'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 20

Advertisement

Akila

Well-Known Member
View attachment 10892

அதிகாலையே எழுந்தவள் அவனுக்கான காலை உணவை தயாரித்து முடித்து அவன் வரவிற்காக காத்திருக்க கீழே வந்தவன் மடிக்கணினியுடன் அமர்ந்துவிட்டான்.

தன்னிடத்தை ஆக்கிரமித்திருக்கும் மடிக்கணினியை மனதினுள் கறுவியவாறு அவனிடம் காபியை நீட்டினாள்.

அவள் வளைக்கரங்களின் ஓசையில் பார்வையை அவள் புறம் திருப்பியவன் அவளிடம் "வேண்டாம்" என்றான்

ஒற்றை புருவம் ஏற்றி, "ஏன்" என்றாள்.

'பிடிக்காது'

"நான் உப்பெல்லாம் போடல நம்பி குடிக்கலாம்"

இப்போது அவளை அழுத்தமாய் பார்த்தவன், "பிடிக்காது... வேண்டாம்" என்றான் உறுதியாய்.

"ஒஹ்ஹஹ்... அப்படியா..?? இனி எப்படி பிடிக்காம போகுதுன்னு பார்க்கிறேன் என்றவள் குரலே வித்தியாசமாய் பட மடிக்கணினியில் இருந்து அவன் தலை உயரும் முன் அவன் கரங்களில் இருந்ததை பறித்து மேஜை மீது அலர் வைக்க..,

"ஏய்..! என்னடி பண்ற.." என்று அவன் இருக்கையில் இருந்து எழவும் கையில் இருந்த காபியை அருந்தியவள் பாதங்களை உயர்த்தி எக்கி அவன் கழுத்தில் ஒற்றை கரம் கோர்த்து தன்னை நோக்கி இழுத்து இமைக்கும் நொடியில் அழுத்தமாக மூடி இருந்த அவன் அதரங்களோடு தன் இதழ்களை சேர்த்து நிதானமாக காபியை அவனுக்கு புகட்டி இருந்தாள்.

அவள் அதிரடியில் திகைத்து அவளையே பார்த்திருந்தவனுக்கு மொத்த காபியையும் புகட்டியவள் கண்களை உருட்டி, "இனி காபி வேண்டாம் டிபன் வேண்டாம்னு சொன்னா அமைதியா போக மாட்டேன் இப்படித்தான் ஊட்டிவிடுவேன்" என்று கண் சிமிட்டியவள் அதிர்ந்திருந்தவனின் கன்னத்தை இருகரங்களாலும் பற்றி தன்னை கொன்று தின்னும் அவன் விழிகளில் அழுந்த முத்தம் பதித்து 'புரிஞ்சதா..??' என்று சிவந்த முகத்துடன் கேட்டவள் அடுத்த கணம் ஓடி சென்று சமையலறையினுள் மறைந்தாள்.

அவன் இதழின் வெம்மை அவளையும் தகிக்க.. படபடப்பு குறையாமல் நெஞ்சில் கரம் பதித்து சமையலறை மேடையில் சாய்ந்து நின்றவள்.. ஆழ்ந்த மூச்சு எடுத்து ஆவலுடன் நொடிக்கொருமுறை அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

பிடித்தமானவர்களை தொலைத்து விட கூடாது என்ற பயமே அவர்களை அதிகம் தேட வைக்கும் கீர்த்தியின் வருகை அலரவளை அகனவனை அதிகம் தேட செய்தது. அது தன்னவனின் சிரிப்பு.. அழுகை.. கோபம்... சீண்டல்... தீண்டல்... தேடல்... என அனைத்தும் அவளாகி போக விழைந்ததாலேயே..!!

சுருங்க சொன்னால் தன் கைப்பொருளை நழுவ விடாமல் இறுக்கமாய் பற்றி கொள்ளும் குழந்தைக்கும் அலருக்கும் வேறுபாடு இல்லாது போனது.

அவனை இழந்து விடக்கூடாது என்ற வேகத்தில் இருந்தவள்.. தான் ஆற்றிய வினையின் எதிர்வினை எத்தகையதாய் இருக்கும் என்ற இனிய பதட்டத்துடன் அவன் வரவிற்கு காத்திருந்தாள்.

