கொலுசொலி மயக்குதடி - 5

Advertisement

மதியம் வரை எந்த பிரச்சனையும் இன்றி போய்க் கொண்டிருந்தது.... முடிக்க வேண்டிய வேலைகள் வரிசை கட்டி நிற்கவும் வாசு வேலையில் ஐக்கியமானான்......

சக்தியும் அவனிற்கான வேலையில் ஈடுபட்டிருந்த போது அங்கு பணிபுரியும் நேகா அவனைத் தேடி வந்தாள்....

நேகா மும்பையை சேர்ந்தவள்.... பார்க்க பயங்கர மாடர்ன் ஆக இருப்பாள்.... ஒரு இன்ஞ்ச் அளவு மேக்கப் அவளது முகத்தில் இருக்கும்.. அடர் சிகப்பு நிற லிப்ஸ்டிக்.... ஹை ஹீல்ஸ்..... ஜீன் டாப்ஸ்..... அவளைப் பார்த்தால் வழிந்து பேசும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். அதில் அவளிற்கும் ஒருவித தலைக்கனம்.... ஆனால் வாசுவும் சக்தியும் அவளை நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை....

வாசுவை கூட ஒதுக்கிட முடிந்த நேகாவால் சக்தியை அப்படியே விட்டுவிட மனம் வராமல் ஏதாவது சந்தேகம் கேட்கும் சாக்கில் அடிக்கடி அவனது கேபினிற்கு படையெடுத்து விடுவாள்...

இன்றும் அதேபோல சக்தியின் கேபினைத் தனது விரலால் தட்டியபடி மே ஐ கம் இன் சார் என மொத்த பற்களும் தெரியும் படி சிரித்து வைத்தாள்...

அவள் விட்ட ஜொள்ளில் ஆபிஸ் மூழ்கிடாமல் இருந்ததே அதிசயம் தான்... சக்தியோ எரிச்சலை வெளிப்படையாக முகத்தில் காட்டியபடி எஸ் கம் இன் என்றான்... அதற்காக காந்திருந்தது போல பாய்ந்து வந்து அவனின் முன்னால் நின்றாள்....

சார் ஐ ஹேவ் ஒன் டவுட் என்றவள் வழிந்தபடியே ஒரு பைலை அவனிடம் நீட்டி எதையோ கேட்டாள்....

சக்தியும் ஒரு வேளை உண்மை தானோ என நினைத்து அதை வாங்கி பார்க்கவும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது....

வாட் ஈஸ் திஸ் நேகா... ஆர் யூ மேட்.... நெக்ஸ்ட் வீக் அனுப்ப வேண்டிய ஆர்டர் டீடெய்ல்ஸ் எடுத்துட்டு வந்துட்டு டவுட்னு சொல்றீங்க.... நாளைக்கு அனுப்ப வேண்டியதற்கான பைனல் டாக்குமென்ட்ஸ் ஓவரா... வாசு சார் சைன் பண்ண அவங்க கேபினிற்கு அனுப்பியாச்சா.... அதுக்குள்ள பெண்டிங் வொர்க்கு டவுட்.... கெட் லாஸ்ட் ப்ரம் ஹியர்...

சக்தி கத்திய கத்தலில் அவன் பேசிய தமிழ் புரியாது போனாலும் திட்டியது எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கவும் பைலை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடியே விட்டாள்...
சக்தி கனல் தெறிக்க டேம் இட்.... ஷிட்... என்றவாறு டேபிளின் மேலே ஓங்கி குத்தவும் அதற்கு ஆயுள் அதிகம் போல உடையவில்லை....

மீதியிருந்த கோபத்தை கீ போர்டில் காட்டிய வேகத்தில் அதற்கு வாய் இருந்திருந்தால் குய்யோ முய்யோ என அழுது ஊரை கூட்டியிருக்கும்... அதற்கும் வாசு தான் போய் சமாதானம் செய்திருக்க வேண்டும்... எப்படியோ அதனால் வாய் விட்டு பேச முடியாது... அடுத்த அரைமணி நேரத்தில் அனைத்தும் தயாராக ப்ரிண்ட் அவுட் எடுத்து பைல் பண்ணியிருந்தான்....

