E6 Nee Enbathu Yaathenil

Advertisement

sindu

Well-Known Member
இல்லை..
சுந்தரி சாதாரணமானவள் இல்லை...
சாதாரண பெண்ணாயிருந்தால் அவன் விவாகரத்துக்கு கலங்கி இருப்பாள்..

அவன் திரும்ப அழைக்கும்போது கிராமத்து வாய்க்கு பயந்து உடன் சென்றிருப்பாள்....

மகனுக்காக தந்தை வேண்டும் என நினைத்திருப்பாள்...

அவள் அசாதாரணமானவள்....
super
 

sindu

Well-Known Member
பிடிக்கல
Hi mam

கண்ணன் அனைத்து காரணங்களையும் தன் தரப்புக்கு சாதகமாய்தான் பார்க்கின்றார்,திருமணம் முடிந்தால் எல்லோரும் இயல்பாய் எதிர்பார்ப்பது குழந்தைதானே, இதில் கண்ணன் வீட்டார் என்ன விதிவிலக்காக,இதில் சுந்தரியுடனான திருமணம் பிடிக்கவில்லையென்று தன்குடும்பத்தாருக்கு முதலிலேயே தெரியும்தானே,இதில் குழந்தை விடயம் தெரிந்த போது முதலில் அதிற்சியாய் இருந்தாலும் ,எல்லோரும் ஆறமரப்பேசியிருந்தால் எல்லோரும் கண்ணனை உயர்வாகத்தான் நினைத்திருப்பார்கள்,பிடிக்காத திருமணமாயிருந்தாலும் தன்வாழ்கையை சரி செய்ய நினைக்கின்றார் என்று,ஏன் கண்ணன் கூட தன் வாழ்க்கையை சுந்தரிகூட இணைத்ததிற்கு காரணம்கூட அதுதானே,அப்படியாவது மனைவியை தனக்கு பிடிக்கவேண்டுமென்று,ஆனால் விவாகரத்து கேட்டதற்கு கண்ணன் நினைத்திருந்த காரணம் வெறும் கண்துடைப்பு ,அது எப்படி தன்தாயார் நடு வீட்டில் வைத்து சுந்தரியை பிடிக்கல பிடிக்கல என்று சொல்லிவிட்டு எப்படி இப்படி குழந்தைவரை வந்தது என்று கேட்டுவிட்டார் ,அதுவும் சுந்தரி பாட்டியிடம் சுந்தரியிடமும் தன் வீட்டினர் முன்பும் கேட்டுவிட்டார் என்று,அதனால் தாய்க்கும் இவருக்கும் மனஸ்தாபம் வந்து அவமானம் வந்துவிட்டதாம்,அத்தோடு சுந்தரியை நிமிர்ந்துமுகம் பார்க்க அவமானமாம்,இதனால் வீட்டை விட்டு வெளியேறி நண்பனுடன் இருந்து மேற்கொண்டு எதுவும் தோன்றாமல் வயது முதிர்ச்சி இல்லாமல் விவாகரத்து கேட்டு அனுப்பினாராம்,அது எல்லாம் சரி என்னுடைய கேள்வி விவாகரத்து கேட்டு அனுப்பினால் அல்லது பிரிந்தால் , இந்த அவமானங்கள் எல்லாம் போய்விடுமா,அறுதி உறுதியாக சுந்தரியுடனான திருமணத்தை மறுத்த மகன் அடுத்த மாதமே தந்தையாகிவிட்டார் என்று அறிந்தால் அதிற்சியாகத்தானே இருக்கும் அவருக்கு அதை ஜீரணித்துக்கொள்ள அவகாசம் வேண்டுமல்லவா ,அந்த அதிற்சியில் சொல்வந்ததை ஒழுங்காக சொல்லமுடியாமல் வார்த்தைகள் தவறுதலாக வந்துவிழுந்து சுந்தரிப்பாட்டியுடன் வாக்குவாதமாகிவிட்டது,ஆனால் அதை விமலா அவர்கள் கேட்ட இடமும் கேட்டதொனியும் தவறாக போய்விட்டது,அக்கேள்வி தன்மகனையும் மருமகளையும் ஏன் வயிற்றில் இருந்த குழந்தையையும் அவமானப்படுத்தும் செயல்தான்,அதற்காக ஒருவரையுமே எதிர்கொள்ளமுடியவில்லை என்றகாரணத்திற்கு விவாகரத்து செய்யலாமா,அவர்களின் வழக்கு நீதி மன்றம் வரும்வரைகூட கண்ணன் சுந்தரியுடன் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கவில்லைத்தானே,பின்பும் பெரிய வயிற்றுடன் பார்த்தபோது குழந்தைக்காக என்று நினைத்துத்தான் சுந்தரியை திரும்ப தன்னுடன் வாழ வருமாறு கேட்டிருப்பார்,பின்பும் கண்ணனுக்குத்தெரியும்தானே தனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கும் என்று ,அக்குழந்தையைப்பற்றி எந்தவித தகவல் சேகரித்தோ அல்லது அக்கறை காட்டியதாகவோ தெரியவில்லை, கண்ணனுக்கு பிடிக்கல என்ற சொன்ன பெண்ணுடன் தான் வாழ்ந்துவிட்டேன் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது ,அதனை ஒரு கௌரவக்குறைசலாக நினைத்தபடியால்தான்,இப்படி விவாகரத்து வரை போனார்,அதுவும் தன் மனைவி தன்குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கின்றார் என்று தெரிந்தபின்தானே விவாகரத்து கோரினார்,பிறகு என்ன நீதிமன்றம்வரை வந்துவிட்டு சேர்ந்து வாழக்கூப்பிடுவது இது எல்லாம் சும்மா ஒரு கண்துடைப்புக்குகேட்டது,அதை சுந்தரி புரிந்துகொண்டபடியால்தான் மறுத்திருக்கின்றார்,என்னவோ முழுதப்பும் கண்ணனுடையது,எந்த முடிவென்றாலும் இனி சுந்தரிதான் எடுக்கவேண்டும்,பிரிந்ததிலிருந்து இன்றுவரை தனியாக எங்கேயும் போகாமல் எல்லாவற்றையும் தாங்கி சாமாளித்தபெண்,இனிமேல்எந்தவருத்தமும்அடையக்கூடாது,
என்னுடைய 2 கேள்விகள் இதுதான்
1-சுந்தரி தாய்மை அடைந்தது தெரிந்தும் அதன் பின்பும் ஏன் விவாகரத்து கோரினார்.
2-தான் ஒரு குழந்தைக்கு தந்தையென்று தெரிந்திருந்தும் அப்பிள்ளை பற்றி ஏன் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.