நிமிடங்கள் பல கடந்தும் அவன் வாராது போக... மலரவளின் நயனங்களோ மெல்ல எட்டி வரவேற்பறை முழுக்க வலம் வர தன்னவன் இல்லாது அது வெறிச்சோடி இருப்பதை கண்டவளின் வதனம் வதங்கியது. படுக்கை அறை முதற்கொண்டு மொட்டை மாடி வரை தேடியவள்... எங்குமே அவன் இல்லாது போகவும் கண்டதையும் எண்ணி தவித்தவளுக்கு தாள முடியவில்லை.

"அப்போ உனக்கு என்னை பிடிக்கலையா மாமா..?" என்று நெஞ்சம் பச்சை ரணமாய் வலிக்க அதற்கு மேல் சிந்திக்கும் திறன் அற்றவளாய் கண்ணீரோடு உறவாடியவாறு அமர்ந்திருந்தாள்...

ஒரு கட்டத்தில் முகத்தை அழுந்த துடைத்தவள் வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினாள். வழி நெடுகிலும் எழிலுடனான நினைவுகளையே அசைபோட்டு சென்றவளுக்கு அன்று மேட்டுபாளையம் செல்வதற்கு முன் அறையில் நிகழ்ந்த நினைவில் மனதில் படமாய் விரிந்தது.

அன்று மேட்டுப்பாளையம் செல்ல வேண்டி அதிகாலையே எழுந்து வேகமாய் குளித்து தயாராகி தேவையான பொருட்களை கைப்பையில் அடுக்கி கொண்டிருந்த அலர் திடீரென நெருக்கத்தில் உணர்ந்த தன்னவனின் சுவாசக்காற்றின் வெம்மையில் உறைந்து போனாள்.

பின்னங்கழுத்தில் படர்ந்த அவன் உயிர்க்காற்றில் பெண்ணவள் தகிக்க அகனவனின் அண்மையில் நாணமகளும் அகல மனதினுள் எழுந்த புதுவித பரவசத்தில் முத்துப்பற்கள் கொண்டு கீழ் அதரத்தை சிறை செய்து அவளையும் மீறி எதிர்பார்ப்புடன் அவன் அணைப்பிற்காக கண்மூடி நின்றிருந்தாள்.

முதுகில் ஊர்ந்த அவன் கரம் மேலெழுந்து பாதியாக ஏற்றப்பட்டிருந்த சுடிதாரின் ஜிப்பை ஏற்றி உடனே அகலவும்.., மோன நிலை கலைந்தவளாய் அவனை திரும்பி பார்க்க விழியவளின் யாசிப்பை அவள் விழி வழியே உணர்ந்தவனுக்கு அவள் மாற்றம் புரிந்தாலும் இது நீடிக்குமா..? என்ற ஐயமே மேலோங்கியது.

இன்று வரை உயிர் வலியை கொடுத்துக்கொண்டிருக்கும் அவள் வார்த்தைகள் அவன் செவியை விட்டு அகலாது இருக்க எங்கனம் அவளை ஏற்க..!! மீண்டும் அவசரப்படக்கூடாது என்று அவளை விலக்கி அவனும் வலி கொண்டான்.

குரலை செருமி தன்னை சமன்படுத்தி அவளிடம் "சீக்கிரம் வா.. டைம் ஆச்சு" என்று சார்ஜரில் இருந்து அவன் அலைபேசியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

தன்னை நீங்கி செல்பவனை கண்டவளுக்கு மையலுடன் எப்போதும் தன்னை நெருங்குபவனின் உணர்வுகளை தானே கொன்றதை எண்ணி மனம் அலைக்கழிக்க செல்லும் அவனையே பார்த்தபடி சுவரில் கண்மூடி சாய்ந்தவளின் கண்கள் அணையின்றி உடைப்பெடுத்தது.

அன்றைய நினைவில் மீண்டும் கண்கள் குளம் கட்டி விழி திரை மறைக்க எதிரே வந்த வாகனத்தின் ஒலியை உணரும் திறன் அற்று அவன் நினைவில் எல்லை கடந்து சாலையின் மத்தியில் நடக்க எதிரே அதிவேகமாக வந்த வாகனமோ அவளை முத்தமிட நெருங்கியது.

