'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue 1

Advertisement

Rudraprarthana

Well-Known Member
சாரி..நான் எழுதியது..apsareezbeena Loganathan..என்ற தோழியின் கமென்ட்டுக்கு.
ருத்ரா எபிலாக் இவ்வளோ சீக்கிரம் குடுப்பீங்கன்னு நினைக்கலை…சூப்பர்…தேவ் ப்ரீத்தியை பார்க்க வருவான் என்று நினைத்தேன்தான்…ஆனால் எங்கள் தேவ் வின் வேகம் தான் உலகம் அறிந்ததுதானே…ப்ரீத்தி அவனை வெறுக்கும்போதே அவளை விடமாட்டான்..எனக்கு புருஷனா இருக்க உனக்கு தகுதி இல்லைன்னு சொல்லிட்டுபோனா சும்மா விடுவானா? அதுதான் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து அவளை சீண்ட ஆரம்பித்துவிட்டான்…
Breezy Dev…Fire Preethi..Deadly combination…நிதானமா ரசித்து ரசித்து எழுதுங்க…ருத்ரா.
Nichayam salammaa nandrigal :love::love::love:
 

Priyaasai

Active Member
Double
View attachment 11211

ஒரு வருடத்திற்கு பிறகு :


'He is my man..!! stay away from him you bi*** !!' (அவர் என் ஆள்..!! நீ தள்ளியே இரு) என்ற விழிகள் சிவக்க கூறிய ப்ரீத்தியின் குரலில் கடுமையான எச்சரிக்கை.

Goshhhhh... Who the hell are you..?? என்று முகம் சிவந்தாள் சூசன்.

சூசன் அமெரிக்க பிரஜை ப்ரீத்தியுடன் படிப்பவள் அதோடு விஷ்வா மீதும் அவன் குரலின் மீதும் பித்தாகி அவனை ஒருதலையாக காதலித்து இன்று அவனிடம் தன்னை வெளிபடுத்த சென்றவளை பிடித்து நிறுத்தி இருந்தாள் ப்ரீத்தி.

'நீ யார்..??' என்று கேட்டவளிடம் விழிகள் சிவக்க 'உனக்கு எமன்டி..!!' என்று கருவிய ப்ரீத்தி அவளுக்கு புரியவேண்டி மேலும் ஆங்கிலத்தில் தொடர்ந்தவள் சூசனை அவள் முடிவை கைவிடும்படி கூறிட அவளோ புரிந்து கொள்ளாமல் ப்ரீத்தியின் கோபத்தை கிளறிக்கொண்டு போகவும் இறுதியாக 'Just do what I say orelse will sue you' என்று கடுமையான குரலில் கூறியவளிடம் அத்தனை கோபம்..!!

சூசன் ப்ரீத்தியை கோபத்தோடு பார்க்க,

'இன்னும் ஒரு நிமிஷம் என் முன்னாடி நின்னாலும் நீ பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டி இருக்கும் போடி' என்று அவளை விரட்ட சூசன் அவளை திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்று கொண்டிருந்தால்.

அது மட்டும் பல்கலை வளாகமாக இல்லாமல் இருந்திருந்தால் அவளை அங்கேயே அறைந்து ஒருவழியாக்கி இருப்பாள் ஆனால் விதிமீறலுக்கு வழி வகுக்காமல் தன்னை கட்டுபடுத்தி கொண்டு மிரட்டி விட்டு நகர அவள் முன் வந்து நின்றான் ஜான்.

அவளோடு படிக்கும் மாணவன் அவளை விட ஆறு வயதேனும் குறைந்தவனாக இருப்பான் ப்ரீத்தியின் பால் ஈர்க்கப்பட்டு அவளை தன்னுடன் டேட்டிங் அழைத்து சென்று விட வேண்டும் என்று துடியாய் துடித்து கொண்டிருப்பவன் இன்று துணிந்து அவளை அணுகி விட்டான்.

