ராதையின் கண்ணன் இவன்-15

Advertisement

E.Ruthra

Well-Known Member
ராதிகாவுக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம் இந்த வீட்டில் ஒரு நாள் தள்ளுவதற்குள் மூச்சு முட்டியது என்ன இப்போதோ ஆறு மாதம் காற்றின் விரைவாய் தான் சென்ற மாயம் என்னவோ, அதற்காக வீட்டோடு ஒன்றி விட்டால் என நினைத்தால் அதுவும் இல்லை, வீட்டை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் யாரிடமும் இல்லை, எந்த விதத்திலும் எந்த உறவும் புதுப்பிக்க படவில்லை, தெய்வாவை ஒதுக்கவும் இல்லை, அம்மா என ஏற்கவும் இல்லை, வந்த புதிதில் ராதிகாவோடு பிரச்சனை செய்ததோடு சரி சண்முகம் அதற்பிறகு இவள் பக்கம் திரும்பவில்லை, அதற்கு அவருக்கு நேரமும் இல்லை. இந்த ஆறு மாதத்தில் இவரின்
இரண்டு கடைகளுக்கு மிக அருகில் புதிய இரண்டு துணிக்கடைகள் அடுத்தடுத்து மிக பிரம்பாண்டமாக திறக்கப்பட, நிறைய சலுகைகள், புது விதமான ரகங்கள் என இருபது வருட பாரம்பரிய கடைக்கு எல்லா விதத்திலும் சமமான எதிரி. சண்முகத்திற்கு இதுவரையும் நட்டம் ஏதும் இல்லை என்றாலும் இலாபம் வெகுவாக குறைய தொடங்க, இருபது வருட அனுபவத்தில் இந்த மாதிரி நிலைமையை கையாண்டு இருந்தாலும் ஏனோ இந்த முறை இவரை குறிவைத்தே எல்லாம் நடப்பதாக தோன நிலமை கை மீறும் முன் அதை சமாளிக்க என அவரின் நேரத்தை எல்லாம் முகம் அறியா அந்த புது எதிரி திருடி கொண்டான்.

கல்லூரியை பொறுத்தவரைக்கும் ராதிகாவின் வகுப்பு தோழர்கள் தோழிகள் என எல்லாரும் அவளை ஒரு புன்னகையுடன் கடந்து செல்லும் அளவுக்கு ராதிகாவின் திறமை, அறிவு அவர்களில் மாற்றத்தை விதைத்து இருந்தது. அதற்கு மேல் அவர்களும் நெருங்க வில்லை ஏனோ ராதிகாவும் அதற்கு அனுமதிக்க வில்லை.பொன்னிற மேனியனுக்கும், அவனின் கார்மேகத்திற்குமான உறவு ஒருவரின் உணர்வுகள் அடுத்தவரில் எளிதாய் பிரதிபலிக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தது. ஒருவருக்காக ஒருவர் பார்த்து பார்த்து செய்யும் அக்கரையுடனான செயல்கள் தினம்தோறும் நடைபெற எங்கும் காதல் எனும் வார்த்தை உச்சரிக்கப்படவே இல்லை, எனினும் அந்த உணர்வு இருவராலும் பரிபூரானமாக உணர பட்ட ஒரு உன்னத நிலை.

கிறிஸ்ம், ஆர்.கேவும் அன்றே இவர்களின் சந்திப்பு பொழுது ராதிகாவின் தவிப்பை உணர்ந்து ராதிகாவுக்கா என பழக ஆரம்பித்து
கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் ஒருவரின் ஒருவர் இயல்பு பிடித்துபோக நல்ல நண்பர்கள் எனும் நிலையில், அதே நேரம் கிறிஸ் அந்த வேலையை ஆர்.கே வின் கம்பெனிக்கே அளிக்க, பொன்னிற மேனியனும் அதே பணியில் முக்கிய பொறுப்பில். ராதிகா மாதம் ஒரு முறை புதுவை சென்று வந்தாலும், கடந்து சென்ற இந்த ஆறு மாதத்தில் கிறிஸ் நேரில் வரவில்லை என்பதை தவிர வேறு எந்த குறையும் இல்லை. தன் புது தோழியான ராஜிமா அவளின் ஒவ்வொரு சனிக்கிழமையும் சர வெடியாக்க, அவரை சந்திக்க நிரம்பி வழியும் ஆவலுடன் மத்தாப்பாய் கார்மேகம். அவளின் ராஜிமா முதல் தடவை மாதிரி பிரசாத்தை அள்ளி சாப்பிடாமல் கிள்ளி சாப்பிடும் மர்மம், என்ன என்ற தீவிர சிந்தனையில் ராதிகா.

