முள்வேலியா? முல்லைப்பூவா? - 23 (final)

Advertisement

ManjuMohan

Well-Known Member
Thank you Manju...when you quote scenes like this to give feedback...it gives me more pleasure that it has reached the readers as I intended :love:
Sonathu konjam than..solama vitadhu neraiya... Avalo time sense, intelligence, kadaiku thevaiyana scenes ku mergutal romba azhaga irukum...rakavi stories ku oru sirapu iruku...i realised this in reading your stories...oru touch irukum
 

rakavi

Well-Known Member
நல்லா இருந்ததுப்பா நிறைவு (as usual).
தொடக்கம் முதல் இறுதி வரை சஹானாவை கெத்து குறையாமல் காமிச்சுருக்கீங்க. அந்த consistency maintain பண்ண நீங்க போட்டு இருக்குற efforts amazing. முதலில் அவளோட arrogant audacity காமிச்சு மெல்ல மெல்ல அந்த குணத்தை அவ தன் நண்பனுக்காக எதையும் செய்ய பயன்படுத்தற விதம் அவ்வளவு அழகா இருந்தது படிக்க.

Modelling உலகத்தில் நடக்கற நிஜங்களை சொல்லி அதை ஒரு career- ஆ எடுத்துக்கவே யோசிக்கணும், சரியான பின்புலம் இல்லாமல் அதில் வெற்றி பெற முடியாதுன்னு ரொம்ப அழகா சஹானா மூலமா சொல்லிடீங்கப்பா.

Maybe அவங்கப்பாவும் அண்ணாவும் support பண்ணி இருந்தால் அவங்க கிட்ட இருக்கும் wealth-க்கு அவ இந்த மாதிரி கஷ்டங்களை அனுபவிக்காமலேயே modelling துறையில் வெற்றி பெற்று இருப்பாளோன்னு தோண வைக்குது.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அவ தன்னோட எதிரிகளை பழி வாங்கிய விதம் -(உங்க மூளையோட creativity ) செம திருப்தியா இருந்துது. தொலைநோக்கோட சிந்திச்சு liquor bottles எல்லாத்துலயும் பொடிச்சு போட்டுட்டு வந்தேன்னு சொன்னா பாருங்க அதுதான் ultimate. சுதிர் flat ஆனது ஆச்சரியமே இல்லை.

சுதர்ஷன் நான் இதுவரை படிச்ச உங்க ஹீரோக்களில் கொஞ்சம் வித்தியாசமானவன் தான். ஒரு action heroine-க்கு தேவைப்படும் support கொடுத்து கடைசி வரை அவளோட ஆர்ப்பாட்டத்தை அவசரத்தை நிதானமா கையாளும் maturity அருமை.
Cupboard- குள்ள Bayes theorem சொல்லி தன் celibacy- ஐ காப்பாத்திகிட்ட உத்தமன். சிரிச்சு முடியலை எனக்கு அந்த கற்பனை வந்தப்போ.
எனக்கு தோணினது இதுதான் தர்ஷன் கூட ஏதோ ஒரு தோராயத்துல சுரேகா கூட குப்பை கொட்டிடுவான் ஆனால் சஹானாக்கு ஏத்தவனா இவனால மட்டும் தான் இருக்க முடியும்.

கமலம் பாட்டி வருண் ரெண்டு பேரும் தான் அவ முள் இல்லை முல்லைப் பூ தான்னு எப்பவுமே புரிய வெச்சு அவ மேல மாறாத அன்பு காட்டறாங்க. அதுக்கு வருணுக்கு ஏற்பட்ட சேதாரம் கொஞ்சம் ஜாஸ்தி தான்.

தர்ஷு-சனா இவங்க ரெண்டு பேரைப்பற்றியும் rumour பரப்பிய நல்ல உள்ளங்களை விட்டுட்டேனே ரேகாவையும் சேர்த்து. அவங்களுக்கு எல்லாம் கமலம் பாட்டியும் வருணும் தான் நன்றி சொல்லணும்.

