Ramadan 2020- Prophet Sulaiman- day 27

Advertisement

fathima.ar

Well-Known Member
உங்கள் அரசி பல்கீஸை இங்கே வரச் சொல்லுங்கள். அதுதான் சிறந்த வழி. இதற்கு மாறு செய்தால், அல்லாஹ் எனக்களித்துள்ள பலத்தைக் கொண்டு உங்களனைவரையும் தண்டித்து அவமானமுறச் செய்வேன்’ என்று எச்சரித்து பல்கீஸிடம் திருப்பி அனுப்பி வைத்தார்கள்.


முன்திர் அவர்கள் அரசி பல்கீஸிடம் திரும்பிச் சென்று அங்கு நடந்ததெல்லாவற்றையும் சொன்னார். அதற்கு அரசி, அவர் சாதாரண அரசர் மட்டுமல்ல. நபியாகவும் இருக்கிறார். எனவே அவரது அழைப்பை நாம் தட்டிக் கழிக்கக் கூடாது. அது பேராபத்தாகவே முடியும்’ என்று கூறிவிட்டு சுலைமான் நபி அவர்களைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார். பல்கீஸ் வந்து சேருமுன் அவரது அரியணையை கொண்டு வரவேண்டும். உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள் என்று சுலைமான் நபி அவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது இஃப்ரீத் என்ற பெயர் கொண்ட ஒரு ஜின் எழுந்து நின்று அல்லாஹ்வின் நபியே! தாங்கள் உத்தரவிடுவீர்களேயானால், இந்த அடியேன் அந்த அரியாசனத்தை சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு முன் இங்குக்கொண்டு வந்து சேர்ப்பித்து விடுகிறேன் என்றது.

அதற்கும் முன்னதாக கொண்டுவர இங்கு யார் தயாராக இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
அல்லாஹ் நாடினால் கண் இமை மூடித் திறப்பதற்குள் அதனை இங்கு கொண்டு வந்து விட முடியும் என்றார் ஆஸிஃப் இப்னு பர்கியா என்ற இறைநேசர்.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனுமதியளிக்கவே, அவர் சொன்னபடி அரசி பல்கீஸின் சிம்மானம் கொண்டு வரப்பட்டது.

மேலும் ஜின்கள் முன்பு சொன்ன அரசியின் பாதங்கள் கழுதையின் பாதங்களைப் போன்றிருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். ஒரு மாளிகை எழுப்பி அதன் முன்பகுதியில் ஒரு பெரும் குளம் தயாரித்து, அதில் வண்ண மீன்களை விட்டு குளத்தை கண்ணாடி பளிங்கு தளத்தால் மூடச்செய்தார்கள். பார்ப்பதற்கு மூடப்படாத, தண்ணீர் நிறைந்த குளம் மாதிரியே அது காட்சியளித்தது.

அதன்பிறகு பல்கீஸை அங்கு வரச் செய்தார்கள். அவள் அதை குளமென்று நினைத்து, ஆடைகள் தண்ணீரில் நனைந்துவிடாமலிருக்க தம்முடைய ஆடையை சற்று தூக்கினார். இதில் அவருடைய காலின் அடிப்பாகம் கெண்டைக்கால் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. சுலைமான் நபி அவர்கள் ஜின்கள் சொன்னது கட்டுக்கதை என்று அறிந்தார்கள். அரசி பல்கீஸுக்கு இது பளிங்கு தரைதான் என்று உண்மையை உரைத்தார்கள்.
இதனைக் கேட்ட அரசி பல்கீஸ் அல்லாஹ்வின் தூதரே! நான் என் தவறுகளை உணர்ந்து கொண்டேன். அல்லாஹ் என் பாவங்களை மன்னித்தருள்வானாக! சூரிய வணக்கத்தை ஒழித்துக்கட்டி, அந்தச் சூரியனைப் படைத்தவனை வணங்கச் செய்து, உங்கள் பேரில் விசுவாசம் கொண்டு முஸ்லிமாகி விட்டேன் என்றார்.
மிகவும் சந்தோஷம். இனி உமது ஊருக்கு நீர் சென்று உமக்குப் பிடித்தமான ஒருவரை மணந்து சந்தோஷமாக வாழ்ந்து கொள்ளலாம் என்றார்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.


