கொலுசொலி மயக்குதடி - 6

Advertisement

மறுநாள் வாசு எழுவதற்கு முன்பே எழுந்த நிலா வீட்டை பெருக்கி பூஜை அறையை சுத்தம் செய்து குளித்து விட்டு விளக்கேற்றினாள்.....

சஷ்டி கவசத்தை மனமுருகி கண்களை மூடியபடியே பாடத் தொடங்கினாள்.

வாசு கண் விழிக்கும் போதே நிலாவின் குரல் அவனின் காதில் தேனிசையாய் பாய்ந்தது...
எழுந்ததும் வேகமாக காலைக் கடன்களை முடித்துவிட்டு ஹாலிற்கு வந்தான்.

ஹால் முழுக்க சாம்பிராணி மணக்கவும் பூஜை அறையில் கண்மூடி அமர்ந்திருந்த நிலாவின் உருவம் அழகிய ஓவியமாய் அவனின் மனதில் பதிந்தது...

சஷ்டி கவசத்தை பாடி முடித்தவள் தீபாராதனையை முடிக்கவும் வாசு அவளது எதிரில் வந்து புன்னகை முகமாய் நின்றிருந்தான்.
தொட்டுக்கோங்க என காட்டவும் வாசுவும் கண்களில் ஒற்றிக் கொண்டான்..

குட் மார்னிங் நிலா.... அதுக்குள்ள எல்லா வேலையும் ஓவரா... பக்தி எல்லாம் இருக்கா உனக்கு...

மார்னிங் வாசு... அதெல்லாம் நிறைய இருக்கு.... மனசு தெளிவாக இருக்கும் அதுக்காக தான்....

ஓ.கே... ஓ.கே.... இன்னைக்கும் பால் வாங்க போகவா...? ஏதோ அவார்ட் வாங்க போவது போல கேட்டான்.....

போய்ட்டு வாங்க.... சேன்ஞ்ச் தரணுமா.. கையமர்த்தி அவளைத் தடுத்தவன் இருக்கு மா இருக்கு....

நேத்து ஏன் எனக்கு பணத்தை கொடுத்தனு கடைக்கு போனதும் தான் புருஞ்சுது... இனிமேல் உன் கிட்ட வாயை கொடுக்கறதாவே இல்லை.....

வாசு நேற்று கடையில் நடந்ததை நினைத்து பார்த்தான்..... இவன் போனதற்கு முன்பு அங்கு ஒருவன் ஒரு பாக்கெட் பால் வாங்கியதற்கு நூறு ரூபாயை கொடுக்கவும், அந்த கடைக்காரரோ ஹிந்தியில் நல்ல நல்ல வார்த்தைகளில் அவனைத் திட்டி அனுப்பினார்....

அதை நினைத்து தலையை உலுக்கிக் கொண்டவன் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்....

இன்று அவனிற்கு பிடிக்கும் என்று வெந்தயக் குழம்பும், தக்காளி இரசமும், தேங்காய் அவியலும் லன்ஞ்ச் பாக்சிற்கு செய்து முடித்தாள்.....வாசு பாலை அவளிடம் கொடுத்து விட்டு குளித்து ரெடியாகி வந்தான்...

என்ன வாசு அதுக்குள்ள கிளம்பிட்டீங்க.... அவனிடம் கேட்டவாறு காபிக் கப்பை அவனிடம் கொடுத்தாள்....

ஆமா நிலா... எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு நேத்து என்னவோ ஏதோனு உன்னை பார்க்க நேரமாக வந்துட்டேன்.... ப்ரேக்பாஸ்ட் வெளியே பார்த்துக்கறேன்.... நான் கிளம்பவா.... குடித்து முடித்த காபி கப்பை அவளிடம் கொடுக்காமல் கிச்சனிற்குள் போய் அவனே கழுவி வைத்தான்.....

கிளம்ப முடியாமல் சமையலின் வாசம் அவனை கட்டி இழுக்க சாப்பிடாமல் கிளம்பவும் மனம் வரவில்லை...

ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டால் லன்ஞ்ச் எடுத்து போகனும். சக்தி வேற கேள்வி கேட்பான். நிலா கிட்டயும் உண்மையை சொல்ல முடியாது என்ன பண்ணலாம் என யோசித்தவாறு கிச்சனை விட்டு வெளியில் வந்தான்.....

