கொலுசொலி மயக்குதடி - 11

Advertisement

நிலா சென்ற திசையை பார்த்தே நின்றிருந்த சக்தி காரை எடுத்துக் கொண்டு ஆபிஸ் கிளம்பினான்...

ஆபிஸ் வந்த சக்தி ஏதோ மந்திரித்து விட்டதை போல உள்ளே அவனது கேபினிற்கு போக மற்றவர்களுக்கு ஆச்சர்யமாகி போனது... அதை எதுவும் கவனிக்கும் மனநிலையில் இல்லாமல் பொறுமையாக நடந்து போனான்....

நேகா அதைப் பார்த்து அவசர அவசரமாக கைக்கு கிடைத்த ஏதோ ஒரு பைலை எடுத்துக் கொண்டு சக்தியின் கேபினை நோக்கி படையெடுத்தாள்..

சக்திக்கு வேறு எந்த நினைவும் இருக்கவில்லை... அவனது எண்ணங்கள் யாவும் நிலாவை சுற்றியே வட்டமிட்டது... அவளது ஓவர்கோட்டை பிடுங்கியபோது அவளின் அதிர்ந்த தோற்றமும் சிலிர்ப்பும் இவனை ஏதோ செய்தது... ஒருவித மோனநிலையில் கைபேசியில் இருந்த அவளது புகைப்படத்தை அணுஅணுவாக இரசிக்கத் தொடங்கினான்.....

பூஜை நேரக் கரடியாக நேகா கதவைத் தட்டி அனுமதி கேட்கவும் உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை... தெனாவெட்டாக அவள் உள்ளே செல்லவும் அவளின் தலைவிதி அப்படி இருந்தால் யாரால் மாற்ற முடியும்...

ஹாய்.... சக்தி ஜி.... ஐ ஹேவ் ஒன் டவுட்... ப்ளீஸ் க்ளியர் மீ.. மொத்த பற்களையும் ஈஈஈஈ என காட்டியபடி வந்து நின்றாள் நேகா...

வாட்ஸ் யுவர் டவுட்... அதே மேனநிலையில் அவன் கேள்வி கேட்கவும்... அதில் அவள் இன்னும் குஷியாகி.... அந்த பைலை அவனிடம் கொடுத்தாள்....

நிலாவின் நினைவில் அந்த பைலை ஓபன் செய்தவன்.... ப்ளடி இடியட்... ஸ்கவுன்ட்ரல்... டேபிளின் மீதிருந்த பைலை அவளின் முகத்தில் விட்டெறிந்தான்....

வாட் ஹேப்பன்ட் சார்... நேகாவின் முகம் கறுத்துப் போனது.... அவளோ அப்போதும் தெனாவெட்டாய்... டெல் மீ சார்....

டேக் தெட் பைல்... அண்ட் கெட் அவுட்... டோன்ட் ஸ்பாயில் மை மூட்.... அவன் கத்தவும் அந்த பைலை எடுத்துப் பார்த்தவள்.. அதன் பின்பே அவனின் கோபத்திற்கான காரணம் புரிந்தது.. ஆல்ரெடி முடிந்த ப்ராஜெக்ட் பைல் அது.. ஐயோ என்றானது நேகாவிற்கு... சே... என நொந்தபடியே வெளியே போனாள்....

நல்ல மைன்ட் செட்ல இருந்தால் இவள் வேற நேரம் காலம் தெரியாம... அவளை திட்டியவாறு மீண்டும் போனில் பார்வையை பதித்தவன் முகம் மென்மையாய் மாறியது..

சக்தி இங்கே கனா கண்டபடி இருக்க... அங்கே நிலாவோ வீட்டிற்கு போனதில் இருந்து நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் உலாவத் தொடங்கினாள்....

என்ன நெனைச்சுட்டு இருக்கான் அவன்... ஐயோ அவன் தான் இவனா... இது தெரியாம போயிருச்சே.... அங்கே இருந்து தப்பித்து இப்படி தெரியாத ஊரில் அதுவும் அவன் இருக்கும் ஊரிற்கே வந்து விட்டோம்... இவன் விடுவதைப் போலத் தெரியவில்லையே... கடவுளே நீ ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்... அவளிற்குள் புலம்பியவள் வாசுவிடம் கூட சொல்ல வேண்டும் என நினைக்கவில்லை.....

வாசு வீட்டிற்கு வருவதற்குள் அவனிற்கு தேவையான சிற்றுண்டியும் இரவு உணவையும் தயாரித்து முடித்தாள்....

வாசு வீட்டிற்கு வரும்போதே ஏலக்காய் டீயின் மணம் அவனது நாசியைத் துளைத்தது... ஹேய் நிலா எங்கே இருக்க... அவனது குரலில் கிச்சனில் இருந்து வெளிவந்தாள்....