சக்தியே அதை எடுத்துக் கொண்டு வாசுவின் அறைக்கு போனான்... அதே நேரம் வாசு லேப்டாப்பிற்குள் தலையை விட்டவாறு ஏதோ வேலையாக இருந்தான்....

நேராக உள்ளே வந்த சக்தியோ சைன் வேணும் என வாசுவிடம் நீட்டினான். வாசுவும் அதை வாங்கி சைன் பண்ணி விட்டு வேலையை தொடர்ந்தான்....

உனக்கு எவ்ளோ தடவை சொல்றது படிச்சுட்டு சைன் பண்ண மாட்டியா...?
அவனை பார்த்து முறைத்த வாசு நீயும் இதுல பார்ட்னராக இருந்து இருக்கனும். ஆனால் ஜி.எம் னு சொல்லி ஒதுங்கிட்ட. இப்போ ஓவரா சீன் போடாத. வாசுவும் சக்திக்கு குறையாத கோபத்தில் பேசினான்...

வாசு கோபம் கொள்வது அரிதானது என்பதால் சக்தி அதற்கு மேலும் வாசுவிடம் வாதம் செய்யாமல் விட்டு விட்டான்...

டேய் இந்த நேகா தொல்லை தாங்கல சலிப்பாக கூறியபடியே அங்கிருந்த இருக்கையில் பொத்தென அமர்ந்தான்....

ஏன் என்னாச்சு...? ப்ரபோஸ் பண்ணிட்டாளா...? ஆர்வமாக அவனைப் பார்த்து கேட்டான்....

வாசுசுசு..... என பல்லை கடித்தவன் நடந்ததை சொன்னான்..

அதைக் கேட்டதும்.... ஹாஹாஹா.... உனக்கு நேரம் அப்படி டா... நானும் தான் இருக்கேன்... என்னை ஏதாவது பொண்ணு லுக் ஆச்சும் விடுதா... வாசு அவனை கலாய்த்தான்....

ஏண்டா சொல்ல மாட்ட. பொண்ணுகளே இப்படித்தான் டா... ச்சே... நெனச்சாவே கடுப்பா இருக்கு. நான் நல்லா யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்க. இனிமேலும் அந்த பாட்டியை வேலைக்கு வச்சிருக்க வேண்டாம். ஒழுங்காக வேலையை விட்டு அனுப்பி விடு...

அடப்பாவி... நேகாவை பாட்டினு சொல்றியா... இதை மட்டும் அவ கேட்டா நெஞ்சு வலி வந்தே செத்திருவா....

அடச்சீ... அவளிற்கு அவ்ளோ சீன்லாம் இல்லை... நான் சொன்னது உங்க வீட்ல இருக்க பாட்டியை... இவள் எல்லாம் ஒரு ஆளா... அவளை நான் பார்த்துக்கறேன்....

இவன் அதை மறக்கவே மாட்டானா... ஒரு தயிர்சாதம் கொடுத்தது தப்பா டா... அதை நல்லா முழுங்கிட்டு இப்போ என்ன பேச்சு பேசிட்டு இருக்க.... மனதிற்குள் வழக்கம் போல வாசு புலம்ப தொடங்கி விட்டான்....

இந்த வீக் எண்ட்ல நான் உன்னோட வீட்டிற்கு வருவேன். அப்போ யாராவது உன்னோட ப்ளாட்ல இருந்தால் நீ செத்தடா மவனே.... உக்கிரமாக அவன் மேலே சொல்ல வருவதை கேட்காமல் பைலை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்....

ஏதோ ஒரு வழியாக கிளம்பினான் என நினைத்து நிம்மதி அடைவதற்குள் திரும்ப வந்தான் சக்தி...

ஆமா அந்த பாட்டியோட பேரு என்ன....?

சக்தி கேட்ட ஒற்றை கேள்வியில் வாசுவின் ஒட்டுமொத்த நிம்மதியும் பறிபோனது...

