பிரிவு : பொருட்பால், இயல் : குடியியல், அதிகாரம் : 101. நன்றியில் செல்வம், குறள் எண்: 1002 & 1004

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1002:
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

பொருள் :-பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 1004:
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

பொருள் :- பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :- சொல்லமுடிய பொருள் சேர்த்து அனுபவிக்காமல் இறந்தால் என்ன பயன், அதை தகுதியானவற்கு கொடுக்காதவர் பிறவித்துன்பம் அடைவார். பொருள் சேர்க்கும் பண்பை கடந்து பிறவற்றின் மீது ஆர்வம் இல்லாதவர் பூமிக்கு பாரமானவரே. கொடுப்பது தூய்ப்பது என செய்யாத பொருள் வீணே. பயனற்ற செல்வம் பழான மரம் ஊர் நடுவே இருப்பதை போன்றது. அறமற்று சேர்த்த செல்வம் அடுத்தவரே அனுபவிக்க ஏதுவானது. சீரான செல்வருக்கு வரும் துன்பம் மாழைக்கான கார் இருள் போல் வந்து நன்மை பயக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top