அடடே வாசு சார் உள்ளே வந்ததும் எதுக்கு என்னோட பேரை ஏலம் விடறீங்க என்றவாறு அவனின் அருகில் வந்தாள்...

டீ வாசம் எனக்கு மூக்கைத் துளைக்குது... ப்ளீஸ் டீ கொடேன் அப்புறமாக ப்ரஷ்அப் ஆகறேன்...சரிசரி உட்காருங்க எடுத்துட்டு வரேன் என்றபடியே உள்ளே போனாள்...

சில நிமிடங்களில் இருவருக்கும் மணக்க மணக்க ஏலக்காய் டீயும் சமோசாவும் ஒரு ட்ரேயில் வைத்து எடுத்து வந்தாள்....

கொடுகொடு நிலா... அவள் வந்ததும் ஒரு கப்பை கையில் எடுத்தவன் வாசனை தந்த மயக்கத்தில் ஒவ்வொரு மிடறாய் இரசித்து குடித்தான்.... இதை எடுத்துக்கோங்க என சமோசாவை கொடுக்கவும்... அதையும் ஒரு வாய் கடித்தவன் அதன் சுவையில் மெய் மறந்து போனான்....

வாவ்.... டெலீசியஸ்.... கொன்னுட்ட நிலா... இந்த கைக்கு தங்க வளையல் தான் போடனும்... அவளை மெச்சியபடி ஸ்நாக்ஸ் ஒரு பிடி பிடித்தான்..

எனக்கு தங்க வளையல் எல்லாம் வேண்டாம்... அவனை ஒரு பார்வை பார்க்கவும்... ஏனோ அவளின் பார்வையில் இருந்த புது அர்த்தத்தில் வாசுவின் உள்ளம் ஏதோ ஒரு புதுவித உற்சாகம் வந்தது....

வேற என்ன வேணும் நிலா...அவளின் முகத்தை ஆர்வமாக பார்த்தான்... எனக்கு ஒரு கொலுசு வாங்கிக் கொடுக்கறீங்களா... அவள் ஏதோ சாதாரணமாக கேட்டு விட்டாள்... ஆனால் வாசுதான் ஆகாயத்தில் இறக்கை முளைத்து பறக்கத் தொடங்கினான்....

கொலுசு வேணும்னா கேட்கறா... நிஜமாகத் தான் கேட்கறியா...அவன் காதுகளை அவனால் நம்ப முடியவில்லை...

அட என்ன வாசு நீங்க... செரியான கஞ்சூஸ்... நீங்க தங்க வளையல் தானே போடனும்னு சொன்னீங்க... நான் வெள்ளிக் கொலுசு தானே கேட்டேன்....

நிலாவோ அவனிடம் ஒழுங்கு காட்டிவிட்டு சாப்பிட்டதை எல்லாம் எடுத்துக் கொண்டு கிச்சனிற்கு போய் விட்டாள்....

அவனது ரூமிற்கு வந்த வாசு... குளித்து டீசர்ட் மற்றும் ட்ராக் பேண்ட் அணிந்தவன் வந்து கட்டிலின் மேலே அமர்ந்தான்...

நாளைக்கு முதல் வேளையாக நிலாக்கு கொலுசு வாங்கனும்... மத்தது எல்லாம் அப்புறமாகத் தான் பார்க்கனும்... அவசரமாக அவர்கள் குடும்ப ஆசாரிக்கு போன் செய்தவன் அவர்கள் வழக்கப்படி ஒரு ஜோடி தங்கக் கொலுசு செய்ய வேண்டுமென பேசிவிட்டு வைத்தான்...

கண்டிப்பாக அது நிலாக்கு பிடிக்கும்.. நாளைக்கு போய் நாமளே நம்ம கையால் வாங்கிக் கொண்டு வந்து நிலாவை சர்ப்ரைஸ் பண்ணனும்....

வாசு தன் போக்கில் யோசித்துக் கொண்டிருக்க... வாசு இன்னும் அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க....

சும்மா பேசிட்டு இருக்கேன் மா... அடச்சீ.. சும்மா யோசிச்சுட்டு இருக்கேன் மா... வாசு வேகமாக வெளியே ஓடினான்....

அவன் கூறியதை கேட்டு கையில் கரண்டியுடன் வெளியே வந்த நிலா... என்ன சொன்னீங்க... என சிரிப்பை மறைத்துக் கொண்டு கோபம் போல கேட்டாள்....