ஏண்டா டேய் நான் என்னடா உனக்கு பாவம் பண்ணுனேன். நிலானு சொல்லவா முடியும். அதைக்கேட்டு என்ன நீ கொன்னே போட்டுருவியே...

நம்ம ஊர்ல பாட்டிக்கு எல்லாம் எப்படி பேர் வச்சிருப்பாங்க என தீவிரமாக யோசித்தான்..

அடேய் பேரு தானே கேட்டேன் அதுக்கு எதுக்கு இந்த முழி முழிக்கற. எதாச்சும் திருட்டுத்தனம் பண்ணியிருக்கியா. அவனையே கூர்ந்து பார்த்தான்...

நோண்ட ஆரம்பிச்சுட்டான். இதுக்கு மேலயும் பேசலனா ஒட்டுமொத்த ஹிஸ்டரியும் நம்ம வாய்லயே வந்திரும் என முடிவெடுத்தவன் நிலவழகி என்றான்...

நிலவழகியா என்னடா இது பேர் வித்தியாசமாக இருக்கு என சக்தி எதிர்கேள்வி கேட்டான்..

அதை அந்த பாட்டிகிட்ட தான் கேட்கனும் என்னை கேட்டா.. வாய்க்கு வந்ததை சொல்லி வைத்தான்..

சீக்கிரமாக உன் ப்ளாட்டுக்கு வரேன். வந்துட்டு எல்லாத்தையும் சீக்கிரமாக நானே கண்டுபிடிக்கறேன் என வில்லத்தனமாக சொல்லிவிட்டு கிளம்பினான்...

பேரு கேட்டதுக்கே இந்த சொதப்பல் பண்ணிட்டியே. இதே அட்ரஸ் கேட்டிருந்தால் நானே என் வாயால எல்லா உண்மையும் இன்னைக்கே சொல்லியிருப்பேன்...

ஷப்பா இப்போவே கண்ணைக் கட்டுதே. வாசு தான் தலையை பிய்த்துக் கொண்டான்.... அதற்கு பின்பு அவனால் வேலையும் செய்ய முடியவில்லை....

மதியம் போல வந்த சக்தி வாசுவை சாப்பிட அழைக்கவும் வேண்டாம் என மறுத்துவிட்டு வாசு வேலையை பார்க்கத் தொடங்கினான்.

உன்னை எல்லாம் சாப்பிட கூப்பிட்டேன் பாரு என்னை சொல்லனும் என சக்தி வாசுவை திட்டியவாறு சாப்பிட கிளம்பி விட்டான்.

சக்தி பேசிவிட்டு போன பின்பே வாசுவிற்கு வீட்டின் நியாபகமும் அதோடு நிலாவின் நியாபகமும் வந்தது..

நிலாகிட்ட போன் இருக்கானு கூட தெரியல. நான் அதைக்கூட கேட்காமல் வந்துட்டேன். தனது மடத்தனத்தை எண்ணி நொந்தவாறு அவள் என்ன செய்கிறாளோ என யோசிக்கத் தொடங்கி விட்டான்..

கையில் லக்கேஜ் எதுவும் எடுத்துட்டு வரல. வேற ட்ரெஸ் கூட இருக்காதே அவகிட்ட. வாசு யோசிக்க யோசிக்க கவலை அதிகமானது...

மாலை வரை நேரத்தை நெட்டி தள்ளியவன் வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக சீக்கிரமாகவே ஆபிசில் இருந்து கிளம்பி விட்டான்...

காலிங் பெல் அடிக்க நிலா வந்து கதவைத் திறக்கவும் வாசு கை நிறைய பைகளுடன் நின்றிருந்தான்....

என்ன இது வாசு என கேட்டவாறு அவனது கைகளில் இருந்த பாதி பைகளை வாங்கிக் கொண்டாள்...

சொல்றேன் என்றவாறு உள்ளே வந்த வாசுவோ தன் கையில் இருந்த பைகளை ஹாலில் இருந்த டேபிளின் மேலே வைத்தான்.

ப்ரிட்ஜில் இருந்த தண்ணீரை எடுத்தவன் கடகடவென ஒரு பாட்டில் முழுவதையும் காலி செய்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தான்..

