'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 38

Advertisement

Priyaasai

Active Member
அகனலர் - 38.2

அலர் 'அண்ணா ரொம்ப வலிக்குதா..??' என்று கேட்கவுமே புரிந்து போனது நிச்சயம் இது போதும் வெற்றிக்கு தன் வாழ்வில் கும்மி அடிக்க அதனால் அடக்கி வாசிக்க முடிவெடுத்தவன்,



"ஹீஹீ என்ன மச்சான் இது, சாதாரண புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு எல்லாம் பஞ்சாயத்து வச்சிக்கிட்டு அதுலயும் உன்ன மாதிரி பெரிய மனுஷனுக்கு இது அழகா சொல்லு" என்று கேட்க..,



"எது பெரிய மனுஷனா..?? அது யாருடா எனக்கு தெரியாம..??" என்று இப்போது அலரின் கையை விட்டுவிட்டு கேட்க..,



"அதுல என்னடா சந்தேகம் நீ தான் நீயே தான்..!! அதுலயும் நீ கவுன்சிலர் வேற.., அந்த வெள்ளை வேஷ்டி சட்டையில அப்படியே சிங்கம் மாதிரியே இருப்ப மச்சான்.., ஒரு வார்டையே கட்டி காக்கிறதுன்னா சும்மாவா.., தலைவன் டா நீ .!! நாளைய விடிவெள்ளி என்று மேலும் அவன் புகழ் பாட..,



மார்பின் குறுக்கே கரம் கோர்த்து அனைத்தையும் மெளனமாக கேட்டு கொண்டிருந்தவன்.., "இது எல்லாம் என் இடுப்பை உடைக்கும் போது தெரியலையா..?? நான் வேட்டி சட்டையில இருக்கிறது தானே உனக்கு பெரும் பிரச்சனைன்னு சொன்ன" என்றான் ஒற்றை கேள்வியாக..,



அலரோ "இது எப்போண்ணா ஆச்சு..??" என்று பதட்டத்துடன் கேட்க,



"ஒஹ் இதையும் உன்கிட்ட இருந்து மறைச்சிட்டானா..?? உனக்கு தெரியாதா..??" என்றிட



"இன்னும் எவ்ளோடா என்கிட்டே இருந்து மறைச்சிருக்க..??" என்று கண்களாலேயே அவனை எரிக்க தொடங்கினால் அலர்விழி..,



"பரதேசி நானே இப்பதான்டா சரிகட்டி வச்சேன்.., இப்படி கோர்த்து விடுறியே" என்று முனுமுனுத்தவன்.., இனியும் வெற்றி இங்கே இருந்தால் தன் கதையை முடித்து விடுவான் என்பது எழிலுக்கு தெரிந்து போக.., முடிந்தவரை விரைவாக வெற்றியை அனுப்பிட முடிவு செய்தான்.



ஆம் இருவரும் மாமன் மகன் அத்தை மகன் என்பதை கடந்து சிறு வயது முதற்கொண்டே நண்பர்கள் என்பதால் இருவருக்கு மட்டுமேயான ரகசியங்கள் ஏராளம்.., சரியான நேரத்தில் தன்னை பொறியில் சிக்கிய எலி ஆக்கி நிறுத்தி இருப்பவனை மனதினுள் கொலை வெறியுடன் பார்த்தவன் .., இதழ்களில் புன்னகையை தவழ விட்டு..,



"அது ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்.., எதிர்பாராம நடந்துடுச்சுடி அப்படி தானே மச்சான்" என்று இறைஞ்சுதலாக வெற்றியை பார்க்க..,



வெற்றியோ "இப்போ புரியுதாடி என் பவர்..", என்ற கேள்வியை கண்களில் தேக்கி அவனை பார்க்க..,



"தெரியுதுடா பன்னி, மொதல்ல இடத்தை காலி பண்ணு" என்று இவனும் கண்களால் வேண்டுகோள் விடுக்க..,



'எப்படி சும்மா போறது' என்று எண்ணியவன் அலரை அருகே அழைத்து அவள் கரங்களை விரித்து பார்த்தவன் ஒரு நொடி ஆடிபோய் விட்டான்.



