Ramadan 2021- Day 13 prophet Eesa- The food plate

Advertisement

fathima.ar

Well-Known Member
ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை கண்டு சிலர் முஸ்லிமாயினர். சிலர் இது வெறும் சூன்யம் என்று சொல்லி அல்லாஹ்தான் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உருவில் வந்துள்ளான் என்றனர். சிலர் அல்லாஹ்வின் மனைவிதான் மர்யம் என்றனர்.இப்படிப் பலர் பலவிதமாக கற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இவற்றைக் கண்டித்து அல்லாஹ் தனது திருமறையில்,

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்”ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே,அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் – ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
-அல்குர்ஆன் 4:171


நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்”என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும்,உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்”என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான்,மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்,அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

சிலர்,அல்லாஹ்விடம் நாங்கள் முழு நம்பிக்கை கொள்ள வேண்டுமெனில் எங்களுக்கு வானத்திலிருந்து உணவுத் தட்டை இறக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றனர்.
அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்குப் பிறகும் நீங்கள் சந்தேகப்படுவீர்களானால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை செய்தனர். அதன்பின் அவர்கள் சொன்னபடி அவர்கள் 30நாட்கள் நோன்பிருந்து தொழுது துஆ செய்து வந்தார்கள்.


ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்ன நாளும் வந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை. நபியவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி உணவுத் தட்டை இறக்க வேண்டினார்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அதைத் திறந்தார்கள். அதில் பொரித்த மீன் ஒன்று இருந்தது. அதில் நெய் ஓடிக் கொண்டிருந்தது. தலை மீது உப்பும்,வால் மீது காடியும் vinegar இருந்தது. அதனைச் சுற்றி ஐந்து ரொட்டிகள் வைக்கபட்டிருந்தன. ஒன்றின் மீது ஜைத்தூண் olive எண்ணெய்யும், இன்னொன்றின் மீது தேனும்,இன்னொன்றின் மீது பன்னீரும் இன்னொன்றின் மீது நெய்யும் இன்னொன்றின் மீது பொரித்த இறைச்சியும் வைக்கப்பட்டிருந்தது.

உணவுத் தட்டை விரும்பியவர்களிடம் நீங்கள் விரும்பியவாறு உணவுத்தட்டு இறங்கிவிட்டது. இதனை உண்டு அல்லாஹ்விற்கு மாறு செய்யாமலிருங்கள் என்று சொன்னார்கள்.
உணவுத்தட்டிலுள்ள பொரித்த மீனை உயிர்ப்பெற்று எழுமாறு அவர்கள் வேண்டினார்கள். அல்லாஹ்விடம் நபியவர்கள் கையேந்தஅது உயிர்ப்பெற்று எழுந்தது.
இம்மாதிரி உணவுத் தட்டு 40நாட்கள் இறங்கிக் கொண்டிருந்தது என்றும்,காலையில் விண்ணிலிருந்து இறங்கிய இந்தத் தட்டுகள், மாலையானதும் மேலேறி விண்ணுக்குச் சென்று விடும் என்றும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது.

விண்ணிலிருந்து இறங்கும் தட்டுகளிலுள்ள இந்த உணவை,ஏழைகள்,அனாதைகள்,நோயாளிகளைத் தவிர வேறு யாரும் உண்ணக் கூடாது என்று அல்லாஹ்விடமிருந்து உத்திரவு வந்தது. இது நல்ல ருசியாகவும்,மணமுள்ளதாகவும் இருந்ததால் வசதி படைத்த செல்வந்தர்களும் இதை உண்ண ஆரம்பித்தார்கள். மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் கொள்ளவில்லை. எனவே உணவுத் தட்டு இறங்குவது நின்று விட்டது. இதனால் அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பொய்யர் என்றும், சூனியக்காரர் என்றும் நிந்தித்தனர். இதனால் மனம் வேதனையடைந்த நபியவர்கள் அல்லாஹ்விடம் அவர்களைத் தண்டிக்குமாறு வேண்டினர்.

அல்லாஹ் அவர்களை பன்றிகளாக உருமாற்றினான். ஒரு நாளில் மட்டும் 5000பேர் இவ்வாறு உருமாற்றப்பட்டனர். மூன்று நாட்கள் வரை அந்த விலங்கு போல வாழ்ந்து அதன்பிறகு இறந்துவிட்டார்கள்.
இதனைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்,

“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?”என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால்,அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்”என்று கூறினார்.

அதற்கவர்கள்,“நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும்,நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும்,இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்”என்று கூறினார்கள்.

மர்யமுடைய மகன் ஈஸா,“அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு – எங்களில் முன்னவர்களுக்கும்,எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும்,உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்”என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

அதற்கு அல்லாஹ்,“நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால்,அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால்,உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்”என்று கூறினான்.
-அல்-குர்ஆன் 5:112-115
 

fathima.ar

Well-Known Member
நமக்கும் சமைக்குறதுல இருந்து கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து யாராச்சும் சமைச்சு கொடுத்தா நல்லாருக்கும்ல...

ஆச்சரியங்கள் நிறைய ஏற்படுத்தும் நபிய புரிஞ்சவங்கள் அதை நம்புவார்கள்!!!
நம்பவே கூடாதுன்னு இருக்குறவங்க என்ன செய்ய நினைப்பாங்க..
நபியாவே ஏற்றுகொள்ள மறுக்கிறவர்கள் தவ்ராது வேதத்தை விட்டு இன்ஜீல் வேதத்தை ஏத்துப்பாங்களா என்ன..
நாளை பார்ப்போம்...
 

Hema27

Well-Known Member
நமக்கும் சமைக்குறதுல இருந்து கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து யாராச்சும் சமைச்சு கொடுத்தா நல்லாருக்கும்ல...

ஆச்சரியங்கள் நிறைய ஏற்படுத்தும் நபிய புரிஞ்சவங்கள் அதை நம்புவார்கள்!!!
நம்பவே கூடாதுன்னு இருக்குறவங்க என்ன செய்ய நினைப்பாங்க..
நபியாவே ஏற்றுகொள்ள மறுக்கிறவர்கள் தவ்ராது வேதத்தை விட்டு இன்ஜீல் வேதத்தை ஏத்துப்பாங்களா என்ன..
நாளை பார்ப்போம்...

அப்படியே உட்கார்ந்த இடத்துக்கே சாப்பாடு கொண்டு வந்து தந்த நம்ம அம்மாவை நாம மதிக்கலையோ!!!
அதான் இப்படி lockdown ல சமையல் செய்தே கஷ்டம் படுறோம்...
 

fathima.ar

Well-Known Member
அப்படியே உட்கார்ந்த இடத்துக்கே சாப்பாடு கொண்டு வந்து தந்த நம்ம அம்மாவை நாம மதிக்கலையோ!!!
அதான் இப்படி lockdown ல சமையல் செய்தே கஷ்டம் படுறோம்...

Irukkumo:confused:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top