ஏன் வாசு சாப்பிட எவ்வளவு நேரம் ஆகப் போகுது சாப்பிட்டே கிளம்பலாம் இல்லையா. உங்களுக்காக தான் சேமியா கிச்சடி தேங்காய் சட்னி பண்ணுனேன்... அவள் சொல்ல சொல்ல கேட்டதும் வருவதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என சாப்பிட அமர்ந்து விட்டான்.....

நிலாவின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்த்தபின் எது வந்தாலும் சமாளிக்கலாம் என நினைத்துக் கொண்டு வழக்கம் போல வயிறு நிறைய சாப்பிட்டான்.
சற்று நேரத்திற்கு முன்பு சாப்பிடாமல் போக கிளம்பியவன் சாப்பிட்டு முடித்து விட்டு அவளிடம் வந்தவன் நிலா உன்னோட மொபைல் நம்பர் கொடு என கேட்டான்.

என்னோட மொபைல் என யோசித்தவள் வேகவேகமாக உள்ளே போய் தனது ஹேண்ட் பேக்கை எடுத்தாள்..

அது கவனிக்கப்படாமல் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. வேகமாய் எடுத்து சார்ஜ் போட்டுவிட்டு வெளியே வந்தாள்...

என்னாச்சு நிலா...

நீங்க கேட்டதும் தான் எனக்கு போன் நியாகமே வந்தது. நோட் பண்ணிக்கோங்க என மொபைல் நம்பரை கொடுத்தாள்..

சரி நிலா நான் மதியம் போல பேசறேன். பார்த்து பத்திரமாக இரு. உனக்கு மத்த திங்க்ஸ் எல்லாம் வாங்க இ்ன்னைக்கு சாயங்காலம் வெளியே போலாம்...

சரியென நிலா தலையாட்டவும் அவளிடம் சொல்லிக் கொண்டு ஆபிஸ் கிளம்பினான்...

கையில் லன்ஞ்ச் எடுத்து வருவதைப் பார்த்து விட்டு மேரேஜ் ஆயிருச்சா சார். அதுக்காக தான் ஊருக்கு போயிட்டு வந்தீங்களா என செக்யூரிட்டி இந்தியில் கேட்டு வைத்தார்....

அதெல்லாம் ஒண்ணும் இல்ல... வேலையைப் பாருங்க. கடுமையாகக் கூட பேசத் தெரியாமல் குரலைக் கொஞ்சம் உயர்த்தி பேசிவிட்டு செல்லும் முதலாளியை பார்த்ததும் அவரிற்கு அன்பு பெருகியது....

சக்தியை இன்று எந்தவித கேள்வியும் கேட்க இடம் கொடுக்காமல் சாமர்த்தியமாக சமாளித்து விட்டான்...

லன்ஞ்ச் சாப்பிட என்றுமே சக்தியும் வாசுவும் வெளியே செல்வார்கள்.... இன்றும் அதேபோல வாசுவை அழைக்க வரவும் அவனோ அங்கேயே சாப்பிட முழு ஆயத்தத்தில் இருந்தான்....

வா சக்தி... நானே எடுத்துட்டு வந்துட்டேன்... இரண்டு பேரும் இனிமேல் வெளியே போக வேண்டாம் என்றவாறு இரண்டு தட்டுகளில் உணவுகளை வைத்தான்....

எதற்கும் அடங்கி போகாத சக்தி இந்த ஒரு விசயத்தில் மட்டும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.....

அமைதியாக சாப்பிட அமர்ந்தவனை வாசு ஆச்சர்யமாக பார்த்தவாறு பரிமாறினான்.... எப்படியோ இவனிற்கு பயந்து சாப்பிடாமல் வந்திருந்தால் நிலாவும் வருந்தியிருப்பாள் என நினைத்தவன் அமைதியாக சாப்பிடத் தொடங்கினான்....

சூப்பரா இருக்குடா... வெந்தயக் குழம்புனா எனக்கு அவ்ளோ இஷ்டம்...எல்லாமே நல்லா இருக்கு... பேசாம அந்த பாட்டியை வீட்டில் வச்சுக்கலாம் போல.... அவனிற்கு அவனே சொல்வது போல ஏதோ ஒரு வம்பு இழுத்தவாறு சாப்பிட்டான்.....

