என் இதய விழி நீயே 16

Advertisement

achuma

Well-Known Member
ஹாய் , லேட்டா வந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன் பிரெண்ட்ஸ் ...
அப்பாக்கு உடம்பு முடியாம ஆஞ்சியோ பண்ணாங்க... இப்போ தான் அவர் நோர்மல் ஆனார் ...
அதன் இவ்வளவு நாட்கள் ஆனது.

என்னோட குட்டீஸும் லேப்டாப் உடைச்சிட்டாங்க அதா சரி செய்து நான் அக்கடான்னு உட்கார இவ்வளவு நாட்கள் ஆனது ...
இனி கரெக்டா அப்டேட் குடுத்துறன் ...

please read n give comments
take care n be safe all my frends



என் இதய விழி நீயே 16

அங்கு லீலாவின் வீட்டில் எப்பொழுதும் போல் , காலை பொழுது பரபரப்புடன் இருந்தது ...
அபி வீட்டில் இல்லாத காரணத்தால் , எந்த வேலையும் சரியாக நடக்கவில்லை ...

லீலா அபியை வஞ்சனையின்றி மனதளவில் திட்டி கொண்டே இருந்தாரே தவிர ஒரு வேலையும் செய்யவில்லை....
எப்பொழுதும் போல் அவரின் பொழுது போக்கான நாடகத்தில் இருந்து விட்டார் ...
தினேஷ் வேலைக்கு செல்லும் நேரமும் ஆகிவிட்டது , அதை பற்றிய கவலை லீலாவிற்கு இருந்தது போன்று இல்லை ...

அனுவிற்கு அபி மற்றும் தினேஷ் போன்று படிப்பில் அந்த அளவிற்கு விருப்பம் இல்லை ...
அதனால் ஏதோ அவள் படித்த அளவிற்கு போதும் என்று, அவளின் விருப்பத்தின் பேரில் ஒரு அழகு நிலையத்தில் வேலை சேர்ந்து விட்டாள் ...
அதுவும் சேர்ந்து ஆறு மாதம் ஆகிறது ...
இப்பொழுது முகூர்த்த நேரம் என்பதால் , அணுவும் அவளுடன் பணிபுரியும் பெண்களும் அன்று மாலை நடக்க இருக்கும் ஒரு திருமண வரவேற்புக்கு , மணப்பெண் அலங்கார வேலை உண்டு ...
அதற்கு நேரமே செல்ல வேண்டும், என்று அனுவின் முதலாளி ,கூறி இருந்தார் ...

அணுவிற்கும் சலித்து விட்டது , இந்த அம்மா ஒரு வேலையாவது செய்யலாம் இல்லை , நானும் அண்ணனும் எப்போ கெளம்புறதுனே தெரில ...

அவள் புலம்பி கொண்டிருந்தாலும் , காலை உணவு செய்து கொண்டிருந்தாள் ...
தோசை மற்றும் சட்னி எடுத்து வந்து அவளின் அண்ணனிற்கும் கொடுத்து, லீலாவிற்கும் கொடுத்து அணுவும் உன்ன அமர்ந்தாள் ...
லீலா அப்பொழுதும், "
"வெறும் சட்னி மட்டுமா , வேறு ஒன்றும் இல்லையா ?" என்று கேட்டு அனுவின் முறைப்பை பரிசாக பெற்று கொண்டார் ...
தினேஷ் மட்டும் கமலா தந்தைக்கு உணவு கொண்டுவருவாள் என்று எதுவும் அன்னையிடம் கேளாமல் அமைதியாக உணவு உண்டான் ...
இத்தனைக்கும், அங்கு அக்குடும்பத்தின் தலைவர் ஒருவர் உள்ளார் என்பதனையே மற்ற இருவரும் மறந்தனர் ...


கமலா (அபி, ராமமூர்த்தியை கவனித்து கொள்ளுமாறு கூறிய பெண் )
செவிலியர் பணியில் இருக்கும் பெண்...
அபி என்றால் அவளிற்கு மிகவும் பிடிக்கும் ...

தினேஷுக்கு , கமலா என்றால் மிகவும் பிடிக்கும் ...

தினேஷும், கமலாவிடம் அவனின் காதலை சொல்லி பல மாதம் ஆகிற்று...

