மாலை சூடும் வேளை---4

Advertisement

laxmidevi

Active Member
மாலை-3

பாடல் வரிகள்

தண்டை சிலம்புகள் தைய தந்தோமென
தங்க வளையல்கள் ஐயோ வந்தோமென
கொண்டையிலே மலர் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட
தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலேஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம்....







மதுரை அழகர் கோவில் மேல் உள்ள ரங்கநாதர் கோவிலில் திருவிழா களை கட்டியது.அங்கே வந்திருந்த அனைவருக்கும் தன் உறவினரிடம், நண்பர்களுடன் பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர்.அனைவரும் தம் கோபங்களை மும், மனத்தாங்கலையும், கருத்து வேறுபாடுகளை மறந்து இப்போ துள்ள இந்த மகிழ்ச்சியை ஏற்று மகிழ்ந்திருந்தனர்.அனைவரின் முகமும் அன்றலர்ந்த தாமரை மலர் போல மலர்ந்து இருந்தது.ஒருவேளை இதற்காகத்தான் நம் முன்னோர்கள் திருவிழாகளை ஏற்படுத்தி இருந்தார்களோ என்னவோ?

மங்கை யின் குடும்பம் , மற்றும் அவளின் உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். மங்கையின் தந்தை ரங்கநாதனின் தங்கை பத்மா, தன் கணவர் கஜபதி, மகன் ராம்சுந்தர், மகள் ஜானவியுடன் வந்திருந்தார்.அவரகள் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்கள்.

பத்மா தன் அண்ணனிடம் நீங்கதான் உங்க மருமகன் சுந்தர் கிட்ட அவன் கல்யாணத்தை பத்தி பேசணும்.நாங்க கேட்டா பிடி கொடுக்காமல் இருக்கான்.அதுக்குத்தான் அவனை இங்கு வரவழைத்தேன்.அபபடியே நம்ம விருப்பத்தையும் கூறுங்கள் என்றார்.

பத்மாவிற்கு மங்கையை தன் மருமகளாக்க விருப்பம்.மங்கை தன் அன்னையை போல் அழகும், அறிவும் நிறைந்தவள்.தன் அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவள்.அத்துடன் தன் பிறந்த வீட்டு உறவும் , உரிமையும் என்றும் நிலைத்திருக்கும் அல்லவா?

இதில் ரங்கநாதனிற்கும், மகாலட்சுமிக்கும் விருப்பமே.சுந்தர் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்.மங்கையை சிறுவயதில் இருந்தே நன்கு அறிந்தவன. மங்கைக்கும் சுந்தரைப் பிடிக்கும்.அவன் சொல்வதை அப்படியே கேட்பாள் தங்கையின் குடும்பத்தில் கொடுப்பதால் மகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு எந்த வித ஐயமும் இல்லை என்று எண்ணினார்.

சுந்தர் அக்கோவிலின் பக்கத்தில் இருந்த மலையருவியின் அருகில் நின்று கொண்டிருந்தான்.அந்த அருவியை போல் அவன் மனதிலும் பற்பல சிந்தனைகள் ஆர்ப்பரித்து கொண்டு இருந்தது.

இங்கு என்னப்பா செய்கிறாய் என்றபடியே வந்தார் ரங்கநாதன்.

சும்மா தான் மாமா

வேலை எப்படி போகிறது சுந்தர்.

நல்லா போகுது மாமா, இந்த வருடம் பதவி உயர்வு இருக்கும்.

நல்லதுப்பா, அடுத்து உன் திருமணம் தானே செய்து விடலாமா?

முதலில் ஜானவிக்கு திருமணம் செய்து விடலாம் மாமா.

ஜானவி மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிறாள்.அவளுககு திருமண யோகம் வர 3 ஆண்டுகள் ஆகுமாம்.அதறகுள் உனக்கு முடித்து விட நினைக்கிறாள் பத்மா.என்ன உனக்கு இப்போது திருமணத்திற்கு பார்க்கலாமா?

சரி மாமா.

பத்மாவிற்கு மங்கையை மருமகளாக விருப்பம்,எங்களுக்கும் தான். உன்னுடைய அபிப்பிராயம் என்னப்பா?

மங்கை என்ன சொன்னாள் மாமா?

முதலில் உன் கருத்தை அறிந்த பிறகு மங்கையிடம் பேசலாம் என்று எண்ணினேன்.

வேண்டாம் மாமா, எனக்கு இதில் விருப்பம் இல்லை.மஙகையிடம் ஏதும் பேச வேண்டாம்.

