UVVP 01

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
UVVP 01


அழகான, ரம்யமான... விடிகாலை... சின்ன குயில் சித்ராவின் "சிறகில்லை நான் கிளியில்லை .. அட வானம் ஒன்றும் தொலைவில்லை " பாட்டு தேனாய் காதினுள் நுழைய..(அலாரம்) .. கண் விழித்தாள் மாயா .... அருகில் படுத்துறங்கும் மக்கள் முகம் கண்டு....மனம் நிறைய ..வாஞ்சையுடன் முத்தமிட்டாள்....

"ஸ்ருதிம்மா, கீர்த்தி குட்டி எழுந்துக்கோங்க ", "அப்பாவோட யோகா பண்ண ரெடி ஆகுங்க... வாங்கடா செல்லம்ஸ்..." , கொஞ்சலாய் எழுப்ப....

".ம்ம் .. இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ் ...", என்றது மட்டுமல்லாமல்... இடையோடு சேர்த்து இழுத்து அனைத்தது , மக்கள் அல்ல மணாளன்.....

"பசங்க இருக்காங்க, கொஞ்சமாவது இருக்கா உங்களுக்கு?", பல்லை கடித்தபடியே கிசுகிசுத்தாள்.... சட்டையே செய்யாது, "ஏண்டீ படுத்தற? 5 வயசு LKG பசங்களுக்கு எதுக்குடி யோகா-ல்லாம்?" , வழக்கம் போல அவன் பல்லவியை பாட, "மாம்ஸ்... இப்போலேர்ந்தே பழக்கினாத்தான்... மனசும் உடம்பும் கண்ட்ரோலா இருக்கும்", என்றபடி எழுந்தவள்,

"இன்னும் 5 நிமிஷத்துல பசங்களையும் கூட்டிட்டு போயி யோகா ஆரம்பிக்கிறீங்க , இல்ல breakfast உப்புமா தான்.... " கண்டிப்புடன் கூறி செல்ல..... மாயா, ஷிவவாசன் வீட்டின் காலை இனிதே துவக்கம்....

ஒரு மணி நேரம் கழித்து டைனிங் ரூமிற்க்கு வந்த மூவருக்கும்... துருவிய எலுமிச்சை, ஒரு தேக்கரண்டி தேன் கலந்த வெதுவெதுப்பான பானம் காத்திருக்க.....ஸ்ருதி, கீர்த்திவாசன் முகம் அஷ்டகோணலாகியது.....
"ப்பா , இது வேணாம்பா.....", ஸ்ருதி ஆரம்பிக்க...."சமத்து டாடி-ல்ல , மீ கிட்ட சொல்லுங்க ", கீர்த்தி முடிக்க....

இவர்கள் சம்பாஷணையை கேட்டுக்கொண்டே வந்த மாயா .... சற்றே முறைக்க.....பாதி கோப்பை காலியாகியது.... "கீரை கடைஞ்சிடட்டுமா, மாயா மா?", சமையலறையில் இருந்து வந்த சொர்ணத்தம்மாள்(cook )....கேள்வி துரத்த உள்ளே சென்றாள் ...

சட்டென, பிள்ளைகள் இருவரும்... மீதமிருந்த அவர்கள் பங்கு எலுமிச்சை ஜூஸ்-ஐ ஷிவாவின் கப்பில் ஊற்றி, கூடவே கன்னத்தில் முத்தமும் இட்டு ..குளித்து பள்ளிக்கு தயாராக ..ஓடி செல்ல.... இருவரையும் எதுவும் சொல்ல முடியாமல் சிரித்துக்கொண்டே குடித்து முடித்தான்.... ஷிவவாசன்....

சமயலறைக்குள் சென்றவன்... "இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்.. உனக்கு?", என்க, தலை நிமிராமல்...மினி இட்லி-யை ஆப்பிள் shape தட்டில் வைத்து....சட்னி ஒரு பக்கமாய் வைத்து, சாம்பாரை இட்லி தலையில் விட்டவள்., "ம்ம்.. ஆபீஸ் போறேன்., என்ன விஷயம், சொல்லுங்க", பேசிக்கொண்டே.. இரண்டு தட்டுகளில் ஒன்றை . அவன் கையில் கொடுத்து டைனிங் ரூமிற்கு நடந்தாள் .... மனைவியின் பின்னோடே வந்தவன்... வழமை போல்... ஒரு பிள்ளைக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்....