நான் திருமணம் சென்று கொண்டால் உங்களைத் தவிர வேறு யாரையும் மணக்க விரும்பவில்லை என்று சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அரசி பல்கீஸை சுலைமான் அலைஹிஸ்ஸாம் அவர்கள் சிறப்புடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
அதன் பிறகு இருவரும் சுமார் 27 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதன்பிறகு, அரசி பல்கீஸ் அவர்கள் ஸிரியா நாட்டிலுள்ள ததத்மூர் என்ற ஊரில் மறைந்து, நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்...


ஒரு முறை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவையில் வீற்றிருக்கும் போது ஒரு மனிதர் வந்து சபையில் இருந்த ஒருவரை முறைத்துப் பார்த்து சென்றுவிட்டார். அந்த மனிதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து இப்போது வந்துவிட்டு போனாரே அவர் யார்? என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் அவர்கள்தான் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இங்குள்ள யாரோ ஒருவருடைய உயிரைப் பறிக்க வந்துள்ளார்கள் என்றார்கள். அவர் என்னைத் தான் முறைத்துப் பார்த்தார். எனவே என்னுடைய உயிரைத்தான் பறிக்க வந்துள்ளார் என்று நினைக்கிறேன். எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறினார். சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காற்றை அழைத்து இந்த மனிதரை ஏழு கடல்களுக்கு அப்பால் கொண்டுபோய் சேர்த்துவிடு என்று ஆணையிட்டார்கள். காற்று நொடிப்பொழுதில் அவரை ஏழுகடல்களுக்கு அப்பால் சேர்த்துத விட்டது. அப்பாடா! தப்பித்தேன் என்று இருக்கும் சமயம் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதே மனித உருவில் அவர் முன் தோன்றினார்கள். இங்கேயுமா வந்து விட்டீர்? என்று அந்த மனிதர் கேட்டார். அல்லாஹ் இந்த இடத்தில் வைத்துதான் உம்முடைய உயிரை வாங்க கட்டளையிட்டிருக்கிறான். ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தர்பாரில் இருந்த தாங்களை இங்கே கண்டது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அல்லாஹ்வுடைய நாட்டத்தை மாற்றமுடியாதல்லவா என்று சொல்லிக் கொண்டே அவரது உயிரைப் பறித்துக் கொண்டார்கள்.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம்; அவர்கள் இறைமறுப்பாளானாகிய பவுனவகு என்ற தீவின் அரசனோடு யுத்தம் செய்து அவனை கொன்றுவிட்டார்கள். அவனுக்கு ஷம்ஷாத் என்ற மகள் இருந்தாள். அவளை முஸ்லிமாக்கி நபி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அவளை எவ்வளவோ சிறப்பான முறையில் வாழவைத்தும் அவள் தம் தந்தையின் பிரிவால் சர்வகாலமும் அவரை நினைத்து அழுதவண்ணமே இருந்தாள். தம் தந்தையின் சிலையை ஓரிடத்தில் வைத்து அவன் நினைவாகவே இருந்தவள் நாளடைவில் அதை வணங்கவும் ஆரம்பித்துவிட்டாள். இதனையறிந்த சுலைமான் அலைஹிஸ்ஸலாம்; அவர்கள் அந்தச் சிலையை அவள் கண்முன்னாலேயே சுக்குநூறாக உடைத்துப் போட்டுவிட்டார்கள். அதைக் கண்டதும் பதறிஅடித்துக் கொண்டு பித்தம் பிடித்தவளைப் போல் அழுதுகொண்டே தாம் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பிறந்த அமீனா என்ற பெண் பிள்ளையையும் அங்கேயே விட்டுவிட்டு காட்டுக்கு ஓடிவிட்டாள். அந்தப்பிள்ளையை மிகவும் கண்காணிப்பாக வளர்த்து வந்தார்கள். ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொடுத்த முத்திரை மோதிரத்தை தாம் குளிக்கப் போகும்போது அந்த சிறுமியிடம் கழற்றி கொடுத்துவிட்டு சென்றார்கள். இதை கண்காணித்துக் கொண்டிருந்த சன்ஹரா என்ற ஜின் சுலைமான் நபியைப் போல் வேடமிட்டு வந்து அந்த மோதிரத்தை தந்திரமாக வாங்கிக் கொண்டது. அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யவும் ஆரம்பித்துவிட்டது. அதற்கே அனைவரும் வழிப்பட்டனர்.

