கொலுசொலி மயக்குதடி - 12

Advertisement

இரவின் ஏகாந்தத்தில் பனிக்காற்று மேனியைத் தழுவ இருட்டை வெறித்தவாறு நிலா நின்றிருந்தாள்....

வாசுவுடன் பேசிக் கொண்டிருந்த வரை வராத சக்தியின் நினைவுகள் கடும் சூறாவளியாய் அவளை சுழன்று அடிக்கத் தொடங்கியது....

நாம எதனால எல்லாத்தையும் வேண்டாம்னு விட்டுட்டு வந்தோம்... இப்போ அதை நேருக்கு நேராக சந்திக்கிற சூழ்நிலை வந்திருச்சே... இவன் இனிமேல் எப்போ எப்படி வருவான்னு தெரியலயே.. நிலாவிற்கு சற்று பயமாய் இருந்தது...

சிறிது நேரம் அதே நினைவில் இருந்தவள்.... இதுவரைக்கும் தான் அவன் யாருனு தெரியல... இனிமேல் என் கிட்ட வாலை ஆட்டட்டும்.. அப்புறமாக நான் யாருனு காட்டறேன்.... அவ்வாறு யோசித்த பின்பு எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தவள் போய் படுத்து தூங்கி விட்டாள்....

எப்பொழுதும் போல ஆபிஸ் கிளம்பிய வாசு அன்று விரைவாக அனைத்து வேலைகளையும் கவனிக்கத் தொடங்கினான்... அங்கு வந்த சக்தி... என்ன டா இன்னைக்கு சார் கால்ல சக்கரத்தை கட்டிட்டு இருக்கீங்க... என்ன விசயம் என கேட்டவாறு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்....

பளிச்சென பதில் சொல்பவன் இன்று எவ்வாறு சொல்வது எனத் தெரியாமல் தயங்கினான்..

டேய் உன்னைத் தான் கேட்கிறேன்... நீ எதுக்கு இந்த முழி முழிக்கற... உன் பார்வையே சரி இல்லையே... என்ன விசயம் டா சொல்லு...

அதெல்லாம் ஒண்ணும் இல்ல... இன்னைக்கு வெளியே கொஞ்சம் போகனும்... அதனால தான் சீக்கிரமாக வேலையை முடிச்சுட்டு கிளம்பலாம்னு....

வாசு சொல்லிக் கொண்டிருக்க அதற்குள் சக்தியின் போன் அடிக்க... அப்படியா சரி பாரு... என்றபடியே போனை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்....

உப்ப்.... இழுத்த வைத்த மூச்சை வெளியிட்ட வாசு... ஷப்பா கட்டுன பொண்டாட்டி மாதிரி எத்தனை கேள்வி கேட்கறான்... இப்போ மட்டும் போன் வரல... இன்னும் அஞ்சு நிமிஷத்துல நானே எல்லாத்தையும் சொல்லியிருப்பேன்... போன் பண்ணுன மகராசன் நூறு வருசம் நல்லா இருக்கனும்...

வாசு தனக்குள் பேசியவாறு வேலையை கவனிக்கத் தொடங்கினான்.. போனை எடுத்துக் கொண்டு கிளம்பிய சக்தி பேசியவாறு அவனது கேபினிற்கு போனான்.....

சொல்லு மா... இந்த டைம்ல எதுக்கு கால் பண்ணியிருக்க... எப்போதும் அடுத்த பக்கம் பேசவே வாய்ப்பு கொடுக்காமல் மழையை போல விடாமல் பேசுபவன் இன்று பேசி ப்ரேக் கொடுக்கவும், ஷாக்காகி போனது அவரது அம்மாவிற்கு...

ஒண்ணுமில்லை சக்தி... நாளைக்கு சனிக்கிழமை.. அங்க சனிபகவான் சந்நிதிக்கு போய் உன் பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்துடு டா... போன தடவை மாதிரி காலையில் கால் பண்ணுனா நீ என்ன வேலை நினைப்புல இருக்கியோ தெரியல.. அதனால் தான் இப்போவே கால் பண்ணலாம்னு.. இழுத்தார் சிவகாமி...

ஆனால் அதிசயமாய் இவ்வளவு நேரமாய் இடையிடாமல் சக்தி கேட்கிறானா என சந்தேகம் எழ.... ஹலோ சக்தி இருக்கியா பா... வேலையாக இருந்தால் பாரு நான் வச்சுடறேன்....