ஆனால் 'வாட்' என்ற ப்ரீத்தியின் கர்ஜனையில் தெறித்த அனல் அவனை சுட்டு பொசுக்க,

'நத்திங் ப்ரீடி.. ஐ ஐ ஜஸ்ட் வான்ட் டூ ஆஅ... ஆஸ்க் யு.. டூ வீ.." என்றவன் அவள் பார்வையிலேயே உளற தொடங்கி விட்டான்.

அவன் நோக்கம் புரிந்தவளின் விழிகள் சிவந்து போனது. அடித்து விட கூடாது என்று தன்னை தானே கட்டுபடுத்தி கொண்டு சில நொடிகள் கண்களை மூடி நின்றவள் பின் நிதானமாக விழி திறந்து,

'கெட் லாஸ்ட் ஸ்டுபிட் !!' என்று ப்ரீத்தி உறுமிடவும் மறுநொடியே விட்டால் போதும் என்று தெறித்து ஓட்டம் எடுத்திருந்தான்.

அப்போதும் ஆத்திரம் மட்டுபடாது போக, ** என்று அவனை திட்டிவிட்டு திரும்பி நடந்தவளின் பார்வை விஷ்வாவை தேடி அலைபாய்ந்து கொண்டிருந்தது.

வழக்கமாக இந்த நேரத்தில் அவன் இருக்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தவளுடன் இணைந்தாள் கனிகா.

'என்னாச்சு ப்ரீத் எதுக்கு சூசனை பிடிச்சி கத்திட்டு இருந்த..??'

'She is after Vishwadev, warned her many times' எத்தனை முறை சொல்லியும் அடங்க மாட்டேங்கிறா அதான் இன்னைக்கு கொஞ்சம் அவளுக்கு புரியிற மாதிரி சொல்லிட்டு வந்தேன் பட் கனி அவளுக்கெல்லாம் வாயால பேசினா புரியாது வெளியே சிக்கட்டும்' என்றால்

'என்ன சொன்ன பரீத் ..?? அவளும் கோபமா இருந்த மாதிரி தெரிஞ்சது'

'He is my man..!! அவர் கிட்ட இருந்து விலகி இருன்னு சொன்னேன்' என்று கூற அதிர்ந்த கனிகாவோ,

ப்ரீத்தி "Vishwa is an eligible bachelor and its quite common here.. why are you exaggerating..??" உனக்கு என்ன வந்தது எதுக்கு நீ இப்படி கட்டின பொண்டாட்டி மாதிரி இவ்ளோ கோபப்பட..?? என்று அவள் முடிக்கும் முன்னமே.,

'மாதிரி இல்ல பொண்டாட்டி தான்டி..!!' என்றாள் சூசன் மற்றும் ஜான் மீதான கடுப்போடு சற்று எரிச்சலுடன்

whhhhat..??

'Yeah..!! You heard it right..!!'

'சொல்லவே இல்ல'

'Why should I..??'

'எதுவும் காட்டிக்கல நீங்க ரெண்டு பெரும்'

'Why should we...??'

இதென்ன கேள்வி ப்ரீத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தா இப்போ இப்படி என்று தூரத்தே சென்று கொண்டிருந்த சூசனை பார்த்தாள்.

'தேவை இல்லன்னு நெனச்சோம் பட் எங்களை பெரும்பாலும் ஒண்ணா பார்த்திருப்பியே..'

'yea.. but.. thats like ஸ்டுடென்ட் ப்ரொபசர்' என்று அவள் நிறுத்த

'We can't been smooching all the time as you expect kani' என்றவளுக்கு இங்கிருக்கும் கலாச்சாரம் சுத்தமாக பிடித்தம் இல்லை.

அதோடு இன்று சூசன் தேவ் பற்றி பேசும் போது அவள் இந்த கேள்வியை கேட்டதில் ப்ரீத்திக்கு அத்தனை எரிச்சல், கோபம் அதை கனிகாவிடமும் அவளை அறியாமலே காட்டி கொண்டு இருக்கிறாள்.

ஆம் ப்ரீத்தி அமெரிக்கா வந்து இத்தோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.

