மாயவனின் அணங்கிவள் -5

Advertisement

Priyamehan

Well-Known Member
காரில் ஏறி அமர்ந்தவள் போனை நோண்டிக் கொண்டு வந்தாள் அருவி..

"எப்ப காலேஜ் ரியோப்பன்?"

"ஹா.. நெஸ்ட் மண்டே..."

"இங்க இருக்கற ஒரு வாரமும் பண்ணைக்கு வந்து வேலையைக் கத்துக்கோ,வீட்டுலையே தெண்டமா போனை நோண்டிட்டு இருக்காத" என்று திமிறாகக் கூற..

வேந்தன் சொன்ன விதத்தில் கோவம் வந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் "என்ன வேலை மாமா?" என்றாள் சாதாரணமாக.

"என்ன வேலையா நீங்க எதுக்கு மேடம் படிக்கறிங்க?"

"அக்ரிக்கு?"

"அந்த வேலையை கத்துக்க வேண்டாமா?"

"அதை செய்ய தான் ஆள் இருக்காங்கள மாமா... நான் எதுக்கு கத்துக்கனும்? என்ன உரம் போட்டா செடி அதிக ஈல்ட் குடுக்கும்னு தெரிஞ்சா போதாதா...நான் வேற மம்முட்டியை எடுத்து வெட்டணுமா?"

"அது மட்டும் தெரிஞ்சா போதுமா...?எல்லா வேலையும் செய்ய தெரிஞ்சிருக்கணும். களை எடுக்கறது, மஞ்சள் வெட்டறது, நாத்து நடறது, குச்சி நடறது, சொட்டு நீருக்கு டீப் போடறது, உழவோட்டறதுனு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையை கத்துக்கோ அப்போதான் ஆளுங்க இல்லாத சமயம் அவசரத்துக்கு உதவும்" என்றான்.

"இது வேறையா...? இவன் என்ன பிளான் பண்றானு தெரியலையே, இனி நான் இங்க வரவேக் கூடாதுனு முடிவு பண்ணிட்டானோ. இருக்கும் இருக்கும் நான் வந்தா தான் மிஸ்டர் பஃர்பெக்ட்க்கு எல்லாமே நாசமாப் போய்டுமே" என்று நினைத்தவளுக்கு முகம் வாடியது.

"வேலை சொன்னதும் மூஞ்சி எதுக்கு கல்கத்தா வரைக்கும் போய்ட்டு வரது...?"

"மாமா வெயில போனா பேஸ் டார்கி ஸ்கின் ஆகிடும் மாமா, அப்புறம் யாரு என்னைய கட்டிப்பா," என்று சிணுங்கியவளை...கண்ணாடி வழியாக முறைத்தவன்..

"இப்படி வெயிலுக்கு பயப்படரவ இந்த படிப்பை எடுத்து படிச்சிருக்கக் கூடாது... ஏசில உக்காந்து வேலைப் பார்க்கற படிப்பா பார்த்து எடுத்துருக்கனும்" என்றவனின் குரலில் ஏகத்துக்கும் நக்கல் இருந்தது.

"நான் என்னமோ இந்த படிப்புதான் வேணும்னு அடம் பிடிச்சி எடுத்து மாதிரி சொல்றீங்க, நீங்க தானே இதை தான் படிக்கணும்னு கம்பெல் பண்ணீங்க" என்றவள். "இதுலயும் கவெர்மென்ட் ஜாப் இருக்கு மாமா... என்னால எக்ஸாம் எழுதி எனிடைம் பேன்க்கு கீழையே உக்காந்து வேலைப் பார்க்க முடியும்..அதனால களை எடு,மஞ்சள் வெட்டு, நாத்து நடுனு இம்சை பண்ணாதீங்க"

"கிழிப்ப... வெறும் வாய் தான் உனக்கு வேற ஒண்ணுமில்ல..." என்றவனின் கார் பண்ணையினுள் நுழைய..