நிலா அவனது செய்கைகளையே பார்த்து கொண்டிருந்தாள்.

என்னையே எதுக்கு இப்படி பார்க்கறே...

என்ன இதுனு அப்போவே கேட்டேன். இன்னும் பதிலே வரலயே...

உனக்காகத் தான் வாங்கிட்டு வந்தேன் என்றவன் அனைத்தையும் வெளியே கடை பரப்பினான்.

வெகு நேர்த்தியாக இருந்த அவனின் தேர்வுகளை பார்த்து விட்டு ஐயாக்கு இதுல எல்லாம் நிறைய அனுபவம் இருக்கும் போலயே என கேலி போல கேட்டாள்...

இருந்தும் அவனும் ஆமாம் என்று சொல்லிவிடக் கூடாது என இல்லாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டாள்..

வாசு பதில் சொல்ல எடுத்துக் கொண்ட ஒரு சில நொடிகளில் நிலாவின் இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது...

ஆனால் இந்த அவஸ்தை எல்லாம் தேவையே இல்லை என்பதைப் போல நல்லா சொன்ன போ. எனக்கு எல்லாம் கேர்ள் ப்ரண்ட்ஸ் ஒண்ணு கூட இல்ல மா. நான் போய் யாருக்கு ட்ரெஸ் எல்லாம் வாங்க போரேன். உனக்கு தான் முதல் முதலாக வாங்கிக் கொடுக்கிறேன்..

வாசுவின் பதிலில் நிலாவின் முகம் பூரண நிலவாய் மாறியது. அதற்கு பின்பு அவன் வாங்கி வந்ததை எல்லாம் ஆசையுடன் எடுத்து பார்க்கத் தொடங்கினாள்...

உனக்கு ட்ரெஸ் எல்லாம் வைக்கனும்ல வா அதுக்கு ஒரு வழி பண்ணலாம் என ரூமிற்குள் போனான்.

நிலாவும் சிரித்தவாறு அவனது பின்னால் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போனாள்..

வாசு கபோர்டை திறக்கவும் அவனது அனைத்து துணிகளும் துவைத்து அயர்ன் செய்யப்பட்டு அடுக்கப்பட்டு இருந்தது.

பார்த்தவனின் விழிகள் இரண்டும் வியப்பால் விரிந்தது. அதெல்லாம் ஒரு நிமிடம்தான் அவனையே நிலா பார்த்துக் கொண்டிருந்தாள்.

உன்னை யாரு இதெல்லாம் பண்ண சொன்னது...

வாசுவின் கோபத்தில் நிலாவோ துடித்துப் போனாள். மன்னிச்சிடுங்க நான் கொஞ்சம் அட்வான்டேச் எடுத்துட்டேன்..

நான் என்ன சொல்ல வரேன்னு தெரியாம நீயே கற்பனை பண்ணிக்காத..

என்ன சொல்ல வரீங்க சொல்லுங்க நானும் தெருஞ்சுக்கறேன்..

ட்ராவல் பண்ணிட்டு வந்துட்டு ரெஸ்ட் எடுக்காம இதெல்லாம் பண்ணிட்டு இருந்திருக்க அதைக் கேட்டால் நீ எதுவோ பேசற.போ நிலா என மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டான்..

நிலாவிற்கும் அதற்கு பின்பே அவன் சொல்ல வருவது புரிந்து. வாசுவின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவள் சாரி என்றாள் இரு காதுகளையும் கைகளால் பிடித்துக் கொண்டு..

இனிமேல் இதுபோல பேசக்கூடாது. உனக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு. யார் என்ன சொன்னாலும் அதை நீ பெருசா எடுத்துக்க கூடாது. எனக்கு சத்தியம் பண்ணு என கைகளை நீட்டினான்...

வாசுவின் அன்பில் நெகிழ்ந்தவள் மறுக்க தோன்றாமல் சத்தியம் செய்தாள்...

குட் கேர்ள்... சரி நான் போய் குளிச்சிட்டு வரேன் நீ உன்னோட ட்ரெஸ் எல்லாம் கபோர்டில் அடுக்கு என்றான்..

