uyirai tholaithaen ud22

Advertisement

preethi sri

Well-Known Member
hi friends likes and comments potta anaivarukkum nanri :love::love::love:

silent readers oru like thattunaa(y)(y)(y)(y) preethi happy annaachi :):):)

indha padhivukkum likes and comments podunga :D:D

அஜயின் கூறிய பார்வையில் அபி நிமிர்ந்து பார்க்க அவள் கண்களில் மின்சாரம் பாய்ந்தது

அபி விக்ரமிடம் பேசிக்கொண்டிருக்க அஜய் அவளை மறந்தும் பார்க்கவில்லை அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் மனதில் இருந்த போதும் அவள் கூறிய வார்த்தைகள் அவனை அவளிடத்திலிருந்து தள்ளி நிறுத்தியது ஸ்ரீ ராமனாக இருப்பவனை காம கொடூரனாக அல்லவ அவள் சொல்லி விட்டால்

தன்னை பிரிந்து செல்ல இப்படி ஒரு கீழ்த்தரமான வார்த்தையை அவள் சொல்லி இருக்க கூடாது என்ற எண்ணம் மனதில் வலுக்க தவரே செய்யாமல் தப்பானவனாக பேச பட்டாள் அந்த வலி அவன் காயத்தை இன்னும் கிளற இப்போது இருக்கும் நிலையில் அந்த கோவம் முழுக்க அபியின் மீது திரும்பியது

விக்ரம் அபியை அறிமுக படுத்த அஜய் பார்த்த அந்நிய பார்வையில் அவள் உள்ளக்குள் செத்து தான் போனால்

அஜய் இவங்க அபிஜித்ரா என்னோட அத்தை பொண்ணு ரொம்ப நெருங்கிய உறவு hyderabadல இருந்து வந்திருக்காங்க இவங்களும் நம்ம ஊரு தான் இப்ப தான் ரெண்டு வருசமா தான் அங்க இருக்காங்க ( இவன் எதுக்கு இப்போ கூடுதல் தகவல் கொடுக்கிறான் ) என்று சிரித்தபடி கூற

அஜயின் இதயத்தில் எரிமலை வெடித்தது என்னோட என்ற வார்த்தையில் அவன் கண்கள் சிவக்க அபியோ தன்னை மீண்டும் கண்டதினால் வந்த கோவம் என்று எண்ணி அபியின் கண்கள் கலங்கியது வரம் கொடுக்கும் தேவதையாக இருந்தவள் இன்று தன்னவனிடம் உரிமையாக அல்லாமல் யாசகம் வேண்டி வந்துள்ளாள்

பின் விக்ரம் இன்னொருவரை பார்க்க அவ்விடத்தை விட்டு அகன்றான்

அபி தான் முதலில் பேசினால் அஜய் எப்படி இருக்கின்க என்று தன் தயக்கத்தை மீறி கேற்க அவன் அவள் முகத்தை கூட காணவில்லை
அவ்விடத்தை விட்டு அகன்றான்

அவன் மனம் என்ன எதிர் பார்க்கிறது என்று அவனுக்கே
புரியவில்லை தினமும் அவள் என்னருகில் வேண்டும் என்று உடலும் உள்ளமும் வேண்டுகிறது அனால் அவள் கூறிய வார்த்தைகள் கூறிய வாழ்கொண்டு நெஞ்சை அறுக்கிறது

அவளை தன் உயிருக்கும் மேலாக காதலித்தான் அவளை தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைக்க மாட்டான் தான் அதற்காக தன் சுயத்தை விடுத்து அவளிடம் பேச அவன் மனம் விளையவில்லை

அவளாக தானே தன்னை தவறாக பேசிவிட்டு சென்றால் மீண்டும் அவளே தன்னிடம் வரட்டும் என்ற பிடிவாதம் அவள் தன் தவறுக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் அவளே தன் மறித்து போன காதலை உயிர்தெழவைக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது அவனை வியாபித்தது

