மாயவனின் அணங்கிவள் -21

Advertisement

Priyamehan

Well-Known Member
"மாமா மாமா... ப்ளீஸ் நம்மளும் ஒண்டெர்லா போலாம் மாமா..." என்று தேவா அடம்பிடிக்க ஆரம்பிக்க...

"எனக்கு வேலை இருக்கு தேவா,தோட்டதுல மாமர நடவு போய்ட்டு இருக்கு... ரெண்டு நாளா தேங்காய் போட ஆள் வராங்க.. கிட்ட ஆள் இல்லாம எப்படி?"

"அண்ணா எங்களுக்காக ஒரு மூனு நாள் வர மாட்டிங்களா எங்களுக்கும் இப்போதான் லீவ் விட்டுருக்காங்க.. தேவாவும் கூட இருக்கா... நம்ப எல்லோரும் சேர்ந்து போனா நல்லா இருக்கும்ண்ணா ப்ளீஸ் வாங்கண்ணா.என்று ரித்துவும் கெஞ்சலாக கேக்க..

இல்ல ரித்து மூனு நாள் வேலையை அப்படியே போட்டுட்டு வர முடியாது...என்றான்.

அதில் சந்தோசப்பட்டது இனியன் தான்... வேந்தன் வருகிறான் என்றாலே அருவி வரமாட்டாள்... அப்டியே வந்தாலும் இவன் போடும் ரூல்ஸில் சரியாக என்ஜோய் பண்ண முடியாது..என்று நினைக்க..

"அண்ணா மூனு நாள் தானே ப்ளீஸ் ப்ளீஸ்" என்று மீண்டும் கெஞ்ச அவளுடன் தேவாவும் இணைந்துக் கொண்டாள்.

சற்று யோசித்தவன்
"சரி போலாம்" என்று விட்டான் வேந்தன்..

"நீயலாம் ஒரு அண்ணன்.. பார்த்தியா என்னோட வேந்தன் அண்ணாவை, நான் கேட்டதும் சரின்னு சொல்லிட்டாரு" என்று ரித்து கார்த்திக்கிடமும் இனியனிடமும் பழிப்பு காட்ட

"இனியா நம்மளும் கண்டிப்பா போறோம்... என்னோட வேலையை அப்பா தலையில கட்டிட்டு வரேன் மூனு நாள் பார்த்துக்க மாட்டாரா?" என்ற கார்த்திக்... "நீ என்னடா பண்ண போற?" என்று இனியனிடம் கேட்டான்.

"உனக்கு சித்தப்பானா எனக்கு தாத்தா... வெட்டியா வீட்டுல தானே இருக்காரு போய் மில்லுல சும்மா உக்கார்ந்து இருக்கட்டும்" என்று கார்த்திக்கிடம் சொல்ல

"இனியா தாத்தா வயசானவரு... அவரை எதுக்கு தொல்லை பண்ற...அவர் வேண்டாம் வேற யாரையாவது ஏற்பாடு பண்ணு?" என்று வேந்தன் மிரட்ட...

"அண்ணா தாத்தா வயசுல அப்துல்கலாம் இந்த நாட்டுக்கே குடியரசு தலைவரா இருந்தார் இவரால மூனு நாளைக்கு மில்லுல இருக்க முடியாதா..? என்ன ஆனாலும் அருக்கூட போக தான் போறேன் தாத்தா மில்லுக்கு போகத்தான் போறாரு" என்று வேந்தனிடம் சொல்லிவிட்டு சேதுபதியை அழைத்து வந்து நடுக் கூடத்தில் நிறுத்தினான்.

"என்ன இனியா? எதுக்கு இப்படி இழுத்துட்டு வர...?"

"தாத்தா மூனு நாளைக்கு மில்லுக்கு போங்க..." என்று ஆடர் போட்டான்..

போறிங்கிளா என்று கேக்காமல் போ என்று ஆடர் போடவும் வேந்தனுக்கு கோவம்... அந்த கோவம் கூட அருவியின் மீது தான் திரும்பியது..

"அங்க இருந்துட்டு இங்க எல்லோரையும் ஆட்டி வைக்கற... இவன்ங்களுக்கு அவ பேச்சைக் கேட்டுட்டு ஆடுறான்ங்க" என்று அருவியை நினைத்துப் பல்லைக் கடிக்க..