மௌனத்தை கலைத்த சக்தி... அதெல்லாம் ஒண்ணும் இல்லமா... அன்னைக்கு போன கோவில்ல சனி பகவான் சந்நிதி இருக்கானு யோசிச்சுட்டு இருக்கேன்... சரிமா நாளைக்கு போறேன்... வேற எதாவது சொல்லனுமா... அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா...

தன் காதுகளையே நம்ப முடியாமல் கைகளை கிள்ளிப் பார்த்தவர்... ஷ்ஷ்..ஆஆஆ.. வலிக்குதே... தனக்குள் சொல்லிக் கொண்டார்....

என்ன மா நிஜமா இல்லை கனவானு கிள்ளி பார்க்கறீங்களா... தாயை சரியாக அறிந்தவனாய் கேட்டுவிட்டு வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினான்...

சிவகாமியும் அசடு வழிந்தவாறு... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல பா... இங்க எல்லாரும் நல்லா இருக்காங்க... நீ இப்படி சிரிச்சு எவ்ளோ நாளாச்சு...

தன்னால் தானே மகனின் வாழ்வு இப்படி ஆனதே... என தாயாய் அவரின் மனம் வருத்தப்பட்டது...

இனிமேல் எப்பவும் இந்த சிரிப்பும் சந்தோஷமும் இருக்கும் மா... நீங்க கவலைப்பட்டு உடம்பை வருத்திக்காதீங்க.. நான் இங்க நல்லா இருக்கேன்... நான் சீக்கிரமாக ஒரு நல்ல செய்தியோடு ஊருக்கு வரேன்... உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு....

மகனின் வார்த்தைகளில் மகிழ்ந்தவர்.... சரிப்பா அந்த நாளுக்காக நான் காத்திட்டு இருக்கேன்.... நீ வேலையை பாருப்பா.. நான் வைக்கிறேன்.... போனை வைத்த இருவரும் நிறைந்த மனதுடன் அவரவர் வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்கள்....

சக்திக்கு வேலையே ஓடவில்லை... நாளைக்கு அதே கோவில்க்கு போகலாம்... ஆனால் அவள் வருவாளானு தெரியலயே.. எப்படி இருந்தாலும் க்ளாஸ்க்கு போறா போல.. காலையில் கோயில்ல பார்க்கலனாலும் க்ளாஸ்க்கு போய் பேசிடனும்.....

சக்தி இங்கு இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்க... விதி இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது....

அன்று வேலையை சீக்கிரமாக முடித்த வாசு சொன்னபடியே கிளம்பி விட்டான்... நேராக அவர்களின் குடும்ப ஆசாரியை பார்க்க போனான்...

வாசுவைக் கண்ட குடும்ப ஆசாரியான சங்கரன்... வா..வா... வாசு எப்படி இருக்க... அம்மா இருக்கும் போது தான் உங்க அப்பா அடிக்கடி எதாவது செஞ்சு கொடுக்க சொல்லி அப்பப்போ வருவார்.. நல்ல மனுஷங்க இரண்டு பேரும்... இப்போ அவங்க இல்லைனு நெனைக்கறப்போ ரொம்ப வருத்தமாக இருக்கு...

அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்த அவர் சொல்வதைக் கேட்டதும் தன் தாயின் முகம் மனக் கண்ணில் வந்து போனது... அவன் கலங்குவதைக் கண்டவர்.. தன்னைத் தானே கண்டித்தபடி... நான் பாரு ஏதோ பேசிட்டு இருக்கேன்... இருப்பா ஒரு நிமிஷம் வரேன்.....

உள்ளே போனவர் கையில் ஒரு மரப் பேழையோடு வந்தார்... அதை வாசுவிடம் கொடுத்தவர்... திறந்து பாரு வாசு... எப்படி இருக்கு பிடிச்சிருக்கா பாரு...

உள்ளே இருந்த கொலுசை கையில் எடுத்தவனின் கண்கள் குளமானது.. திருப்பி திருப்பி அதை பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் நிலாவின் உருவம் வந்து போனது... பத்திரமாக மீண்டும் அதை உள்ளே வைத்தான். உங்களோட வேலைத்திறமையை குறையே சொல்ல முடியாது .. ரொம்ப நல்லாருக்கு...

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவன் கொலுசிற்கான பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு கிளம்புவதாக சொல்லிக் கொண்டு கிளம்பினான்....