நான் நினைக்கலனா கூட அவனே பாட்டி பாட்டினு சொல்லியே இருக்க கொஞ்ச நிம்மதியையும் போக வைக்கிறான்.... வாசு மனதிற்குள் புலம்புவதை செவ்வனே செய்தான்...

நிலா சாப்பிட்டாளா இல்லையானு தெரியலயே... நேத்து தான் கேட்க முடியல இன்னைக்கும் கேட்காம நீ பாட்டுக்கு வக்கணையாக கொட்டிக்கற... இதை யோசித்த பின்னால் வாசுவிற்கு அடுத்த கவளம் உணவு தொண்டையில் இறங்கவில்லை...

சக்தியோ சாப்பிடுவது ஒன்று தான் தலையாய கடமை என வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.சட்டென போனை எடுத்துக் கொண்டு வாசு எழுந்து விடவும்... சாப்பிடும் போது பாதியில் எழுந்து போறது என்ன பழக்கம் டா... ஒழுங்காக உட்காரு... சக்தி அவனை கடிந்து கொண்டான்.....

இருடா.. ஒரு முக்கியமான கால் பேசனும் ஐந்து நிமிஷத்தில் வந்துடறேன் என எழுந்து வெளியே நடந்தான்... அதுக்கு என்ன இங்கேயே பேசு என்ற சக்தியின் குரல் காற்றில் கரைந்து போனது......

மூன் என சேவ் பண்ணி இருந்ததை பார்த்து மெல்ல சிரித்துக் கொண்டவன் அவளிற்கு அழைப்பு விடுத்தான்.....

அதற்காகவே காத்திருந்தது போல ஒரே ரிங்கில் போனை எடுத்தவள்.... வாசு... சொல்லுங்க.... ஹலோ சொல்லக் கூட அவசரமா என்றவாறு வாசு சிரித்தான்...

போனை கண்டுபிடிச்சவன் பொண்டாட்டி பேரை நான் எதுக்கு சொல்லனும்.... அவரு முதல் முதலாக போன் பேசும் போது ஆசையாக ஹலோ னு அவரோட பொண்டாட்டி பேரை சொல்லி கூப்பிட்டாராம்... நாம ஏன் அதையே சொல்லனும்.. அதனால தான் வாசுனு உங்க பேரை சொல்லி கூப்பிட்டேன்.....

ஹையோ நிலா ப்ளீஸ் தெரியாம கேட்டுட்டேன் விடு என சிரித்தவன்... சாப்டியா அதை கேட்கலாம்னு தான் போன் பன்னுனேன்....

இதைக் கேட்டதும் சட்டென அவளது கண்களில் நீர் கோர்த்தது.... சாப்பிட்டேன் வாசு நீங்க சாப்டீங்களா.... நல்லா இருந்துச்சா...

சாப்பிட்டு தான் இருந்தேன் உன்னோட நியாபகம் வந்துச்சு... அதனால தான் பாதியில் எழுந்து வந்துட்டேன்.....

வாசு அப்படி எல்லாம் பாதியில் எழுந்து வரக்கூடாது... என்ன பழக்கம் இது.... போய் சாப்பிடுங்க... நான் போனை வைக்கிறேன்... நிலா சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் ....

என்ன இரண்டு பேரும் ஒரே மாதிரி சொல்றாங்க என்று யோசித்தவாறு மீண்டும் வேலையை கவனிக்க போனான் அதாங்க சாப்பிடறது....

சக்தியும் வாசுவும் சாப்பிட்டுக் கொண்டிருக்க திடீரென வாசுவிற்கு விக்கல் வரவும் சக்தி அவசரமாய் தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.....

அதுவரையில் சாப்பிடாமல் இருந்தவள் போன் பேசிய பிறகே சாப்பிடத் தொடங்கினாள் அவனை நினைத்தபடியே... அதுதான் அவனை எட்டியதோ என்னவோ நிற்காமல் விக்கல் வந்து கொண்டிருந்தது....

