uyirai tholaithaen UD12

Advertisement

preethi sri

Well-Known Member
hi makka likes and comments potta anaivarukkum nandri indha padhivukkum ungal karuthugalai pagirungal

கோகிலாவிற்கு தான் கொண்ட கவலை தேவையற்றது என்று தோன்றியது விஸ்வநாதனுக்கு சொல்ல வேன்டாம் பெண் பிள்ளை இல்லை என்ற கவலை தீர்ந்தது என்று எண்ணி கொண்டார் பின் அம்மாவும் மகனும் கூட்டு சேர்ந்து எத்தனை முறை அவரை கலங்கடித்திருப்பார்கள் தனக்காக பரிந்து பேச ஒரு ஜீவன் கூட இல்லையே என்ற வருத்தம் அவருக்கும் இருக்க தான் செய்தது இப்போது மருமகளை பார்த்த பின்பு அந்த கவலை முற்றிலுமாக அகன்றது

அஜய் அவளை வேறெங்கோ அழைத்து செல்வான் என்று நினைத்திருந்த அபி அவன் தன்னை அவன் பெற்றோரை பார்க்க அழைத்து வந்தது சற்று நிம்மதியாக இருந்தது தனக்காக புது சொந்தங்களை அவன் உருவாக்கி தந்ததாக தோன்றியது

இதற்கும் அவர்கள் இன்னும் அவளை ஏற்று கொண்டார்களா இல்லையா என்று கூட அவளுக்கு தெரியவில்லை இருப்பின் திட்டுவதற்காவது தனக்கு யாரேனும் இருக்கிறார்களே என்று மனது நினைத்தது


அம்மா என்று அஜய் ஆரம்பிக்க .....

டேய் இருடா மொதல்ல என்னோட மருமக கிட்ட பேசிட்டு வர்றன் எங்க ரெண்டு பேருக்கும் வாய் இருக்கு நீ ஒன்னு mediator வேல பாக்காத என்று கூற இப்போது விழிப்பது அஜய் முறை ஆயிற்று

அப்பா என்று அவன் மீண்டும் அவரை பார்க்க

அம்மா அபி இவனும் இவங்க அம்மாவும் சேர்ந்து என்ன பாடு படுத்துவாங்க மா எனக்கு பொண்ணு இருந்த எனக்கு சப்போர்ட் பண்ணுவான்னு நா எவ்ளோ நாள் நெனச்சிருக்கன் தெரியுமா இனிமே நீயும் நானும் ஒரு டீம்

வாடா என்று அவர் புன்னகை முகமாக கூற

ஆழுதான் வளந்து இருக்கீங்க கொஞ்சம் கூட டாப்ல ஒன்னும் இல்ல விட்டுக்கு முதல் முறைய புள்ள வந்து இருக்கு அதுக்குள்ள பஞ்சாயத்து பண்ணி எங்க ரெண்டு பேரையும் பிரிக்க பாக்குறீங்களா என்று எகிற

அம்மாடி பாத்தியா உன் முன்னாடியே என்ன எப்படி மெரட்டுரான்னு என்று அவர் மருமக்களிடம் புகார் வாசிக்க

அட பாவிங்களா இவ்ளோ நேரம் என்ன ஏதோ கொலை குத்தம் பண்ணவன் மாதிரி கேள்விக்கேட்டுட்டு இப்போ நா ஒருத்தன் இங்க இருக்கறது கூட தெரியாம என்னமா கொஞ்சி குலாவிக்குதுங்க என்ன பாத்தா எப்படி தெரியுது இவங்களுக்கு

இந்த அப்பாவை கூட ஒரு வகையில எடுக்கலாம் என மனுஷன் அம்மா முன்னாடி வாயே திறக்க மாட்டாரு மொத்தத்துக்கும் இந்த அம்மாவே பேசிடும் இப்போ ஏதோ புது தைரியம் வந்த மாதிரி குற்ற பத்திரிக்க எல்லாம் தாக்கல் பன்றாரு மனுஷன் மூஞ்சியே கொஞ்சம் பிரகாசமா ஆயிடிச்சு பாவோம் வும குத்தா வாங்கிருப்பாரு போல