*

சிந்தை முழுக்க தன்னவனை தேக்கி.. கண்களில் ஜீவனின்றி... இலக்கற்ற பார்வையோடு... எழிலவன் ஆட்சி புரியும் அகத்தில் அவனனுமதியின்றி புதிதாய் வெறுமையை குடியமர்த்தியவள் வழிகின்ற விழி நீரை துடைக்கவும் மறந்தவளாய்.. எல்லை கோட்டை கடந்து செல்ல எதிரே வந்த வாகனத்தையோஅதன் ஒலியோ உணரும் நிலையில் நிச்சயம் அலர்விழி இல்லை.

"அமுலு... குள்ளச்சி..." என்ற இரு வேறு குரல்கள் காற்றை கிழித்து கொண்டு... அவள் செவி வழி உயிர் தீண்ட... உணர்வு பெற்றவள் எதிரே வந்த வாகனத்தை கண்டு அதிர்ந்து அசைவற்று நின்ற மறுநொடி காற்றில் மிதக்கலானாள்...

விழிகள் தெறிக்க திகைத்து கண்ணிமைக்கும் நொடியில் தன்னை கடந்து செல்லும் வாகனத்தை கண்டவள் தன் உயிர் பறவை கூட்டை விட்டு பறக்காது காத்தவனின் கரம் அவளிடையை நடுக்கத்துடன் இறுக்குவதை உணர்ந்தவள் சிரம் தாழ்த்தி பார்த்தாள்.

அங்கே அகனவன் அலரை இடையோடு வளைத்து பிடித்தபடி தன்னோடு இறுக அணைத்து தூக்கியவாறு சுழன்று சாலை ஓரத்திற்கு செல்வதை கண்டவளுக்கு விழிகள் பொய் உரைக்குமோ..! என்ற ஐயம் எழ.. மெல்லிய விரல்கள் கொண்டு தன்னவனின் முகம் பற்றி அவனை ஸ்பரிசித்தவளின் விழிகள் கரை உடைத்து புரண்டோடியது.

அதிலும் பல வருடங்களுக்கு பிறகான அவனின் பிரத்யேக அழைப்பே அவள் காதில் ரீங்காரமிட கோதையவள் நெஞ்சமோ ஆனந்த தாண்டவமாடியது... மகிழ்ச்சியில் திளைத்தவளின் விழிகள் கண்ணீரையும் அதரங்கள் புன்சிரிப்பையும் சிந்திக்கொண்டு"மா..மா.." என்று அவனை அழைக்க..,

அதுகாறும் உயிர் ஊசலாட தன்னவளை தாங்கிக்கொண்டு சுழன்றவனின் உயிரை அவளின் ஒற்றை அழைப்பே மீட்டெடுக்க... "பே.. பே..சாதடி..!" என்றவனின் கண்களில் இருந்து வழிந்த நீர் அவள் கரம் சுடவும்...

மீண்டும் "மா..மா..." என்றவாறு அவன் முகம் நிமிர்த்தியவளை தன்னோடு மேலும் காற்று புகாதபடி இறுக்கி கொண்டே.., "ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சுடி... குள்ளச்சி..." என்றவன் சாலை என்று பாராமல் அவள் முகம் முழுக்க முத்தமழை பொழிந்தான்.

அவன் மனத்திரையில் காலை நிகழ்வு அரங்கேறியது... அன்று வலியோடு அவளை விலக்கி சென்றாலும் பெண்மையின் யாசிப்பு அவனை அலைக்கழித்து இன்று வரை இம்சித்துக்கொண்டிருந்தது.

ஆனால் இன்று இருவருக்குமிடையேயான மெல்லிய திரையை கிழித்தெறிந்து உரிமையாய் தன்னை நெருங்கியவளை கண்டு... எழில் அதிர்ந்து நின்றது சில கணங்கள் தான்.

