Ramadan 2020 day 2

Advertisement

fathima.ar

Well-Known Member
ஈமானுடைய தூண்கள் ஆறு:

1.அல்லாஹ்வின் மீது,
2.வானவர்கள் (மலக்குகள்) மீது,
3.அல்லாஹ்வுடைய வேதங்கள் மீது,
4.அவனுடைய தூதர்கள் மீது,
5.இறுதி நாள் மீது,
6.நன்மை, தீமை எதுவாக இருந்தாலும், விதி(கதர்)யின் மீது

நம்பிக்கை வைப்பது தான்.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்…….. இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். [அல் குர்’ஆன் 23:1-9]
 
fathima.ar

Well-Known Member
ஈமான் என்றால் என்ன??

ஓர் இறை கொள்கை மட்டும் அல்ல!!.
படைத்தவன் ஒருவன் அவனை நான் வழிபடுகிறேன் என்பது மட்டுமின்றி.,
அவனையும் அவனால் உருவாக்கப்பட்ட வானவர்கள் , அவனுடைய வேதங்கள், இறைத்தூதர்கள், இறுதி நாளின் மீதும்,, விதியின் மீதும்- இறைவனால் நமக்கு விதிக்கப்பட்டது என்ற முழுமையான நம்பிக்கை கொள்வதும் ஆகும்...

இறைதூதர்கள் பற்றியும்
அவர்களை பற்றி குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களையும்
தினம் பார்ப்போம்...
 
Manimegalai

:love:(y)
 
Yasmine

Well-Known Member
தொழுகையை கொண்டும் பொறுமையை கொண்டும் அல்லாஹ் எல்லாரையும் இந்த புனித ரமலான் மாதத்தை அடைய செய்வானாக!
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top