அய்யய்யோ அஜய் அப்போ கல்யாணம் பண்ண நீயும் இப்டி தானோ என்று மனதில் அலற

அபியோ அம்மா என்று அவரை கண்கள் கலங்க அணைத்து கொண்டால்

வேணாம் டா எந்த பெத்தவங்களுக்கும் புள்ளைங்க கண்ணு கலங்குண தாங்காது கண்ணு போதும் அஜய் எல்லாத்தியும் சொன்ன இனிமே சந்தோஷம் மட்டும் தான் உன் வாழ்க்கையில் நெறஞ்சு இருக்கனும் புள்ள குட்டிங்களோட நெறஞ்ச வாழ்கை நீ வாழனும் மா அது தான் நீ எங்களுக்க தர்ற சந்தோஷம்

மறந்தும் கூட இறந்த அவளது பெற்றோரை பற்றி அவர் கேற்கவில்லை மேலும் அதை நியாபக படுத்தி காயத்தை குத்தி கிளற அவர்கள் விரும்பவில்லை இதை அபியும் உணர்ந்தே இருந்தால்

அஜய் நடப்பது கனவா இல்லை நினைவா என்ற சந்தேகத்தில் மூழ்கி இருக்க அதில் இருந்து அவன் சந்தேகத்தை வெளி கொணரும் பொருட்டு விசுவநாதன் அவன் தோள் தட்டி டேய் மகனே பரவால டா உங்க அம்மா உனக்கு பொண்ணு பாக்கறன்னு அரமிச்சா எங்க அவ அண்ணன் பெண்ணையோ இல்ல தம்பி பெண்ணையோ கூட்டிட்டு வந்துருவாளோ நீயும் என்ன மாதிரி ஆயிடிவியோன்னு என் மனசுல ஒரு கவலை இருந்துச்சு அத போக்கடிச்சுட்ட டா என்று பொய்யாக கண்ணீரை துடைத்துவிட


என்ன டா அங்க என்ன சத்தோம் என்று கோகிலா குரல் கொடுக்க

விஸ்வநாதன் சும்மா பேசிகிட்டு இருக்கோம் மா என்று வடிவேலு பாணியில் கூற அங்கு சிரிப்பலை கிளம்பியது

என்னதான் விஸ்வநாதன் வெளியில் தொழில் காந்தமாக (அது தாங்க பிசினஸ் மெக்னெட்) இருந்தாலும் வீட்டில் மகனுக்கு தந்தையாக மகனுக்கு காதல் கணவராக மட்டுமே இருப்பார்

அவர் மனைவி மீது அவர் வைத்திருந்த காதல் அவரை அவர் முன் மண்டியிட செய்தது

அஜய் பல சமயங்களில் பொறாமை கொண்டுள்ளான்

ஒரு வயசு பையன் இங்க இருக்கும் போது பெருசுங்க என்னமா கொஞ்சிகிதுங்க என்று அவன் காதில் புகை வருவதை பார்த்து விஸ்வநாதன் உனக்கு ஏன் டா பொறாமை


என் பொண்டாட்டி நான் கொஞ்சறன் நீயும் கல்யாணம் பண்ணி உன்னோட மனைவிய கொஞ்சு யார் வேண்டான்ற என்று அவனை வாருவார்

கோகிலா அப்பாவும் பையனும் மாதிரியா பேசுறீங்க அவன் தான் வயசு பையன் உங்களுக்கு அறிவு வேண்டாம்

அட யாரு டி இவ

எவ என்று கோகிலா முறுக்க

அடியேய் நீ நெனைக்கற மாதிரி ஒன்னும் இல்ல டி

நா என்ன நெனச்சன்னு உங்களுக்கு எப்படி தெரியும்

அப்பா உங்கள அந்த வினோதினி யோட அம்மா கேட்டாங்க மறக்காம பேசிடுங்க என்று சத்தம் இல்லாமல் ஒரு குண்டை போட்டுவிட அட சண்டாள

என் வாழ்க்கைக்கே ஒள வெச்சுட்டியேடா என்று அவனை பார்க்க

வெறு பேத்துறிங்க........

இப்போ நல்லா அனுபவிங்க என்று நக்கல் சிரிப்புடன் நின்றிருந்தான்....