நிலாவும் புன்னகையுடன் வாசு வாங்கி வந்த துணிகளை அடுக்கத் தொடங்கினாள்...

என்னவோ என்னவோ
என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே
நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள்வரை
தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே
நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள்வரை
தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக
உன்னோடு நானாக வா....



கைகள் வேலை பார்க்கவும் வாய் தானாக பாடிக் கொண்டிருந்தது..

நிலாவின் காந்தக்குரலில் மயங்கிய வாசுவோ அவசர அவசரமாக குளித்துவிட்டு வெளியே வந்தான்...

கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்தவள் வாசுவின் கோலம் பார்த்து விதிர்விதிர்த்து போனாள்..

வேகமாக அறையை விட்டு வெளியே ஓடி விட்டாள்..

எப்போதும் வரும் நினைவில் இடுப்பில் வெறும் டவலுடன் வந்த தனது மடத்தனத்தை எண்ணி நொந்தவன் அவசரமாக துணியை போட்டுவிட்டு வெளியே போனான்...

நிலா ஹாலில் அமர்ந்திருக்க அவளிடம் எப்படி பேசுவது என தெரியாமல் தயங்கினான்...

தன் அருகில் நிழலாடுவதை உணர்ந்த நிலா திரும்பிப் பார்க்கவும் வாசு மிட்டாய் திருடிய குழந்தையை போல விழித்தபடியே நின்றிருந்தான்...

அதைப் பார்த்து மனம் கனிந்தவள் விழிகளால் என்ன என்று கேட்டாள்...
நிலாவின் விழி வீச்சில் ஒரு நொடி மயங்கியவன் ஒண்ணுமில்ல என அவசரமாக தலையாட்டினான்..

சரி சாப்பிடலாமா என நிலா கேட்கவும் வாசுவின் செயல் சிரிப்பை வரவழைக்க மெல்லிய புன்னகையுடன் டைனிங் டேபிளை நோக்கி போனாள்..

இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ரூம்ல நடந்தது நிஜமா இல்லை கனவா என யோசித்தபடியே குழப்பத்துடன் டைனிங் டேபிளை நோக்கி போனான்..

நிலா அமைதியாக வாசுவிற்கு தட்டை வைத்தவள் சப்பாத்தியும் குருமாவும் பரிமாறவும் வாசு ஆசையாக சாப்பிடத் தொடங்கினான்...

வாசு சாப்பிடுவதை பார்த்ததும் நிலாவின் மனம் நிறைந்தது. அவனையே பார்த்தபடியே நின்றிருந்தாள்..

சாப்பிட்டுக் கொண்டிருந்த வாசு தன்னைத் தானே திட்டிக் கொண்டு நீயும் சாப்பிடு நிலா என அழைத்தான்..

நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமாக சாப்பிடறேன் என மறுத்தாள்...

காலையில் கூப்பிட்டதுக்கும் இதையே சொன்ன. இப்போ நீ வந்து என்கூட சாப்பிடு என அவனே தட்டை வைத்து பரிமாறவும் சாப்பிட்டு முடித்தார்கள்...

நிலா தூங்கப் போய்விடவும் வாசு தயக்கத்துடன் பால்கனியில் நின்றிருந்தான்.

தூக்கம் வராமல் கண்களை திறந்த நிலா மறுபக்கத்தில் வாசுவைக் காணாமல் போகவும் எழுந்து அமர்ந்தாள்..

எங்க வாசுவைக் காணோம் மனதிற்குள் நினைத்தபடியே யோசித்துக் கொண்டிருந்தாள். பால்கனி கதவு திறந்திருக்கவும் அங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க என வாய்விட்டே புலம்பியபடியே எழுந்து பால்கனிக்கு போனாள்...

இருளை வெறித்தபடியே வாசு நின்றிருக்கவும் என்ன வாசு தூங்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.

பின்னால் கேட்ட குரலில் அவசரமாக திரும்பியவன் அது வந்து அது ஒண்ணும் இல்ல என தடுமாறினான்...