அபியின் மனமோ சொல்ல முடியாத வேதனை கொண்டது

ஹர்ஷாவிடம் அபி பேசி கொண்டிருக்க உறவினர் வருகையும் இப்போது குறைந்திருந்தது முக்கியமான சிலர் மாத்திரமே மண்டபத்தில் இருந்தனர்
ஹர்ஷாவும் அபியும் பேசிக்கொண்டிருக்க அதில் விக்ரமும் சேர்ந்து கொண்டான் அங்கு கேலியும் கிண்டலும் களைகட்ட அபியின் கண்கள் அஜயை தேட
விக்ரம் அஜயை மறந்து விட்டிருந்தான் (பொண்ணு வந்தா பிரின்ட் எ
மறந்துடுவானுங்க )

அஜய் அபியை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தான்
உடல் மெலிந்து முதல் இருந்த கூந்தல் இப்போது இல்லை தோள்வளைவு வரை மட்டுமே இருந்தது அதுவும் அவளுக்கு அழகாக தான் இருந்தது ஆனால் அஜய்க்கு தான் பிடிக்கவில்லை


யாரை கேட்டு இவ ஹேர் கட் பண்ணுனா என்று மனதில் திட்டி தீர்த்தான் ஆமாம் அவன் எத்தனை முறை அவள் கூந்தலில் முகம் புதைத்திருப்பான் அந்த பிரத்தியேக வாசனையும் பட்டு போன்ற மிருதுவான அவள் கூந்தலின் ஏகாந்த நிலை அவனுள் தோன்றி இம்சித்தது

அழகாக இருந்தால் ஆனால் அதையும் மீறி அவள் கண்ணில் தெரிந்த ஏக்கம் வலி அவனை யோசிக்க வைத்தது

இரண்டு ஆண்டுகள் யாரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டானோ தேடி தெரிந்து அலைந்து கிடைத்த பொக்கிஷம்
அவள் ஆனால் அவளை தனதாக்கி கொள்ள மனம் வரவில்லை
அவளுடைய வார்த்தை இன்றும் பசுமரத்து ஆணி போல் மனதில் பதிய இத்தனை நேரம் இருந்த மோக வலை முற்றிலுமாக அறுந்தது

காதலா கோவமா வலியா என்று இனம் விளக்க முடியா உணர்வு அவனை வியாபித்து இருந்தது

அவள் விக்ரமிடம் பேசுவதை பார்த்து அத்தனை ஆத்திரம் வந்தது இப்போதே சென்று அவளை துவம்சம் செய்தால் என்ன இல்லை விக்ரமை குமுறி விட்டால் என்ன என்று தோன்ற

ரெண்டு வருஷம் ஆச்சு எங்கிட்ட பேச வாய் வரல இவன் கிட்ட உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கா திமிரு திமிரு ஒடம்பு பூரா திமிரு என்று புகைய

அவன் மனசாட்சி டேய் அஜய் அவ தான மொதல்ல வந்து உன்கிட்ட பேசினா நீ வாயைத்திறந்து பேசறதுக்கு என்ன என்று கேற்க

நா பேசலைனா அவ திரும்பி வந்து என்கிட்டே பேச மாட்டாளா

சேரி விடு இப்போ மறைஞ்சு நின்னு சைட் அடிக்கிறியே அப்போ உன் எதிர்ல தான இருந்தா அவ முகத்தை கூட பாக்கல பெரிய இவன் மாதிரி மூஞ்சிய திருப்பிட்டு போன இப்ப வந்து என்ன பாக்கல என் கூட பேசலன்னு சின்ன புள்ள மாதிரி குற்ற பத்திரிக்கை தாக்கல் செஞ்சிட்டு

என்ன டா சொல்லிகாட்டுறியா
நீ செஞ்சதை சொன்ன உனக்கு பொத்து கிட்டு வருதா இதை தான நீ அவகிட்ட செஞ்ச அவ மனசு என்ன பாடு படும்