விஷ்வா தேர்ந்தேடுத்த உயர்படிப்பையே ப்ரீத்தியும் தேர்ந்தெடுத்த போது அனைவருக்கும் ஆச்சர்யமே..!! வித்யாதேவியோ படிப்பு விஷயத்திலும் இருவருக்கும் இடையிலான ஒத்துமையில் அகமகிழ்ந்து போனார்.

ஏற்கனவே அவன் பயின்ற பல்கலைகழகத்தில் தான் ப்ரீத்தியை சேர்க்க அனைத்து ஏற்ப்பாடுகளையும் செய்திருந்தான் விஷ்வா ஆனால் அது தெரியாமலே ப்ரீத்தி அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பி வந்துவிட்டாள்.

ஆனால் விஷ்வா அவளை விட்டால் தானே..!!

***

மனைவியின் மனம் அவனை தேடாத போதே அவளுக்காக அனைத்தையும் செய்தவன் இப்போது அவள் மனம் காதலோடு அவனுடன் சேர்ந்து வாழ துடிக்கையில் எப்படி விட்டுவிடுவான்...??

அதான் புறப்பட்டு விட்டான் இதோ கொன்று புதைத்த தன் காதலையும் தன் உயிரானவளையும் மீட்க வந்துவிட்டான்..!!

ஆம் அவளை விமான நிலையத்தினுள் அனுப்பியவன் உடனே வசுந்தராவிட குழந்தையை கொடுத்து பெற்றோரிடம் ஆசி பெற வித்யா அவனை ஆசிர்வதித்து உச்சி முகர்ந்தார்.

ஆனால் சிவசங்கரனுக்கு தான் என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.

'டேய் என்னடா..??' என்று அவர் கேட்க,

அவனோ வித்யாவிடம் "ம்மா நிச்சயம் ஆதியை உங்களால பார்த்துக்க முடியுமா..??"

"டேய் நாங்க உன்னையே வளர்த்தோம் உன் பையனை வளர்க்கிறதா கஷ்டம் " என்று வசுந்தரா கேட்க ,

'தேங்க்ஸ் பாட்டி' என்று அவருக்கு முத்தமிட்டு அவரிடமும் வாழ்த்து பெற்றவன் ஆகாஷ் கொண்டு வந்து கொடுத்த லக்கேஜை எடுத்து கொண்டு கிளம்ப அவனை சிவசங்கரன் விட்டால் தானே..??

'டேய் எங்க போற..??'

'ப்பா விடுங்க பிளைட்க்கு நேரமாகுது'

'டேய் அஞ்சு மாசமா மருமகளோட சேர்த்து என்னையும் எப்படி சுத்தல்ல விட்ட இப்ப உன்னை அவ்ளோ சீக்கிரம் விட்டுடுவனா" என்றவர்

'டேய் ஆகாஷ் பிடிடா இவனை, இன்னைக்கு இவன் போக கூடாது' என்று அவனை இழுத்து பிடித்து இருந்தார்..

"ப்பா விடுங்க இது உங்க மருமகளுக்கு வேற பிரஸ்ட் பிளைட் பயந்து போயிருப்பா நான் சீக்கிரம் போகணும்" என்று விஷ்வா அவர் பிடியில் இருந்து திமிர

அவரோ, 'என் மருமக தைரியசாலி இப்படியெல்லாம் நீ தப்பிக்க முடியாது வர்ஷு அவன் லக்கேஜ் கொண்டு போய் காரில் வை' என்று கூற

சிரிப்புடன் 'சரிப்பா' என்றவள் அவன் பெட்டியை உருட்டிக்கொண்டு செல்ல,

'வர்ஷு டோன்ட் கோ' என்ற விஷ்வா சிவசங்கரன் புறம் திரும்பி,

"ப்பா உங்களுக்கு பேத்தி வேணுமா வேண்டாமா..?? விடுங்கப்பா" என்று அவரை அழுத்தமாக பார்த்து கேட்கவும் தான் அவர் கரங்கள் தளர்ந்தது.