பெண்ணவள் உணர்த்திய செய்தி அவன் மனதை மயிலிறகாய் தீண்டிட.. உல்லாசமாய் விசில் அடித்தவாறு.., "கலக்குறடி குள்ளச்சி.." என்று அவளிடம் செல்ல முற்பட...

பூஜை நேர கரடியாய் அலைபேசி அழைத்தது.

உடன் பணிபுரியும் நண்பனின் அழைப்பு என்றதும் உடனே ஏற்றவன்... நண்பனின் குழந்தைக்கு விபத்து என்றறியவும்... பதறி ஓடியவன் இவளுக்கு தெரிவிக்காத தன் மடத்தனத்தை நொந்தவாறு செல்லும் வழி நெடுக அவளுக்கு அழைப்பு விடுக்க இருபத்தைந்து அழைப்புகளையும் அவள் ஏற்காததால் இவள் நிலை அறிய துடித்தவன் ரத்ததானம் அளித்து குழந்தைக்கு சிகிச்சையை தொடங்கவும் நண்பனிடம் விடைபெற்று அவளிடம் விரைந்தான்.

ஆனால் எதிரே சோக பதுமையாய் அதிர்ச்சி, பரிதவிப்பு, வெறுமை, அலைப்புறுதல்.. என்று உணர்வுகளின் குவியலாய் மலரவளின் மதிவதனமும் ஜீவனற்ற அவள் விழிகளும் அகனவனின் உயிரை உருக்க... நொடியும் தாமதிக்காது இயங்கிக்கொண்டிருந்த தன் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து.. அவளை நோக்கி ஓடினான்.

தனக்கும் அவளுக்குமான தூரம் பத்தே அடி என்றபோதும் அதை கடக்கும் வரை அவன் கொண்ட உயிர் வலி சொல்லில் அடங்காதது .

இதோ இப்போதும் முழுதாய் தன் கரங்களில் தவழ்ந்திருப்பவளை விட மனமின்றி நின்றவன் "அமுலுக்கு ஒண்ணுமில்லையே..."என்று அயவந்திநாதன் பதட்டத்துடன் அவர்களை நெருங்கவும் தான் அவளை கீழே இறக்கினான்.

அப்போதும் தன் கைவளைவில் நிறுத்தியவன் அவரிடம் "ஒண்ணுமில்லை... கொஞ்சம் அதிர்ச்சி அவ்ளோதான்..!" என்றான் அவள் இதயத்துடிப்பின் வேகத்தை உணர்ந்தவனாய்.

எழிலவன் மீதே பார்வை பதித்திருந்தவளிடம், "அறிவில்லை... நினைப்பு எங்க இருக்கு உனக்கு...!" என்ற நாதன் தொடர்ந்து..,

"எங்கயோ பார்த்துட்டு வர... நடக்கும் போது ரோட்டுல கவனம் இல்லாம.. புத்தி எங்க புல் மேய போயிடுச்சி...?" என்று அவளை கடியவும்..,

இடையிட்ட எழில் "இது ரோடு.. எல்லாத்தையும் இங்கயே தான் கேட்கணுமா...? எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வந்து பேசுங்க" என்றவன்.., அவள் கரம் பற்றி சாலை ஓரம் விழுந்து கிடந்த தன் இரு சக்கர வாகனத்தை நிமிர்த்தி.. உதைத்து இயக்கவும்...

அகனவனை அன்றி வேறெதையும் உணரும் திறன் அற்றிருந்தவளிடம் "ஏறு.." என்றவன்..

அவள் அமர்ந்ததும்..., "பத்திரமா பிடிச்சுக்கோ" என்று அவள் கரத்தை தன் இடையோடு கட்டிக்கொண்டு ஒரு கரத்தால் அவள் கரங்களை அழுந்த பற்றி கொண்டு மறுக்கரத்தால் வாகனத்தை இயக்கினான்.

மிதமான வேகத்தில் இயக்கியவன்... நிமிடத்திற்கு ஒரு தரம் கண்ணாடியில் அவள் முகம் கண்டவாறே வீடு வந்து சேர்ந்தான்.


அவர்களை பின் தொடர்ந்து உள்ளே நுழைந்த நாதன் அலருக்கு குளிர்ந்த நீர் புகட்டி அவள் பதட்டம் குறைத்து கொண்டிருந்த எழிலை காண கோபமே மேலோங்கியது.

