு கண்டுபுடிங்கப்பா...ஒரு கவித சொல்ல முடியல..(டேய்ய்ய்ய்..).]

++++++++++++++++++++++++++++++++

பாஸ்கரின் வீட்டில், அவனது கணினியில், பாஸ்கர் படிக்கவென திறந்து வைத்திருந்த நீதிமன்ற அறிக்கை ...

------------------
-------------
-------------
" உங்கள் SIPCOT தொழிற்சாலையில் தயாராகும் மருத்துவ உபகரணங்கள், குறிப்பிட்ட அளவிற்கு மேல் ரசாயனத்தை வெளியிடுவதால், அவை உபயோகிக்க தரமில்லாதவை என்றும் உடனடியாக தடை விதிக்குமாறும் மனுதாரர், கூறி இருப்பதால், இவ்வறிக்கை கண்ட 15 நாட்களுக்குள், பதில் மனு தாக்குதல் செய்யுமாறு அறிவுறுத்தப் படுகிறீர்கள் "

----
------------------
---------------------

++++++++++++++++++++++++++++++++++++++++

அதிதி சந்த்யா அந்த மகப்பேறு மருத்துவமனையில், பிறந்து சில நிமிட நேரங்களே ஆன, ஸ்ரத் என்ற அந்த குறை பிரசவ குழந்தைக்கு, வெண்டிலேட்டர் எனப்படும் உயிர் காக்கும் கருவியை, பொருத்தும் முயற்சியில் இருந்தாள்.. குழந்தையை அதன் அம்மாவிடம் இருந்து அறுவை சிகிச்சை மூலம் பிரித்திருந்தனர்.. அவர்கள் கணித்தது போலவே.. 20 சென்டிமீட்டர் நீளமே இருந்தது அச்சிசு... எடை 350 கிராம் களுக்கும் குறைவே.. சற்று நேரம் மூச்சு விட முயற்சித்த சிசு , சிறிது நேரத்திலேயே தடுமாற ஆரம்பிக்க ... வெண்டிலேட்டர் உதவியை நாடினர்... அனைத்தும் நொடி நேரங்களில் நடக்க வேண்டிய கட்டாயம்...

அதற்கு ... அங்கு இருப்பதிலேயே மிகவும் சிறிய ட்யூப் தேவைப்பட்டது...20 சென்டி மீட்டர் குழந்தைக்கு ஏற்றாற்போல், அதிக அழுத்தமில்லாத, மிகவும் மெல்லியதான குழாய் தேவை...தேடியதில்..." ஹப்பா ".. நிம்மதி.. கிடைத்துவிட்டது.... அக்குழாயின் மேலுறையை பிரித்து, அச்சிசுவிற்கு பொருத்தும் சவாலான வேலையை தொடங்கினாள்... அதிதி சந்த்யா...

மேலுறையில்...... SNP -யின் SIPCOT முகவரி ...... தயாரிப்பாளர் என்ற வரியின் கீழ் இருந்தது...

மொழிவோம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top