மூச்சை எடுத்து விட்டு சட்டையை சரி செய்தவன் வர்ஷினியிடம் இருந்து பெட்டியை வாங்கி கொண்டு வர மகன் வார்த்தையில் அங்கே பூரித்து நின்றிருந்த வித்யா கண்களில் திரண்டு விட்ட கண்ணீரில் இருந்து ஒற்றை துளி வெளியேறியது.

'என்னம்மா இது ' என்று அவசரமாக அவர் கண்ணீரை துடைத்தவன் அவரை ஆறுதலாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு , 'போயிட்டு வரேன்ம்மா' என்று திரும்ப,

'டேய் அப்போ நானு' என்று அவன் முன்னே வந்து நின்றார் சிவசங்கரன்.

புன்னகையோடு தந்தையை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தம் வைத்தவன் 'வரேன்பா' என்று நகர,

குடும்பமே 'ஆல் தி பெஸ்ட்' என்று கூறி அவனுக்கு விடை கொடுத்தது.

சம்பிரதாயங்களை முடித்து இறுதி நேரத்தில்
விமானத்தில் ஏறியவன் முகமெங்கும் படர்ந்த அச்சத்துடன் கண்களை மூடி இமையோரம் நீர் கசிய அமர்ந்திருந்த ப்ரீத்தி அருகே 'ஹாய் பொண்டாட்டி' என்றவாறு அமர்ந்தான்.

அவனை எதிர்பாராத ப்ரீத்தி முகத்தில் உச்சபட்ச அதிர்ச்சி.., விழிகள் தெறித்து விழாத குறை தான்..!!

ஆம் அவள் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் அத்தனை தூரம் எடுத்து சொன்ன பிறகும் அவள் கண்ணீரை துடைத்து, அவளை அரவணைத்து மன்னிப்பு கேட்டு சமாதானபடுத்த முயலவில்லை அதற்கு நேர்மாறாக அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல அவன் சகஜமாக இருக்கவும் ப்ரீத்திக்கு முழுதாக வெறுத்து போனது.

ஆனால் இப்போது அவன் தன்னருகே இருப்பதை கண்டவளுக்கு இது நிஜம் தானா..?? தனக்காக வந்திருக்கிறானா..?? என்று மனம் ஒரு புறம் எதிர்பார்க்க இமைக்கவும் மறந்து போனவளாக அவள் பார்வை அவன் மீதே பதிந்திருந்தது.

'ப்ரீத்தி' என்று அவன் அவள் முன்பாக கையசைக்கவும்

சில நொடிகளுக்கு பின்பே அவள் விமானத்தில் அமர்ந்திருப்பதும் அவளருகே அவன் இருப்பதையும் உணர்ந்தாள்.

'நீ நீ.. என்ன இங்க..?? எதுக்கு ..??' என்று தொடங்கியவளுக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை.

'ஈசி.. ஈசி, எதுக்கு இப்ப உனக்கு இவ்ளோ ஷாக்..??'

மூச்சை இழுத்து விட்டவள், 'நீ இங்க என்ன பண்ற..??'

'என்ன பண்ணனும்..?? சொல்லு பண்றேன்' என்று அவளை வம்பிழுக்க,

அவளோ சுற்றுபுறம் உணர்ந்து, "நீ.. நீ எதுக்கு என் கூட வர..??"

'நான் உன் கூட வரேனா..?? உனக்கு அப்படியா தோணுது..?? என்று அவளையே திருப்பி கேட்க,

'தேவ்' என்று பல்லை கடித்தாள்.

மனைவியின் கோபத்தை கண்டு என்ன முயன்றும் புன்னகை கீற்றாக அவன் முகத்தில் படரத்தான் செய்தது.

'ஓகே ஓகே சொல்றேன் நான் உன்கூட வரவும் நீ தான் காரணம்' என்று கூற அவள் முகத்தில் அதிர்ச்சி

'என்ன விளையாடுறியா...??'

