உறவால் உயிரானவள் P24

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
images (54).jpg


ஆருத்ரா கவியையும், தன்னையும் புரிந்துக் கொண்டாள் என்பது கார்த்திக் உணர்ந்து கொண்டாலும், அன்று கார்த்திக் கண்ணீரோடு பேசிய போது ஆருத்ரா கேட்ட மன்னிப்புக்கும் இன்று மனமுருகி கேட்கும் மன்னிப்புக்கும் வித்தியாயாசத்தை நன்கு உணர்ந்தவனாக அவள் பேசுவதை அமைதியாக வேடிக்கை பாத்திருந்தானே ஒழிய அவளை சமாதானப் படுத்தும் எண்ணம் எல்லாம் இல்லாம இருந்தான்.



ஆருத்ரா மனம் விட்டு பேசினால் தான் அவளின் மனபாரமும் நீங்கும், அவள் என்ன நினைக்கிறாள் என்பதையும் தெளிவாக சொல்வாள் என்று அமைதியாகவே இருந்தான் கார்த்திக்.



"சின்ன வயசுல இருந்தே கேட்டதெல்லாம் கிடைச்சதால எனக்கு பிடிவாதம் ரொம்ப ஜாஸ்தி கார்த்திக். உன்ன பார்த்த உடனே புடிச்சிருச்சு. நீ வேணும்னு உள்மனசு சொல்லவும் அடுத்த நாளே உன் ஸ்டேஷன் வாசல்ல வந்து நின்னேன்.



நீ யாரு? என்ன? உனக்கு என்ன பிடிக்கும்? எங்குற வரை தெரிஞ்ச எனக்கு உனக்கும் கவிக்கும் இருக்குற உறவை பத்தி தெரியாம போய்டுமா?



கவி உன் காதலினு நினைக்கல. ஆனா தங்கச்சினும் எனக்கு தோணல. உங்க ரெண்டு பேருக்கான நெருக்கமும், பேச்சும் நெருங்கிய நண்பர்கள்னு தான் உணர்த்திருச்சு. அப்போவே என் மனசுல பொறாமை தோன்றி இருக்கணும் கார்த்திக். கவி இருக்குற இடத்துல நான் இருக்கணும்னுதான் நினச்சேன் தவிர உங்க கூட இருக்கணும்னு என்ன தோணல.



கவி கல்யாணமாகி போய்ட்டா உனக்கும் எனக்கும் நடுவுல வர மாட்டா என்ற நம்பிக்கைலதான் மாமாகிட்ட கல்யாணத்த பத்தி பேச சென்னை வர சொன்னேன். அன்னைக்கி கவி வந்து மாமாகிட்ட கார்த்திக் பேஸ்ட்டு பிரெண்டு என்று சொல்லி ஒரே குடும்பத்துலதான் கல்யாணம் பண்ணனும்னு சொன்னா... அப்போ கூட எனக்கு தவறா படல, ஆதி மாமாவை கல்யாணம் பண்ண போறா ஒரே குடும்பம் உறவு முறைல எனக்கு அக்கா எண்றதோட விட்டுட்டேன்.

images (50).jpg

ஆனா கல்யாணத்துக்கு பிறகும் நீ கவி புராணம் பாடி கிட்டு அவளுக்கு சேவகம் செய்றது எனக்கு பிடிக்கல. அது பொறாமையினால் எங்குறது இப்போ புரியுது. பட் கவி உனக்கும் எனக்கும் நடுவுல வர முயற்சி செய்யவே இல்ல. அதுவும் இப்போ நல்ல புரியுது. நான் தான் ஏதேதோ நினைச்சி மனச போட்டு குழப்பிக்கிட்டு என்னென்னவோ பேசிட்டேன். மாமாகும் என் மேல கோபம் இருக்கும் ஆனாலும் ஒண்ணுமே சொல்லாம இருக்கிறான் என்றால் அது நம்ம குடும்பத்துக்காக மட்டும் தான். கவிக்கு நான் பேசினது தெரிஞ்சா ரொம்ப மனசோடஞ்சி போவா இல்ல கார்த்திக். நான் ஏன் இப்படி இருக்கேன்" ஏதேதோ பேசியவள் கடைசியில் கணவனிடம் கேள்வி கேட்டு வைக்க



"எல்லாம் உன் பிடிவாதக் காதலால் தான். உனக்கு நான் மட்டும் வேணும். நான் மட்டும் போதும் னு நினைக்கிற. உன் கூடவே இருபத்திநாலு மணி நேரமும் இருக்கணும்னு எதிர்பாக்குற அது தப்பு" கார்த்திக் பட்டென்று சொல்ல புரிந்து கொண்ட விதமாக தலையசைக்க ஆருத்ரா விசும்பலானாள்.



"அதான் புரிஞ்சிக்கிட்டியே! திரும்ப எதுக்கு கண்ணை கசக்குற?"



"இல்ல கார்த்திக் அத்தைங்கள மனசு நோகும் படி பேசிட்டேன். அதனாலதான் அவங்க வீட்டை விட்டு போய்ட்டாங்க"



"தேவிமாவ என்ன பேசின?" கண்கள் சிவந்தான் கார்த்திக்.
 

Priyapraveenkumar

Well-Known Member
Aaru unnioda managumural ellam Karthik kitta sollitta seri tha....
ana Devi ma unnoda peachala tha avnaga ponathu therinja Karthik epdi react pannuvan theriyalayea....
 

banumathi jayaraman

Well-Known Member
ஆருத்ராவுக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்திருக்கு
பிரயோஜனம் இருக்குமா?
கார்த்திக் என்ன செய்யப் போறான்?
காதல் மனைவியை மன்னித்து விடுவானா?
இல்லை........?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top