"அப்பா பாக்கணும் னு சொன்னாங்க....",
மாயா .. கீர்த்திக்கு ஊட்டுவதை நிறுத்தி... கேள்வியாய் பார்த்து நிமிர்ந்தாள் “ம்ம்... நாலு மணிக்கு வர்றேன்....", பதிலுரைத்தவள்.... ,

"கீர்த்தி கீழ சிந்தாம சாப்பிட பழகு கண்ணா" , என்றாள் ... மகனிடமும் ஒரு கண்ணை வைத்தவளாய்....

அரைமணி நேரம் மின்னலாய் கரைய..., "பை .. குட்லக் குட்டிஸ்", முத்தத்துடன், பிள்ளைகளை பள்ளியில் விட்டு அலுவலகம் செல்ல தயாராய் நின்ற ஷிவாவின் காரில்.. அனுப்பி வைத்தாள்...

மற்றுமொரு அரைமணியில் இவள் தயாராகி..... அலுவலக வாயிலில் நின்றபோது... மணி சரியாக பத்து .. "A .L . Publications பிரைவேட் லிமிடெட்", பித்தளை பலகை வரவேற்க....உள்ளே நுழைந்து, good morning - கு தலை அசைத்து....அவளின் பிரத்யேக அறைக்கு சென்றவள்... P.A- வைதேகியை அழைத்தாள்....

அவர்கள் பேசும் முன், மாயாவை பற்றி : சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தவள், அம்மா வழி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவள். சொந்த தாய் மாமனின் மகனான ஷிவவாசன் இவளது கணவன், பாட்டி மரண வாசலில் இருக்க, கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே.. இவர்கள் திருமணம், சிவாவின் அன்னையின் சம்மதமில்லாமல் நடந்தது. பரம்பரை சொத்து பிரிப்பதில் வந்த மனத்தாங்கல் இன்றுவரை அவரிடத்தில்(ஷிவவாசனின் தாய்) உண்டு. வழமையான மாமியாரின் அதிகார போட்டி.. மாயாவோ இவற்றை சட்டை செய்யாத ரகம். வம்புகளுக்கு போவதில்லை, எனினும் அவளிடத்து பிரச்சனை செய்தால், சும்மா விடும் ஆளும் இல்லை...

தற்போதைய மாயா.... A.L. பப்ளிகேஷன்ஸ்-ன் Managing Director. & chief executive officer, கணவன் மற்றும் பரம்பரை சொத்துகள் இவள் பங்கு இருக்கும் இன்னும் சில நிறுவனத்தின் இயக்குனர். மொத்தத்தில் நிற்க நேரமில்லாது .இந்திய பொருளாதாரத்தை தன்னாலான வரை முன்னேற்றிக்கொண்டு இருப்பவள்.

கணவன் ஷிவவாசன் தொழிலதிபர், சில வெளிநாடுகளிலும் இவர்களின் நிறுவனத்தை நிறுவி உலகளாவிய கவனத்தை ஈர்த்தவன்.. இவளின் காதல் கணவன். கீர்த்தி ஸ்ருதி என்ற இரட்டையரின் தகப்பன்.

சின்னதாய் கதவை தட்டி வைதேகி உள்ளே வந்து, "வெரி குட் மார்னிங் மேம்", என்றாள் , சின்ன முறுவலிப்புடன் .

"யா.. ஹாப்பி மார்னிங், சொல்லுங்க வைதேகி, இன்னிக்கு என்ன schedule ?",

“ரொடீன் ஒர்க், ரவுண்ட்ஸ் அப்பறம் டூ ஓ கிளாக் மீட்டிங் க்கு அப்பாயிண்ட்மெண்ட் அந்த மினிஸ்டர்-க்கு குடுத்து இருக்கீங்க மேம்"...

"ஓஹ். ஓகே” , என்று நிறுத்தியவள் "...ஈவினிங் நாலு மணிக்கு வாசு குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் போகணும், நோட் பண்ணிக்குங்க".

"எஸ் மேம் ."

"ம்ம்...O.K..... ரகுன்னா.. லா அண்ட் ஆர்டர் டிபார்ட்மென்ட் தானே?”

"எஸ் மேம் ."