பாக்காம இருக்கற வரைக்கும் கண்ணம்மா செல்லமா பொன்னம்மா முனியம்மான்னு சொல்ல வேண்டியது வந்தா பெரிய மொரப்பு வெறுப்பு காட்டறது

என்று அவன் மனசாட்சி அவனை கிழிக்க
ஏண்டா நீயே என்ன இப்டி அசிங்க படுத்துனா ஊர்ல இருக்கவன் என்ன எப்படி டா மதிப்பான்

என் பொண்டாட்டி இணைக்கு அடிப்பன் நாளைக்கு அணைச்சுக்குவேன் உனக்கு என்ன வந்துச்சு நீ பேசாம உள்ள போ என்று துரத்த
இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல போடா நீயும் உன் வீணா போன காதலும்னு மசாட்சி சென்றது

அவன் மனசாட்சியுடன் பட்டி மன்றம் நடத்திவிட்டு வர அபி அவன் தன்னை பார்த்ததை பார்த்து விட்டால்

ஐ ஐ ஐ என்று குத்தாட்டம் போட்ட மனதை கட்டுப்படுத்தி

பாவா நீங்க என்மேல கோவமா இல்லையா நீங்க இன்னும் என்ன காதலிக்குறிங்களா நானும் தான் பாவா உங்கள காதலிக்கறான் என்று மனதில் சொல்லி கொண்டால்

இந்த ரெண்டு வருசத்துல நரக வேதனை ஜெய் அது எந்த வகைளயும் உங்கள பாதிக்க கூடாதுன்னு தான் நான் பிரிஞ்சு போனேன்
திரும்பி வந்தது உங்கள பாக்கணும்னு தான் ஜெய் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும் இனி நீங்க போன்னு சொன்னாலும் உங்கள விட்டு போறதா இல்ல சாகரவரைக்கும் உங்களோட தான்


இனி உங்க காதல ஒத்துக்க வைக்கணும் அது தான் எனக்கு சவாலே என்று அவனை பார்த்து கொண்டு மனதில் கூற இம்முறை அஜயு அவளை பார்த்து விட்டான் விக்ரம் அவ்விடத்தை விட்டு அகல அஜய் சென்றான் (முழுசா நெனஞ்சாச்சு இனி முக்காடு எதுக்கு )

என்னம்மா பயங்கர சரிப்பா இருக்கு உன்னோட கணவருக்கும் சேத்தி நீயே பேசிட்டே ஹர்ஷ பாவம் அவரு என்று மாப்பிளைக்கு பரிந்து கொண்டு பேச பேச்சு மட்டும் தான் ஹர்ஷாவிடம் இருந்தது பார்வை முழுவதும் அபியிடம் இருக்க
சேரி அப்போ நீங்க எனக்கு கம்பெனி கொடுங்க நம்ம ரெண்டு பெரும் பேசிட்டு இருக்கலாம்
என்று அபி அஜயிடம் நேரடியான கேற்க

வாட்

ஹர்ஷ அபியா இது என்று வாய் பிளந்து பார்க்க அதை கேட்டும் விட்டாள்

அண்ணா அதிசயம் நா

உங்களுக்கு தெரியும் இல்ல அண்ணா நா ஹைதெராபாத் ல
இருந்தது அப்போ இவளுக்கு செம கிரேஸ்
இந்த சாமியார் யாரையும் பாகாது அண்ணா அவ்ளோ ஏன் பேச கூட மாட்டா என்று கூற

அஜய் சிறகில்லாமலையே வானில் பறந்தான் அப்பாடா என் செல்லம் யாரையும் பாக்கல என்று அவளை மனதில் கொஞ்சியவன் மூஞ்சியில் எதையும் காட்டவில்லை
ஆனால் ஹர்ஷ சொன்னவுடன் அவன் கண்ணில் தோன்றிய மின்னலையும் உதட்டில் தோன்றிய புன்னகையையும் அபி கண்டு கொண்டால்

அதை கண்டுவிட்ட ஜெயின் கண்களும் ஒரு நொடி சந்தித்து மீண்டது
இருவரின் பார்வையும் பின்னி கொள்ள அவன் பார்த்த பார்வையில் அவள் முகம் சிவந்துவிட்டது

