Santhathil Paadaatha Kavithai 9

Advertisement

Adhirith

Well-Known Member

எழுதப் படாத நியாதி ஆக இருந்தாலும்,
அவற்றைக் கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை
உயர்த்திக் கொள்ளாமால் , ராஜேந்திரன்
வேறு நற்காரியங்களுக்கு உபயோகப்படுத்தி இருக்கலாம்...


” அரசு அன்று கொல்லும்....; தெய்வம் நின்று கொல்லும்..”
இந்த காலக்கட்டத்தில் அரசாட்சி செயபவர்களும்
எழுதப்படாத நியதியை கடைப்பிடிப்பதால்,
தெய்வம் தரும் தண்டனைகள் சில,பல நமக்கு தெரிகின்றன....
தெரியவில்லை என்றாலும், அவரவருக்கேற்ற தண்டனை உறுதி....


கிருஷ்ணா,இந்த எபியில் நீ unwise....தான் ...
உன்கிட்ட சொல்ல வில்லை தான்....
கிருஷ்ணாவாக உன்னை பிடிக்கும்,ஆனால்
ராஜேந்திரன் மகனாக எனக்கு வேண்டாம் என்று
openஆக எல்லோர் முன்பும் தான் சொல்லிவிட்டாளே...


காவ்யாவின் பேச்சை கேட்ட பிறகு தான்
உனக்கே உன் தந்தையின் செயல் தப்பு என்று புரிகிறது...
புரிந்த பிறகும் அது தவறு என்று கூறாமல் ,
உன் வாழ்க்கை உங்களுக்கு.....என் வாழ்க்கை என்னோடு
என்று மகனாகிய நீயே ஒதுங்கி கொள்கிறாய்.....;):oops:

இதில் ,அவளின் வேண்டாம்/ஒதுக்கம் குறித்து நீ ஏன்,
கோபம் கொள்கிறாய்.....:oops::eek:
கிருஷ்ணாவாக உன்னை விரும்புகிறாளே,
அதை மட்டும் கொண்டு ஒரு முடிவு எடுக்க வேண்டியது தானே....:(
தேவையில்லா ஒரு கோபத்தை பிடித்துக்கொண்டு கொண்டு
தொங்குகிறாய் என்றுதான் தோன்றுகிறது....:eek:


மல்லி மறுபடியும் ,கிருஷ்ணா வேலை
என்ன என்று சொல்லவில்லை....;)


Final conclusion :.....ரொம்ப தெளிவான குழப்பமான
எபிசோட் கொடுத்து இருக்கீங்க மல்லி.....;):p:D
இதில் நீங்க தான், expert...


love your Ms..Righteous Heroine....:)
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
அரும்பிலே முளைத்தது
விரும்பியே வளர்ந்தது
வளரும் போது உணர்ந்தது
உணர்ந்ததை மறைத்தது
மறைத்ததை உரைத்தது
உரைத்ததால் பிரிந்தது
பிரிந்ததால் தவிக்குது
தவிப்பதை உணர்ந்தது
உணர்ந்ததால் தேடியது
தேடியதால் அழைத்தது
அழைத்தவளின் உணர்வறியா அவன்
பிரச்சனைகளின் நடுவே அவன்

அவள் அழைத்தாலும் நினைத்தாலும்
மறுப்பவனின் எண்ணம் புரியுமா
அவன்தம் உணர்வறியுமா
பார்த்து பார்த்து
வர வைத்த உணர்வை
மறைத்து வைத்ததால்
சிக்கலாக்கியதை அறியுமா பேதைமனது
செம செம மீரா...
 

malar02

Well-Known Member

புழுக்கம் அவளை நிம்மதியாய் இருக்கவிடவில்லை......
அவள் பாணியில் அவள் சரியென்று அவளுக்கு தோன்றுகிறது ...என்ன செய்வது தெரியுமுன் வந்துவிட்ட ஈர்ப்பு....
தெரிந்த
பின் வந்த தவிர்ப்பு அவனுள் தவிப்பை கொடுத்து விட்டது ......அவனும் உணர்ந்ததை இவளும் உணர்ந்திருந்தால் ....உளறமல்லாவது இருந்திருக்கலாம்.... உறுத்தலின்றி இருந்திருக்கும்.
இப்பொழுதோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றாகி போனது இருவருக்கும்....
இவளுக்கு கொள்கையும் வேண்டும் அவனின் இணக்கமும் வேண்டும் ....
அவனுக்கு அவளின் காதலும் வேண்டும் தன்மானமும் வேண்டும் .
காதல் விதியில் முதல் எதிரியே இவைகள் தாம்....
மிக சரியாக சொல்லியிருக்கீங்க நேர்மை என்பதை முட்டாளாய் பார்க்கும் உலகம். நல்லத்தை நிரூபிப்பது கூட கடினம் இரண்டாவது ஏன் நிரூபிக்குனும் என்றும் தோன்றும் ....அனுபவித்து இருக்கிறேன், .
இதுவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் லஞ்சம் என்ற பேயை பிடிக்கவில்லை என்று சொன்னால் வீழ்த்தி விடும் அபயமுள்ளது. இரண்டாவது பிடிக்கலயா , பிடிக்குதா என்ற ஆஃப்ஷன் யோசிக்கும் முன் பலவந்தம் செயப்பட்டுவிடுகிறார்கள். இதன் பொருட்டே நல்லவர்கள் ஒதுங்கி போகிறார்கள் கையறு நிலையில் வீழ்ந்தாலும் விடைக்கிடக்குமென்றால் வீழலாம் ....... விரக்தியாய் நின்றார்கள் , நிற்கிறார்கள்,............


MM ரொமான்ஸுக்குள் சமூக சிந்தனைகளை புகுத்தும் விதமும்.... ரொமன்ஸ் என்னும் ஈரப்பதம் காயமல் கொண்டு போகும் லாவகமும் ...இதோ இப்பொழுது ரொமான்ஸ் வந்துவிடும் ஆர்வத்தை தூண்டும் எழுத்து நடையும்..... சிந்தனைகளுக்கும் , துணிவுக்கும்
19533830_1958129271091113_1273618091443486720_a.jpg
 
Last edited:

Hema27

Well-Known Member
மாப்பிள்ளை வீட்டில் கிருஷ்ணா போய் சொல்லியிருப்பானோ...
பக்கத்து வீட்டு சண்டையில் எங்க அம்மா அவதூறாக சொல்லிட்டாங்க என்று..
Chance ehh illa...
Avanum love ahh nu aaraichi panna aarambichitan andha stage la...
So avan appadi solirka maatan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top