ஏன் இப்போ பதற்றமா பேசறீங்க. ஒண்ணும் இல்லனா தூங்காம இந்த நேரத்தில் இங்க இருட்டுல எதை பார்த்துட்டு இருக்கீங்க...

நீ போய் தூங்கு நிலா. நான் அப்புறமாக வரேன். அவள் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்து பேசினான்...

முதல்ல என்னை பார்த்து பேசுங்க...
நிலா கேட்டதும் வாசு அவளது முகத்தைப் பார்த்தான். அதில் தெரிந்த அமைதியில் வாசுவின் மனமும் அமைதியாக தனது மனதில் இருந்ததை தடையின்றி சொல்லி முடித்தான்...

வாசு பேசும் வரையில் குறுக்கிடாமல் கேட்டவள் சரி உள்ளே வாங்க பேசிக்கலாம் என்றுவிட்டு உள்ளே நடக்கவும் வாசுவும் பால்கனி கதவை மூடிவிட்டு உள்ளே வந்தான்..

நிலா அவன் வந்ததும் உட்காருங்க என பக்கத்தில் கைகாட்டினாள்.
சிறிது தயங்கினாலும் அமர்ந்து கொண்டான்.

இன்னைக்கு நடந்தது நினைச்சு நீங்க உங்க மனசை குழப்பிக்காதீங்க. நான் உங்களை தப்பாக நினைக்கல. இனியும் அதுபோல நடக்காமல் பார்த்துக்கலாம்...

சிறு குழந்தைக்கு சொல்வது போல நிலா எடுத்து சொல்லவும் வாசுவின் சிறு குழப்பமும் தெளிந்தது. மகிழ்ச்சியுடன் சரியென தலையாட்டினான்..

இப்போ தூங்கலாமா என கேட்கவும் சரியென சமத்தாக மறுபக்கம் படுத்துக் கொண்டான்..

நிலாவும் படுத்துக் கொள்ளவும் நிலா என அழைத்தான்...

என்ன வாசு சொல்லுங்க...
நீ ரொம்ப அழகாக பாடுட்டு இருந்த அந்த வாய்ஸ்ல தான் வேகமாக ஓடி வந்ததுட்டேன்...

ம்ம்ம் என்றவள் வேறு எதுவும் பேசவில்லை...

எனக்காக ஒரு தாலாட்டு பாடுவியா என தயங்கி தயங்கி கேட்டான்...
நிலாவும் சிறிது யோசித்து விட்டு ஒரு தாலாட்டு பாடவும் அதைக் கேட்டதும் சிறிது நேரத்தில் வாசு சுகமான நித்திரையில் ஆழ்ந்து போனான்...

இருவரும் ஆளுக்கொரு பக்கம் தான் பார்த்தபடியே படுத்து இருந்தார்கள். இருந்தும் வாசு தூங்கியதை நிலாவின் ஆள்மனம் உணரவும் பாடுவதை நிறுத்தவிட்டு அவளும் கண்மூடி தூங்கத் தொடங்கினாள்...

அறையில் இருந்த உயிரற்ற பொருட்களுக்கும் நிலாவின் பாடலில் உயிர்ப்பு வந்ததாே என்னவோ காதுகொடுத்து தாலாட்டு கேட்ட நிம்மதியில் அந்த இரவே ஆழ்ந்த நிசப்தத்தில் ஆழ்ந்து போனது..

மயக்குவாள்..
 
Unga katha romba nalla irruku.
Athavida thinamum engalukkaka ud podurathu ,enga vaasikum aarvatha mathikirathu romba romba pidikuthu.Tq authore.
Tq so much..... Already complete pannita story. So daliy morning 10 kulla update potruva.
Ethachum critical situation thavira daily updates irukum. Maraka read panunga comments sollunga. Unga ellar support la tha post podara...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

ஹா ஹா ஹா
பாட்டிடிடிடிடிடிடிடி பேரு நிலவழகியா?
ஒருவேளை நிலாவின் நிஜப் பெயரும் இதேதானோ?
வாசுதேவனை விட்டுட்டு சக்தி சரவணனைத்தான் நேகா பிடித்து கொண்டாளா?
சூப்பர் சூப்பர்
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top