ஸ்வேதாவும், மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தளராது முயற்சி செய்ய, என்ன ஆர்.கேவிடம் தான் எந்த முன்னேற்றமும் இல்லை, அந்த சோகம் உன்னிடம் நான் தோற்பதா என்ற வகையில் ராதிகாவின் மீது திசை திரும்பியுள்ளது என்பது உபரி தகவல்.

இன்று நாள் விடியும் போதே மனம் மகிழ்ச்சியான நிலையின் இருக்க காரணம் புரியவில்லை எனினும், இன்று முதல் ஒரு வாரத்திற்கு யாராவது ஒரு இளம் தொழிலதிபர் வந்து அவரின் அனுபவங்களை காலைவேலையில் இவர்களுடன் பகிர்ந்து கொள்ள, மதிய உணவு இடை வேளைக்கு பிறகு அவர்கள் பேசியவற்றை தொகுத்து துறை தலைவரின் பார்வைக்கு அனைவரும் வைக்க வேண்டும் என்பதால், பெரிதாக வேலைகள் இல்லாமல் கொஞ்சம் இலகுவாக இந்த வாரம் செல்லும் என்ற உற்சாகத்தில் கல்லூரி கிளப்பினாள் ராதிகா.

வழக்கமாக காத்திருக்கும் இடத்தில் பொன்னிற மேனியன், உற்சாகம் இன்னும் அதிகமாக அவனுடன் சேர்ந்து வகுப்பிற்கு செல்ல, அவனின் முகமோ ஏதோ வித்தியாசமாய், என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் அவனை பார்க்க, கவனமாக இவளின் பார்வையை அவன் தவிர்க்க ஒரு அழகான கண்ணாமூச்சி ஆட்டம்.

வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும், துறை தலைவருடன் உள்ளே நுழைந்த தொழிஅதிபரை பார்த்த ராதிகாவின் கண்கள் முதலில் மகிழ்ச்சியில் மலர அடுத்த நிமிடமே கோபத்தில் கடுகடுக்க திரும்பி பொன்னிற மேனியனை பார்க்க அவனோ எல்லாம் துறந்த ஜென் நிலையில் ஒரு பார்வை பார்த்து வைத்தான். சந்தேகத்துடன் பார்த்தாலும், ஒரே ஒரு முறை அதும் மடிக்கணினி வழியே பார்த்ததால் அடையாளம் தெரியவில்லையோ ஆனால் அவன் தனக்கு எவ்ளோ முக்கியமான நபர் என்று தெரிந்த பின்னும் நினைவில் இல்லையா என சொல்லாமல், கொள்ளாமல் வந்தவனின் மேல் வந்த மொத்த கோவமும், அவனை நினைவில் கொள்ளாத பொன்னிற மேனியனிடம் திரும்ப அவனை ஒரு முறை முறைக்க அவனோ அதற்குள் தெரிந்துவிட்டதா என ஒரு இறைஞ்சலோடு அவனின் கார்மேகத்தை ஒரு பார்வை பார்த்து வைக்க, அவனின் பார்வையை கணக்கில் கொள்ளாத அவ்ளோ தன் கவனத்தை அங்கு பேசுபவனின் பேச்சில் செலுத்தினாள்.