"நான் பேசறதுல உங்களுக்கு என்ன மாமா கஷ்டமா இருக்கு? என் வாய், என் இஷ்டம்,நான் அப்படி தான் பேசுவேன், உங்களுக்கு பிடிக்கலைனா காதுல பஞ்சு வெச்சுக்கோங்க அதையும் மீறி நான் பேசறது கேட்டுச்சினா காதை அறுத்து காக்காய்க்கு போடுங்க" என்று முறுக்கியவாறே வண்டியை விட்டு இறங்கியவள் , வேகமாக அங்கிருந்து சென்று விட

"அவளைப் பற்றி தனக்கு என்ன கவலை எப்படியோ பட்டுட்டு போகட்டும்" என்று வேந்தன் அடுத்த வேலையைப் பார்க்க சென்று விட்டான்.

"அண்ணா அந்த பத்து மரத்து தேங்காயை மட்டும் விட்டுட்டு மத்ததை போடச் சொன்னேனே என்ன பண்ணீங்க? " என்றான் மேனேஜர் ஆறுமுகத்திடம்.

"நீங்க சொன்னதா தேங்காய் போடற முருகேசனுக்கு சொல்லி விட்டுருக்கேன் தம்பி...அவனும் அவன் தம்பியும் திருவிழாவுக்கு போயிருக்காங்களா நாளைக்கு வந்து போடறேன்னு சொன்னான், இந்த வருஷம் பருப்பு கொஞ்சம் விலை கூடுதலா போகும்னு சொல்றாங்க..பாத்துகிட்டு போட்டா என்ன" என்று இழுத்தவரை

"அதுலாம் வேண்டாம் அண்ணா... இப்போவே போட்டுருங்க.. எல்லா இடத்துல இருந்தும் தேங்கா பருப்பு வரதுக்கு முன்னாடி நம்ப பருப்பு மண்டிக்கு போனாலும் லாபம் தான்.. அதிகம் லாபம் தேவையில்ல அண்ணா.. செலவுக்கு மீறி கொஞ்ச லாபம் இருந்தா போதும்" என்றவன்

"குச்சி கிழங்கும் இந்த வருஷம் சம்மல் தான் போலண்ணா...விளைச்சல் பண்ண நம்ப கைக்காசை தான் போடணும் போல.. மேல எதுவும் எடுக்க முடியாது" என்றான்.

"ஆமா தம்பி அதுவும் இந்த வருஷம் நல்ல விளைச்சல் வந்துருக்குனு விலை விழுந்துடுச்சி"என்று சொல்லிக்கொண்டிருக்க..

வெள்ளை சட்டை கருப்பு பேண்ட்டில் முறுக்கிய தேகத்துடனும் கம்பீரமாக பேச்சிக் கொண்டிருக்கும் தன் மகனை ரசித்தவாரே வந்த மாலதி "வேந்தா....." என்றார்.

"சொல்லுங்கம்மா.."

"அருவிக்கு இளநீர் பாயசம் குடிக்கணும் போல இருக்கா. ஒரு 20 இளநீ போட சொல்லுப்பா" என்றார்.

"ஓ.... " என்றவனுக்கு நன்றாகவே தெரியும் இளநீர் என்றால் தலைகீழாக நின்றுக் கூட குடித்துவிடுவாள் என்று காலையிலையே கேப்பாள் என்று நினைத்தவனுக்கு இது தாமதம் தான் என்று தோன்ற..

"மாறா... அந்த இரண்டு மரத்துலையும் இரண்டு கொழை இளநி போட்டுடு" என்றான்..

"எப்போதும் சாப்பிடும் விஷயத்தில் கணக்கு பார்க்க மாட்டான் வேந்தன்.. அதுப்போல சாப்பாட்டை யாரும் குப்பையில் போடுவதையும் அனுமதிக்க மாட்டான்.. அப்படி போட்டுவிட்டது அவனுக்கு தெரிந்தால் அவர்களுக்கு வேந்தன் பாணியில் தண்டனை கண்டிப்பாக உண்டு.

வேந்தன் தன் வேலையைப் பார்க்க அங்கிருந்து சென்றுவிட்டான்

"கிருபா மாமா... கிணத்துல போய் குளிக்கட்டுமா?" என்று அருவி வந்து நிற்க

"வேந்தன்கிட்ட கேளு அரும்மா, நான் பாட்டுக்கு ஏதாவது சொல்லி அவன் என்கிட்ட வந்து கத்துவான், அந்த தடிமாட்டுகிட்ட எவன் திட்டு வாங்கறது என்று அருவியைப் பார்த்து கண்ணடித்தார்.