"அவருக்கு கால் பண்ணி கொடுங்க"..

ரகோத்தமன்...சுருக்கமாய் ரகு.... ஷிவாவின் நண்பன்.. Deputy Commissioner of Police, இவளுக்கு அண்ணனை போல... சில பல நடைமுறை பிரச்சனைகளை அவரின் உதவி/ஆலோசனையின் பேரில் சமாளித்த அனுபவம் உண்டு...

இவளின் பிரத்யேக தொலைபேசியிலிருந்து வரும் அழைப்பானதால்.., மறுபுறம் உடனே எடுக்கப்பட..." சொல்லும்மா.. மாயா ... எப்படி இருக்க?, என்ன பிரச்சனை?", நேரடியான....மேல் பூச்சில்லாத ரகோத்தமனின் பேச்சு...

சின்னதாய் ஒரு முறுவலை வரவழைக்க...., "As usual .. unusual , ஆனா சமாளிக்க முடியிற அளவுதான்... ", என்றவள் தொடர்ந்து, "அண்ணா..., ஒரு மினிஸ்டர் சம்பந்தப்பட்ட விஷயம்... மினிஸ்ட்டரை இன்னிக்கு பாக்க வர சொல்லிட்டேன்... அவர் மேல ஒரு சந்தேகம் இருக்கு. ஆனா... பப்ளிக்-ஆ வெளில இப்போ சொல்ல முடியாது . அவர் மேல வேற கேஸ் ஏதாவது இருக்கான்னு தெரியணும்... ",

"யார் அந்த உட்பி எக்ஸ் மினிஸ்டர் ? ..." என்றார் சிரிப்பினூடே.... காரணம் , மாயா கட்டம் கட்டி விட்டாள் என்றால், யாராயிருந்தாலும், அவர் ஊழல்கள், வண்டவாளங்கள் அனைத்தும் சாட்சியங்களுடன் பொது மக்கள் பார்வைக்கு, அவளின் பத்திரிகையில் பதிவேற்றப்பட்டு விடும். அவர் பதவி பறி போவது வெகு நிச்சயம் .

மாயா அவரின் பேரை கூற...சட்டென சிரிப்பு நின்றது... "மாயா , நிஜமாவே அவர்தானா?", என...."எஸ் அண்ணா..." பதிலாக உரைத்தவள்..., ."கணேஷ் தான் மொத்த இன்வெஸ்டிகேஷன்-ம் பண்றான், இன்னும் கொஞ்சம் தெளிவான சாட்சி கிடைக்கட்டும்... அப்போ இருக்கு அவருக்கு ...."... கணேஷ் இவள் தம்பி... இதழியலை விருப்ப பாடமாய் எடுத்து, படிக்கும் போதே வேலையும் செய்து, அனுபவத்தையும் கற்றுக்கொண்டவன்.. ALP - யின் இரண்டாவது தூண். மாயா, கணேஷ் இருவரும் சேர்ந்து காணப்படுவது அபூர்வம்... ஆனால், இருவருக்குமே அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்... எப்போதும் தொடர்பிலேயே இருப்பர்...

என்றாவது இருவரும் சேர்ந்து விவாதித்தால், அடுத்த நாள், இவர்கள் பத்திரிகையான "சூரியக்கதிர்" தலையங்கம் நாட்டை உலுக்குவதாய் இருக்கும்...

"ஜாக்கிரதையா இரு, ஷிவாவை அலெர்ட்டா இருக்க சொல்லு, பசங்களுக்கு கார்ட்ஸ் [guards] போட்டுடு .... ரொம்ப சிக்கலான ஆளு", கொஞ்சம் கவலை இருந்தது அவரின் குரலில்... "ஓகே,...பை ", சொல்லி இணைப்பை துண்டித்தாள்...

வேலைகள் அணி வகுத்து வர.... அவற்றில் கவனமானாள் ... உணவு இடைவேளையை பசித்த வயிறு நினைவூட்ட... மணி பார்த்தாள் ...12.40.. இன்னும் சற்று நேரத்தில் ஷிவாவிடமிருந்து அழைப்பு வரும் என எதிர்பார்த்தவள் , தானே பேசிவிட முடிவு செய்து, அவனுக்கு அழைத்தாள்... "மாமா.. நான் கிளம்பிட்டேன்.., 15 மினிட்ஸ்ல உங்க கேபினுக்கு வர்றேன்...", என்று பேசிக்கொண்டே கிளம்பினாள்.