வீடு வந்த வாசுவைக் கண்டதும்... என்ன பா கையில் ஏதோ பெட்டியோட வந்து இருக்கீங்க... நிலா ஆர்வமுடன் அவனின் அருகில் வந்தாள்.....

நோ..நோ... இப்போ காட்ட முடியாது... சாப்பிட்டு அப்புறமாகத் தான்.... அவள் சிணுங்குவதைக் கண்டும் அப்புறமாகத் தான் என்றபடியே அதைக் கொண்டுபோய் உள்ளே வைத்துவிட்டு உடைமாற்றி வெளியே வந்தான்....

நிலாவோ சிறு பிள்ளை போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. அவளின் அருகில் அமர்ந்த வாசு... நிலாக்கு என்ன கோபம்.... சிரித்தவாறு அவளிடம் கேட்கவும்... ச்சீ போ... அந்த பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள்....

எனக்கு ரொம்ப பசிக்குது... வயிற்றில் கை வைத்துக் கொண்டு வாசு பேசவும்... அச்சோ சாரி...சாரி... வாங்க சாப்பிடலாம் என்றபடியே டைனிங் டேபிளை நோக்கி போனாள்....

நிலாவின் அன்பிலும் அக்கறையிலும் கரைந்தவன்... அவளின் பின்னே போனான்....

சாப்பிட்டவாறு நிலாவோ... நாளைக்கு ப்ரதோஷம் கோவிலிற்கு போகனும் வாசு.... போய்ட்டு தான் க்ளாஸ் போகனும்...

வாசுவும் சாப்பிட்டபடியே சூப்பர் நிலா போய்ட்டு வா என சிரித்தான்...

ம்ம்... சரி..சரி.... நிலா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை... இருவரும் சாப்பிட்டு முடித்த பின்பு உள்ளே சென்ற வாசு கையில் ஒரு கவரும் அதோடு அந்த பெட்டியும் எடுத்து வந்தான்....

நிலாவின் கையில் அதை கொடுத்த அடுத்த நொடி வேகமாக அதைத் திறந்தவளின் கண்கள் வியப்பால் விரிந்தது...

வாவ் வாசு... செம... எவ்ளோ அழகாக இருக்கு.... இரண்டு அடுக்கில் நெருக்கமான மணிகளில் மிகுந்த வேலைப்பாடுகளோடு இருந்த அந்த கொலுசின் அழகில் மயங்கிப் போனாள்...

அவளின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டதும் வாசுவின் அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்தது....

இதையும் பாரு நிலா... அந்த கவரை அவளிடம் கொடுத்தான்... உள்ளே பேபி பிங்க் கலரில் ஒரு பட்டுப்புடவையும் அதற்கு தோதான நகைளும் இருந்தது....

இதெல்லாம் எனக்கு வேணாம் வாசு... ரொம்ப காஸ்ட்லியாக இருக்கு... உடனே மறுத்தாள்....
அவளின் அந்தக் குணத்தில் வாசுவின் மனம் மொத்தமாக அவளின்பால் சாய்ந்தது...

இந்த நகைகள் எல்லாம் என்னோட அம்மாவோடது... இந்தப் புடவை அவங்க ஆசையாக வாங்குனது.. பட் கடைசி வரைக்கும் அவங்க கட்டவே இல்லை... நீ நாளைக்கு கோவிலிற்கு போகும் போது இந்த புடவையை கட்டிட்டு நகைகளை எல்லாம் போட்டுட்டு போய்ட்டு வா....

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும்.... உனக்கு பிடிக்கலனா விடு... நான் எதுவும் சொல்லல.... போய் தூங்கலாம் வா...
வாசு மேற்கொண்டு எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொண்டான்....

வாசு கோச்சுட்டு போய்டாங்க போலயே... நாளைக்கு ஒரு ஐடியா பண்ணலாம் வாசு கண்டிப்பாக ரொம்ப ஹேப்பி ஆயிடுவாங்க...

நிலா யோசித்தபடியே அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் கபோர்டில் வைத்து பூட்டி விட்டு படுத்து விட்டாள்.....

மயக்குவாள்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

நிலா என்ற பெண்ணை வாசுதேவன் சக்தி சரவணன் இரண்டு பேரும் விரும்புறாங்களோ?
இருவரில் யாருக்கு நிலவு ஒளி கொடுக்கும்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top