நன்றி
Aravin22
Superb
ellam sari seiyya ninaithavan enn vivagarathu kettan??
Vimala's mistake too... when other 3 unmarried girls are at home.... how can she ask the quesion to Sundari and Durai...
she should have first confirmed with Durai alone and then questioned Sundari....
 

sindu

Well-Known Member
கண்ணனுக்கு வேறு பெண்ணை பார்க்கபிடிக்கவில்லை அதேநேரம் கட்டிய மனைவியையும் பிடிக்கல,இதுதான் நிதர்சனம்,வேறு பெண்ணை பார்க்க கண்ணனுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரின் செயல்களை நியாயப்படுத்தாதீர்கள்,
கண்ணனுக்கு அதன்பின் வேறு பெண்ணை பிடிக்கவில்லையென்றால்,தன் குழந்தை வயிற்றில் இருப்பது தெரிந்தும் விவாகரத்தும்,பிள்ளையைப்பற்றி அறிந்துகொள்ளாமல் இருந்ததும் இக்காரணத்தினால் சரியாகப்போய்விட்டதா,குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவித்த அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்,நல்லது கெட்டது தனக்குத்தானே வகுத்து தன்னை நல்லநிலையில் வைத்திருந்தபடியால் இன்று எல்லோரும் நல்லவிதமாக திரும்பிபார்க்கின்றார்கள்,இதுவே சுந்தரியின் வாழ்வு கூடாத திசையில் பயணித்திருந்தால்????
Superb
 

sindu

Well-Known Member
Hi Malli,
Good Morning...