"எல்லாமே அவன்கிட்ட தான் கேட்கணுமா....? இதுலாம் கொஞ்சம் கூட நியாயமே இல்ல, ரொம்ப தான் இந்த வீடு அவனை தலைமேல தூக்கி வெச்சிட்டு கொண்டாடுது" என்று மனதுக்குள் புலம்பியவளை..

"வா நம்ப போய் குளிக்கலாம்" என்று அழைத்துச் சென்றான் இனியன்.

"வேண்டா இனியா அந்த பஃர்ப்பெக்ட் வந்தா பேசுவான்" என்றாள் கோவத்தில்.

"யாரு அது.."

"வேற யாரு உங்க நொண்ணதான்."

"அவருக்கு அதுதான் பேரா" என்றவன் மெல்லிதாக சிரிக்க..

"அவனுக்கு ரூல்ஸ் ராமானுஜம்னு பேர் அப்போ அப்போ எது தோணுதோ அதை சொல்ல வேண்டியது தான்.. எப்போ பாரு எதையாவது சொல்லிட்டே இருக்கான்" என்று கத்த அவளின் கெட்ட நேரமோ என்னவோ அருவி பேசிய அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் கேட்டு விட்டான் வேந்தன்....

அவளை நெருங்கியவன் "ஆள் இருக்கும் போது மாமா ஆள் இல்லாத போது அவன் இவனா? " என்றவனை.

"அண்ணா அவ விளையாட்டுக்கு தான்" என்று இனியன் ஆரம்பிக்கும் போதே அவனை திரும்பி அனல் பார்வை பார்த்தவன்.. "கிளம்பு" என்றான்

அதற்கு மேல் இனியன் அங்கு நின்றால் நடக்கும் அனைத்திற்கும் அவன் அல்லவா பொறுப்பாவான் அதனால் அருவியை திரும்பிப் பார்த்தவாரே அங்கிருந்து சென்றுவிட்டான்.

அருவியின் மனமோ " போச்சி, போச்சி இதுக்கு வேற ஒரு மணி நேரம் கிளாஸ் எடுப்பான்...அந்த அறுவையை எவன்டா கேக்கறது? இனியா இப்படி மாட்டிவிட்டு போறியே" என்று அவள் மனம் ஏக்கமாக இனியனைப் பார்க்க..

அருவி நினைத்ததுப் போல் எதுவும் வேந்தன் பேசவில்லை.அவளை ஒருப் பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

"இவன் பேசிட்டு போனாலே வீட்டுல இருக்கற எல்லோரும் அட்வைஸ்ங்கிற பேர்ல பேசியே கொல்லுவாங்க, இதுல பேசாம போனா என்ன ஆகுமோ" என்று உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியே அதைக் காட்டிவிட்டால் அருவியின் கெத்து என்ன ஆவது....

எல்லோரும் சாப்பிட வாங்க என்று அமுதா அழைக்க... தலைவாழை இலையுடன் பந்தி தயாராகியது..

நாட்டுகோழி குழம்பு நல்லெண்ணெயை ஊற்றி சமைத்திருக்க வாசம் ஆளை தூக்கியது, அதனுடன் சிக்கன் 65, வஞ்சர மீன் வறுவல், மட்டன் சுக்கா என்று பல விதமாக உணவுகள் இருக்க... அருவி கேட்ட இளநீர் பாயசமும் இருந்தது..

சிறியவர்கள் பெரியவர்கள் அனைவரும் பந்தியில் அமர அமுதாவும், நிர்மலாவும் பரிமாறினார்கள்.

"அத்தை வஞ்சரம் ஆளை தூக்குது... செம..." என்று சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டவளுக்கு அருகில் இருந்த நிரூபன் மீனின் முள்ளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்க...