பின்னே அவள் மலர்க்கரங்களோ சிவந்து கன்றி போயிருந்தது.., எழிலை ஏறிட்டு பார்த்தவன்



"அடப்பாவி என்னடா இது என் தங்கச்சி கை இப்படி செவந்து போயிருக்கு..!! உன்னோட கொடுமைக்கு ஒரு அளவில்லையா..?" என்று அதிர்ச்சியாக வெற்றி கேட்க..,



"வேணா மச்சான் என்னை வெறி ஏத்தாத.. அப்புறம் அனுபவிப்ப"



"ஐயோ இது மட்டும் என் நைனா பார்த்தாருன்னா துடிதுடிச்சி போயிடுவாறேடா.. ஒரு பொண்ணுடா.., ஒரே பொண்ணு அவருக்கு தெரியுமா..?" என்று சீற..,



'ண்ணா' என்று அலர் அவனை திகைப்புடன் பார்த்தாள். ஆம் எழிலிடம் அவள் காட்டும் இந்த அவதாரம் மட்டும் நாதனுக்கு தெரிந்தால் அலரின் கதி அதோகதிதான்... "இது என்ன பழக்கம் இப்படியா உன்னை வளர்த்தேன்.., மரியாதையாக நடக்க தெரியாதா..? இது அது..." என்று அவளை ஒருவழி ஆக்கி விடுவார். வெற்றி நாதனிடம் தெரிவிப்பேன் என்றதில் நிஜமாகவே அலர் அதிர்ந்து போனாள்.





வெற்றி அவளிடம் கண்சிமிட்டி தலை அசைக்கவும் அதை புரிந்துகொண்டவளின் முகத்திலும் இதுகாறும் இருந்த உணர்வு நீங்கி குறும்பு தலைதூக்கியது..,



வெற்றியோ புன்னகையை மறைத்தவாறு தீவிரமான முகபாவத்துடன் எழிலிடம்,

"இதோ பாரு நீ பண்ணின வேலைக்கு அவரு அமுலுவை திரும்ப உன்கிட்ட அனுப்பினதே பெருசு அப்படி இருக்கும்போது வந்தவளை வச்சி ஒழுங்கா வாழுவியா... அதை விட்டுட்டு இப்படி கொடுமைபடுத்தற, கேட்க யாரும் இல்லைன்னு நெனச்சியா" என்று ஆவேசமாய் கேட்டவன்..,



"என் சித்தப்பு இங்க இல்லைங்கிற தைரியமாடா உனக்கு" என்று கேட்டவாறே தன் கைபேசியை எடுத்து 'இங்க காட்டுடா அமுலு' என்று கூறவும்,



'இதோண்ணா..' என்று அலரும் தன் இருகரங்களையும் அவன் முன் நீட்ட வெற்றி அதை புகைப்படம் எடுக்க தொடங்கினான்.



பதறிபோன எழில் "டேய் வெளக்கென்ன என்ன பண்ற..??" என்று அவன் பேசியை கைப்பற்ற முயற்சிக்க அதை உயர்த்தி பிடித்தவாறு,





"ஹ்ம்ம் உன் மாமனாருக்கு அனுப்ப போறேன் நீ எப்படி எல்லாம் அவளை கொடுமைபடுத்துறன்னு அவருக்கு தெரிய வேணாம்" என்று கேட்க..,



"அடேய் லூசுபயலே அவ கை ஏன் செவந்திருக்குன்னு உனக்கு தெரியாதா..?" என்று சலிப்புடன் கேட்க..,



"எனக்கு தெரியும்டி ஆனா அங்க இருக்கிறவருக்கு கை சிவந்திருக்கிறது தான் தெரியுமே தவிர.., ஏன் எப்படின்னு தெரியாது..!! இது போதுமே உன்னை அலறவிட..!! என்றிட..,