"ஏன் நீ எங்க போற..?"என்றார் சேனாதிபதி

"நான்னும் கார்த்தியும் அருவை பார்க்க காலேஜ் போய்ட்டு அப்படியே கேரளா போறோம்..."

"ஓ... அவளே இங்க வரமாட்டேன்னு முகத்தை தூக்கி வெச்சிட்டு சுத்தறா.. நீங்க கூப்பிட்டதும் கேரளா வந்துடுவாளா...?"

"வர சொன்னதே அவ தான் தாத்தா.. நாங்க போறோம் நீங்க மில்லுக்கு போறிங்களா? இல்லையா? அதை சொல்லுங்க?"

"ம்ம் போறேன் போறேன்... நீங்க எப்போ போறீங்க?"

"நாளைக்கு..."

"நிருவையும் கூட கூட்டிட்டு போங்க பாவம் அவன் மட்டும் வேலை வேலைன்னு அலைஞ்சிட்டு இருப்பான்"

"வந்தா கூட்டிட்டு போறோம்" என்றான்.

"சரி இரு வரேன்" என்றவர் அவரது அறைக்குச் சென்று விட்டு வந்தார்.

"எங்க தாத்தா போனீங்க?"

"இந்தா பணம் ..."

"எதுக்கு...?"

"அரும்மா கேட்டதை வாங்கிக் குடு.... வெளிய போனா பார்க்கரதை எல்லாம் கேப்பா.."என்று இனியனின் கையில் பணத்தை திணிக்க

"அதுக்கு என்கிட்ட பணம் இல்லையா? உங்ககிட்ட வாங்குனேன்னு தெரிஞ்சா பாதி வழியில ஓடி வந்துடுவா," என்று சலிப்பாக சொன்னாலும் அவர் கொடுத்தப் பணத்தை எடுத்து தன் சட்டைப் பையினுள் வைத்துக்கொண்டான்.

"நான்தான் குடுத்தேன்னு சொல்லாதடா..."

"அப்படி எதுக்கு கொடுக்கணும் தாத்தா .. அவ மட்டும் தான் உங்க பேத்தியா? இப்படி செல்லம் குடுத்து குடுத்து தான் அவளை குட்டி செவராக்கி வெச்சிருக்கீங்க சொல்ற பேச்சை ஒன்னுக் கூட கேக்கறதில்லை" என்று வேந்தன் சத்தம் போட...

"உங்களுக்கும் வேணுனா வாங்கிட்டு போங்க...சும்மா சத்தம் போட்டுட்டு இருக்காதீங்க... காலையில அந்த புள்ள வரலைன்னதுமே மனசு கஷ்டமா போயிடுச்சி... பத்து நாள் அதுக்கு தேவையானதுலாம் வாங்கிக் குடுக்கக் கூட ஆளில்ல... இவ்வளவு பேர் இருந்து என்னதுக்கு ஆகுது" என்று தாத்தா கவலைப்பட...

"எங்களுக்குலாம் வேண்டா உங்க ஆசை பேத்திக்கே குடுங்க,எங்களுக்கு செலவு பண்ண மாமா இருக்கார்" என்று தெனாவெட்டாக சொன்னாள் தேவா..

அதில் சேனாதிபதியின் முகம் இறுகிப் போனது..

"நாளைக்கு இயர்லி மார்னிங் கிளம்பணும் சாப்பிடும் போது எல்லோருக்கிட்டையும் சொல்றேன் தேவையானதை எடுத்து வெச்சுக்கோங்க" என்று வேந்தன் அவன் அறைக்குச் சென்று விட..

தேவாவும் ரித்துவும் ஹை பை கொடுத்துக் கொண்டனர்.

"ஐ ஜாலி கேரளாக்கு போகப் போறோம்... செமையா என்ஜோய் பண்ணலாம்" என்று ரித்து குதிக்க

"அந்த அருவியும் வந்து இம்சை பண்ணுவாளே அதை நினைச்சா தான் ஒரு மாதிரி இருக்கு" என்றாள் தேவா...

"அவளை விடு தேவா..வேந்தண்ணா இருக்கும் போது அவ எதுவும் பண்ண மாட்டா... வா நம்ப பேக் பண்ணுவோம்" என்று தேவாவின் கையைப் பிடித்து இழுத்துப் போக....

