இரட்டுறமொழிதல் :: அத்தியாயம் 1

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இரட்டுறமொழிதல்

அத்தியாயம் 1

"கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே

மூஷிக வாகனனே மூலப் பொருளோனே...

கணபதி தாளினையே கருத்தினுள் வைத்திட்டேன்

அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே ..." ஒலித்துக் கொண்டிருந்தது அந்த வீட்டில்...


மூன்று கிரௌண்ட்-ல் கட்டிய அமைப்பான, அழகான வீடு. அவ்வீட்டின் பெரிய இரும்புக்கதவில் இத்தனை எழிலோவியமா என எண்ணி வியக்கும் படி மிகத்துல்லிய நகாசு வேலைப்பாடமைந்த கேட் ..பின்னே.. இல்லம் யாருடையது?, அயன் கிராப்ட்ஸ் [IRON CRAFTS] உரிமையாளருடையதாயிற்றே? திருவாளர் & திருமதி சூர்யா நாராயண பிரகாஷின் இல்லம்.. "சூர்யவன்ஷா" பெயருடன்.. சூர்ய முத்திரையும் பதிந்து, இளம் காலை வெயில் பட்டு மிளிர்ந்தது....

உள்நுழைகையில், இரு பக்கமும் வழி, மத்தியில், பெரிய விட்டத்துடன் செம்மண் வாஸ்து பாத்திரம், செயற்கையான அல்லி குளமாய் மாறி இருந்தது. கார் செல்லும் பாதை ஒட்டி புல்வெளி, அதில் நடப்பதற்காக போட்டிருக்கும் பதி கற்கள்..

இதையும் கடந்தால் வரும், இவர்களின் வாழ்விடம்...தோட்டத்தின் ராமதுளசி வாசம் வீடு முழுமையும், முக்கியமாய் பூஜையறையில் நிறைந்திருந்தது... மொத்தத்தில் வீடு அமைதியும், நேர்மறை எண்ணங்களின் இருப்பிடமாய் இருந்தது...

சூலமங்கலம் சகோதரிகள் தெள்ளு தமிழில் பாட... கூட ஒலிக்கும் மனைவியின் குரலில், துயிலெழுந்தான்... SNP என்று அனைவராலும் அழைக்கப்படும் சூர்யநாராயண பிரகாஷ்...

மல்டி மில்லினியர்.... இரும்பு சம்பந்தப்பட்ட அனைத்து துறையிலும் இவர் கால் பதிக்காத தொழில் இல்லை, ஈரேழ் தலைமுறைக்கு தேவையான வசதியும், வருமானமும் படைத்தவன்.... ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, அவர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ப்ரஹ்மா ... ஆளும் கட்சியோ எதிர் கட்சியோ இவன் நன்கொடையாக தரும் தொகை, இவனை எதிர்த்து வாய் திறக்க அஞ்ச வைக்கும், தவிர... நேர்மையான, திறமையான தொழிலதிபன். தொழில் வட்டாரத்தில் S N P என்றால் success’s nickname Prakash .. வணங்காமுடி.. இன்னொன்றும் கூறுவர் ... Say no to Prakash & end up in Ash.... அது வியாபார வித்தகனாய் அவனின் சாமர்த்தியம்...

வீட்டில், மனைவி சரண்யுசாயா-விற்கு மட்டும் 'நரேன்'.. அருமையான கணவர், மகள். அதிதிசந்தியா & மகன், பாஸ்கர்ஆதித்ய பிரகாஷ் ... இருவருக்கும் பாசமான தந்தை...

அதிதி சந்த்யா - நியோ-நேட்டல் , எனப்படும் ஜனிக்கும்/இருக்கும் குழந்தைகளை காப்பாற்ற, சிறப்பு படிப்பு படித்த சிசு குழந்தை மருத்துவர்... [நம்ம பாஷைல - படிப்ஸ்... ] இவள் வயது பெண்கள் மேலைநாட்டு ஸீரோ சைஸ் அழகென்று பட்டினி கிடந்து மெனக்கெட, திடமான உடலே ஆரோக்கியம் என்று சத்துள்ளவற்றை உண்டு வளர்ந்த பெண்.. எனவே, பூசினார்போல் தேகம்.. காருண்யம் பேசும் கண்கள்... அவற்றை பார்த்தாலே மனம் சமப்படும்.. மொத்தத்தில் வெள்ளை கோட் அணிந்து வந்த தேவதை....இவள் ஈஸ்ட்ரோஜென்-ஐ துயிலெழுப்பும் ஆண்மகனை, இன்னும் இவள் சந்திக்கவில்லை... எனவே, வீட்டில் மணமகன் தேடுதல் வேட்டை, மிகத்தீவிரம்.

