Saththamindri Muththamidu 10

Advertisement

mathibala

Well-Known Member
Likes podurathuke naaku thalluthu avlo neram suthuthu malli mam ...ithula enna kodumaina site open aagi neenga UD kuduthu irukkenga nu therinja piragu namakku munadi ulagil ulla athanai unavaiyum vachitu kai katti vittu saapida koodathunu sonna evlo pressure yerumo avlo pressure yeruthu UD pathutu athu open aagama suthikite irukurapo .. intha manasu illa manasu athu close pannitu thoongu early morning open aagum padi nu sonna kekuthu.. udane intha kai illa kai athu adangama mobile laiye nonduthu.... mobile veraiya so veryyyyyy chlow ... Me romba paavam... intha first page la comments poduravanga mela nijamave poramaiya irukum ....ivainga ellam ethula open panrainga nu namma veetuku pakathu veetla irundha naamalum udane poi padikalamenu thonuthu avlo kadupa varuthu.....

Ennamo ponga malli mam ....

Romba polambitaen choooo chorry ...
 
Suvitha

Well-Known Member
மல்லி நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்.....
அவளை உணர்கிறான்....உடல் அளவில் ...
அவளுக்கே அறிய முடியாத உடல் மாற்றத்தை உணர்ந்துகொள்கிறான்..
உடல் அளவு உணர்வு மட்டும் தான்....

சந்தோஷமில்லாத திருமண வாழ்வு என்று
அப்பாவிற்காக நடித்தாலும்,உண்மையில்
இந்த 13 வருடங்களாக சந்தோஷமான, நிம்மதியான
குடும்ப வாழ்வே அவனுக்கு ......அதையும் அவன்
அனுபவித்து வாழ்ந்திருக்கிறான்...

அதே சந்தோஷமான வாழ்வை அவள் வாழ்ந்தாளா....?
அவனின் மனைவி என்ற உரிமை கிடையாது....
மருமகள் என்ற மரியாதை தரப்படவில்லை...
மேகநாதனை தவிர மற்ற குடும்பத்தினரால்
அவளுக்கு கிடைத்தது அவமானங்களும்
கேவலமான பேச்சுக்கள் மட்டுமே.....
அவளின் பெற்றவர்களும் கேவலப்படுத்த பட்டனர்
அவளின் வெளிப்படுத்தப் படாத ஏக்கங்களுக்கும்
வலிகளுக்ககும்,காயங்களுக்குமான பதில் என்ன...?
இல்லை மிச்சம் மீதி இருந்த மான,ரோஷத்தையும்
விட்டு விட்டு வந்ததால், அவைகளும்
மறக்கப் பட வேண்டுமா.....?

ஏன் மல்லி ,துளசியை இப்படி ஓரு நிலையில்
வைத்து இருக்கீங்க....?..
நிஜமாகவே அவள் வாழ்வு வண்ணமயமாகி விட்டதா....?

எல்லாமே சரியானது போல் ஓரு தோற்றம்....
ஆனால் எதுவுமே சரியாகவில்லை.....
Convincing ஆ இல்லை.....மல்லி....
இந்த எபியை படித்ததும் ஒரு ஏமாற்ற
உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை....
வித்தியாசமான ....பார்வை சகோதரி.
 
Suvitha

Well-Known Member
Likes podurathuke naaku thalluthu avlo neram suthuthu malli mam ...ithula enna kodumaina site open aagi neenga UD kuduthu irukkenga nu therinja piragu namakku munadi ulagil ulla athanai unavaiyum vachitu kai katti vittu saapida koodathunu sonna evlo pressure yerumo avlo pressure yeruthu UD pathutu athu open aagama suthikite irukurapo .. intha manasu illa manasu athu close pannitu thoongu early morning open aagum padi nu sonna kekuthu.. udane intha kai illa kai athu adangama mobile laiye nonduthu.... mobile veraiya so veryyyyyy chlow ... Me romba paavam... intha first page la comments poduravanga mela nijamave poramaiya irukum ....ivainga ellam ethula open panrainga nu namma veetuku pakathu veetla irundha naamalum udane poi padikalamenu thonuthu avlo kadupa varuthu.....

Ennamo ponga malli mam ....

Romba polambitaen choooo chorry ...
:D:D:D
 
Suvitha

Well-Known Member
Hi mam

திரு துளசி கொஞ்சம் மனம் விட்டு பேசிக்கொண்டு சந்தோசம்தான்,நேர் கொண்டு பார்த்து பழகியவர்கள் துளசியின் உடல்மாற்றத்தை அவதானிக்கவில்லை திரு அதனை உணர்ந்து கண்டு பிடித்தது சந்தோசம்தான்,ஏதோ ஒரு வகையில் தாலி கட்டியவளை உணர்ந்திருக்கின்றார் என்று, இப்போது இது குழந்தைதான் என்று அவ்வளவு நிட்சயமாக சொல்லி ,தனக்கு அதன் முக்கியத்துவம் தான் இப்போது அனுபவிக்கும் சந்தோசம் அதனை இப்போது தன் மனைவியிடம் (மனைவி துணைவி பெண்டாட்டி என்று எல்லாம் சொல்லலாம்,ஏனென்றால் அவர்தான் தாலிகட்டியவள் முகம் பார்த்து பேசுகின்றாரே) சொல்லி உணர்ந்து சந்தோசப்படும் இந்த திருநீர்வண்ணன் மீனாட்சியை துளசி (தாலிகட்டியவள்) வயிற்றில் வைத்திருக்கும்போது எங்கே போனார்,
தன்காதலை அழித்துவிட்டு துளசியை திருமணம் செய்து வைத்தீர்கள் அல்லவா அதனால் நான் பிடிக்காமல் வாழுகிறேன் என்று காட்டுவதற்காக,ஒரே வீட்டிலிருந்தும் ஒரு வார்த்தை பேசாமாட்டேன், மனுசியாக கூட மதிக்கமாட்டேன் என்று தன் தந்தைக்கு காட்டுவதற்காக ஏதோ உயிரற்ற பொருளை நடத்துவதுபோல கடந்த 13 வருடமாய் நடத்தி காட்டினார்,அப்போதெல்லாம் துளசியின் தவிப்பு வருத்தம் எதுவும் தெரியவில்லையோ,துளசியை நேர்கொண்டு பார்த்தால் அவருக்கு அப்படியே காதல்ரசம் சொட்டோ சொட்டென்று கொட்டுதாம்,அதனால் முகம் பார்க்கவில்லையாம்,இந்த விளக்கங்கள் எல்லாம் துளசிக்கு நியாயம் செய்யாது,துளசியே பெரிது படுத்தாத போது நாம் ஏன் பெரிது படுத்தணும், என்னவோ பண்ணுங்கள்,எனக்கு இந்தபதிவை பார்த்தபோது ஒரு பக்கம் சந்தோசமாகவும் மறுபக்கம் அளவுகடந்த ஆத்திரமாகவும் இருந்தது, துளசி நீண்ட நெடிய வருடங்களின் பின் ஒரு சாதரண பெண் எப்படி இருப்பாரோ அப்படி தன் உணர்வுகளை வெளிக்காட்டியது சந்தோசம்,குற்ற உணர்வே இல்லையா திருவுக்கு, திருவின் இந்தபேச்சைக்கேட்டு எனக்கு அவ்வளவு கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது,இப்போதாவது ஞானம் பிறந்து மனைவியை கொண்டாடணும் என்று தோன்றுகின்றதே அதுவரையில் சந்தோசம்.

நன்றி
அருமை...சகோதரி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top