குடும்பத்தில் வாரிசு உருவான
இனிய,ஆனந்தமான ஒன்று
விமலாவின் ஆங்காரத்தால்
சம்பந்தப் பட்டவர்களுக்கு
துன்பம் தரும் விஷயமாக மாறியது....

கணவன் திட்டியதாலும்,ஆசை மகன் பேசவில்லை என்பதாலும்
வாழ்க்கை வெறுத்து தற்கொலை முயற்சி....
விமலாவின் மனமுதிர்வைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை


கணவர் திட்டுகள் குறைந்ததாலும்
மகன் திரும்ப பேசுவதாலும்
வாழ்க்கை வண்ணமயமாகிவிட்டதா,
விமலா அம்மாவிற்கு,.....


தாயைப் போல் பிள்ளை,தப்பாமல் பிறந்த பிள்ளை...
அம்மா எட்டடி,பிள்ளை பதினாறடி....


அம்மா,மகன் combo வெகு அருமை...
fevical கொண்டு ஒட்டியது போன்ற
பிரிக்க முடியாத பந்தம்...


மல்லி,இருவரையும் எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்.?????

  • Nice episode ....:D:D
correct the in which Vimala handled the situation led to problem
 

sindu

Well-Known Member
I don't find any mistake with Chandran too
அவர் பணத்துக்காக மட்டும் பார்கவில்லை.
தன் நண்பன் உடல் நிலை அறிந்து உதவி செய்ய நினைக்கிறார்
அதுவே அவர் உயிருக்கு உலை வைத்து விட்டது

சுந்தரி பட்டை தீட்டபடாத வைரம் என அறிந்தவர் அவர்
அவள் பேரழகி இல்லை என்றாலும் அவள் குணம் கண்டு சீராகும் என எதிர்பார்த்து இருப்பார்

விமலாவின் அவசரம் ஒரு காரணம்
கண்ணன் எல்லாம் சரி செய்ய உறவு கொண்டான்
தனக்கு குழந்தை வந்தது தெரிந்ததும் விவாகரத்து செய்வது தான் சரி செய்வதா???
இவனுக்கு ஒரு அரை வேக்காடு வக்கீல் வேற
பலியாடு சுந்தரி மட்டும்

Charu is another Vimala only....
Staying next door
She can't still understand how rich sundari is or how big her heart is...

She doesn't even feel any love for her brother's son
இந்த வீட்டில் ஒன்னும் தேறாது
 
S

semao

Guest
மனைவியை தனக்கு பிடிக்க வேண்டும் என்பதற்க்காக தான் உறவு...... இந்த கோணத்தில் பார்த்தால் ....... அவனுக்கு அதற்கு பிறகு வேறு பெண்ணை பார்க்க பிடிக்கவில்லை.....இருட்டில் ஒரு வெளிச்ச புள்ளி .........
:D
 

fathima.ar

Well-Known Member
நதி வளையும் வழி தெரிவதுண்டு
விதி வளையும் வழி தெரிவதில்லை
தெரிந்துகொண்டால் அது ருஷியுமில்லை
இனிமேல் என்ன கதையோ
பால் குடத்தில் ஒரு எறும்பு விழ
பல்லிஎன்று அதை வெறுப்பதென்ன
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் என்னை தண்டிக்குமா
காலங்கள் நம்மை மன்னிக்குமா

இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை


Movie song...
 

Adhirith

Well-Known Member
Superb
ellam sari seiyya ninaithavan enn vivagarathu kettan??
Vimala's mistake too... when other 3 unmarried girls are at home.... how can she ask the quesion to Sundari and Durai...
she should have first confirmed with Durai alone and then questioned Sundari....

கண்ணன் விரும்புகிற நாசுக்கும்,நாகரீகமும்
அவன் அம்மாவிடமில்லை...

அவன் அறிவான,விமலாவின்
harsh reaction/behaviour about Suadari's preganancy?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top