"ஆமா" என்றவனின் முகத்தில் அத்தனை குறும்பு

பிரீத்தியின் முறைப்பை கண்டு "ச்ச்சி இல்ல இல்லன்னு சொல்ல வந்தேன் டங் ஸ்லிப் ஆகிடுச்சி ... உனக்கு தெரியாதா வீட்டோட ரூல்ஸ்...!! பொண்டாட்டியா என் சொல் பேச்சு நீ கேட்ட மாதிரி புருஷனா நானும் உன் பேச்சு கேட்கணும்ல" என்று சாய்ந்து அமர்ந்து அவளை கேட்க,

'யாருக்கு யார் பொண்டாட்டி..??' என்று அவள் எரிந்து விழ

" நீதான்...!! எனக்கு தான்..!! அப்படின்னு நீதான் சொன்ன" அவன் புருவம் உயர்த்தி தலை சாய்க்க..,

'நான் சொன்னேனா..??' என்று விழிகள் சிவந்தவள்

'டேய் நீயெல்லாம் எனக்கு புருஷனா இருக்க தகுதியே இல்லன்னு தான் சொன்னேன்'

'புருஷனா இருக்க தகுதி இல்லன்னு சொன்ன ஆனா புருஷனே இல்லன்னு சொல்லலையே..??' என்று அவன் எதிர்கேள்வி கேட்க,

ப்ரீத்தியை அவன் கேள்விகள் திணறடிக்க 'டேய் இப்போ நீ என்ன தான்டா சொல்ல வர..??' என்றால் அடிக்குரலில்

'நம்ம ரூம்க்கு வெளியே நீயும் நானும் ஹஸ்பன்ட் அண்ட் வைப்ன்னு நீதானே சொன்ன..??' என்று அவள் வார்த்தையை கொண்டே அவளை மடக்க,

பதில் சொல்ல முடியவில்லை ப்ரீத்தியால் !!

***

சில நிமிடங்கள் அவள் அவஸ்த்தையை ரசித்தவன்,

'நான் என் பொண்டாட்டி சொல் பேச்சு கேட்டு நடக்குறதுல எங்கப்பாக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா..??' என்று அவளை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே கூற

அவனை பார்க்க பிடிக்காமல் எதிரே இருந்த திரையை பார்த்து கொண்டு இருந்தவள் அவன் புறம் திரும்பி 'யாரு நீ பொண்டாட்டி பேச்சை கேட்குறவனா..??' என்று எள்ளலாக அவனை பார்க்க,

'இல்லையா பின்னே..!! பாரு நான் சொன்னபடி நீ படிக்க ஒத்துகிட்டதால எத்தனை நாள் தான் வீட்ல இருக்கிறது அதான் நானும் நீ சொன்னபடி வேலை பார்க்க ஒத்துக்கிட்டேன்..."

'ஓஒ..' என்றவளின் குரலே உன்னை நம்பவில்லை என்று அடித்து கூறியது,

'ஆனா அதுக்கு எதுக்குடா என் பக்கத்துல உட்காந்திருக்க..??'

'பக்கம் உட்காராம உன் மடியில உட்காரனுமா..??' என்றவனின் குரலில் குறும்பு கூத்தாடியது.

'தேவ்'

'எதுக்கு இவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க, என்ன பிரச்சனை ப்ரீத்தி உனக்கு..??'

'எனக்கு உன்னை தவிர வேற என்ன பிரச்சனை இருக்க போகுது'

'அதுக்கு நான் என்ன பண்ண..??'

'முதல்ல கீழ இறங்கு' என்று அவள் கூற,

'எனக்கு பூட்போர்ட் அடிச்சி பழக்கம் இல்ல'

'வாட் '

'அங்க பாரு பிளைட் டேக் ஆப் ஆகிடுச்சி வீ ஆர் பிளைங்' என்று கூற அப்போது தான் விமானம் சீராக பறக்க தொடங்கி விட்டதை கண்டவளுக்கு ஆசுவாச மூச்சு எடுக்க முடிந்தது.