சின்னவன் பாஸ்கர் ஆதித்யா - மெட்டலார்ஜிகல் இன்ஜினீயரிங் முடித்து, தந்தை வழியில் அவன் பயணம். இவன் கைவண்ணத்தில் [கண்வண்ணத்தில் எனக்கொள்ளலாமோ?] இன்னும் மேம்பட்டதாய் ஏற்றுமதியிலும் அவர்களின் தொழில்கள்... படிப்பில் அக்காவிற்கு சளைத்தவன் இல்லை. ஜிம் பயிற்சி கண்ட உடல் , யோகா கொடுத்த தேஜஸ் , அகண்ட நெற்றி, ரிம்லெஸ் கண்ணாடியும் மீறி துளைக்கும் ஆளை எடைபோடும் பார்வை.. மொத்தத்தில் அழகில் மன்மதன்...

ஆஹா.... குடும்பத்தின் அச்சாணி .. சரண்யுசாயா விட்டுவிட்டோமே? இவர் வாய்மொழி பேசுமோ தெரியாது... ஆனால் விழி பேசும்... கண்ணசைவில் குடும்பம் நடத்தும் வேல் விழியாள். திருமணத்திற்கு பின் பொழுது போக்காய் படித்த சட்டம், இன்று இவர் மூச்சானது.. சாமானியர்களுக்கு சாத்விகா, சட்டத்தின் ஓட்டையை தேடும் சமர்த்தர்களுக்கு சிம்மவாஹினீ ... கம்பீரமும், புத்திக்கூர்மையும் நிறைந்த பேரிளம்பெண்...

மொத்தத்தில் ஒரு idealistic மேல்தட்டு குடும்பம்.

கைரேகை பார்த்தெழுந்து, காலைக்கடன் முடித்து, தோட்டத்தில் களை எடுக்கும் வேலையில் மும்மரமானான் நரேன்... வியர்க்க விறுவிறுக்க வேலை பார்க்கும் கணவனை, வாஞ்சையுடன் பார்த்து, "நரேன், மணி ஏழேமுக்கால்... போதும் வேலை பாத்தது", சொன்ன சாயாவின் கைகளில், நீர்மோர் வரகு கஞ்சியும், பொடியாய் சின்ன வெங்காயமும் தயாராய் இருந்தது... சாயாவைப் போலவே சர்க்கரைக்கும் SNP -யை பிடித்ததன் விளைவு...

சரண்.. ம்ம்.. நீங்க நினைக்கிறா மாதிரி, தலைக்கு குளிச்சு, மஞ்சள் பூசி, மங்களகரமா குங்குமம் வச்சு, தழைய தழைய புடவை கட்டி .. - மாதிரி .... குடும்ப தலைவி -ன்னு யோசிக்காதீங்க...

தலை குளிச்சு, ட்ரையர் போட்டு, முடியை கிளிப்-பில் அடக்கி இருந்தாள், திராவிட/ இந்திய / உலகளாவிய [அடப்போங்கப்பா இந்த டிரஸ்-க்கு எல்லைக்கோடு கிடையாது,] பெண்கள் வீட்டில் இருக்கும் போது போடும் உடையான நைட்டி-யில் இருந்தாள்.நெற்றியில் சின்னதாய் வட்ட போட்டு, கீற்று விபூதியுடன், சாம்பிராணி வாசத்துடன் இருந்தாள்

"தேங்க்ஸ் டா ", அருகில் இருந்த மர ஊஞ்சலில் அமர்ந்து கஞ்சியை பருக ஆரம்பித்தான்...

"உனக்கு காலைல ஏதாவது கேஸ் அட்டென்ட் பண்ணனுமா, சரண் ?"


