P5 எந்தன் காதல் நீதானே

Advertisement

Ramya Rajan

Well-Known Member
ராஜ் பதில் சொல்லாமல் இருக்க... ராஜகோபால் கைபேசியில் மனைவியை அழைத்தவர், “என்ன உனக்கு திமிரா? நீயே எல்லாம் முடிவு பண்ண ஆரம்பிச்சிட்ட.” என்றார் கோபமாக.

எப்போதும் கணவரின் கோபத்திற்கு அடங்கிப் போய் விடும் மகேஸ்வரி இந்த முறை அப்படியில்லை. “ஆமாம் உங்க பேச்சையும் உங்க அம்மா பேச்சையும் கேட்டுத்தான் என் பெண்ணுக்கு இந்த நிலைமை. இனியாவது என் பொண்ணு வாழ்க்கையை நான் முடிவு பண்றேன்.” என்றார் திமிராகவே.

“அதுக்காக இப்படியா? நீ முதல்ல இங்க வா... நாம வேற நல்ல இடம் பார்க்கலாம்.”

“எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காதீங்க. உங்க அம்மா இன்னும் வெண்ணிலாவை கரனுக்கு செய்யத்தான் நினைக்கிறாங்க. என் பொண்ணு வாழ்க்கையை பத்தி அக்கறை இல்லாம போனவனை, நான் திரும்பி எப்படி என் பொண்ணுக்கு கட்டி வைப்பேன்?”

“அதோட உங்க அம்மா, என் பொண்ணு என்னவோ கல்யாணம் நின்னதுல சாகப்போன மாதிரி வெளிய பரப்பி விட்டுடாங்க. இனி யாரு அவளை கல்யாணம் பண்ணிப்பா...அப்படி கல்யாணம் பண்ணிட்டு போனாலும் சொல்லி காட்ட மாட்டாங்களா.”

“எங்க அண்ணன் வீட்ல வெண்ணிலாவை கேட்கிறாங்க. அதோட வெண்ணிலாவுக்கும் இஷ்ட்டம். அப்புறம் உங்களுக்கு என்ன கஷ்ட்டம் இங்க செய்யுறதுல?”

“ஓ வெண்ணிலாவுக்கும் இஷ்ட்டமா... அப்ப நீயே எல்லாம் பேசி முடிவு பண்ணிட்ட.”

“நான் எதுவும் முடிவு பண்ணலை. எங்க விருப்பத்தை சொன்னோம் அவ்வளவு தான். உங்க பெண்ணை நான் பிடிச்சு வைக்கலை... ஆனா என் பொண்ணு கல்யாணம் கூட என் இஷ்ட்டபடி நடக்கலைனா.. அப்புறம் நான் எதுக்கு அங்க இருந்திட்டு?”

“நீங்க உங்க பெண்ணை கூப்பிட்டுகோங்க. நான் எங்க அண்ணன் வீட்ல வீட்டு வேலை செஞ்சே காலத்தை போக்கிடுறேன். உங்க வீட்ல அது தானே செய்றேன்.” என மகேஸ்வரி போன்னை வைத்து விட்டார்.

*****************************************************************************************************************

மகள் வீட்டில் இருந்து வந்த கற்பகம், மருமகளும் பேத்தியும் வரவில்லை என்பது தெரிந்து கொதித்துப் போனார். ஆனால் அவரிடம் வேறு விஷயம் ஏதும் சொல்லவில்லை.

“அவ வீட்டுக்கு போனாலே உங்க அம்மாவுக்கு திமிரு வந்திடும். இவ இருக்கிறதுன்னா இருந்து தொலைக்கிறது தானே... வெண்ணிலாவையும் ஏன் அங்க வச்சிருக்கா?” என கத்திக் கொண்டு இருந்தார்.

“உங்க பேரன் ஒழுங்கா இருந்திருந்தா, அவ இந்த நேரம் ஏன் அங்கப் போறா?” என யுவராஜ் திருப்பிக் கேட்க,

“அது தானே எனக்கும் ஒன்னும் புரியலை... வெளிநாட்டு வேலை உடனே போகணுமோ என்னவோ...” என்றார் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.

“ம்ம்... இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லாதீங்க.” என்றான் ராஜ் கோபமாக.