பின்னே முதல் விமான பயணம் சிறு அச்சம் அவளிடம் அதை தவிர்க்கவே கண்களை இறுக மூடி கடவுளை வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால் அதையும் விஷ்வா அவளிடம் பேச்சு கொடுத்து ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டான்.

அவனை பார்க்கவும், "பிளைட் கிளம்பிடுச்சி நீ வேற இறங்க சொல்ற எனக்கு ஓடுற ப்ளைட்ல இறங்கி பழக்கம் இல்ல வேணும்ன்னா நீ சொல்லி கொடு வா.." என்று அவள் கையை பிடித்து கொண்டு அவன் எழுந்து கொள்ள,

'How may I help you sir..??' என்று ஏர்ஹோஸ்டஸ்

"இல்ல இவங்களுக்கு நான் கூட வரது பிடிக்கலை அதான் இவங்க எனக்கு..., ப்ச் அதை விடுங்க நீங்க எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..??"

'என்ன சார்..??'

"ப்ளீஸ் வழியில ப்ளைட்டை டீ காபிக்கு எங்கயாவது போட்டா சொல்லுங்க நான் இறங்கி ஊர் போய் சேரு.."என்றவனின் கையை பிடித்து இழுத்து அமர்த்திய ப்ரீத்தி,

'nothing, sorry to disturb you' என்று அவரிடம் கூறி அனுப்பி வைத்தவள்,

'டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட் விஷ்வதேவ், எதுக்கு இப்ப என் கூட வர..?? அத்தை மாமா எப்படி ஒத்துக்கிட்டாங்க' பதில் சொல்லு,

'வேலை வெட்டி இல்லாம இருக்கன்னு பொண்டாட்டி சொன்ன அப்புறமும் வீட்டோட உட்காந்தா நல்லா இருக்காதே அதான் வேலை செய்ய போறேன் சொன்னேன்... உத்யோகம் புருஷலட்சணமாமே உடனே ஓகே சொல்லிட்டாங்க அதோட நான் சொன்னபடி நீ படிக்க ஒத்துகிட்டதால உன்னை பார்த்திருக்கிற பொறுப்பும் எனக்கு இருக்காம் " என்று கூற,

'இதை நான் நம்பனுமா..??'

'அது உன் இஷ்டம்' என்று அவன் தோள்களை குலுக்கிட

'ஆதியை விட்டுட்டு எதுக்கு வந்த..? அவனை நீ பார்த்துப்பன்னு நம்பி தானே நான் கிளம்பி வந்தேன் '

"அம்மா, பாட்டி பார்த்துப்பாங்க எனக்கு அர்ஜென்ட் வொர்க் சோ கிளம்பிட்டேன். நான் ஆகாஷை தான் புக் பண்ண சொன்னேன் ஆனா பாரேன் நீயும் இதே பிளைட் அதுவும் என் பக்கத்து சீட் என்ன ஒரு கோயின்சிடென்ஸ்" என்று கண்களை எட்டாத புன்னகையுடன் அவன் கூற,

தலையை பிடித்து கொண்டாள் ப்ரீத்தி.

அதன் பின்பான விமான பயணம் முழுக்க விஷ்வா அவளிடம் வம்பிழுத்து சீண்டி கொண்டே வர இருக்கையை விட்டு எங்கும் போக முடியாத நிலையில் வேறு வழி இல்லாமல் ப்ரீத்தி அவன் பேச்சுக்களை காது கொடுத்து கேட்க தொடங்கிட ஒரு கட்டத்தில் அவன் மீதான கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் சாதாரணமாக பேச தொடங்கி இருவரும் ஒருவாறு அமெரிக்க மண்ணில் கால் பதித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து அவள் தங்கும் இடத்திற்கு அவளுடனே வந்த விஷ்வாவை பார்த்து 'எங்கயும் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா..??' என்று கத்திவிட்டாள்.

அவன் அசராமல் அவளை பார்க்கவும், 'ஆர் யு ட்ரையிங் டூ இம்ப்ரெஸ் மீ..??'