மகளின் முகத்தை இப்போது நன்றாக பார்த்தவர் எழிலிடம்.., "இந்த அக்கறை அவ வீட்டை விட்டு வெளியே போறத்துக்கு முன்னாடி இருந்திருந்தா இந்த நிலை வந்திருக்காது இது தான் என் பெண்ணை பார்த்துக்குற லட்சணமா..? தன்னையே மறந்து ரோட்ல வண்டி வரது கூட தெரியாம போற அளவுக்கு என்ன நடந்துச்சு...?" என்று காய்ந்தார்.

நாதனின் குற்றச்சாட்டில் பதறிய அலர் "அப்பா.." என்று அழைக்க மகள் அருகே சென்று அவள் முகம் நிமிர்த்தி அதில் உறைந்து போயிருந்த கண்ணீர் கோடுகளை வருடியவாறு "பெண்டாட்டியை கண்கலங்க வைச்சிட்டு வெளியில காலரை தூக்கி விட்டுட்டு சுத்துறதுல அர்த்தமே இல்லை...!" என்றார்.

அவர் நாகரிகமாக சொன்னாலும்.., அதன் அர்த்தமான "பெண்டாட்டியை கண் கலங்க விடுறவன் ஆம்பளைன்னு சொல்லிக்குறதுல அர்த்தமே இல்லை" என்பது புரியாத அளவு எழில் சிறுவன் அல்லவே..!

அவர் வார்த்தைகளில் முகம் கறுக்க.. கண்கள் சிவந்தவன்.. கைமுஷ்டி இறுகியவாறு அவருக்கு பதிலளிக்க எத்தனிக்குமுன்... அலர் நாதனிடம்..,

"இல்லைப்பா.. மாமா மேல எந்த தப்பும் இல்லை... கொஞ்சம் திங்ஸ் தேவைப்பட்டது வாங்கிட்டு வர போனேன்... நான் தான் ஏதோ யோசனைல கவனிக்கலை.. மாமா வெளியில போய் இருந்தார்... அவருமே இப்படி நடக்கும்னு எதிர்பார்த்திருக்க மாட்டாரு..." என்று கூறவும் எழில் அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து இருவரின் சம்பாஷனையும் கேட்கலானான்.

எழில் மீது பார்வையை வீசியவர்.., "இல்லை.. என்ன சொன்னாலும் எனக்கு மனசு ஆறலை... நம்பி விட்டுட்டு போனது தப்போன்னு தோணுது...! நீ கிளம்பி என் கூட வா... கொஞ்ச நாள்... அப்புறம் நானே கொண்டு வந்து விடறேன்" என்று அவர் அழைக்கவும்..

அதிர்ந்தவள் மறுகணம் எழிலை பார்க்க அவனோ அவள் பதிலுக்காக அவள் முகம் நோக்கியிருந்தான்.

"இல்லை... இல்லைப்பா நான் வரலை... என்று அழுத்தமாய் உரைத்தவள்... இங்க தான் இருப்பேன்.. மாமா என்னை நல்லா பார்த்துக்குறாங்க... இது என்னோட தப்பு... இனி இது போல செய்ய மாட்டேன்" என்றாள் தன்னவனின் முகம் கண்டு.

தன்னிடம் பேசினாலும் மகளின் பார்வை எழிலையே தொடர்வதை கண்டவர் அதற்கு மேல் வற்புறுத்தாமல், "சரி எதுவா இருந்தாலும் இனி நீ தனியா எங்கயும் போக கூடாது.. பத்திரமா இரு" என்றவர் வணிகர் சங்க கூட்டத்துக்கு நேரம் ஆச்சு உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் நான் கிளம்புறேன்" எனவும்..,

அப்பா சாப்டுட்டு போங்க என்று அலர் அழைக்க... "இல்லை அங்கேயே லஞ்ச் ரெடி பண்ணியிருக்காங்க" என்று கிளம்பினார்.