*********************************************************************************************************

மறுநாள் காலை தரகர் வீட்டிற்கு வந்திருந்தார். ராஜகோபால் அவரை உட்கார வைத்து பேசிக் கொண்டிருந்தவர், கற்பகத்தை காபி கொண்டு வர சொன்னார்.

“நான் சொன்ன இடத்தில பேசினீங்களா?”

“பேசினோம். ஆனா அவங்க என்ன சொல்றாங்கன்னா... பொண்ணு இப்ப மனசு சரியில்லாம இருக்கும். இந்த நேரத்தில கல்யாணம் பண்ணி, நாளைக்கு அது எதாவது பண்ணிகிட்டா... அதனால வேற இடம் பாருங்கன்னு சொல்றாங்க. ஆனா நான் சொன்ன இன்னொரு இடம் இருக்கு. அவங்களுக்கு இஷ்ட்டம் தான்.”

“அது அந்த வசதியில்லாத வீட்டு பையன் தானே... அந்த இடம் வேண்டாம். அவங்க எங்க வசதி பார்த்து சரின்னு சொல்றாங்க. நாளைக்கு எப்படி நடந்துப்பான்களோ தெரியாது.”

“சரி நான் வேற எதுவும் இடம் வந்தா சொல்றேன்.” என தரகர் சென்று விட்டார்.

**********************************************************************************************************

மகன் எதோ தகிடுதத்தம் செய்திருக்கிறான் என ஜெயராமனுக்கு புரிந்து விட... “அன்னைக்கு உங்க அண்ணன் வந்திருந்த போது, உனக்கு விருப்பமான்னு கேட்க, நீயும் ஆமான்னு சொன்னியே, அது எதுக்கு மா?” என அவர் வெண்ணிலாவிடம் கேட்க,

“அது நான் நம்ம வீட்ல இருக்க விருப்பம்னு சொன்னேன் மாமா. ஜெய் அத்தான் என்கிட்டே அப்படித்தான் சொன்னாங்க. உனக்கு இஷ்ட்டம்ன்னா, உங்க அப்பா உன்னை இங்க இருக்க சொன்னாருன்னு சொன்னாங்க.”

ஜெயராமனுக்கு மகன் செய்து வைத்த வேலையை நினைத்து கோபமாக வந்தது. “தெரியும், இவன் இப்படித்தான் எதாவது பண்ணியிருப்பான் நினைச்சேன்.” என்றார்.

*************************************************************************************************************
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஜெய் உங்கப்பா விசாரணை நடத்தி confirm பண்ணிட்டாருடா உன் தில்லாலங்கடி வேலையை.......
பாரு உன் ஆளு போட்டு கொடுத்துட்டா.......

உங்க மாமா இறங்கி வர மாதிரி தெரியலை.......
கல்யாணமும் நீ ஏதாச்சும் பிளான் பண்ணி தான் நடத்திக்கணும் போல.....
உன் ஆளு ஒத்து வருவாளா???
இல்லைனா கிழவி பேரனுக்கு அமெரிக்கா கூட்டிட்டு போய் கையில் புடிச்சி குடுத்தாலும் குடுத்துடும்.......

நீங்க விசாரிக்க சொன்ன சம்பந்தம் வேண்டாம் னு சொல்லிட்டாங்களா.....நல்லா வேணும்.....
இன்னும் பொண்ணு மனசு பற்றி யோசிக்கவே இல்லை.......
இப்போ தானே ஒருத்தன் ஓடிப்போனான் இப்போ பொண்ணு ஒத்துக்குமா அடுத்த கல்யாணத்துக்குனு.......
பாருங்க பாருங்க ஜெய் ஏதும் ஏடா கூடமா பண்ணும் முன்......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap..

பொண்ணு கல்யாணம் முடியறதுக்குள்ள மகேஸ்வரியும் ராஜகோபாலும் பிரிஞ்சிடுவாங்க போல... :unsure::unsure: அதுக்குள்ள வெண்ணிலாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க தொடங்கியாச்சா?? :eek::eek::eek: ஜெய் மாட்டிக்கிட்டானா??
 
Last edited:

MaryMadras

Well-Known Member
என் பொண்ணு கல்யாணம் கூட என் இஷ்டப்படி நடக்கலைனா நான் எதுக்கு அங்கே
வரனும் மகேஸ்வரி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியா சொன்னாங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top