'நான் அந்த வேலைக்கு வரலையே' என்று அவளை மேலும் சீண்ட..,

'அதான பார்த்தேன் செஞ்ச தப்புக்கு சாரியே கேட்காதவன் நீ..!! நீயெல்லாம் எங்க இருந்து பொண்டாட்டியை ப்ளீஸ் பண்றதோ இம்ப்ரெஸ் பண்றதோ செய்ய போற உன்கிட்ட எதிர்பார்க்கிறது.." என்றவளை இடையிட்டவன்,

'அப்போ பொண்டாட்டின்னு ஒத்துகுற ??' என்று அவன் புருவம் ஏற்றி இறக்க,

ப்ரீத்திக்கு தன்னை கட்டுபடுத்துவது கடினமாகி போனது கைகளை இறுக மூடி அவனை பார்க்க,

"உன்னை இங்க நல்லா பார்த்துக்க சொல்லி உன் அத்தையோட ஆர்டர் அதோட எனக்கு ப்ளீஸ் பண்ணவோ இம்ப்ரெஸ் பண்ணவோ தெரியாது.." என்று கூறி எதிரில் இருந்த அறையை நோக்கி நகர்ந்தவன் அவள் புறம் திரும்பி,

'ஏன் ப்ரீத்தி ஒருவேளை நீ நான் உன்னை இம்ப்ரெஸ் பண்ணனும்ன்னு எதிர்பார்க்கறியா..??' என்று சந்தேகமாக பார்க்க,

அவளோ தலையை குலுக்கி கொண்டு 'நானா...??? நோ வே ..!! செஞ்ச தப்புக்கு இதுவரை சாரி கூட கேட்க தெரியாத நீயெல்லாம் என்னை பொறுத்த வரை மனுஷ ஜென்மத்துலேயே சேர்த்தி இல்ல அப்புறம் எப்படி அதை எல்லாம் எதிர்பார்ப்பேன்..??' என்றவளுக்கு இன்னுமே ஆத்திரம் அதிகரிக்க,

"இந்த சாரி , தேங்க்ஸ் எல்லாம் மனுஷங்க கிட்ட தான் எதிர்பார்க்கனும்" என்று விழி சிவந்தவள்,

'ப்ச் இன்னும் கூட நம்ப முடியலை எனக்கு இப்ப கூட சந்தேகமாவே இருக்கு' என்று அவனை பார்க்க,

'என்ன சந்தேகம்'

'நிஜமாவே நீ என் அத்தையோட பையன் தானா..?? ஒருவேளை ஹாஸ்பிட்டல்ல குழந்தை மாறி இருக்குமோ அவங்க அது தெரியாம உன்னை வளர்த்துட்டு இருக்காங்களோ.." என்று அவனை பார்க்க,

'அடிப்பாவி' என்பதாக அவன் விழிகள் விரிய 'எப்படி எல்லாம் டவுட் வருதுடி உனக்கு..!!' என்று இதழ் கொள்ளா புன்னகை அவனிடம்.

அவன் சிரிப்பில் எரிச்சலுடன் ப்ரீத்தி பார்க்க,

'அப்படியா தோணுது உனக்கு..??'

"ஆமா நீயெல்லாம் எங்க அத்தைக்கு மகனா இருக்க லாயக்கே இல்லாதவன்"

'அப்போ டெஸ்ட் எடுத்து பார்த்துருவோமா..???' என்றான் அவள் அருகே வந்து

'வாட்..?? என்ன டெஸ்ட் '

'டிஎன்ஏ டெஸ்ட்... இரு உன் அத்தைக்கு கூப்பிடுறேன்' என்றவன் கைபேசியை எடுக்க,

'ஏய் என்ன பண்ற..??' அவள் கைபேசியை பறிக்க முயல அதை உயர்த்தி பிடித்தவன்

"இல்ல நீதான் சந்தேகம் சொன்னியே.., அதான் வழி சொன்னேன் உனக்கு அது பிடிக்கலைன்னா உன் பாரும்மாக்கு கால் பண்ணி கேளு ஏன்னா எங்கம்மாக்கு பிரசவம் பார்த்து என்னை முதல்ல கையில தூக்கினது அவங்கதான்"

ஆரம்பம் இப்படி மோதலில் தொடங்கினாலும் சில நாட்களில் அவன் அவள் பயிலும் இடத்திற்கு நிஜமாகவே பணிபுரிய வந்திருப்பதை அறிந்து கோபத்திற்கு பதில் மகிழ்ச்சியே ஊற்றெடுத்தது.