இரண்டு வருடங்கள் அவள் இதற்க்காக தானே ஏங்கியது

ஒரு வழியாக அனைவரும் உணவருந்த செல்ல விக்ரம் அபி அஜய் மூவரும் செல்ல அஜய் ஒரு இருக்கய் விட்டு அமர அவன் அருகில் விக்ரம் அமர்ந்தான்

விக்ரம் அபியை தன் அருகில் அமரவைக்கலாம் அஜய் இவளுக்கு முற்றிலும் புதியவன் எப்படியும் அவள் அவன் அருகில் அமர மாட்டாள் என்று அவசரமாக அஜய் அருகில் உட்க்கார அபியோ அஜய் அருகில் சென்று அமர்ந்து கொண்டால்

விக்ரம் ஆஹ் என்று விழிக்க அஜய் சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டான் இப்போது அபி விக்ரம் இருவருக்கும் இடையில் அஜய் அமர்ந்திருந்தான் அபி மகிழ்ச்சியாக உணர நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு தன்னவனின் அருகாமை தந்த இதத்தில் மூழ்கி மெதுவாக சாப்பிட்டு கொண்டிருந்தாள் அஜய்க்கு மனது ஜிவ்வென்று இருக்க அவனும் அந்த அருகாமையை ரசித்தான் ஆனால் இருவருக்குமிடையில் எந்த பேச்சும் இல்லை

ஒரு வழியாக மூவரும் இரவு உணவை முடித்தனர் அபி அவள் உறவினரிடம் பேசிக்கொண்டிருக்க அஜயிடம் விக்ரம் டேய் அஜய் உன்கிட்ட ஒரு விசியம் சொல்லணும் டா என்று கூற

அஜய்கு மனதில் பக்கென்று இருந்தது இவன் என்ன சொல்ல வரான்

அபியை பத்தி ஏதாவது பேசுனான்னா கடவுளே விக்ரம் ஓட உயிரை எங்கிட்ட இருந்து காப்பாத்து என்று மனதார வேண்டடிக்கொண்டான்

( ஹலோ பாஸ் நீங்க இன்னும் கோவமா தான் இருக்கீங்க பேச மாட்டானாமே பாக்க மாட்டானாமே அனா அவளையும் யாரும் பாக்க கூடாதம்மா தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் கொக்காளி வெட்டி புட்டு ஜெயிலுக்கு போகணும் டா உன்னைய )
சேரி விதி வலியது ஆடு தானாவந்து தலையை குடுக்குது

அஜய் எனக்கு அபியை ரொம்ப புடிச்சிருக்கு டா அபிகிட்டே என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு கேக்க பயமா இருக்கு டா நீ தா எனக்காக அவ கிட்ட பொய் பேசணும் நா என்ன பேசுனாலும் பிடி குடுக்க மாட்டிங்கறா டா ரொம்ப டெர்ரர் ஆஹ் இருக்கா இந்த ரெண்டு வருசமா தான் டா தெரியும் அவங்க அம்மா எங்க அப்பாவோட தங்கச்சி டா இந்த அப்பா லூசு மாதிரி இவ்ளோ நாள் பிரிஞ்சு இருந்து நேரத்தை வீண் பண்ணிட்டாரு டா

இம் இல்லனா கல்ட்டிருப்ப போடா என்று அஜய் மனதில் வசைபாடிக்கொண்டிருக்க

விக்ரம்

அஜய் அவன் உன் கூட நல்ல பேசறா டா நீ தான் எனக்காக அவகிட்ட பொய் பேசணும் நா அவளை கல்யாணம் பண்ண ஆசைப்படறான்னு சொல்லி அவகிட்ட சம்மதம் வாங்கி தரணும் டா என்று கூற

அஜயின் முகம் இறுகியது

அஜயின் அதிரடி ஆரம்பம்


மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்

நரகத் துழலுவதோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top