"அரு பிளான் பண்ணது...இதுங்க இடையில புகுந்து நாசம் பண்ணிடுச்சிங்க.. இதுங்கலாம் வருதுன்னு தெரிஞ்சா அவ வரமாட்டேன்னு சொல்லிடுவா என்னடா பண்றது?" என்றான் இனியன் கார்த்திக்கிடம்

"நீ அவக்கிட்ட சொல்லாத இனி... எல்லோரும் போனா நல்லாதான் இருக்கும் நான் நிருவுக்கு கால் பண்ணி கேக்கறேன்" என்று நிரூபனுக்கு போன் பண்ண..

அவனோ "ஆயிரத்து எட்டு வேலை இருக்கு என்னால முடியாது நீங்க போய்ட்டு வாங்க" என்று விட்டான்.

இரவு உணவு உண்ண அனைவரும் ஒன்றுக் கூடும் போது..காலையில் கேரளா போகப் போவதாக வேந்தன் கூறினான்.

"அவ்வளவு தூரம் போறீங்க அருவி இல்லாமலா.. அவ இதுமாதிரி வெளி இடத்துக்கு போறதுக்குலாம் ரொம்ப ஆசைப்படுவா" என்றார் அமுதா..

"வேண்டாம் அண்ணி அவ ஹாஸ்டலையே இருக்கட்டும்.... அங்கலாம் போனா ரொம்ப வால் பண்ணுவா அவளை அடக்க முடியாம இவங்க தான் கஷ்டப்படுவாங்க" என்று நிர்மலா மறுத்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. "அவளும் தான் வரா... கார்த்தி அவளை போய் பிக்அப் பண்ணிட்டு பாலக்காடு ரோட்டுக்கு வந்துடுவான் அங்க இருந்து எல்லோரும் ஒன்னா தான் போறோம்.. நிரு நீயும் வா" என்று வேந்தன் நிரூபனை அழைக்க..

"இல்ல வேந்தா...
திடீர்னு வேலை எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு வர முடியாது..."

"நாங்க பார்த்துக்கறோம் நிர்மலா இருக்கா...நீயும் போய்ட்டு வா நிரு எப்போவும் வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கக் கூடாது இதுமாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது சுத்திப் பாரத்துட்டு வா" என்றார் தினகரன்.

அதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்று

"சரி மாமா.."என்று விட்டான்.

"நிரு"

"சொல்லுங்க அத்தை"

"வரும் போது அருவை இப்படியே வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுங்க.."

"அவ வந்தா அழைச்சிட்டு வரேன் அத்தை, வரலைன்னு சொல்லிட்டா கம்பெல் பண்ண மாட்டேன்" என்று சாப்பிட்டு எழுந்து சென்று விட்டான்.

"பெரிய மகாராணி எல்லோரும் அவளை தலை மேல தூக்கி வெச்சி ஆட்டிட்டு இருக்காங்க... இந்த திருவிழாவுக்கு அம்மா வருவாங்கள அப்போ பேசிக்கறேன் அவளை," என்று தேவா கறுவிக் கொண்டாள்.

"கார்த்தி"

"சொல்லுங்க அண்ணா"

"அவ கிட்ட சொல்லிட்டு இருக்காத... ராங்கி புடிச்சவ அப்புறம் வரலைன்னு புடிவாதம் புடிக்க ஆரம்பிச்சிடுவா" என்று சொல்லிவிட்டு வேந்தன் அவன் அறைக்கு சென்று விட்டான்.

கார்த்திக்கும், இனியனும் தேவையான பொருட்களை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அருவியிடம் இருந்து போன் வந்தது.

அழைப்பை ஏற்ற கார்த்திக் "சொல்லு அரு" என்றான்.

"காலையில எத்தனை மணிக்கு வரீங்க?"

"யார் யார் வராங்கனு தெரியுமா அரு?"

"யார் யாரா... அப்போ குரங்கு கூட்டம் எல்லாம் வருதா?"

"ம்ம்ம்"

"அவள்க வந்தா நான் வரமாட்டேன்... அதும் உன்னோட நொண்ண வந்தா நான் வரவே மாட்டேன் ரூல்ஸ் ராமனுஷன் சும்மா அப்படி இப்படி இருன்னு ரூல்ஸ் பேசியே கொன்னுடுவான்...போற இடத்துலக் கூட நிம்மதியா இருக்க முடியாது" என்று யாழினி சிணுங்க..