அதுக்குதான் சொல்றேன் வேண்டாம்..!! அவருக்கு கண்டதே காட்சி கொண்டதே கோலம்.., ஆத்திரத்துல எதையும் ஆராய கூட மாட்டாரு. அவர்கிட்ட எதாவது உளறி வச்சன்னா ராத்திரி நேரம்ன்னு கூட பார்க்காம வந்து கையோட அவளை கூட்டிட்டு போயிடுவாருடா.. அமைதியா இரு" என்றவன்



'இவ ஒருத்தி கையை காட்டிட்டு கீழ இறக்குடி' என்று அலரின் கரங்களை தட்டி விடவும்,



வெற்றியோ அதிர்ந்த குரலில் "படுபாவி என் எதிர்லயே என் தங்கச்சியை அடிக்கிறியா" என்றவன் "இல்லை இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அவளை உன்கூட விட்டு வைக்குறது தப்பு, கிளம்பு அமுலு" என்று கூறவும்,



'சரிண்ணா' என்றவள் அறையை நோக்கி திரும்ப,



எழிலோ பதட்டத்துடன் 'எது சரியா..? ஏய் நில்லுடி என்ன சரி, எங்க போற..?' என்று திரும்பி நடந்தவளின் கரத்தை பிடித்து இழுத்து நிறுத்தியவன் திரும்பி வெற்றியிடம்,



"மச்சான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன், எதுக்கு என் குடும்பத்துல கும்மி அடிக்க பார்க்கிற.. விட்டுடுடா, ஏற்கனவே வாங்கின அடிக்கே ஒத்தடம் கொடுக்கணும்.. அதுக்காவது இவள இங்க இருக்க விடுடா" என்று இறங்கிய குரலில் கூற,



'ஒண்ணா ரெண்டா டா நீ பண்ணினது லிஸ்ட் போட முடியாத அளவுக்கு இருக்கு' என்று பல்லை கடித்தவன் பின் மீண்டும் நினைவு வந்தவனாக, "எது உனக்கு ஒத்தடம் கொடுக்கனுமா..?? ஓஒ... கொழுப்பெடுத்து போய் நீ அடி வாங்கிட்டு வருவ அதுக்கு என் தங்கச்சி ஒத்தடம் வேற கொடுக்கணுமா..?' என்று கேட்கவும்,



எழிலோ இருகரங்களையும் இடையில் பதித்து அழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டவாறு அவனை பார்க்க, வெற்றியின் முகத்தில் அத்தனை கொண்டாட்டம், வெற்றியின் பார்வையை கண்டு கொண்ட எழில் அவனிடம்



"மச்சி ப்ளீஸ்டா, உன் கைய காலா நெனச்சி கேட்கிறேன் விட்டுடுடா போதும்.. ரொம்ப டையர்ட் ஆகிட்டேன்" என்று அவன் கரங்களை பற்றியவன் தொடர்ந்து "நான் உன் நண்பன் தானடா இரக்கமே இல்லாம இப்படி பழி வாங்கலாமா..? இதெல்லாம் தப்பு மச்சான்" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கவும்,



"ஒஓஒ கொஞ்ச நேரம் முன்ன என்னை அடிக்கும் போது உனக்கு தப்புன்னு தெரியலையா..?" என்று நக்கலாக கேட்டவன்.., எதுக்குடா கையை காலா நினைக்கணும், என் காலு எங்கயும் பிக்னிக் போகல இங்க தான் இருக்கு" என்று தன் வலது காலை எழிலின் முன் நீட்டி ஆட்டியவாறு விழு என்பதாய் பார்க்கவும்,





கொலை வெறியுடன் எழில் அவனை பார்க்க..,



சரி விடு பரவால்ல என்றவாறு சில நொடிகள் தீவிரமாக யோசித்தவன் அவனிடம், ' உன்னை பார்த்தாலும் பாவமாத்தான் தெரியுது... போதும்ன்னு நினைக்கிறேன்' என்றவன் அலரை அழைக்க உடனே அவனிடம் ஓடி சென்றவளை முறைக்க மட்டுமே முடிந்தது எழிலால்..!!