பொன்னிற மேனியன் தன் கார்மேகத்தின் எரிக்கும் பார்வையில் வறுப்பட அதற்கு காரணமான அந்த புண்ணியவானோ மயக்கும் புன்னகையுடன் இவர்களின் வகுப்பு மாணவர்களை பார்த்து தன்னை "கிறிஸ்டோபர் ஸ்மித்" என அறிமுக படுத்தி கொண்டான். தன்னை பார்த்தவுடன் தன் டாலியின் முகமாற்றத்தை எல்லாம் கவனமாக அளவெடுத்தவன், அவள் பொன்னிற மேனியனை முறைக்கவும், அவனை பார்த்து ஒரு கேலி சிரிப்பை யாரும் அறியாவண்ணம் உதிர்க்க, அவன் முறைக்க ஆரம்பிக்கவும் நல்ல பிள்ளையாக துறை தலைவரின் பேச்சில் தன் கவனத்தை செலுத்தினான். அவர் அவனை முறையாக அறிமுகப்படுத்திவிட்டு செல்லவும் அந்த வகுப்பை ஒரு முறை கண்களால் அளவெடுத்தவன், பெண்கள் அவனின் தோற்றத்தில் வியக்க, ஆண்களோ அவனை பார்த்து மிரள என அனைத்தையும் குறித்துக்கொண்டவன் எதையுமே கண்டுகொள்ளாமல் பேச ஆரம்பித்தான். நடுநடுவே அவன் பார்வை அவனின் டாலியை தீண்டிய வண்ணமே இருக்க, அதேசமயம் அதிகம் மாணவர்களை சோதிக்காமல் சிரிக்கும் வகையில் அன்றைய நாளிற்கான தன் உரையை கிறிஸ் முடித்தான்.

வகுப்பு முடிந்ததும் விருந்தினர் என்ற முறையில் உணவு உண்ண துறை தலைவர் வந்து மரியாதையுடன் அழைத்து சென்றார் அவனை. கிறிஸ் சென்றதும் முந்திக்கொண்ட பொன்னிற மேனியன், தன் பார்வையை தன் கார்மேகம் கவனிக்க வில்லை என்பதை அறிந்து அவளுக்கு ஏதும் தெரிந்து இருக்காது என்ற நம்பிக்கையில்,

"அது கிறிஸ் தானே, ஏன் என் கிட்டசொல்லவே இல்ல, கிறிஸ் வருவதை" என கேட்க அவளோ, பொன்னிற மேனியன் கிறிஸ்யை மறக்கவில்லை என்பதிலே அக மகிழ்ந்தவள்,

"எனக்கே தெரியாது" இப்போ கிறிஸ் மீதான கோபத்தில் சொல்ல, கோபதத்தை திசைதிருப்பிய மகிழ்ச்சி பொன்னிற மேனியனின் முகத்தில் அப்பட்டமாக தெரிய, தத்தம் வேளைகளில் ஈடுபட்டனர் இருவரும். அன்றைய நாளிற்கான கட்டுரையை துறை தலைவருக்கு அனுப்பிவிட்டு வர அவர்களுக்காக அவர்களின் வகுப்பு வாசலிலே கிறிஸ் காத்திருந்தான்.

"ஹே டாலி" என கிறிஸ் அழைக்க,

"நா யார்கிட்டயும் பேசுற மாதிரி இல்லன்னு சொல்லு ராகி" என பொன்னிற மேனியனை நடுவில் வைத்து பதில் அளிக்க, அவனோ காலையில் தன்னை நோக்கி அவன் உதித்த அதே நக்கல் சிரிப்பை கிறிஸ்யை நோக்கி சிந்த,

"உனக்கு சர்பரைஸ் அஹ இருக்கட்டும்னு தான் சொல்ல டா நீ வேனா ராகி கிட்ட கேட்டு பாரேன்" என ஒரு நமட்டு சிரிப்புடன் சொல்ல, அவன் சொன்னதின் முழு அர்த்தத்தை அந்த நிமிடம் ஆராயமல் பொன்னிற மேனியன் வசமாய் சென்று அவனின் வலையில் விழுந்தான்,