கோக்கி அவன் உன்ன உசுப்பி விடுறான் டி எனக்கு அப்டி யாரையும் தெரியாது என்ன நம்பு என்று அவர் பாவமாக பார்க்க

என்னடா என் புருஷன பத்தி எங்கிட்ட கம்பிளைன்ட் பண்றியா படவா

என்று அவன் காதை புடித்து திருக அம்மா வலிக்குது விடுங்க என்று அவன் அலறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓட

கோக்கி நா ஸ்ரீ ராமன் டி உன்ன தவற வேற எந்த பொன்னையும் நா பார்த்ததில்லை என்ன நம்பு டி என்று கூற

ஏன் விச்சு உங்கள பத்தி எனக்கு தெரியாதா அவன் சொல்லி தான் என் புருஷன பத்தி நா தெரிஞ்சுக்கணும்னு இல்ல

எனக்கு எப்பவும் உங்க மேல சந்தேகம் வராது என்று கூற அவர் மனைவியின் காதல் இன்னும் அவரை அவர் பால் ஈர்த்தது

தேங்க்ஸ் டி என்று அவரை தோளோடு சேர்த்து அணைத்து கொள்ள

விச்சு உங்களுக்கு என்ன இளமை திரும்புதுன்னு நினைப்பா

கைய எடுங்க என்று முகம் சிவந்து கூற எத்தனை வயதானாலும் சிறு பெண் போல இருக்கும் அவர் மனைவியின் அழகு அவரை பெரிதும் கவர்ந்தது

போடி என்கிட்டே உன் பையனே போட்டிக்கு வர மாட்டான் நாளைக்கு அவனுக்கு கல்யாணம் ஆனாலும் ந என் பொண்டாட்டி கிட்ட இப்டி தன் இருப்பான் அவ்ளோ ஏன்

அவன் பையனுக்கு கல்யாணம் ஆனாலும் இப்டி தான் அவங்க கூட நம்ம காம்படிஷன் போடணும் கோக்கி என்று மீசையை முறுக்கி விட்டு கொண்டு கூற போ விச்சு என்று அவர் தோளில் இதமாக சாய்ந்து கொண்டார்

அஜய்கு இப்போதும் தன் தந்தையின் காதலை எண்ணி வியக்காமல் இருக்க முடிய வில்லை

இம்ம் ......

இவங்கள மாதிரி நம்ம காதலிக்கனும் என்று மனதில் நினைத்து கொண்டு அபியை பார்க்க அவளோ கர்மமே கண்ணாக ஒரு புறம் விசுவநாதன் மற்றொரு புறம் கோக்கி நடுவில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தாள்

அஜயும் அவர்களுடன் இனைந்து கொண்டான்

கோகிலா அபியை பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கு ஏத்த சொல்லி அவளுக்கு குங்குமம் வைத்து விட்டார் அஜயும் அபியும் சேர்ந்து அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்

பின் காலை உணவை நால்வரும் அமர்ந்து உண்டனர்

அப்போது அபிக்கு தன் பெற்றோருடன் அமர்ந்து உண்டது நினைவுக்கு வர கண் கலங்கியது

அதை கண்ட கோகிலா சூழ்நிலையை சரி செய்யும் பொருட்டு ஏன்மா அபி என் சமையல் என்ன அவ்ளோ மோசமாவா இருக்கு இப்டி கண் கலங்குறியேமா என்று கூற


இவ்ளோ நாள் நாங்க ரெண்டு பெரும் தான் இந்த கொடுமையை அனுபவிச்சோம்என்று தன் மனையின் கண்களை பார்த்து பணித்து விட்டு கூற (இல்லன்னா யாரு பாட்டு வாங்கறது )

இப்ப நீயும் நம்ம கங்க மெம்பெர் மா யான் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகமும் என்று குறி அஜயிடம் ஹை பைவ் கொடுக்க அங்கே சிரிப்பலை கிளம்பியது

அப்பா என்று அபி முறைக்க

இவங்க பொய் சொல்ராங்க மா சமையல் சூப்பர் இனி ஒரு வாரத்துக்கு இவங்க ரெண்டு பேரையும் சமைக்க சொல்லுங்க என்று அவள் தன் அத்தைக்கு சப்போர்ட் செய்ய