அவர் சென்றதும் கதவை தாளிட்டு வந்தவள்.. தந்தையின் பேச்சு அதிகப்படியே என்று உணர்ந்து எழிலின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவன் முகம் தாங்கி... "அப்பா பேசினதுக்கு சா..." என்று அவள் இதழில் தொடங்கிய மன்னிப்பு அவன் இதழுள் முற்று பெற்றது.

தன்னவனின் திடீர் ஆக்கிரமிப்பை எதிர்பாராதவள் செயலற்று போக நீண்ட நெடிய உயிர் உறிஞ்சும் வன்முத்தம் சில நொடிகளில் அவன் மடியில் இருப்பதை கண்டவளுக்கு.. எப்போது..?? எப்படி..?? இடம்பெயர்த்தான் என்று உணர முடியாத அளவு வேகமாய் செயல்பட்டிருந்தவனை காண புதிதாய் அச்சம் பிறந்தது.

எழிலவனின் இடைவெளியற்ற தொடர் இதழணைப்பில் மெல்லியவளின் சுவாசக்காற்று தடை பட எவ்வாறு அவனுக்கு தன் தேவை உணர்த்த என்று மலரவள் தவித்து போனாள்.

"பெண் தேவை எதுவென்று உணராத ஆண் இங்கு ஆணில்லையே" அலரின் தேவை உணர்ந்தவன் மனமேயின்றி அவளை விடுவிக்க நீண்ட மூச்சுக்கள் எடுத்தவாறு எழ முற்பட்டவளை விடாமல் இடையோடு அணைத்து தன்னோடு இறுக்கியவன் அவள் காதோரம் 'டூ செகண்ட்ஸ் தான்' என்றான்.

அவள் செவிமடலில் அறைந்த அவன் சுவாசக்காற்றின் வெம்மை அவன் தகிப்பை உணர்த்த நாணம் மீதுற மென்மையாய் தலை அசைத்தவள் மூச்சு காற்று சீர்பட்டு சில நொடிகளில் அவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டதை கண்டவன் மறுகணமே அவளை மீண்டும் இதழ் சிறையில் அடைத்தான்.

முடிவில்லாது போன அவன் இதணைழப்பில் அவனிடம் சிறைப்பட்டிருந்த இதழ்கள் விடுவிக்க கோரி அபய குரல் எழுப்ப விலக்கும் மார்க்கமற்று அவன் விழிகளை சந்தித்த பேதையவள் ஸ்தம்பித்து போனாள்...

ஆம் இது நாள் வரை காதல் வழிந்தோடிய தன்னவனின் விழிகளில் இன்று புதியதாய் தாபம் கண்டவள் மன்றாடவும் மறந்தவளாய் அவனோடு ஒன்றினாள்.

இதுகாறும் அவன் விழிவீச்சை எதிர்கொள்ள திடமின்றி தவிர்த்து வந்தவள் இப்போது அவன் விழிச்சிறையில் விரும்பியே சரணடைந்தாள்.

பெண்மையின் சரணாகதி என்றுமே ஆண்மையை கர்வம் கொள்ள செய்யும்... ஆனால் இங்கு தன்னவளின் எதிர்ப்பற்ற நீயே என் ஆதியந்தம் என்றான முழு சரணாகதி இதுநாள் வரை அவன் கொண்ட வலிகளுக்கு மருந்தாய் அமைந்திட இதழ்களுக்கு விடுதலை அளித்தவன் பெண்ணவளின் செவிமடலில் கவி பாட தொடங்கிட மயிலிறகாய் தீண்டிய அவன் மீசையில் சிலிர்த்த அலரின் மதிவதனம் செங்கொழுந்தாகியது.

அவர்கள் இருக்கும் நிலையும் சுற்றமும் உணர்ந்தவள் தயக்கத்துடனே அகனவனை மெல்ல விலக்க முயற்சிக்க,

தனக்கு தடை விதிப்பவளின் முகம் பற்றியவனின் பார்வை அவளை கொன்று கிழிக்க தொடங்கி இருந்தது.

அதை கண்டவளுக்கு "அ..து... மா..மா... இ..து..." என்று வார்த்தை தந்தியடிக்க பொறுமை அற்றவனாய் "என்னடி அது" என்றான் அடிக்குரலில் சீற்றமாய்...