தண்ணியைக் குடிடா என கடிந்தவாறு சக்தி கொடுக்கவும் வேண்டாம் என்னை யாராவது நினைச்சு இருப்பாங்க என்ற சொன்னவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது..

வாசுவின் செயல்களை விசித்திரமாக பார்த்த சக்தியும் அப்படியா ராசா என வில்லங்கமாக கேட்கவும் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த வாசு திடுக்கிட்டு போய் நினைவிற்கு வந்தான்...

சக்தி தன்னை ஒரு மாதிரி பார்ப்பதை பார்த்துவிட்டு சுதாரித்தவன் சும்மா சொல்லிப் பார்க்கலாம்னு எனவும் சக்தி அவனை நம்பாத பார்வை பார்த்தான்..

பார்த்துக்கறேன் இருடா கையில் சிக்கும் போது கவனிக்கறேன் என மிரட்டினான்..

சக்தி சொல்லிவிட்டு போனதை நினைத்தவாறு வேலையில் ஆழ்ந்திருந்தான் வாசு...

இன்னைக்கு சீக்கரமாக போனால் சக்தி என்ன சொல்லுவான் என்றே சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது...

இருந்த போதும் மாலை சீக்கிரமாக ஆபிஸ் விட்டு கிளம்பவும் சக்தி வந்து அவனை தடுப்பது போல எதிரில் வந்து வழியை மறித்தான்.

என்ன டா என வாசு கேட்கவும் எங்க சார் இவ்வளவு வேகமாக கிளம்பிட்டீங்க என சக்தி எதிர் கேள்வி கேட்டான்...

கொஞ்சம் வேலை இருக்கு சீக்கிரமாக போகனும் நாளைக்கு பேசிக்கலாம். பாய்... பாய்... என சக்தி பேசுவதற்கு இடம் கொடுக்காமல் சக்தியிடம் இருந்து தப்பி ஓடி விட்டான்.

வாசு போவதையே யோசனையாக பார்த்தபடி நின்றிருந்த சக்தியும் வேலையை பார்க்கப் போனான்..

வீட்டிற்கு வந்த வாசு நிலாவை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினான்...

இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வரவும் கீழே பார்க்கிங்கில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு வந்தான்..

ஏறு நிலா என்றவாறு பைக்கை ஸ்டார்ட் செய்யவும் நிலாவும் ஏறி அமர்ந்தாள்..

பைக்கை சற்று மெதுவாக ஓட்டிய வாசுவோ நிலாவிடம் அனைத்தையும் காட்டி என்னவென்று விளக்கினான்...

ஒரு பெரிய மாலிற்கு போனவர்கள் நிலாவிற்கு தேவையானதையும் வீட்டிற்கு சில பொருட்களையும் வாங்கினார்கள்..

நிலா வாங்குவதற்கு முன்பே அவள் கண்களால் பார்ப்பதை எல்லாம் வாசு வாங்கி குவித்தான்...

நிலா கெஞ்சியும் வாசு அடங்காமல் போகவும் அவனைத் திட்டிய பிறகே ஓய்ந்தான்...

ஒரு வழியாக அனைத்தையும் வாங்கிவிட்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்..

நிலா வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வரவும் வாசு ஒரு சிறு புன்னகையுடன் கேட்டவாறு வண்டியை ஓட்டினான்..

வீட்டிற்கு வந்ததும் வாசு அமைதியாக இல்லாமல் அவளின் பொருட்களை வைக்க இடம் ஒதுக்கித் தருகிறேன் என்றவாறு அடுக்கியிருந்த அனைத்து துணிகளையும் கையோடு வாரி வந்து பெட்டின் மேலே போட்டு விட்டான்.....

நிலா உன்னோட திங்க்ஸ் வைக்க இடம் ரெடி.... எல்லாமே இங்கேயே வச்சுக்கோ... இதுக்கு கண்டிப்பாக என்னை பாராட்டியே ஆகனும்....

வாசு மட்டும் தனியாக பேசியவாறு இருக்க சத்தம் வராமல் போகவும் என்ன நாம மட்டும் பேசறோம் சத்தத்தையே காணோம் என நிலாவை திரும்பி பார்த்தான்....

நிலாவோ உச்சகட்ட கோபத்தில்.... வாசுசுசு.... என்று அலறவும் அவன் என்னவோ ஏதோவென்று பயந்து போனான்..