இனிமேல் தான் வருண் மகிழ்வான மனசோட உழைப்பான். ரேகாவும் எந்த நெருடலும் இல்லாமல் cooperate செய்வா. கண்டிப்பாக குழந்தை பிறந்து மீனாட்சி பாட்டியை கொஞ்சம் busy-யாக வைக்கும்.

கடைசியா ஒரு மனக்குறை. அதையும் share பண்ணிடுவோம். உங்க பாரபட்சத்தை நீங்க இன்னும் விடல.
கோ.கோ-1 லையும் வாகீசனுக்கு தான் சுமியோட வண்டி வண்டியா ரொமான்ஸ் வெச்சீங்க. கைலாஷுக்கு கண்ணுல காட்டி கடைசியில் அதுலயும் திகிலா ஒரு end. சரி அட அதையாவது கோ. கோ 2 வில் compensate பண்ணிக்கலாம். ஆனால் இதுல சுதிர்-சஹானாக்கு just ஒரு finishing scene மட்டும் வெச்சு விட்டுடீங்களே ஏன். Lead pair characterization தான் காரணமா?

விநாயகர் சதுர்த்திக்கு வாகீசன் கைலாஷ் எல்லாம் காட்சி தந்தா பண்டிகை சிறக்கும். நடக்குமா?
Thank you for such a long review. :love: :love: ரேகா வருண் பத்தி எபிலாக்ல வரும்.
உங்க மனக்குறைக்கு வருவோம்:D கோ.கோ. 1 and இந்த கதையில் ஒரு ஒற்றுமை... ஜோடி கடைசில தான் ேசருறாங்க. So பெருசா ரொமான்ஸ் வெக்க இடமில்லை... உயிரின் நிறைவேல சில அத்தியாயத்துலேய கல்யாணம் முடியும்... So நிறைய cute தருணங்கள், ரொமான்ஸ் எல்லாம் வெக்கலாம்:D Samefor Vageesan... அவங்க bond establish பண்ண தேவைப்பட்டது.
கோ.கோ.2 எழுதும் போது கண்டிப்பா கைலாஷ். அலர்க்கு நிறைய எழுத முடியும். கதை ஆரம்பமே தம்பதியா ஆரம்பிக்கறாங்க. மத்தபடி கதையை இதுக்காக இழுக்கக்கூடாதுன்னு என் அபிப்ராயம்.:D
 

rakavi

Well-Known Member
இப்ப தான் சுதிர் கலகலன்னு இருக்கான். அதுக்குள்ள end card.

சஹானா செம்ம characterisation. Right from the beginning அவளோட standலயே & கெத்துலேயே. சஹானாக்குள்ள இருக்க நல்லப்பொண்ணு குட்டிப்பொண்ணு சுதிர impress பண்ணிட்டாளாமே.

ஒருவழியா பாட்டி கொள்ளுப்பேரப்பசங்கள கொஞ்சி வளர்க்க தயாராகுறாங்க.

வருண் நல்ல நண்பேன்டா material. "அவ miss பண்ணின மூளையை பத்தரமா எடுத்து வச்சியா வருண்"...
அவங்க கலகலப்பா இருக்கும் போதே bye சொல்லிடலாமே :ROFLMAO: :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
அருமை.... இரண்டு பேரோட அன்பை அழகா சொல்லி இருக்கீங்க....

முதல்ல இருந்தே சனா மேல ஒரு பிரமிப்பை,ஆச்சரியத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு எபிலயும் எதிர்பார்ப்ப அதிகமாக்கி அதற்கு இரு மடங்காக அதை நிறைவேத்தி இருக்கீங்க....
Such a smart, bold , intellectual and beautiful characterization....

சனா மட்டும் இல்லாம சுதிர், வருண் , பாட்டி எல்லோரோட தனித்தன்மையை அழகாக உணர வைச்சிருக்கீங்க....
நன்றி சத்யா. Yes என்னையும் மீறி கதை முழுக்க சனாவே dominate செய்தாள். :D :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top