"நா அப்போவே சொன்னேன் ராதா உன் கிட்ட சொல்ல சொல்லி, இவன் தான் சர்பரைஸ் அது இதுன்னு நா சொன்னதை கேட்கலை" என அவனை போட்டுக் கொடுப்பதாக நினைத்து உண்மையை உளறி வைக்க, தன் கார்மேகம் அவனை போட்டு வறுக்க போவதால் சுருங்க போகும் அவன் முகத்தை கண்டு களிக்க ஆவலுடன் கிறிஸ்யை பார்த்தால், அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் நிற்க, "என்ன இவன் சிரிக்குறான்,சரி இல்லையே" என பார்வையை சற்று திருப்பி பார்க்க அவனின் கார்மேகமா ஒட்டு மொத்த கோவத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல அவனை உறுத்து விழிக்க, அப்போது தான் தான் சொல்லியதின் அர்த்தத்தை உணர்ந்தவன் தன் நாக்கை கடிக்க,

"ஆக ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டுகளவானி தனம் பண்ணி இருக்கீங்க, ரெண்டு பேருமே என் கிட்ட பேசாதிங்க" என கோபத்துடன் செல்ல, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட இருவருமே "உன்னால தான் அவ கோவமா போறா" என மாற்றி மாற்றி குற்றம் சொல்ல, அது தெளிவாய் பொன்னிற மேனியனின் கார்மேகம் காதுகளிலும் விழுந்தது. அவளின் முகத்திலோ கோவத்தின் சாயலே துளியும் இல்லாமல் ஒரு நிறைவான புன்னகை. தன் வாழ்க்கையில் முக்கியமான இரு ஆண்களும் நட்புடன் இயல்பாக பழகும் போது வரும் ஒரு நிறைவான உணர்வு பெண்கள் மட்டுமே அறிந்த நுண்ணுணர்வு.

இந்த கலவரத்தில் தன்னை இடிக்கும் நோக்கத்துடன் எதிரில் வந்தவனை ராதிகா கவனிக்க தவற, தனியே கோபத்தில் செல்லும் இவளின் மீது கவனம் வைத்துக்கொண்டே கிறிஸ் இடம் பேசிகொண்டு இருந்த பொன்னிற மேனியன் நடக்க இருக்கும் அனர்த்தை தவிர்க்க சில நொடிகளில் விரைந்து வந்து இவளுக்கும் அந்த இடிஅரசனுக்கும் நடுவில் நின்றான். எப்போதும் பொன்னிற மேனியனுடனே இருக்கும் ராதிகாவை ஏதும் செய்ய முடியாது என சக மாணவர்கள் சொல்ல, அவளை இடித்து கிழே தள்ளி காட்டுவதாக பந்தயம் கட்டினான் இந்த இடிஅரசன். எதில் எல்லாம் விளையாடுவது என்ற அறிவுகூட இல்லாமல் எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் இக்கால பணக்கார மாணவர்களின் பிரதிநிதியான அந்த இடிஅரசன் அவள் தனியே வரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன் பந்தயத்தில் வெற்றி பெற நினைத்து வந்தவன், பின்னால் சற்று ஒதுங்கி நின்று இருந்த இருவரையும் கவனிக்க தவறியது அவனது துரதிஷ்டமே. திடீரென பொன்னிற மேனியன் நடுவில் வரவும் இவன் எங்கிருந்து குதித்தான் என ஒரு நொடி அதிர்ந்தவன் பின் சமாளிப்பாக"சாரி ஆர்.கே பார்க்கல" என முடிக்காமல் அவனின் முறைப்பில் நடுங்கி கொண்டே இவர்களை தாண்டிய அடுத்த நொடி என்ன நடந்தது என்று உணரும் முன் தரையில் விழுந்து கிடந்தான்.

அந்த இடிஅரசனுக்கோ ஏதோ மலை நடந்து வந்து அசுர வேகத்தில் அவன் மீது மோதிய உணர்வு, நிமிர்ந்து பார்க்க, அளவான புன்னகையுடன் ஒரு வெள்ளைக்காரன். இடித்த இடியில் மூச்சு விட முடியாமல் திண்டாடி அவன் தட்டுத்தடுமாறி எழுந்திருக்க, அதை கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்த அந்த வெள்ளைக்காரனோ, தெளிவான ஆங்கிலத்தில் கை பேசியை பார்த்துக்கொண்டே நடந்து வந்ததால் இவனை கவனிக்க வில்லை என சொல்ல இடிஅரசனுக்கோ இடித்த இடி இன்னும் இடி போல வலிக்க, வேறெதும் பேசி அவனிடம் வாங்கி கட்ட தெம்பு இல்லாமல் ஒரு சமாளிப்பான புன்னகையுடன் இனிமே இந்த பொண்ணு பக்கமே வரக்கூடாது பா என்ற அவசர முடிவோடு கடந்தான்.

