நடுவுல கொஞ்சம் தண்டனை..!

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நடுவுல கொஞ்சம் தண்டனை..!
:rolleyes:
என்னடா இப்படி ஒரு தலைப்பேன்னு யோசிக்கிறீங்களா..?
இது நான் எட்டாவது படிக்கும்போது நடந்த விசயம்..அப்போ பெரிசா தெரியல..ஆனா இன்னிக்கு யோசிக்கும்போது அது எல்லாம் எவ்வளவு பெருசுன்னு புரியுது…:rolleyes:
சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன்…அப்போதான் இது தட்டுப்பட்டுச்சு…
என்னோட பயாலஜி மிஸ் கொடுத்த தண்டனை இது..அதாகப்பட்டது 20 கு 15 மார்க் குறைவா எடுத்தா ஆண்களுக்கு நடுவில் பெண்கள் உட்காரனும்..பெண்களுக்கு நடுவுல ஆண் உட்காரனும்…எப்போவோ நடந்த விசயமில்ல…21 நூற்றாண்டில நடந்த விசயம் தான்…அப்போ என்னோட கவலையெல்லாம் 15+ எடுக்கனும் என்பது தான்..

இதுல முரண் என்னதுன்னா நம்ம 20 எடுத்தாலும் கூட பாய்ஸ் கம்மி மார்க் எடுத்த அவங்க நம்ம பக்கத்துல தான உட்காருவாங்க….ஸோ இருபாலாருக்குமான தண்டனை ஆகிடுதில்லையா..?அப்போ எங்களை இப்படி உட்கார வைக்கறவரைக்கும் எங்களுக்கும் புரியல..ஆனா உட்கார வைச்ச பின்னாடியும் எங்க மிஸ்சுக்கும் புரியல போல…:po_O

ஒரு ஆசிரியர் அதுவும் முதுகலை முடித்தவர் அவருக்கே ஒரு ஆணும் பெண்ணும்..(அப்போ நாங்க ஜஸ்ட் பாய்ஸ் கேர்ள்ஸ் தான்…ஆணும் பெண்ணும் என்ற பதமெல்லாம் அதிகபடின்னு தோணுது…)

ஒரு பையனுக்கு அருகில் ஒரு பெண் உட்காருவது என்பது ஏன் தண்டனையாகப்பட்டதுன்னு தான் எனக்கு இப்ப யோசனையே…?!ஒரு வேளை நட்பான செயலாவோ இல்லை ஒரு நார்மலான செயலாவோ இது இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்…:)

நீ ஒரு பாய்..அவ ஒரு கேர்ள்னு சொல்லாம…அவளும் சக மனுஷி…. நீ ஒரு உயிர்…அவளும் உயிர்…..உனக்கு உள்ளதே அவளுக்கும்…அப்படி சொல்லுக் கொடுத்திருக்கலாமோ..?

ஆணும் பெண்ணும் அமர்வதே தண்டணைன்னு சொல்லிக் கொடுக்கப்பட்ட சமூகத்துல வளற பசங்களோட mentality எப்படி இருக்கும்…??அது தான் male chauvinism ஒ இல்ல feminism ஒ வளர காரணமாகிடுதோ..?
இந்த ism விட humanISM தான் பெரிதுன்னு சொல்லிக் கொடுத்து வளர்க்கனும்னு தோணுது…

இன்னிக்கு ஒரு படத்தின் டயலாக்..ஹீரோ சொல்றாப்ல…இப்ப வந்த படங்களில் அப்படியெல்லாம் தேட நினைப்பது கூட தவறு..இது 80 s ல வந்த படம்….
பெண்ணுக்கு எப்படி ஒரு வரம்பு இருக்கோ….அப்படி தான் ஆணுக்கும் ஒரு ஒழுங்கு இருக்குன்னு சொல்வார் ஹீரோ…நிஜமா அவ்வளவு பிடிச்சது அந்த வசனம்…:cool::D

எஸ்….அந்த வரம்பையும் ஒழுங்கையும் சரியாப் புரிஞ்சிட்டு சரியா நடந்தா எல்லாம் சமத்துவமா ஆண் பெண் பேதம் நீங்கிடுமோன்னு தோணுது..
இப்ப தான் இந்த பாய் பெஸ்டி கேர்ள் பெஸ்டி பதமெல்லாம் பார்க்க முடிகிறது..நட்பாய் பழகுற ஆணும் பெண்ணும் அதிகமாயிருக்காங்க..ஆனா அந்த காலத்துல இது எண்ணிக்கையில குறைவா இருந்தாலும் கூட ஆண்-பெண் மரியாதை என்பது அதிகமாயிருந்துச்சோன்னு தோணுது…இது எல்லாம் நான் சொல்ல நினைக்கல..

பட் அன்னிக்கு எங்க மிஸ் கொடுத்த பனிஷ்மெண்ட் தவறுன்னு இத்தனை ஆண்டு கழிச்சு புரிஞ்சிடுச்சு…அது பின்னாடி இருக்க சைக்காலஜியும் அதன் தாக்கமும் கூட இப்ப புரியுது….

‘ஆண்பால் பெண்பால் அனைத்தும் இணையட்டும்
அன்பால்’:D


அம்புடுதேன்..!!

ப்ரியங்களுடன்
பவித்ரா நாராயணன்.
 

Gomathianand

Well-Known Member
அருமையாக சொன்னீர்கள் பவித்ரா டியர் ஆண் பெண் சேர்ந்து உட்காரவைப்பது தண்டனையா:eek:
ஆண் பெண் நட்பு என்றும் மரியாதையுடன் கூடிய புரிதல் தான் என்பது என் கருத்து....
 

Chittijayaram

Well-Known Member
Rumba azhaga sonnimga pavithra dear, aan Penn ivamga natpula puridhal erundale podum anda natpu ku mariyadai erukum, pavi dear ennoda school mates ellorum innum nalla natpudan Dan erukom, weekly once pesuvom six months ku one time ellorum enga yavadu meet pannuvom jolly ya ellam suthi parthutu evng Dan povom ippavum continue panrom pavi dear, idai padikum bodu enga school days nyabagam varudu dear, enga friends kitta sonnen avamgalum idai padichamga dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top