"மா..மா.. இது ஹால்.." என்று மெல்லிய குரலில் அவன் காதில் உரைக்க...

"அதுக்கென்னடி..!" என்றவன் கூர்மையாய் அவளை அளவிடவும்.. பார்வையாலேயே தன்னை பிய்த்து திண்பவனிடம் என்ன சொல்வது என்று புரியாது தயங்கி இதழ்கள் துடிக்க தலை குனிந்தாள்.

தன் பார்வையில் நாணப்பூ பூத்து தலை குனிந்திருப்பவளின் தவிப்பை சில நொடிகள் ரசித்தவன் அதற்கு மேலும் விழியவளை சோதிக்காமல் மீண்டும் ஒருமுறை அவள் இதழ்களை வதைத்து விடுவித்தவன் கைகளில் அவளை அள்ளி கொண்டு தங்கள் அறைக்கு செல்ல, அவன் சட்டையை இறுக பற்றி மார்பில் முகம் புதைத்துக்கொண்டவளுக்கு தன்னவனின் திடீர் மாற்றம் பேதலிக்க செய்ய எப்படி..? எனும் கேள்வியையே மனம் முட்டி நிற்க அவன் நிலை புரிந்தும் கேட்காமல் இருக்க முடியவில்லை..

தெரிந்து கொள்ளும் ஆவலில்... "மாமா... ப்ளீஸ் ஒரு நிமிஷம்.." என்றவாறு அவனிடம் இருந்து விடுபட்டவள் "ப்ளீஸ் மாமா... சொல்லு... உனக்கு என் மேல கோபமில்லையா..?" என்று வினவ,

தன்னிடம் இருந்து நூலிழை இடைவெளியல் தள்ளி நின்றவளை தன் அணைப்பில் கொண்டு வந்து "என்ன கோபம்..?" என்றான் தாபம் நிறைந்த குரலில் அவள் இடையில் கோலமிட்டவாறு.

அவன் பதிலில் திகைத்தவளுக்கு அன்று அவன் கரங்களில் வழிந்த குருதி கண்முன் வர "அப்போ.. அப்போ.. நீ.." எனவும்..,

அவள் இதழ்களை ஒற்றை விரல் கொண்டு மூடியவன் "ஏய் என்னடி அப்போ.. எப்போன்னுட்டு.. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் நீ இப்போ மட்டுமே பாரு" என்று அவளோடு கட்டிலில் சரிந்து,

"அதுவும் என்னை மட்டும் பாரு" என்றவனின் பார்வை அவள் மீதே மையலாய் படிய இருவருக்குமான இடைவெளி குறைத்தவன் தன் யாக்கையின் உஷ்ணத்தை முழுவதுமாய் அவளுக்கு கடத்தி காட்டாற்று வெள்ளமாய் ஆர்ப்பரித்து அலரவளை ஆட்கொண்டு அவள் நாண போர்வை களைந்து தன்னவளின் ஆடையாகி மெய்யோடு மெய் சேர்த்து உயிரோடு உயிர் கலந்தான்.

அலர்விழியோ அகம் நிறைந்தவனின் ஆர்ப்பரிப்பில்... மன்னவனின் கைப்பாவையாகி அவன் திசை வழியே அவனோடு பயணித்து அவன் ஊனோடு உயிராய் கலந்து நிறைந்தாள்.

தன் மார்பில் இளைப்பாறும் பெண்மையின் நெற்றியில் இதழ் பதித்தவன்... பல வருடம் கழித்து அவனோடு ஒன்றிணைந்திருப்பவளை இறுக்கி அணைத்திருந்தான்.


ஹாய் செல்லகுட்டீஸ்...


இதோ 'நெஞ்சமெல்லாம் அலரே !!' அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி
Hi
Like please rerun this part 2 also UUU also.
Not able to find the link for these 2.
 

Rudraprarthana

Well-Known Member
Hi
Like please rerun this part 2 also UUU also.
Not able to find the link for these 2.
எஸ் பாகம் இரண்டும் ரீரன் செய்றேன் ஆனால் UUU இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.. நன்றிகள் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top