அலரின் கரங்களை பிடித்தவன் 'கை ரொம்ப வலிக்குதாடா' என்று வாஞ்சையாய் கேட்கவும்,



அலரும் லேசாக உதட்டை பிதுக்கியவாறு, 'ஆமாண்ணா, ரொம்ப எறியுது" என்று குரல் தழுதழுக்க கூறவும்,



"டேய் உங்க நடிப்புக்கு ஒரு அளவில்லையாடா" என்றவாறு எழில் விழி விரித்து வாயில் கைவைத்து அவர்களின் உரையாடலை ஒருவித திகைப்புடன் பார்த்துகொண்டிருந்தான்.



"இந்தா டா" என்று அங்கு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உலக்கையை எடுத்து அவளிடம் கொடுத்தவன், "இந்த எருமையை வெறும் கையாள அடிச்சா உன் கை என்னத்துக்கு ஆகிறது.., இதுல போடு உன் கையும் வலிக்காது அந்த எருமைக்கும் உரைக்கும்" என்றிட..,



பதறிப்போன எழில் "டேய் துரோகி, என்னடா இது" என்று கேட்க,



"தெரியலையா மச்சான்..? என்று கேட்டவன் நிஜமாவே தெரியலை என்று மீண்டும் உறுதிபடுத்திகொண்டு, "ஆப்பு மச்சி ஆப்பு அவ்ளோ சீக்கிரம் கண்ணுக்கு தெரியாது... அனுபவி ராஜா அனுபவி" என்று சீட்டி அடித்துக்கொண்டே அவிரனிடம் சென்றவன், "வா மாப்பிளை நாம போகலாம்" என்று தூக்கி கொள்ளவும்,



ஓடி சென்று மகனை பிடித்தவன் வெற்றியிடம், "அவனை எங்கடா கூட்டிட்டு போற, விடு இவனை விட்டா வேற யாரும் காப்பாத்த முடியாது.. என்னை காக்க வந்த காப்பான், விடுடா" என்று அவிரனை அவன் புறம் இழுக்க..,



"அதுதாண்டி என்கிட்டே நடக்காது" என்று கடுமையான குரலில் கூறியவன் அவிரனிடம் "உனக்கு என்ன ஐஸ்க்ரீம் ப்ளேவர் வேணும் மாப்பிள்ளை சொல்லு, மாமா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் செலிப்ரேட் பண்ணியே ஆகணும்" என்று உல்லாசமாய் விசில் அடித்தவாறு அவிரனுடன் கிளம்பிச்செல்ல,



இதழ் கொள்ளா புன்னகை அலரிடம் இதழ்கள் துடிக்க அதை அடக்கிக்கொண்டு எழிலின் புறம் திரும்ப,



அவனோ "ஏய் வேண்டாம்டி சொன்னா கேளு மொதல்ல அதை கீழ போடு.." என்றவன் அவளை தாண்டி சென்று வேகமா உள்ளே ஓடவும் கதவை அடைத்து விட்டு பொறுமையாக உலக்கையுடன் உள்ளே நுழைந்தாள் அலர்விழி.



அங்கே எழிலோ மீண்டும் அவர்களறையில் நுழைந்து கட்டிலின் மறுபுறம் பாதுகாப்பாக நின்று கொண்டிருக்க உலக்கையுடன் உள்ளே வந்தவளிடம்.., "ஏய் மொதல்ல அதை தூக்கி போடுடி" என்று கூற..,





"ஹும்ஹும் முடியாது, இன்னும் எவ்ளோ என்கிட்டே இருந்து மறைச்சிருக்க... சொல்லுடா பிராடு" என்றாள் விரக்தியான குரலில் கேட்க..,