"இல்லப்பா... முக்கியமான கேஸ் எதுவுமில்லை.., இருந்தாலும், கல்பலதிகா இருக்காளே, அவ பாத்துப்பா..., உங்களுக்கு என்ன வேணும் அதை சொல்லுங்க",

கல்பலதிகா, ஒரு வருடமாய் சாயாவின் ஜூனியராய் இருப்பவள்.. சட்ட புத்தகத்தை கரைத்து குடித்த ஜீனியஸ்... பொழுது போக்கு... [?], பொது நலவழக்கு தாக்கல் செய்வது...[infact , அதற்குத்தான் சட்டமே படித்தாளாம் ] இவள் கைப்பையில் தயாராய் இருப்பவை, பெட்டிஷன் எழுத பேப்பரும், ..பேனாவும். [ஒரு பேனா மூணு நாளைக்கு தான் வரும், ஏன்னா ரீபிள் காலியாகிடும், ஆனாலும் கவலையே பட மாட்டா.. பத்து ரூவாய்க்கு அஞ்சுன்னு கிடைக்கிற பேனாவை வாங்கி bag -ஐ நிரப்புவா... மொத்தத்தில்... ட்ராபிக் சரிபண்ற ராமசாமி மாதிரி., க.. க.. க..போ..அதே அதே... கரெக்ட்-ஆ புடிச்சிடீங்க... .]

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், மகளும் தோட்டதிற்கு வர....

"குட் மார்னிங் பா, ஹாப்பி மார்னிங் மாம்..."

"எழுந்துட்டியா தியா...?, பிளசண்ட் மார்னிங்டா செல்லம்..", என்ற நரேனை தொடர்ந்து..

"ஃப்ரெஷ் அப் ஆகிட்டியா? காபி தரட்டுமா?", உலக அம்மாக்களுக்கெல்லாம் எதையாவது பிள்ளைகள் வயிற்றில் திணிப்பதே தலையாய கடமையோ?

"எஸ், உங்க ஸ்பெ..ஷ.ல்...காபி"

"சரண்.. அப்டியே எனக்கும் ஒரே ஒரு கப்-டா?", சொன்ன நரேனை இடையிட்டு ...

"நோ வே டாட்.., லாஸ்ட் மந்த் உங்க ரேண்டம் சுகர் 380, இன்சுலின் போட்டாலும் கண்ட்ரோல் ஆகலை...", என்றவளை குறுக்கிட்டு...

"இந்த மந்த் பாரும்மா.. நிச்சயமா கண்ட்ரோல்-ல இருக்கும்... ஏன்னா... உங்க வெள்ளை கோட்டு ஆசாமிகளை நம்பாம, ஆயுர்வேதிக்-ல சொன்ன கருஞ்சீரகம் ரெகுலரா எடுத்துகிறேன்.... பத்து நாள்தான் ஆகுது.. பத்து வயசு கம்மியான ஃபீல்..", இதழ்கடையில் சிரிப்போடு....பேசும் கணவனையும் மகளையும் பார்த்து காஃபி கொண்டு வர உள்ளே சென்றாள் சரண்யுசாயா..

"நீங்க எங்களை நம்புங்க . நம்பாம போங்க.., எனக்கு நம்பர்தான் பேசணும்..", என்றாள் தியா சிரித்துக் கொண்டே, அப்பாவின் அருகே ஊஞ்சலில் அமர்ந்தாள்.

" ஃபிரீயா இருக்கியாடா?, ஒரு விஷயம் சொல்லணும்", நரேன் ஆரம்பிக்க....

"டாடி, என்கிட்ட என்னப்பா பார்மாலிட்டி? சும்மா சொல்லுங்க...."

"ஒரு பையன் ஜாதகம் வந்திருக்கு, பத்துக்கு ஏழு பொருத்தம் இருக்கு.., போட்டோ அனுப்ப சொல்லட்டுமா?"

தியாவிற்கு ஒரு மைக்ரோ நொடி இதயம் நின்றது... "அப்பா.. இன்னும் படிக்கலாம்-னு நினைச்சிட்டு இருக்கேன் பா....", குரலில் ஸ்ருதி குறைந்ததோ?

"படிம்மா.. உன் இஷ்டத்துக்கு நோ சொல்லாத மாதிரி இடம்தான் பாக்கறேன்.. இல்ல உனக்கு எதாவது, யாரையாவது பிடிச்சா சொல்லு, பையன் & குடும்பம் நல்லவங்களா இருந்தா முடிச்சிடலாம்",.. எத்தனை அப்பாக்கள் இப்படி கிடைப்பார்கள்?..