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முத்திரை மோதிரம் இல்லாததால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் மனம் வெறுத்துப் போய் சுலைமான் நபி அவர்கள் வேறுவழியின்றி அந்நகரை விட்டு வெளியேறி கடற்கரைக்குச் சென்று மீனவர்களுக்கு ஊழியம் செய்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அதிகமான வணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள். சுமார் 40 நாட்களும் கடந்து விட்டது. ஆட்சி செய்து அலுத்துவிட்ட அந்த தேவதை ஒரு நாள் கடற்கரைக்கு வந்து முத்திரை மோதிரத்தை கழற்றி கடலில் வீசிவிட்டு காட்டிற்குள் ஓடிவிட்டது. அதை ஒரு மீன் விழுங்கி விட்டது. வழக்கம்போல் சுலைமான் நபி அவர்கள் மீனவர்களுக்கு ஊழியம் செய்து கிடைத்த மீனை அறுக்கும்போது அதில் முத்திரை மோதிரம் இருக்கக் கண்டு அதைக் கையில் அணிந்து கொண்டு அரியணை ஏறி ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கட்ட ஆரம்பித்து பாதியில் நின்றுபோன பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதைக் கட்ட ஆரம்பித்தார்கள். இதில் ஏழாயிரம்பேர் ஈடுபடுத்தப்பட்டனர். ஏழு வருட காலம் பணி தொடர்ந்து நடந்து வந்தது. பைத்துல் முகத்தஸ் கட்டி முடிய ஒரு வருடத்திற்கு முன் சுலைமான் நபி அவர்களுக்கு அல்லாஹ்வின் அழைப்பு வந்து விட்டது. சஜ்தைவில் இருந்த படியே அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் மறையும் போது அன்னாருக்கு வயது 180. அவர்கள் சொன்ன அறிவுரைப் படி அவர்கள் மறைந்தபின்னர், அவர்கள் வழக்கமாக அணியும் ஆடைகளை அணிவித்து ஒரு தடியை ஊன்றி பைத்துல் முகத்தஸ் ஆலயத்தின் கட்டிடத்தை பார்வையிட்டு வருவது போல் நிறுத்தி வைத்தனர். ஜின்கள் அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணியே கட்டிட வேலைகளை முடித்தனர். ஓராண்டு வரை இவ்வாறு நடந்தது. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தாங்கியிருந்த தடியை கரையாண்கள் அரித்துவிட்டது. அதன்காரணமாக அத்தடி பாதியில் முறிந்துவிட்டது. அத்தோடு சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடலும் சாய்ந்துவிட்டது. ஜின்களுக்கு இச்செய்தி தெரிந்ததும் அவைகள் அனைத்தும் மலைக் இருந்த இடம் நோக்கி ஓடிவிட்டன.

அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. அல்-குர்ஆன் 34:14 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உத்திரவிற்கிணங்க ஜின்கள் பைத்துல் முகத்தஸ்ஸை கட்டின விபரத்தை அல்லாஹ் தன் திருமறையில்


அவை ஸுலைமான் விரும்பிய மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன.

“தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்). -அல்-குர்ஆன் 34:13


நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடல் பைத்துல் முகத்தஸிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களை அடக்கம் செய்வதில் அரசி பல்கீஸின் மகன் ருஜஹீம் பங்கு கொண்டார். அவரே அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார் என்றும், அவர் ஒரு நபியாக இருந்தார் என்றும் ஒரு குறிப்பில் காணப்படுகிறது..

 

I R Caroline

Well-Known Member
நபிகள் பற்றிய எதுவும் இதுவரை எனக்கு தெரியாது. இதை படித்த பிறகு கொஞ்சம் தெரிந்து கொண்டேன் மேம். நன்றாக இருக்கிறது மேம்.
 

fathima.ar

Well-Known Member
நபிகள் பற்றிய எதுவும் இதுவரை எனக்கு தெரியாது. இதை படித்த பிறகு கொஞ்சம் தெரிந்து கொண்டேன் மேம். நன்றாக இருக்கிறது மேம்.

Ithu part three thaan
.
Check part 1&2 in day 25,26..
Complete story irukku
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top