ஹிஹிஹி.. சும்மா வடிவேல் மாதிரி ட்ரை பண்ணுனேன்.. நல்லா இல்லையா.. ம்ம்ம் என நிலா முறைக்கவும்... சரி விடு.....இல்ல.. நல்லா இல்ல... அதுக்கு எதுக்கு இம்புட்டு பாசமா பார்த்து வைக்கற.. மனுசனுக்கு பக்குனு இருக்கு இல்லையா....

நிலா அதைக் கேட்டு... உங்களை என்றவாறு கரண்டியை ஓங்கவும்... மீ எஸ்கேப் என்றவாறு டைனிங் ஹாலுக்கு ஓடி விட்டான்.....

லூசு பயபுள்ள... செல்லமாக அவனை கலாய்த்தவாறு... சாப்பாட்டு இராமா என்னை விட்டுட்டு நீயே கொட்டிக்காத... குரல் கொடுத்தவாறு அவளும் ஓடினாள்....

வா..வா.. நிலா எவ்வளவு நேரம் வெயிட் பண்றது.. நீ செஞ்சு வச்ச சப்பாத்தியும் குருமாவும் என்னை சாப்பிடு சாப்பிடுனு கெஞ்சுது.... வாசு முதலில் நிலாவிற்காக ஒரு ப்ளேட்டில் எடுத்து வைத்துவிட்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்....

எவ்வளவு நேரமாக சார் வெயிட் பண்றீங்க.. கொன்றுவேன்... அவனை வம்புக்கு இழுத்தபடி அவனிற்கு எதிரே இருந்த இருக்கையில் நிலா அமர்ந்தாள்....

எனக்கு வை நிலா... அவன் ப்ளேட்டை கையில் வைத்தபடி அவளை நோக்கி நீட்டினான்... அவளும் சிறு புன்னகையுடன் சப்பாத்திகளை வைக்க... போதும் போதும்...என்றவாறு கைநீட்டி தடுத்தான்...

வயசுப் பையன் நல்லா சாப்பிட வேண்டாமா நல்லா சாப்பிடுங்க... அவனிற்கு மேலும் இரண்டு சப்பாத்திகளை வைத்து... குருமாவும் ப்ளேட்டில் ஊற்றினாள்...

என்னை சொல்லிட்டு மேடம் மட்டும் இரண்டே சப்பாத்தி தான் சாப்பிடறீங்க... அது ஏன் மேடம்... வாசு சாதாரணமாக கேட்டான்...

எனக்கு குழந்தை மாதிரி நீங்க சாப்பிடற அழகை பார்க்கும் போதே வயிறும் மனசும் நிறைஞ்சுடுது வாசு..

நிலாவின் பதிலில் வாசுவின் கண்களின் ஓரம் நீர்த்துளிர்க்க சாப்பிடும் சாக்கில் தட்டிற்குள் தலையை நுழைத்துக் கொண்டான்...

வேறு பேச்சு பேசாமல் இருவரும் மௌனமாகவே சாப்பிட்டு முடித்தனர்.. நிலாவோடு பாத்திரங்களை வாசுவும் எடுத்துக் கொண்டு போக.... நிலா எவ்வளவு மறுத்தும் வாசுவே பாத்திரங்களை கழுவத் தொடங்கினான்... நிலாவும் சிறு சிரிப்புடன் அவன் செய்வதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்...

வழக்கமாக உறங்கும் நேரத்தை விட சற்று முன்னதாகவே உறங்க சென்றார்கள் இருவரும்... ஏனோ தூக்கம் வராமல் நிலா படுத்திருந்தாள்... திரும்பி வாசுவை பார்க்க அவன் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்....

படுக்கையில் இருந்து எழுந்த நிலா... சத்தம் எழுப்பாமல் நேரே பால்கனி கதவை திறந்து கொண்டு போனாள்...

சில்லென்ற காற்று மேனியை தழுவிச் செல்ல... கைகளை சூடு பறக்க தேய்த்தவாறு முகத்தில் வைத்துக் கொண்டு வெளியே தெரிந்த இருட்டை வெறிக்கத் தொடங்கினாள்....

மயக்குவாள்.....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

ஹா ஹா ஹா
அம்புட்டு லவ்வு சிச்சுவேஷன் ரணகளத்துலயும் நேகாவை நொங்கு எடுப்பதில் சரவணன் பய புள்ளை தெளிவாத்தான் இருக்கான்
வாசுதேவனை மகன் மாதிரித்தான் நிலா நினைக்கிறாளோ?
 

Saroja

Well-Known Member
ரொம்ப அன்பா அம்மா போல
இருக்கா
அவன் எப்படி நினைக்கிறான்
உடன் பிறப்பு போலவா
சக்தி காதல் கோபம் உச்சத்தில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top