கமலாவிற்கும் விருப்பம் என்றாலும், லீலாவின் மீது, எப்பொழுதும் ஒரு கோவம் உண்டு...
கமலாவும் சிறு வயது முதல் அத்தெருவில் வசிப்பவள் ...
அதனால் , அவளிற்கு ராமமூர்த்தி குடும்பம் பற்றி அனைத்தும் தெரியும் ...
தினேஷ் கமலா வேலை முடிந்து வரும் நேரம் , அவள் பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று அவனின் காதலை கமலாவிடம் கூறினான்...

கமலா , தினேஷிடம் , " ரெண்டு தங்கைக்கு அண்ணன்ங்கிற, நினைப்பு ஏதாவது இருக்கா ?
இல்ல தெரியாம தான் கேட்குறேன், அந்த அபி பொண்ண , லீலா அத்தை எவ்வளவு பாடு படுத்துறாங்க , ஒரு கேள்வி அவளுக்காக , கேட்கணும் தோணுதா ?"

"உன்ன நம்பி நானும் வந்தா நீ ,என்ன என்னை பார்த்துப்பேன்னு நம்புறது ? "தினேஷிடம் எந்த பதிலும் இல்லை ...

"சரி அத விடு , உன்னோட அம்மா வாய்க்கு நான் தான் சரி , நானே பார்த்துப்பேன் என்னை ...
ரெண்டு தங்கச்சி இருக்காங்க , அவங்கள கரை சேர்க்கணும் ஏதாவது இருக்கா உனக்கு , உன்னோட காதலுக்கு அவசப்படுற "....

"அது என்ன ரெண்டு தங்கைனு சொல்ற ...
எனக்கு அணு மட்டும் தான் தங்கை ...
அபியை ஏன் சேர்க்குற , கண்டவர்களுக்கு எல்லாம் நான் யோசிக்க முடியாது," என்று உடனே தினேஷிடம் இருந்து பதில் வந்தது ...

"இதான் .... இந்த சுயநலம் எனக்கு செட்டே ஆகாது ...
இன்னும் கொஞ்ச காலம் கடந்து பார்த்தா , நீ எதுக்கு வாழுறனு உனக்கே வெறுத்துடும் சுயநலம இருந்தா ..."
அதையும் தெரிந்து நடந்துக்கோ ..."

"எனக்கும் ஒரு தங்கை இருக்கா , எங்க வீடு நிலைமை உனக்கே தெரியும் என்னோட அப்பா போய் சேர்ந்ததும் என்னோட வருமானத்துல எங்க குடும்பம் நடத்துக்குறதே பெருசு, இதுல என் தங்கை படிப்பு நான் தான் பார்த்துக்கணும் ... "
உன்னை போன்று சுயநலமா என்னால இருக்க முடியாது ...
அவளின் படிப்பு முடிந்ததும், ஒரு நல்ல இடம் பார்த்து திருமணம் செய்து வைக்கணும்...

எனக்கு ஒரு வேல உன்னோட திருமணம் ஆனாலும் கூட என்னோட அம்மா , என்னோட பொறுப்பு...
நான் தான் அவங்கள பார்த்துப்பேன் ...
இதுக்கு உங்க அம்மா ஒற்றுக்கொள்வார்களா ?

"சரி என் பிரச்னை விடு...
அந்த பொண்ணு அதே வீட்ல பொறந்தவ தான ...
ஒரு வேலைக்காரி போல நடுத்துறீங்களே , உன்னோட சொந்த தங்கை , போற இடத்துல உன் அம்மா போல மாமியார் கிடைத்தால் , அவ வாழ்க்கையும் இது போன்று தான் , யோசித்து பார்த்தியா ?"
"நீங்க செய்ற பாவம் உங்கள தான் சுத்தும் ... அதை மறந்துடாத" ...

அது வரை அவள் பேசுவது கேட்டு அமைதியாக இருந்த தினேஷ், அணு வாழ்க்கை பற்றி இவ்வாறு கூறியதும், அவனிற்கே ஒரு நிமிடம், உடல் திடுக்கிட்டுட்டது...
லீலா இது போல் தானே , அபியை கொடுமை செய்கிறார் ...