"ஏண்டாம்மா ஹாஸ்டல சாப்பாடு நல்லா இல்லையா...?" என்று பேத்தி சாப்பிடும் அழகைப் பார்த்து கேட்டார் தாத்தா

"அவளே எது காரணம் கிடைக்கும் இங்கையே டேரா போடலாம்னு இருப்பா இவர் வேற எடுத்துக் குடுத்துட்டாரா இனி ஹாஸ்டல் போன மாதிரி தான்" என்று கார்த்தி இனியனின் காதை கடிக்கவும்...
அவன் புன்னகையுடன் தலையை அசைத்தான்.

"அவ அங்க சாப்பிட்டா தானே தாத்தா நல்லா இருக்கு இல்லைனு தெரியும்" என்ற ரித்விகாவை "சொல்லாதடி" என்று கண்ணைக் காட்டி தடுக்க முயன்றாள் அருவி.

ஆனால் ரித்விகா அதைக் கண்டுக் கொள்ளாமல் இருக்க... "அப்போ எங்கதான் சாப்பிடரா?" என்றனர் பெரியவர்கள் ஒருசேர..

சிறியவர்கள் அனைவரும் அருவியைப் பார்க்க அவளோ தலைமேல் கை வைத்து அதான் ஆரம்பிச்சிட்டியே சொல்லு என்பது போல் அமர்ந்திருந்தாள்.

அதை எல்லாம் பெருசாகவே எடுத்துக் கொள்ளாத ரித்விகா.. "அவ காலையில சாப்பிடவே மாட்டா... மதியம் ஏதோ கொறிச்சி வைக்கிறேன்னு தட்டை தடவிட்டே உக்கார்ந்து இருப்பா... நைட் அம்மா போன் பண்ணி சாப்பிட்டியா கேப்பாங்க அவங்ககிட்ட கிட்ட பொய் சொல்லக் கூடாதுனு ரெண்டு இட்லி இல்லனா ரெண்டு சப்பாத்தி தான் சாப்பிடுவா... அதுக்கு மேல என்ன கெஞ்சு கெஞ்சுனாலும் ஹுஹும் ஒன்னும் பண்ண முடியாது ... அந்த ரெண்டையும் சாப்பிட வைக்கறதுக்குள்ள ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்மா" என்று மாலதியையும் அமுதாவையும் பார்த்து சொல்ல.

"என்ன அருவி இதுலாம்...காலையில சாப்பாடு எவ்வளவு முக்கியம்னு தெரியுமா... சாப்பிடாம இருந்தா அல்சர் வந்துடுமா?" என்று ஆள் ஆளுக்கு அறிவுரை சொல்ல வர..

வேந்தன் இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்தவனை கொலைவெறியுடன் பார்த்தாள் அருவி..

என்ன என்று புருவத்தை உயர்த்தியவனிடம்... "இதுலாம் உங்களால தான்" என்றாள் உதட்டசைவில் .

"நானா உன்னைய சாப்பிட வேண்டாம்னு சொன்னேன்" என்று கண்களால் அவன் கேக்க...

"நீங்க தானே ஹாஸ்டல் சேர்த்து விட்டீங்க" என்று முனவியவள்... "ஐயோ எல்லோரும் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா... எனக்கு அவங்க போடற பாறாங்கல்லு இட்லியும், வராட்டி சப்பாத்தியும் பிடிக்கவேயில்ல... இதை எல்லாம் தாண்டி உப்புமானு ஒன்னு போடுவாங்க அதை வாய்ல கூட வைக்க முடியாது" என்றாள்.

"ரித்துவும் அதைதானே சாப்பிடுது உனக்கு மட்டும் என்ன?" என்று வேந்தன் கேட்டுவிட...

"அவளுக்கு பிடிச்சிருக்கு சாப்பிடறா.... எனக்கு பிடிக்கல நான் சாப்பிடல அவ்வளவு தான் விட்டுருங்க.. இதைக் காரணம் காட்டிலாம் நான் வீட்டுக்கே வந்துட மாட்டேன் யாரும் பயப்பட வேண்டாம்" என்றவள் பாதி சாப்பாட்டிலையே எழுந்து சென்றுவிட்டாள்
 
Saroja

Well-Known Member
அடப்பாவிகளா சாப்படற
புள்ளைய இப்படி எழுப்பிட்டேங்களா
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top