"ஏய் அவன்தான் லூசு மாதிரி எதையோ உளறிட்டு போறான்னா நீயும் அதை பெருசா எடுத்துட்டு கேட்கிற..", என்றவாறே நகர்ந்து அறையின் வாயிலை எட்டியிருக்க..,



அதை கண்டவள் பாய்ந்து சென்று பின்புறமாக அவன் பனியனை பிடித்து இழுக்க அவளுக்கு வாகாக பனியனை கொடுத்திருந்தவன் அவள் அவனை இழுக்கையில் பன்மடங்கு வேகத்துடன் பின்னால் சாய இதை எதிர்பாராதவள் நிலை தடுமாறி படுக்கையில் விழ அவள் மீது எழில் விழுந்திருந்தான்,



தரையில் இருந்து லேசாக கால்களை உயர்த்த இப்போது எழிலின் மொத்த பாரமும் அலர் மீது "ஆஆஅ அப்பா... டேய் எந்திரிடா.. உப்ப்" என்று அவன் பாரம் அவள் சுவாசக்காற்றை தடை செய்ய முனைய இதழ் குவித்து மூச்சை விட்டவள் அவனிடம் "டேய் மாமா வெயிட்டா இருக்க ப்ளீஸ் எந்திரி" என்று மீண்டும் கூற,



"அடிக்கமாட்டேன்னு சொல்லு.." என்று மீண்டும் பேரத்தில் இறங்க..,



"முடியாதுடா" என்றவாறு அவன் தோளில் பலம் கொண்ட மட்டும் கடித்து வைக்க, 'ஸ்ஸ்ஸ்ஆ' என்று துள்ளி மறுநொடி அவள் புறம் திரும்பிவன் அவனை அடிப்பதற்காக அவள் கையில் அதுநேரம் வரை வைத்திருந்த உலக்கையை கைபற்றி வெளியில் தூக்கி வீச அதற்குள் தன்னை சுதாரித்தவள் அவனை கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்தவாறு, நன்கு மூச்சை இழுத்து விட்டவள் அடுத்த கணம் தன் கையே தனக்குதவி என்று அவனை அடிக்க தொடங்கவும்...,



அவள் கரங்களை தடுத்து பின்னால் வளைத்தவன், "ஏய் இப்போ என்னதான்டி உன் பிரச்சனை..?? அதான் காரணத்தை சொல்லிட்டேனே அப்புறம் எதுக்கு இப்படி ஆர்பாட்டம் பண்ற" என்றிட



அலரோ வலியில் முகம் சுனங்க "இவ்ளோ நாளா என்கிட்ட இருந்து இதை மட்டும் தான் மறைச்சியா இல்லை இன்னும் இருக்கா சொல்லுடா.., இன்னிக்கே எல்லாத்தையும் ஜீரணம் பண்ணிக்குறேன்" என்று கேட்க..,



எழிலோ பதிலளிக்காமல் அவளையே பார்க்க.., அலரின் பார்வையும் அவன் மீதுதான் இருந்தது என்ன ஒன்று இவ்வளவு நேரம் இருந்த மன அயர்ச்சியில் சரியாக கவனிக்காதவள் அப்போது தான் அவன் முகத்தின் மாற்றத்தை கவனித்தாள்.



அதன் வேறுபாடு எதனால் என்று புரியவும் அவனையே வெறித்துகொண்டிருந்தாள்.



அவள் அமைதியில் "ஏன்டி என்ன ஆச்சு மாமாவை மன்னிச்சிட்டியா.." என்று எழில் கேள்வியாய் பார்க்க,



அலரோ எதுவும் கூறாமல் அவன் முகம் நோக்கி குனியவும் அதை கண்டவனும் எதிர்பார்ப்புடன் அவளை பார்க்க, தன் கரங்களை அவனிடம் இருந்து விடுவித்து கொண்டவள் அவன் அருகே சென்று நொடியில் அவன் முகத்தை திருப்பி அவன் வலக்கன்னத்தை நறுக்கென்று கடிக்க தொடங்கினாள்.