அப்பா இப்பவே இங்க பொண்ணுங்க ராஜ்யம் ஆரம்பிச்சிருச்சு இனிமே நம்மள மனுஷங்களாக கூட மதிக்க மாட்டாங்களே என்று கலாய்க்க விசுவநாதன் சாப்பிடும் ஆர்வத்தில் என்னடா திடீர்ன்னு மிதிக்கறது பத்தி பேசற அது கல்யாணம் ஆனப்புறம் தாண்டா இப்பவே அடிக்கமாட்டாங்க என்று அவரும் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன் படுத்தி கொண்டார்

நீண்ட நாட்களுக்கு பிறகு அவ்வீட்டில் சிரிப்பொலி கேட்டது அயராத பணி காரணமாக இருவரும் காலையில் வேகமாக அலுவலகம் கெளம்பி விடுவார்கள் கடைசியில் தனியாக அமர்ந்து உண்பது கோகிலா தான் அதனால் இந்த சூழ்நிலை கோகிலாவிற்கு மிகவும் பிடித்து விட்டது இப்படியாக சாப்பிட்டு விட்டு எழுந்தனர்

அம்மா அப்பா என் மனசுல ஒரு விஷயம் ஓடிட்டு இருக்கு

என்னடா என்று கோகிலா கேற்க

அம்மா அஜிக்கு நிச்சயம் ஒரு மாற்றம் வேண்டுமா

அவளால இன்னும் எதுலயும் செரியா கவனம் செலுத்த முடியல இங்க அவங்க வீட்ல இருந்த அந்த நினைப்ப விட்டு அவ வெளியில வர மாட்டா

அப்பா உங்காளுக்கு தெரியும் இல்ல சென்னை ல நம் கிளை இருக்கு இப்போ அங்க சி எஸ் பொஸ்ட் காலியா தான பா இருக்கு ஏன் நம்ம அஜிய சென்னைல கொஞ்ச நாள் இருக்க சொல்லலாமே நானும் இனி கொஞ்ச நாள் சென்னைல தான் பா இருக்க வேண்டியிருக்கு என்று கூற

விஸ்வநாதன் மனதில் மகன் எங்கு வருகிறான் என்பது புரிய சரி பய ஆசை படறான்

இன்னும் என்னென்ன சொல்றான்னு பார்க்கலாம் என்று அமைதி காத்தார்

கோகிலா என் கிட்டயே பிட்டு போடறியே மகனே என்று நினைத்து கொண்டார்

அஜய் மேலும் இங்க இருக்கற கிளையை விக்ரம் பாத்துக்கறான் சோ ஒரு மாற்றம் இருந்தா நல்லா இருக்கும் தோணுது

அவளுக்கும் இதை மறக்க ஒரு வாய்ப்பா இருக்கும் இல்லையா என்று கூற


அவன் சொல்வதும் ஒரு விதத்தில் சரி தான் என்று தோன்ற இருவரும் ஒப்பு கொண்டனர்


அஸ் யுவர் விஷ அஜய் உனக்கு செறினு பட்டதை செய் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல ஆனா monthly ஒன்ஸ் அபியை காட்டிடடு என்று ராகம் பாடினார்கள்


அஜிக்கு இது மகிழ்ச்சியை தான் தந்தது

அவளும் சரி என்று ஒப்புக்கொண்டால்

அம்மா அப்பா நானும் அஜியும் வெளிய போட்டு வர்றோம்மா என்றான் அப்போது தான் கோகிலா டேய் அஜய் வரும்போது அபியோட டிரஸ் ஐ பேக் பண்ணி எடுத்துட்டு வா பாவம் புள்ள அங்க தனியா இருக்க வேண்டாம் என்று அக்கறைப்படும் தாயை பார்க்கையில் அவன் கர்வம் கொண்டான் (அபி ரொம்ப குடுத்து வெச்ச பொன்னுமா இப்டி ஒரு பீஸ் கிட்ட வந்து மாட்டி இருக்கியே என்னமோ போடா )




































 

Saroja

Well-Known Member
அவன் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டது
கலகலப்பாக. பழகுவது
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top