சிறந்த முன்னாள் மாணவன், படிப்பு , பாடல் என்று பல பரிசுகளை குவித்து இருப்பவன், புகழ்பெற்ற ஆராய்ச்சியாளன் தங்கள் கல்லூரியில் பணிபுரிகிறேன் என்ற போது அவர்களுக்கு கசக்கவா செய்யும்..??

விஷ்வாவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருந்தனர்.

அதிலும் அவன் அவளுக்கே ஆசிரியராக வந்து நின்ற போது அன்று வீடியோ கான்பிரன்ஸில் அவனுடனான சில மணி நேர மருத்துவ உரையாடலிலேயே மகிழ்ந்திருந்தவள் இப்போது அவளுக்கு பாடம் எடுப்பதில் அவள் கொண்ட குதூகலத்திற்கு அளவே இல்லை..!!

அவன் மருத்துவத்தை தொடராமல் ஏன் பாடம் எடுக்க வந்தான்..?? என்று கேட்க தோன்றவே இல்லை, அந்த அளவு அவனுடனான அன்றைய உரையாடல் அவளை அவன் மருத்துவ அறிவின் பால் மயக்கம் கொள்ள செய்திருந்தது.

அவன் மீது உட்சபட்ச வெறுப்போடு இருந்தவள் ஒரே வீட்டில் வேறு வேறு அறையில் இருந்தாலும் முதலில் அவனிடம் இருந்து விலகி இருந்தாள்.

ஆனால் இருவருக்கும் இடையிலான மருத்துவமே ப்ரீத்தி அவன் புறம் சாய்வதற்கான தூண்டுகோலாகி போனது.

முதல் மூன்று மாதம் முடிவதற்குள்ளாகவே "போதும் தேவ் எப்படி இருந்தாலும் நாம ரெண்டு பெரும் தான் வாழ்க்கை முழுக்க தொடர போறோம் அப்புறம் எதுக்கு நாம இப்படி சண்டை போட்டுட்டே இருக்கணும், நீ செய்ததை மன்னிக்க முடியாட்டியும் மறக்க ட்ரை பண்றேன் " Let's be good friends Dev !!" என்று ப்ரீத்தியே அவனை தேடி வந்து நேசகரம் நீட்ட செய்துவிட்டான்.

அடுத்த சில மாதங்களில் அவள் மனதில் இடம் பிடித்து விட்டான்.

ஒரு வருடம் கடப்பதற்கு முன்பே ப்ரீத்தி விஷ்வாவை மனதார காதலிக்க தொடங்கி விட்டாள்..!!

பன்னிரண்டு மணி நேரத்தில் அவள் வெறுப்பை சம்பாதிக்க தெரிந்தவனுக்கு அவள் காதலை பெறுவதற்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது தேவைக்கு அதிகமே..!!

ஆம் பெண் மனதை முழுதாக வென்று விட்டான்.


ஹாய் செல்லகுட்டீஸ்..


எபிலாக் ஒரு ஐந்து பதிவு போகும் போல உங்களுக்கு ஓகேவா.. ஆனா மொத்தமா போடா முடியாது அதனால தினம் ஒன்னு இல்ல இரண்டு பதிவுன்னு இந்த வீக் என்ட்குள்ள போட்டு முடிச்சிடுறேன்... வழக்கம் போல கருத்துக்களை பதிவிடுங்க..

நன்றி
super
Double Kk for epilogue
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top