ஏனப்பா, உனக்கு நம் மங்கையை பிடிக்கலையா? என்றார் வருத்தமான குரலில் ரங்கநாதன்.

ஒருவேளை தன் மகளுக்கு சுந்தர் மீது விருப்பம் இருந்தால் என்ன செய்வது என்று வருந்தினார்.

எனக்கு மங்கையை ரொம்பவே பிடிக்கும். ஆனால் ஜானவியை
போல் மங்கையும் எனக்கு இன்னொரு தங்கை தான்.என் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை.

தங்கையை போல் என்பவனிடம் என்ன சொல்கிறது என்று மனதில் எண்ணினார் ரங்கநாதன்.

சரிங்க மாமா.இதில் உங்களுக்கு என் மீது வருத்தம் இல்லையே?

இல்லப்பா,நீ வருத்தப்படாத

மாமா நான் உங்கள் மருமகனாக இல்லாமல் , மூத்த மகனாக எல்லா இடத்திலும் துணை நிற்பேன்.

நீ சொல்லாவிட்டாலும் நீதான் என் மூத்த மகன் டா சுந்தர் என்று சுந்தரை அணைத்து கொண்டார் ரங்கநாதன்.

சரிப்பா , பத்மா விடம் வேறு பெண் பார்க்க சொல்லலாமா?

சரிங்க மாமா, உங்கள் இஷ்டம் என்றான் சுந்தர்.

அவன் மனதில் இருப்பதை சொன்னால் வீட்டில் ஒரு காஜா புயலே அடிக்கும். பின்னே விவகாரத்தான ,கையில் 2வயது குழந்தைகளுடன் இருக்கும் பெண்ணை தான் விரும்புவதாக கூறினால்?

இப்போது இதைப் பற்றி கூறினால் மங்கையையோ இல்லை வேறு பெண்ணையோ கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயற்சிப்பார்கள்
முதலில் அவளிடம் இருந்து சம்மதம் வாங்க வேண்டும்.பின் வீட்டில் கூறலாம் என்று எண்ணினான் சுந்தர்.

பின் மாமாவும், மருமகனும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட வேண்டுதல் வைக்க, இப்போது நான் யாருடைய வேண்டுதலை நிறைவேற்ற என்று அந்த பெருமாளே குழம்பி விட்டார்.

யாருடைய வேண்டுதலை நிறைவேற்ற போகிறாறோ பார்ப்போம்...

சுந்தரின் கருத்தை பத்மாவிடம் கூறிய போது அவர் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை . அவனிடம் நான் பேசுகிறேன்.என் மங்கைக்கு என்ன குறை என்று பொறிந்தார்.

பத்மா, தங்கை என்பவனிடம் என்ன பேச? இத்துடன் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்.பிள்ளைகளின் நியாயமான விருப்பத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். எனக்கு மங்கையும் , சுந்தரும் ஒன்று தான்.அவன் மனம் வருந்த விட மாட்டேன் என்றார் ரங்கநாதன்.

எப்போதும் அண்ணனின் பேச்சுக்கு அடங்கியே பழகிய பத்மா வேறு ஒன்றும் சொல்லவில்லை.ஆனால் அவர் மனதில் வேறு எண்ணம் ஓடியது. கொஞ்ச நாள் கழித்து சுந்தரிடம் இதை பற்றி பேசுவோம்.இப்போதைக்கே இதை ஆற போடுவோம்.ஒருவேளை அவன் மனமும் மாறலாம் அல்லவா? என்றெண்ணி சரி என்றார்

இதற்கிடையில் சிக்னல் கிடைக்கும் போது தன் மகளிடம் பேசி அவளின் நலனை அறிந்து கொண்டார் ரங்கநாதன்.வீட்டில் பயம் கொள்வார்கள் என்று எண்ணி அங்குள்ள நிலையின் தீவிரத்தை சற்று குறைத்தே கூறினாள் மங்கை.

அங்கே சுந்தரின் சுந்தரியோ தன் இருப்பிடத்தை காலி செய்து கொண்டு, தன் கண்களில் கண்ணீருடன் காரில் தன் தாய் மற்றும் மகளுடன் பயணித்துக்கொண்டிருந்தாள்.

யாருக்கு யாரோ
யாருக்குள் யாரோ,
யார் சொல்வாரோ,
யார் சேர்வாரோ,
யார் பிரிவரோ!

பார்ப்போம்....
IMG-20200806-WA0066.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top