"அரு ப்ளீஸ் அண்ணாகிட்ட இதை சொல்ல முடியாது... நிருவும் வரான்.. நம்ப எல்லோரும் ஒன்னா இருக்கும் போது அவங்க என்ன பண்ணிட முடியும்? சொல்லு..." என்று இனியன் சமாதானம் செய்ய..

"வேண்டா இனி..."

"அரு எனக்காக புரிஞ்சிக்கோ"

"ம்ஹும்" என்று சிணுங்கியவளிடம் இருவரும் மாற்றி மாற்றி சமாதானம் செய்யவும் அவர்களுக்காக "சரி" என்றாள்.

அடுத்த நாள் அதிகாலையில் வேந்தன்,ரித்து,தேவா, நிரு என நால்வரும் ஒரு காரிலும் இனியன் கார்த்திக் ஒரு காரிலும் கிளம்பினர்.

முதலில் இனியன் கார் அருவி விடுதிக்கு சென்று அவளை அழைத்துக் கொண்டு பாலக்காடு சாலைக்கு வந்து அங்கு காத்திருக்கும் வேந்தன் காருடன் இணைந்துக் கொள்ளும் என்று இவ்வாறு தான் முடிவு செய்திருந்தனர் ஆனால் இப்போது வேந்தன் என்ன நினைத்தானோ... "நாங்களும் அங்க வரோம்" என்று விட்டான். வேந்தன் சொன்னப் பிறகு இனியனால் மறுத்து பேச முடியவில்லை.

இனியன் கார் அருவியின் விடுதிக்கு செல்ல வேந்தன் கார் விடுதிக்கு வெளியே காத்திருந்தது..

அருவி தன்னுடைய உடைமைகளுடன் விடுதியின் வாசலில் காத்திருக்க , வெளியே நின்ற வேந்தன் அருவியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

முன்பு இருந்ததை விட லேசாக பூசினார் போல் இருந்த தேகம் மின்னு மினுவென்றிருக்க முகமும் அதே தேஜஸை தான் காட்டியது... வெளியே போகப் போகிறோம் என்ற ஆர்வத்தால் எழுந்த துள்ளாகக் கூட இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

வேந்தனின் பார்வை அருவியை விட்டு எங்கும் திரும்பவில்லை.

இனியன் அருவியின் பையை எடுத்து கார் டிக்கியில் வைத்துக் கொண்டிருக்க... கார்த்திக்கை பின்னால் தள்ளிவிட்டு இனியனின் அருகில் அமர்ந்தாள் அருவி..

வேந்தன் கொடுக்காத இடத்தை இனியனும் கார்த்திக்கும் கொடுக்கவும், ஏனென்றே தெரியாமல் வேந்தனுக்கு இனியன் கார்த்திக் மீது கோவம் வந்தது.

இனியனின் கார் முன்னால் செல்ல.. வேந்தன் கார் அவர்களை பின் தொடர்ந்து போனது....

அருவி ஏற்கனவே அருந்த வால்... இதில் வேந்தன் கார் பின்னால் வருகிறது என்றால் அமைதியாக இருப்பாளா என்ன...அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே

காரின் மேல் தட்டை எடுத்துவிட்டு எழுந்து நின்று இருக் கைகளையும் விரித்து வானத்தை நோக்கி கூச்சல் போட்டாள்...

"ஆஆஆ.... இனியா செமையா இருக்கு.... கார்த்திக் நீயும் வரியா?"

"பின்னால அண்ணா கார் வருது அரு கம்முனு உக்காரு... ஏற்கனவே ஆயிரம் ரூல்ஸ் பேசுவார்... ஈஸியா பேச வாய்ப்பு குடுக்கறியா?"

"அவருக்கு நான் எதுக்கு பயப்படணும்.... நீங்க வேணும்னா பயந்து சாவுங்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வேந்தனிடம் இருந்து கார்த்திக்கிற்கு அழைப்பு வந்துவிட்டது..

"அரு அண்ணா தான் கூப்பிடறார்" என்க

தலையை உள்ளே நீட்டி "பேசு..."என்றாள்.

"நீ உக்காரு இதுக்கு தான் கூப்பிடறார்னு தெரியலையா உனக்கு"

"போடா அவருக்கு பயந்துலாம் உக்கார முடியாது... நீ எடுத்துப் பேசு.."

வேந்தனின் அழைப்பை ஏற்றவன் "அண்ணா" என்க..

"காரை ஓரமா நிறுத்த சொல்றான் வேந்தன்" என்றான் நிரு..
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top