பிறகு வெறுமையான பார்வை ஒன்றை கமலா மீது செலுத்தி அமைதி காத்தான் ...
கமலாவிற்கே அவனின் பார்வை, ஏதோ போன்று ஆனது ...
அவனின் மீது நேசம் உள்ள நெஞ்சம் அல்லவா ...
பிறகு ஆழ்ந்த மூச்சு எடுத்து, கமலா ,"தினேஷ் , நானும் உன்ன விரும்புகிறேன் ," என்று அவளின் விருப்பத்தினை கூறினாள் ...
அதுவரை பொலிவிழந்த தினேஷின் முகம் பளிச்சிட்டது ...

"எனக்கும் நீ பார்க்கும் பார்வையில உன்னோட காதல் எப்போவோ புரிய ஆரம்பித்தது ...
என் மனசிலயும் நீ எப்ப வந்த எனக்கே தெரில ...
ஆனா என்னோட தினேஷ் பொறுப்பானவனா இருக்கனும், முக்கியமா நியாத்துக்கு மதிப்பு தருபவனா இருக்கனும் ..."

"என்னோட தங்கை எதிர்காலம் , அதுக்கான கடமை எனக்கு இருக்கு ...
நீயும் உன்னோட தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கும் வழிய பாரு ...அதுல அபியையும் சேர்த்து தான் சொல்றேன்" ...

"தங்கச்சி முன்ன இவனுக்கு கல்யாணம் தேவையானு நமக்கு தெரிஞ்சவங்க நம்ம அசிங்கமா நினைப்பாங்க "
...
"உன்னோட குடும்பத்த எப்படி வழிநடத்தணும்னு யோசி , அணு, அபி இவங்களுக்கு திருமண வாழ்க்கை அமைத்து குடுக்கும் கடமைய முதல செய் , அபிக்கு உங்க அம்மாவிடம் இருந்து முதல காப்பாத்து தினேஷ் .."
.
"இது எல்லாம் முடிச்சிட்டு வா ...
உனக்காக நான் காத்துட்டு இருப்பேன் ...
இல்ல முடியாதுனா , உன் வழில நீ போயிட்டே இரு ...

அதன் பிறகு தினேஷ் , ஏதும் சொல்வது, "எனக்காக இரு கமலா ", என்ற ஒரே சொல்லோடு , கடந்து விட்டான் ...
கமலாவின் முகம் இவ்வார்த்தையில் மலர்ந்தது ...
அன்று முதல் , தினேஷ் அவ்வளவாக அபியை ஏதும் குறை கூறுவதோ சிடு சிடுப்பதோ ஏதும் இன்றி அவனின் குடும்ப சூழல் , மற்றும் வருமானம் உயர்த்துவது என்று அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினான் ...
அண்ணன் எவ்வழி, தங்கை அவ்வழி என்று அணுவும் பெரிதும் ஏதும் அபியிடம் சீண்டுவதில்லை ...
அவள் உண்டு அவள் அழகு நிலைய வேலை உண்டு என்று இருந்து விடுவாள் ...

இவை அனைத்தும் பற்றிய சிந்தனையில் இருந்து வெளி வந்த தினேஷ் உண்டு முடித்து , வேலைக்கு சென்றான் ...

இந்த நேரத்தில் ராமமூர்த்திக்கு உணவு எடுத்து கொண்டு அவ்வீட்டிற்குள் வந்தாள் கமலா ...

கமலா ஏதும் அலட்டி கொள்ளாமல் , "இந்த அம்மா ஏன் இப்டி இருக்கோ , பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் ஏதாவது இருக்கா , பொழுதுக்கும் , சீரியல் , சினிமா , ஏதாவது விருந்து விசேஷம்னா அலங்காரம் செய்துகிட்டு கிளம்பிறது" ...
"ஹ்ம்ம் , யாருமே பொண்ணுக்கு கல்யாணம் செய்வது பற்றி இவர்களிடம் கேட்கறதில்லயா ?"

"போன வாரம் கூட, அணு தோழி திருமண பத்திரிகை குடுத்து அழைப்பு தரும் போது , அணு எவ்வளவு ஏக்கமா பார்த்தா" ...

