Venpani Malare..!-1

Advertisement

malar02

Well-Known Member
Hi Uma,

Very good start.

அதென்னமோ தெரியலப்பா அழுத்தமான கதாநாயகர்கள் மற்றும் தைரியமான, புத்திசாலி கதாநாயகிகள் மிகவும் பிரபலம்! சின்ன பிள்ளைத்தனமான கதாப்பாத்திரங்கள், சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வருவது போல அரை கிறுக்கு கதாநாயகிகளை பிடிப்பதில்லை. சிறு பிள்ளைதனமான போக்குகள் இருந்தாலும், ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் அழுத்தமான இயல்புகளை கொண்ட பெண்களை பற்றி படிப்பதில் பிடத்தம் எனக்கு.
வெற்றி மற்றும் கவி பாரதி கதாப்பாத்திர அறிமுகங்கள் அருமை. உங்களின் எழுத்து நடை மற்றும் கதாப்பாத்திர அறிமுகங்கள் நிறைய ஆர்வத்தை தூண்டுவதற்கு அமைகிறது. இதுவரை முதல் அத்தியாயம் படித்தவுடன் எந்த ஒரு எழுத்தாளருக்கும் நான் கமெண்ட் போட்டதில்லை. ஒன்றிரண்டு கதைகளை படித்த பின்பு தான் நான் விமர்சனம் எழுதுவேன், அதுவும் பிடித்தால் மட்டுமே. உங்களின் இதை கதையின் முதல் அத்தியாயத்திலேயே நான் கமெண்ட் போட்டதற்கு காரணம் - அழுத்தமான முக்கிய கதாப்பாத்திரங்கள், கிராமத்து பின்னணி, மற்றும் உங்களின் எழுத்து நடை. வாசிப்பதற்கு நன்றாக இருந்தது! இரண்டாவது கதை போல தெரியவில்லை. பத்து கதைகளை எழுதியது போல இருந்தது! தொடரட்டும் உங்களின் எழுத்து பயணம். இதே போல கதை முழுவதும் அமைய வாழ்த்துக்கள்!
உங்களின் முதல் கதையை இன்னும் வாசிக்கவில்லை. படித்துவிட்டு விமர்சனம் தருகிறேன்.

உங்களின் கதை என்னும் கடலில் நீந்துவதற்கு வந்த இந்த ஷர்மிளையை ஏமாத்தி போடாதீங்க உமா!

Best wishes for continuing the whole story the same way as the first episode.

Regards,
Sharmila
இவ்வ்ளவு பக்குவமா சிறுவயதிலேயே உங்களுக்கும் பொருந்துகிறது இந்த கதையின் ஹீரோயினுக்கும் பொருந்தும் போல் உள்ளது எஸ் இவங்க1st கதையை நானும் படித்த நெடுநாளுக்கு பிறகுதான்cmts போட்டேன் படிக்கச் அழைத்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top