நான் கேட்டேனா சொல்லுங்க. உங்க கிட்ட வந்து வாசு... வாசு.... எனக்கு ஹெல்ப் பண்ணுங்கனு கேட்டேனா.... அயர்ன் பண்ணி வச்சிருந்த எல்லாத் துணியையும் இப்படி கலைச்சு வச்சுட்டீங்க..... பெட்டின் மேலே அவன் போட்ட துணிகளை எடுத்து அவன் மேலேயே வீசினாள்.....

ஏய் என்ன இது... மரியாதையே இல்லாம துணியை கொண்டு அடிக்கற... இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ஆமா சொல்லிட்டேன்.... அப்புறமாக இந்த அப்பாவியை கொலை பண்ணுன பாவத்துக்கு நீதான் ஜெயிலுக்கு போகனும்..

இந்த துணியை தூக்கி உங்க மேல போட்டு தான் உங்களை கொல்லப் போறேனா.. ஏன் இப்படி.. நான் மறுபடியும் அயர்ன் பண்ணனும்....

அவன் மேல் வீசிய துணிகளை எல்லாம் எடுத்து அலமாரியில் வைத்து விட்டு வந்தாள்.....

அன்றைய நாள் அவ்வாறு கழியவும் மறுநாள் வாசு எப்போதும் போல ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு ஆபிஸ் கிளம்பினான்..

வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்தவள் அதற்கு மேலும் பொழுது போகாமல் இருக்கவும் மொபைலின் நினைவு வந்தது...

எடுத்து நெட்டை ஆன் பண்ணவும் வரிசையாக மெசேச் அணிவகுத்து நின்றது. மனம் கனக்க ஓபனே செய்யாமல் டெலிட் செய்தவள் தனது கடந்த காலத்தை கண்மூடி மறக்க முயற்சி செய்தாள்..

மனம் சிறிது சமன்பட தன்னை நிலைப்படுத்துக் கொண்டாள். போனை எடுத்து தான் இருக்கும் இடத்திற்கு அருகில் என்ன எல்லாம் இருக்கிறது என சர்ச் செய்து கொண்டிருந்தாள்...

பொழுது அப்படியே சற்று நேரம் போனது. வேறு என்ன செய்வது என தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தாள்..

கீழே வந்த நிலா அபார்ட்மெண்ட்டிற்குள் இருந்த பார்க்கை பார்த்துவிட்டு அதை நோக்கி நடந்தாள்...

சிறு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியபடியே தாய்மார்கள் இருக்கவும் அதைப் பார்த்தவாறு அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்...

ஒரு குழந்தை இவளின் குர்தியை இழுக்கவும் வாங்க என கையை நீட்டினாள்...

குழந்தையும் அதன் தாயிடம் இருந்து இவளிடம் தாவியது. அதைப் பார்த்ததும் அந்த பெண்ணும் சிநேகமாக சிரித்தாள்...

ஆர் யூ தமிழ்... அந்தப் பெண்ணின் கேள்விக்கு ஆமாம் என தலையாட்டினாள்...

விச் ப்ளாட் என நிலாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் விசாரித்தாள்..

B103 என நிலா சொல்லவும் புதியவளோ முகத்தில் வியப்பைக் காட்டினாள்...

இது எதுவும் கவனிக்காத நிலாவோ குழந்தையை கொஞ்சத் தொடங்கினாள்..

சற்று நேரத்தில் குழந்தையை வாங்கிக் கொண்டவள் கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும். எங்க ப்ளாட் C25 என ஹிந்தியில் சொல்லிவிட்டு கிளம்பினாள்...

நிலாவிற்கும் அதற்கு மேல் அங்கு இருக்க போரடிக்கவும் எழுந்து பார்க்கை ஒட்டியுள்ள ரோட்டில் மெதுவாக நடக்கத் தொடங்கினாள்...

ஒரு குக்கரிங் க்ளாஸ் பற்றிய அறிவிப்பை பார்த்தவள் அட்ரஸ் மற்றும் கான்டாக்ட் டீடெய்ல்ஸ் எல்லாம் குறித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள்..

மயக்குவாள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top