அலைபேசியை பார்த்தவனின் முகத்தில் யோசனை கோடுகள்.., மிகத் தீவிரமான சிந்தனையில் இருந்தால் மட்டுமே .. மாமா என்ற மாயா வின் அழைப்பு .. அவளிடமிருந்து வரும்.. இதை திருமணமான இந்த 5 வருடங்களில் புரிந்திருந்தான். சற்று நேரத்தில், இவன் எண்ணத்தின் நாயகியே அங்கே காட்சி தர, "ஹாய் ", என்றான்...

புன்முறுவலுடன், அவரவர் கேரியரை பிரிக்க .. "சாப்பிடலாமா?", எனவும், அதிக பேச்சில்லாது சாப்பாட்டில் கவனம் வைத்தனர் இருவரும்...

"மாமா என்ன விஷயமா கூப்டிருக்காரு?" , மாயா வினவ...

சற்று கவனத்துடன் வார்த்தையை கோர்த்தெடுத்தான் "வந்து பேசு , என்ன கேட்டா, எனக்கு எப்படி தெரியும் ?"

" ஓகே வர்றேன், எனக்கென்ன பயமா?, டைரக்டர் மீட்டா?, இல்ல மாமாவும் நீங்களும் மட்டும் தானா?"

"உங்க மாமனாரும் நீயும் மட்டும் தான்", என்று கூறி , "நான் ஒரகடம் போறேன்" , தொடர்ந்தவன்..."பாத்துப்ப இல்ல?",

" ஏன் நான் manage பண்ண முடியாத மாதிரி ஏதாவது பேச போறாரா?"

"ம்ச் ... எதுக்கெடுத்தாலும் ஏடாகூடமா யோசிக்க கூடாது..., போய் பேசு, நிதானமா பேசு...".. ஷிவாவிற்கே தெரியும். ஐந்து வருடம் முன்பிருந்த மாயா இல்லை இவள்... எதையும் தீர ஆய்ந்து பேச, தீர்க்கமாய் பேச, கற்றிருந்தாள் .. எதிராளியின் பேச்சை கவனித்தாலும், அவன் பேசுவதில்.. உடல் மொழியில்... வரிகளுக்கு இடையில் உள்ள அர்த்தமும் கண்டு பிடிப்பதில் தேர்ந்தவள்.....

" எதுக்கும் அவர் டேபிள் ல இருக்கிற பேப்பர் வெய்ட் எல்லாத்தயும் எடுத்துட சொல்லு...", என்றால் சிரித்துக்கொண்டே... ஷிவாவும் அச்சிரிப்பில் சேர்ந்து "ப்பா... என்னா அடி , இப்போ நினைச்சாலும் வலிக்குதுடீ ", என்றான் கன்னத்தை பிடித்தவாறே...காரணம் திருமனத்திற்கு சம்மதிக்க வைக்க அவளை ஷிவா படுத்த.. இவன் தொல்லை தாங்க இயலாமல், அலுவலகத்திற்கே வந்து அனைவரின் கண் எதிரிலும் அடித்தவள். சிறு வயதில் மாயாவிற்கு வாய் மொழியை விட கை-யே அதிகம் பேசும். கையில் கிடைத்ததை தூக்கி வீசும் அளவு கோபம் கண்களை மறைக்கும்.

"அந்த பயம் இருக்கும் போது ஏன் கட்டிக்கிட்டீங்க?", சிறிதாய் தலை சாய்த்து சிரித்து மாயா.. கேட்க .. அவள் அழகில் இவன் இதயம் லயம் தப்பியது.... அவளருகில் வந்து.."எனக்கு இந்த ராட்சஷி தான்-னு ஆண்டவன் தலைல எழுதிட்டாரே ", வாய் ஒரு மொழி சொல்ல, கை வேறு பேசியது....

அவனை தடுத்தவள்... "வேலை இருக்கு, நான் கிளம்பனும்", என்று கடிவாளமிட்டாள்.

"ஜஸ்ட் எ ஹக் டா ", அவன் குரலில் வழிந்த தாபத்தில்.. விருப்பத்துடனே கட்டுண்டாள்..
-----------------------------------------------------------------------------------------------
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்

மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top