ஆஆஅ விடுடி, விடு என்று அலறியவன் அவளை பற்றி விலக்க முயல, அவளோ அழுத்தமாக அவன் கன்னத்தில் தன் பற்களை பதித்திருக்க எங்கிருந்து விடுவிக்க..!! சிலநொடிகள் கழித்து விட்டவள், அவன் மறுக்கன்னத்தையும் அவள் வசப்படுத்தியவள் அங்கும் அவன் மறுக்க மறுக்க தன் தடத்தை ஆழமாக பதித்திருந்தாள்.



எழிலுக்கோ வலி தாளவில்லை... அவள் உடும்பாக அவனை பற்றிகொண்டிருக்க வாகாக கிடைத்த இடத்தில் அவளை கிள்ளிவைக்கவும் தான் அவன் கன்னத்தை விட்டாள்.



'ராட்சஸி' என்று அவளை தன் மீதிருந்து விலக்கி தள்ளியவன் கரங்கள் கொண்டு கன்னத்தை தாங்கி பிடிக்க முயல, "ஹும்ஹும் கையே வைக்க முடியாத அளவு கன்றி போயிருந்தது" அதிலும் ஒரு பக்கம் சிறு கீற்றாய் குருதி எட்டி பார்த்திருப்பதை கண்ணாடி வழியே பார்த்தவன்...,



'ஏய் லூசு எதுக்குடி இப்ப கடிச்சி வச்ச' என்றான் வலி தாள முடியாமல் கண்களை சுருக்கி..,



"நான் காலையில பார்த்தப்போ இருந்த தாடி இப்போ இல்லை.. ஏன்..??? என்று புருவம் உயர்த்தியிருந்தாள்.



ஆம் அவளுக்கு அவனிடம் பிடித்ததே ஆண்மை ததும்பும் மீசையும் சில நாள் தாடியும் தான், எப்போதும் அதை எடுக்க விடமாட்டாள். இப்போது தன் மீதான கோபத்தில் அதை எடுத்து விட்டிருந்தவனை கண்டவளுக்கு எல்லை இல்லாத ஆதங்கமும் கோபமும் ஒரு சேர முகிழ்த்தது.





எழிலிடமோ பதிலில்லை, பின்னே காலை உடற்பயிற்சியின் போது அவள் தன்னை ரசிப்பதை கண்டுகொண்டவனுக்கு ஏக கடுப்பு , அவள் மீதிருந்த கோபத்தில் வேண்டுமென்றே தான் எடுத்திருந்தான்.





எழிலின் மௌனத்தை கண்டவள், "ரொம்பத்தான்டா ஓவரா போயிட்டு இருக்க, காலைல நீதான் கொண்டு விடனும்ன்னு சொல்லியும் கூட்டிட்டு போகாம விட்டுட்டு போன இப்போ எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சே தாடியை எடுத்துட்டு வந்து என்னை வெறுப்பேத்துற" என்று அவன் கன்னத்தை பிடித்து ஆட்ட..,



அது வலியின் அளவை மேலும் கூட்ட செய்ய, "ஆஆஆஅ... ஏய் ஏற்கனவே கடிச்சதே இன்னும் வலிக்குது விடுடி" என்று அவள் கரங்களை தட்டி விட்டவன் 'உன்மேல சரி கோவத்துல இருந்தேன், அதான்' என்றிட..,



"அப்போ இப்படி எல்லாம் பண்ணுவியா...? என்று கண்களில் வலியுடன் கேட்க..,



அதற்கான பதிலை கவனமாக தவிர்த்தவன் 'ரொம்ப வலிக்குதுடி..' என்றவாறு அவளை நெருங்க..,



கரம் கொண்டு அவனை தள்ளி நிறுத்தியவள், "நகரு நானெல்லாம் உன்னை மாதிரி பாவ புண்ணியம் பார்க்க மாட்டேன்... வலியோடவே இரு மருந்தெல்லாம் போட முடியாது போடா" என்று எழுந்து செல்ல முயற்சிக்க அவளை அள்ளி எடுத்து படுக்கையில் கிடத்தியவன் அவளை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவாறே..,