ராதிகா கிறிஸ்யை முறைக்க, பொன்னிற மேனியனுக்கும் அங்கு என்ன நடந்து இருக்கும் எனபது விளங்கியதால் ஒரு புரிதலான புன்னகையுடன் கிறிஸ்யை பார்த்து தலை அசைக்க அவனும் பதிலுக்கு தலை அசைத்தான். அடுத்த நிமிடமே முகம் புன்னகையை தொலைக்க கோபத்துடன், அவனின் பிடியில் இருந்த கார்மேகத்திடம் திரும்பி,

" நடக்கும் போது கவனம் எல்லாம் எங்க இருக்கு, எதிர்க்க யார், என்ன எண்ணத்தோட வராங்கனு கூட பார்க்காம" என கோபத்தில் திட்ட, இதுவரை இவனின் கோவத்தை பார்த்து இருந்தாலும் தன்னிடம் கோவ படுவது முதல் முறை என்பதால் சற்றே மிரள தான் செய்தால், ஆனால் அடுத்த நிமிடமே, அது தன் மீது உள்ள பாசத்தின் வெளிப்பாடு என புரிய,

"சாரி, ஏதோ யோசனையில்" என தலையை குனிந்தவாறே பள்ளி செல்லும் மழலை என சொல்லியவள் அடுத்த நிமிடம் நிமிர்ந்து இருவரையும் உங்களால் தான் என குற்றம் சாற்றும் பார்வை பார்த்து வைக்க இதற்கு மேல் எங்கே கோவ பட,

"சரி வா" என அழைக்க, அவளோ

" நா இன்னும் உங்க ரெண்டு பேரு மேல கோவமா தான் இருக்கேன்" என்ற அறிக்கையோடு தன் காரை நோக்கி செல்ல அவளின் சிறுபிள்ளை தனமான கோபத்தில் பொன்னிற மேனியனும், கிறிஸ்ம் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

"பேசாம நீயும் என்கூட வீட்டுக்கு வா ஆர்.கே" என கிறிஸ் அழைக்க, அங்கு நடந்த கசப்பான சம்பவங்களுக்கு தன் முறையில் தக்க பதிலடி கொடுக்காமல் அங்கு செல்ல விருப்பம் இல்லாத பொன்னிற மேனியனின் முகம் இறுக,

"இல்ல கிறிஸ் நீ போய்ட்டு வா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என சொல்ல அவனின் முக குறிப்பிலே ஏதோ நடந்து இருக்கு என புரிந்து கொண்ட கிறிஸ் அவனை வற்புறுத்தாமல்,

"சரி ஆர்.கே, அப்போ நானும் கிளம்புறேன், டாலியை வீட்டுல போய் சமாதான படுத்திட்டு, கொஞ்ச நேரம் கூட இருந்துட்டு நானும் வீட்டுக்கு கிளம்புறேன், இந்த டைமிங் சேஞ் செட் அகல" என கிறிஸ் கூற, அவனின் சோர்வை பார்த்த பொன்னிற மேனியனும் விடைகொடுக்க ராதிகாவின் இல்லத்தை நோக்கி புறப்பட்டான் கிறிஸ்.

இவன் ராதையின் கண்ணன்……….......
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பெரிய ஜவுளிகடை இருக்குன்னு பந்தா காட்டினதுக்கு பதிலடியா ... சூப்பர்...

கிருஸ்... கொடுத்த தண்டனை செம... அவள பத்தி தெரியாம வந்துட்டானே பொடி பையன்... ஒண்ணுக்கு ரெண்டு பேர் பாடிகார்ட் வேலை பார்க்கறங்கன்னு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top