தியா-வின் விழித்திரையில் ஒருமுகம் வந்துபோனது... "தெரில பா, ஸ்கூல் டேஸ்-ல ஒரு அட்ராக்ஷன் இருந்தது... இப்போ வரை அவன் முகம் நல்லா நினைப்புல இருக்கு.. ஆனா, இது லவ்-ஆன்னு தெரியலப்பா", அப்பாவிடம் எதையும் ஒளிக்க அவசியமில்லாத தந்தை-மகள் உறவு...

யோசனையோடு தியா-வை பார்த்து.. "அவன் பேரு தெரியுமாடா?, ப்ரோபோசல்-லாம் நடந்ததா?", என்று நரேன் சீரியாசாக ...

"ஐயோ அப்பா.. நாங்க ரெண்டு பேரும் ரெண்டொரு வார்த்தைக்கு மேல பேசினதே இல்ல... இதுல ப்ரோபோசல் வேறயா?", என்று சிரித்தவள் "எனக்கு அவன் சீனியர். ரொம்ப ரஃப் டைப்... அந்த face மைண்ட்-ல இருக்கு அவ்வளவுதான்.., பேரு இளம்பரிதி, அப்போவே அவனுக்கு IPS ஆகணும்-னு கனவு.., இப்போ என்ன பண்றான், என்னவா இருக்கான் எதுவும் தெரியாது..,", என்றவள் சிறிது இதைவிட்டு, "பா...கல்யாணம் இப்போ வேண்டாம்-பா.. நான் இன்னும் அதுக்கு தயாராகல..."

"ஓகே.. ஜஸ்ட் லீவ் இட்.., உனக்கு ஒரு சிக்ஸ் மந்த் டைம் தர்றேன், ஆனா அதுக்கு மேல கண்டிப்பா முடியாது., நானே விட்டாலும் உங்கம்மா விடமாட்டா... சொன்னேன்ல.. நூறாயிசு.. வந்துட்டா பாரு ", என்றான் காஃபியுடன் வரும் சரண்யு-வை பார்த்தவாறே...

"என்ன?, எம்பேரை உருட்டிட்டு இருக்கீங்க, அப்பாவும் மகளும் சேர்ந்து?"

"சே. ச்சே .. உன்னைப் பத்தி தப்பாவா சொல்ல போறோம் ?, நல்லவ , வல்லவ.. நாலும் தெரிஞ்சவ... ன்னு ..."

"ஆமாம்மா ... அதேதான்.. கூடவே எதோ சொன்னாரே?, ஆங்.... உங்க கருப்பு கோட்டு .. மாடி-ல வடகம் காய வைக்க்கும் போது காக்கா விரட்டத்தான் யூஸ் ஆகுது-ன்னு சொன்னாரா.. கரெக்ட்டா அப்போதான் நீங்க என்ட்ரி..., அவர் சொன்னதுல அது மட்டும்தான் எனக்கு புரியவே இல்ல.. உனக்கு புரியுதா மாம்?", என்று காலை நடை முடித்து வந்த பாஸ்கர் ஆதித்யா, அம்மாவின் கோபத்திற்கு தூபம் போட..

தியா தம்பியை பார்த்து ஹை-ஃபை கொடுக்க,

"பத்த வச்சிட்டியே பரட்ட ?", என்று 16 வயதினிலே-யில் வரும் கவுண்டர்மணி -யின் வசனத்தை, வேக வேகமாய் அனல் மூச்சு விடும் சாயாவை பார்த்தவாறே .. அதே பாணியில் SNP நரேன் கூறி ... தொடர்ந்து..

"அடப்பாவி, இன்னும் நாலு நாளைக்கு மலையிறங்க மாட்டாடா.. , உங்கம்மா", SNP புலம்ப...... கலகலப்புடன், இக்குடுப்பத்தின் விடியல்.


மொழிவோம்..
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
hehehe apdiye enga veetu feel.
எனக்கு அவன் சீனியர். ரொம்ப ரஃப் டைப்... அந்த face மைண்ட்-ல இருக்கு அவ்வளவுதான்.., பேரு இளம்பரிதி, அப்போவே அவனுக்கு IPS ஆகணும்-னு கனவு.., இப்போ என்ன பண்றான், என்னவா இருக்கான் எதுவும் தெரியாது.
aahaaa..hero ku intro jillunu irukee ;)
potu kudukra Boss
padips Diya
vakkeel chaaya
verry nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top