"நீ போடாட்டி என்ன நானே எடுத்துப்பேன்" என்று அவள் இதழ்கள் மீது தன் கன்னத்தை பதித்தவன் அடுத்தடுத்து அதிரடியாக அவளை ஆக்கிரமிக்க,



அவனிடம், "டேய் விடுடா விடு" என்று திமிறியவள் "நான் தான் லூசு மாதிரி சரி தப்புன்னு எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்றேன் ஆனா நீ.." என்று கேட்டுகொண்டிருக்க..,



இங்கு செவியை அவளிதழ்களுக்கு கொடுத்திருந்த எழிலின் கரங்களோ அழுத்தமாக அவளில் தடம் பதிக்க தொடங்கியிருந்தது.



கரம் கொண்டு அவனை விலக்க முயற்சித்தவாறே "ப்ச் ஒரு வாரமா வெளியில தானே இருந்த இப்போ மட்டும் என்ன..?" என்று கேட்டவளின் இதழ்களின் சுதந்திரம் பறிக்க பட்டு அவளை பேசா மடந்தையாக்கி அவள் மீதான ஆதிக்கத்தை செவ்வன தொடங்கியிருந்தவனை எங்கனம் தான் அவளும் விலக்க..!!



நிமிடங்கள் பல கடந்த பின்னரே வலிய அவனிடம் இருந்து தன் இதழ்களுக்கு சுதந்திரம் பெற்றவள் மீண்டும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய அவன் தன்னை விடப்போவதில்லை என்பதை உணர்ந்து, 'டேய் இப்ப நீ என்னை விடலை என்ன பண்ணுவேன்னு' என்று அவள் முடிக்குமுன்..,



அவளில் தன்னை தொலைத்து ஒரு வார பிரிவை ஈடுகட்டிகொண்டிருப்பவன் சலிப்புடன் தகிக்கும் தன் அதரங்கள் கொண்டு அவள் செவியோரம், "இப்போ என்ன செக்ஷன் 376 தானே..!! தாராளமா போடு நான் தடுத்தேனா..!! ஆனா நாளைக்கு உனக்கு முன்ன என் வக்கீல் வந்து நிற்பா.. ஆண்டிசிபேட்டரி பெயிலோட" என்று புன்னகைத்து மீண்டும் அவள் மீதான தன் ஆதிக்கத்தை தொடர்ந்திருந்தான்.



அவன் சொல்லிய விதத்தில் முதலில் திகைத்தவள் முகத்தில் பின் மெல்ல குறுநகை படர, அவனுக்கு குறையாத தவிப்புடன் அவனை இறுக அணைத்துக்கொண்டவள் அதன் பின் அவன் மீதான தன் தேடலை உணர்த்த எழிலின் முகம் வியப்பை தத்தெடுத்து அவள் வதனத்தில் படிந்தது .




அதில் அலரின் முகம் செங்கொழுந்தாக சிவக்க துடிக்கும் இதழ்களுடன் 'மிஸ் யூ சோ மச் மாமா' என்று தழுதழுத்தவளின் இமையோரம் நீர் அரும்பி அது எழிலின் கன்னத்தில் பட்டு தெறிக்க அவள் இமைகளில் அழுத்தமாக இதழ் பதித்தவன் மறுநொடியே அவளை வன்மையாக தன் வசபடுத்தி இருந்தான்.

ஹாய் செல்லகுட்டீஸ்..


இதோ 'நெஞ்சமெல்லாம் அலரே !!' அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். வேலை பளு காரணமாக இனி தினமும் அத்தியாயம் பதிவிடுவது சற்று கடினம் அதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும்.

நன்றிகள்


ருத்ரபிரார்த்தனா.
Semma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top