"இது எல்லாம் இவங்க யோசிப்பதே இல்லையா?"
அது சரி நம்ம ஆளுக்கே இப்போ தான் புத்தி தெளிஞ்சி இருக்குது , என்று ஒரு பெருமூச்சுடன் ராமமூர்த்திக்கு உணவு குடுக்க சென்றாள்
இங்கு இவ்வாறு ஒரு பக்கம் இருக்க நிஷா வீட்டில் கிஷோரிடம் நிஷா மற்றும் ஷோபனா , இருவரும் கிஷோரினை கண்டு கொள்வது போல் தெரியவில்லை ...
அங்கு நிஷாவின் தந்தை மற்றும் அவரின் அண்ணன் இது எல்லாம் பார்த்தும், இனி உடனே எதுவும் சரி செய்து விட முடியாது , காலத்தின் கையிலே உண்டு என்று கிஷோரிடம் ஆறுதல் கூறினர் ...
விஜயா மட்டும் நிஷாவிடம், கணவரின் முகம் காட்டுவது தவறு என்று பலவகையில் அவளுக்கு அறிவுறை வழங்கி தோற்றார் ...
காலை உணவு முடிந்து அவர்கள் மூவரும் பெங்களூரு புறப்பட தயாரானர்..ஐந்தாம்மாதம் வருவதாக கூறி ...
அதுவரை ஏதும் அலட்டிக்கொள்ளாமலிருந்த நிஷாவிற்கு தந்தை ஊருக்கு செல்வது ஏதோ சொல்ல முடியாத அவஸ்தை , பயம் என்ன என்றே பிரித்தறிய முடியா ஓர் உணர்வு , நிஷாவிற்கு அழுகையே வந்து விட்டது ...
இனியும் பிரேமாவிடம் தந்தை வாழ்ந்து ஆக வேண்டுமா என்ற கேள்வியும், பிரேமாவை பற்றி தந்தையிடம் கூறினால் அவர் தாங்குவாரா என்ற கேள்வி இவ்வாரெல்லாம், நிஷா அவளிற்குள்ளே குழப்பத்தில் சிக்கி தவித்தாள் ...
நிஷாவின் தந்தை ஷோபனாவிடம், பெண்ணின் பிடிவாதம் தெரிந்தும், மரு வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்..
ஒரு சுமுக சூழல் வந்த பின்பு வருவோம் என்று அவரும் விடை அளித்தார்...
நிஷாவின் குடும்பம் விமான நிலையம் சென்றதும், மகப்பேறு மருத்துவர் பார்ப்பதற்கு புறப்பட்டனர் நிஷா மற்றும் ஷோபனா ,...
கிஷோர் உடன் வருவது இருவரும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் செல்வதே அவனிற்கு வருத்தம் தந்தது ...
காலையில் இருந்து அன்னையின் பாராமுகம், மனைவியின் அலட்சியம் ,என்று வருத்தத்தில் அவர்களுடன் சென்றான் ...


அபிக்கு, வீட்டி வாசலில் வண்டி நின்றதும் கை கால்கள் எல்லாம் நடுக்கம் கொண்டது ...
அவளையும் அறியாமல் ஆதியின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டாள் ...
அவள் கைகள் பயத்தினால் வேர்வையில் நினைத்து சில்லென்று இருந்ததை உணர்ந்து , ஆதி அவளின் கைகளை தேய்த்து விட்டு, "ரிலாக்ஸ் அபி" ...
"எதுவா இருந்தாலும் நான் உன்னோட இருப்பேன்,போல்டா இருக்கனும்"...
" நீ அமைதியா என்னோட இரு டியர்," என்று அவளின் கன்னத்தை தட்டி வெளியில் அழைத்து சென்றான் ...
வீட்டுக்கு வெளியில் வண்டி சாத்தில் வெளி வந்த அணு , அபி ஆதியின் கையோடு கை கோர்த்து வருவதை பார்த்து ஒன்று புரியாமல் குழம்பி உள்ளே சென்றாள் ...
இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றதால் அவளிற்கு ஏதும் பெரிதாக தெரியவில்லை ...
"இவன் கல்யாணம் என்று தானே அபி ஊருக்கு போனா , இவங்க எல்லாம் வந்து இருக்காங்க?" என்ற அளவிலே அவளின் சிந்தனை இருந்தது ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top